Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்­ளூ­ராட்­சி தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­லில் மாற்றம் என்ன?

Featured Replies

  • உள்­ளூ­ராட்­சி தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­லில் மாற்றம் என்ன?
201609221711365425_local-election-woman-

உள்­ளூ­ராட்­சி தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­லில் மாற்றம் என்ன?

 

 

இன்­றைய இலங்­கை­யின் அர­சி­யல் நிலை, வெடிக்­கும் நிலை­யி­லுள்ள எரி­ம­லை­யொன்­றின் நிலை­யில் உள்­ள­தாக விவ­ரிக்க இய­லும். நாட்­டின் அர­சி­யல் நிலை எதிர்­வ­ரும் நாள்­க­ளில் என்­ன­வா­கும் என்­பது குறித்து சமூக ரீதி­யிலோ, அர­சி­யல்­வா­தி­கள் தரப்­பி­னர் மத்­தி­யிலோ தெளி­வற்ற தன்­மையே நில­வு­கின்­றது. வர­லாற்று ரீதி­யாக நோக்­கு­மி­டத்து, நாடு தற்­போது அரா­ஜக நிலையை நோக்­கிப் பய­ணிப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் அரச தலை­வ­ரது தலை­மை­யி­லான தரப்­பால் வெற்­றி­யீட்ட இய­லாது போகு­மா­னால், அது அரச தலை­வ­ரது எதிர்­கா­லச் செயற்­பா­டு­க­ளில் பார­தூ­ர­மான சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தக் கார­ண­மா­க­லாம்.

அதே­போன்று ஐ.தே.கட்­சி­யும் கூட தற்­போ­தைய நிலை­யில் பல­மிக்­க­தொரு நிலை­யில் இல்லை என்­பதே உண்­மை­யா­கும். பிணை­முறி ஊழல் குற்­றச்­சாட்டு மேற்­கொள்­ளப்­ப­டாது இருந்­தி­ருந்­தால், கடந்த பொதுத் தேர்­த­லில் ஐ.தே.கட்­சி­யால் மேலும் பத்தோ, பதி­னைந்தோ நாடா­ளு­மன்ற ஆச­னங்­களை அதி­க­மா­கக் கைப்­பற்­றி­யி­ருக்க முடிந்­தி­ருக்­கும்.

எதிர்­வ­ர­வி­ருக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லி­லும் கூட ஐ.தே.கட்­சிக்கு இந்­தப் பிணை­முறி ஊழல் குற்­றச்­சாட்டு, வெற்­றி­வாய்ப்­பில் அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்த இட­முண்டு. குறித்த தேர்­த­லில் சிறந்த பெறு­பேற்­றைப் பெற ஐ.தே.க.கட்சி தவ­று­மா­னால், கட்சி மட்­டு­மன்றி, அதன் தலை­மைத்­து­வ­மும் பெரும் சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

 

ராஜ­பக்ச சகோ­த­ரர்­கள் எவ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட இய­லாது

அதே­போன்று மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான தரப்­புக்கு எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் கணி­ச­மான வெற்­றியை ஈட்­டிக் கொள்ள முடி­யாது போகு­மா­னால் என்­ன­தான் நடக்­கும்? அர­சி­யல் பின்­ன­ணி­யில் மகிந்த ஒரு பல­மிக்க குழப்­பக்­கா­ ரர் என்ற விதத்­தில் நோக்­கப்­ப­டு­கி­றார்.

அவ­ரால் அடுத்து இடம்­பெ­றும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்டி இய­லாது. அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை கொண்­டி­ருப்­ப­தால் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வாலோ அல்­லது பசில் ராஜ­பக்­ச­வாலோ தானும் அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட இய­லாது.அத்­த­கைய பின்­ன­ணி­யில் மகிந்த தரப்­புக்­காக அரச தலை­வர் தேர்­த­லில் முன்­னி­றுத்­தப்­பட செயற்­றி­றன்­மிக்க அர­சி­யல்­வா­தி­யெ­வ­ரும் இருப்­ப­தா­கத் தோன்­ற­வில்லை.

