Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத் இன்னமும் வீடு திரும்பவில்லை…. இன்றுடன் 8 வருடங்கள் கடந்து போயின…

Featured Replies

பிரகீத் இன்னமும் வீடு திரும்பவில்லை…. இன்றுடன் 8 வருடங்கள் கடந்து போயின…

prageeth-eknaligoda2.jpg?resize=728%2C41

இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் 8  வருடங்கள் ஆகிவிட்டன. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.

இவர் இலங்கை அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்துக் காணாமல் போனார்.

இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர், ஆனாலும் இதனை அரசாங்கள் மறுத்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி “போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்’ என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர். எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரகீத் எக்னெலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கடத்தி வைத்திருக்கின்றார் என்று அவரின் மனைவியான சந்தியா எக்னெலிகொட குற்றஞ்சாட்டி பிரகீத் எக்னெலிகொடவை விடுவிக்கக் கோரி அண்மையில் அலரி மாளிகைக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.

எவ்வாறாயினும் பிரகீத்தை காணாமல் போகச் செய்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசும் அதே காலத்தில் காணாமல் போகும் நிகழ்வும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. பிரகீத் இன்னமும் திரும்பவில்லை.

sandya-eknaligoda.jpg?resize=728%2C410  prageeth-eknaligoda1.png?resize=470%2C27prageeth-eknaligoda.jpg?resize=728%2C410

http://globaltamilnews.net/2018/63041/

  • தொடங்கியவர்

வித்தியாசமான முறையில் நீதி கோட்ட பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி ( படங்கள் இணைப்பு )

 

 

கண்ணகி மற்றும் காளி தெய்வங்களின் படங்களை வைத்து பூஜை செய்து வித்தியாசமான முறையில் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளார் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவி சந்தியா.

prakeeth-eknaligoda.jpg

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று காலை குறித்த போராட்டத்தினை மிகவும் அமைதியான முறையில் இன்னும் சிலருடன் மேற்கொண்டுள்ளார்.

DSC_9283.jpg

பலவருடங்களுக்கு முன்னார் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரிடம் நீதிகேட்டு கிடைக்காத பட்சத்தில் இன்று நீதி தேவதையிடம் அமைதியான முறையில் பூஜையில் ஈடுபட்டு வாழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_9289.jpg

DSC_9293.jpg

DSC_9310.jpg

DSC_9312.jpg

DSC_9319.jpg

DSC_9326.jpg

DSC_9337.jpg

DSC_9365.jpg

http://www.virakesari.lk/article/29899

  • தொடங்கியவர்

காணா­ம­லாக்­கப்­பட்ட எமது உயிர்கள் எங்கே ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்­னரும் ஏமாற்­றமா?

Sp18-623bf81eb8555b23f7467feb324c14da62aeec41.jpg

 

அம்­ம­னுக்கு வேப்­பி­லை­ய­டித்து உற­வி­னர்கள் மன்­றாட்டம்
(லியோ நிரோஷ தர்ஷன்)

வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கண்­ணகி மற்றும் காளி அம்மன் தெய்­வங்­களின் படங்­களை வைத்து பூஜை வழி­பாட்­டினை செய்து போராட்­ட­மொன்றை மேற்­கொண்­டனர். காணா­ம­லாக்­கப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட மற்றும் வடக்கில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களே இவ்­வாறு போராட்­டத்தில் ஈடுப்­பட்­டனர்.

கொழும்பு – புறக்­கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக நேற்று வியா­ழக்­கி­ழமை முற்­பகல் இந்த போராட்டம் இடம்­பெற்­றது. கண்­ணகி மற்றும் காளி அம்மன் படங்­களை வைத்து, மலர் மாலை அணி­வித்து, வேப்­பிலை நீர் தெளித்து வழி­பா­டு­களும் பிரார்த்­த­னை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இறு­திக்­கட்ட போர் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் எமது உற­வுகள் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டனர். அவர்கள் உயி­ருடன் உள்­ள­னரா இல்­லையா என்று கூட தெரியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் உண்மை நிலை தெரியவரும் என நம்­பினோம். ஆனால் தற்­போதும் அதே ஏமாற்றுநிலைதான் தொடர்­கின்­றது. எனவே அனைத்து ஆட்­சி­யா­ளர்­களும் எம்மை திட்­ட­மிட்டு ஏமாற்றி வரு­கின்­றனர் என பாதிக்­கப்­பட்ட உற­வி­னர்கள் போராட்­டத்தின் போது தெரி­வித்­தனர்.

காணா­ம­லாக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்பில் அவ­ரது மனைவி உள்­ளிட்ட வடக்கு மற் றும் கிழக்கில் காணா­ம­­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் பல்­வேறு போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். போர் முடிந்து பல வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் தீர்வு எட்­டப்­படவில்லை என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­ந­ிலையில் போருக்கு முன்­னரும் அதற்குப் பின்னருமான காலப்பகுதியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும் அவர்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் இவ்வாறான வழிபாடுகளில் உறவினர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-26#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.