ஜே.வி.பி தரப்பு தொடர்­பி­லும் இத்­த­கைய நிலை­யொன்றே தென்­ப­டு­கி­றது. குறிப்­பிட்­ட­ தொரு அள­வுக்கு தமது இருப்­பைச் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் அவர்­கள் வெற்­றி­கண்­டி­ருப்­பி­னும், மொத்­தப் பிரச்­சி­னைக்­கும் முகம் கொடுத்­துச் சமா­ளிக்­கத்­தக்க திறன் அவர்­க­ளி­டம் காணப் ப­ட­வில்லை. ஜே.வி.பி. தரப்­பி­னர் அர­சி­யல் ரீதி­யில் பிரச்­சி ­னை­களை வெற்­றி­க­ர­மா­கக் கையா­ளத்­தக்க திறன் கொண்­டி­ருந்­தால், இப்­போ­தை­யதை விட கூடிய வெற்­றி­களை ஈட்­டத்­தக்க வாய்ப்பு அவர்­க­ளுக்கு வாய்த்­தி­ருந்­தது.

அது ஜே.வி.பி.யின­ரது தவ­றான முடி­வா­கிப் போன­து­டன், எதிர்க்­கட்­சி­களை இணைக்­கும் பொறுப்பை ஏற்­ற­தும் அதில் அடங்­கி­ய­தொன்­றா­கவே கொள்ள இய­லும். அத்­த­கைய எதிர்க்­கட்சி ‘கொறடா’ பத­வி­யைப் பெறஜே.வி.பிக்கு நாடா­ளு­மன்­றத்­தில் போதிய பலம் கிடை­யாது. அதே­போன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் புக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­மைத்­து­வத்­தைப் பெறு­வ­தற்­கான பலம் கிடை­யாது.

ஜே.வி.பி தரப்­புக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இவ்­விரு பத­வி­க­ளும் அர­சி­னால் வழங்­கப்­பட்ட பரிசை ஒத்­த­வையே. ஜே.வி.பி தமக்­கான அந்­தப் பரிசை விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யில் பொறுப்­பேற்­றது.
தற்­போ­தைய அர­சின் பத­விக்­கா­லத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் அர­சுக்­குப் பல்­வேறு பிரச்­சி­னை ­கள், சவால்­கள் ஏற்­பட வாய்ப்­புண்டு என்­ப­தால், அவற்­றைத் தவிர்த்­துக் கொள்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குப் பரந்த அள­வி­லான சலு­கை­களை அரசு வழங்கி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ருக்­கான வரி­வி­லக்­கு­ட­னான வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­தின் பெறு­ம­தியை அதி­க­ரித்­தல், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வர் தமக்­கான அலு­வ­ல­கத்­தைப் பேண மாதாந்­தம் ஒரு லட்­சம் ரூபா கொடுப்­ப­னவை வழங்­கல், நாடா­ளு­மன்­றத்­துக்கு ஒரு நாளைக்கு சமூ­க­ம­ளிப்­ப­தற்­கான கொடுப்­ப­னவை ஐந்து மடங்­கு­கள் வரை உயர்த்­து­தல் போன்ற சலு­கைள் இவற்­றுள் அடக்­கம். இவை இத்­து­டன் நிற்­காது மேலும் மேலும் வெவ்­வேறு ரூபங்­க­ளில் தொட­ரத்­தான் போகின்­றன.

தேர்­தல் நடை­மு­றை­யில் மாற்­றம் மேற்­கொள்­வது பெறு­மதி மிக்­க­தே­யா­யி­னும், அரசு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கென இது­வரை ஒதுக்­கப்­பட்­டி­ருந்த உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்­கையை இரு மடங்­கு­கள் வரை­யாக ஆக்­கும் விதத்­தில் அதி­க­ரிப்பை மேற்­கொண்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­கள் தொகை
அதி­க­ரிக்­கப்­பட்­ட­தால் அர­சுக்கு மேல­திக நிதி தேவைப்­ப­டும்

அவ்­வி­தம் மேல­தி­க­மா­கத் தெரி­வா­கும் புதிய உறுப்­பி­னர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­க­ளுக்­காக அரசு வரு­ட­மொன்­றுக்கு 1400 மில்­லி­யன் ரூபாக்­களை செல­விட வேண்­டி­யுள்­ளது.

மனச்­சாட்சி­யின்­படி இத்­த­கைய முடிவை எதிர்க்க வேண்­டி­யி­ருப்­பி­னும், ஜே.வி.பி. இதற்கு ஆத­ர­வா­கச் செயற்­ப­டும் போக்கை அவ­தா­னிக்க முடிந்­தது. இது ஜே.வி.பி.க்கு தவ­றா­கிப் போன மற்­றொரு விட­ய­மா­கும். அந்த வகை­யில் நோக்­கும்­போது சகல அர­சி­யல் கட்­சி­க­ளும் குறிப்­பிட்ட இந்­தச் சிக்­கல்­க­ளில் தாம் தாம் தப்­பித்­துக் கொள்­ளும் முனைப்­பி­லேயே செயற்­ப­டு­வ­தா­கத் தோன்­று­கி­றது.

அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்­தின் மூலம் நாடு அரா­ஜக நிலைக்­குச் செல்­லும் பய­ணத்தை வலுப்­ப­டுத்­தும் செயற்­பாடே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. உண்­மை­யில் அது­வோர் மடத்­த­ன­மான அர­ச­மைப்­புத் திருத்­த­மா­கும்.

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லின் பின்­னர் அர­சி­யல் ரீதி­யில் பெரும் சிக்­கல்­கள் உரு­வா­கக் கூடும். அத்­த­கை­ய­தொரு சிர­ம­மான நிலை­யில் கூட, அரச தலை­வ­ராலோ தலைமை அமைச்­ச­ராலோ சரி நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­து­விட இய­லாது. பெரும் அரா­ஜக நிலை நோக்கி நாடு பய­ணிக்­கத்­தக்க நிலை இதன்­மூ­லம் உரு­வா­கக் கூடும்.

தற்­போ­தைய அரசு அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய கையோடு உட­ன­டி­யாக நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­து­விட்டு பொதுத் தேர்­த­லொன்­றுக்கு சென்­றி­ருக்­கு­மா­னால் நாட்­டில் தற்­போ­தைய விதத்­தி­லான சிக்­கல் தோன்­றி­யி­ருக்­க­மாட்­டாது. ஆனால் அரசு மத்­திய வங்­கிப் பிணை­முறி ஊழல் தொடர்­பான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்ட தாம­த­மான நிலை­யி­லேயே பொதுத் தேர்­த­லைச் சந்­தித்­தது.

அந்­தத் தேர்­த­லில் எந்­த­வொரு கட்­சிக்­கும் பெரும்­பான்­மைப் பலம் கிட்­டாத நிலை­யில் ஒரு கூட்டு அரசு உரு­வாக்­கப்­பட்­டது. அரச தலை­வர், அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் பெரு­ம­ள­வி­லான ஐ.தே.கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளது ஆத­ரவு வாக்­கு­க­ளி­னா­லேயே வெற்­றி­பெற முடிந்­தது.

அது­மட்­டு­மல்­லாது குறித்த அந்த அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஐ.தே.கட்­சியே முக்­கிய முண்டு கொடுக்­கும் தரப்­பாக , மைத்­தி­ரி­பா­ல­வின் வெற்­றிக்­குப் பெரும் பங்­க­ளிப்பு வழங்­கும் தரப்­பா­கச் செயற்­பட்­டது.

கடந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­தல் மற்­றும் பொதுத் தேர்­த­லுக்கு
பெரு­ம­ள­வில் நிதி­யைச் செல­விட்ட ஐ.தே.கட்சி

பிணை­முறி ஊழல் தொடர்­பாக விவ­ ரிக்­கும்­போது, தேர்­தல் இடம்­பெற்ற வேளை­யில் நாட்­டின் முக்­கிய பணக்­கா­ரப் புள்­ளி­கள், ஐ.தே.கட்­சியுடன் என்­றல்­லாது முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச வுட­னேயே நெருக்­க­மாக இருந்­துள்­ள­னர் என்­பது தெளி­வா­கப் புரிந்­தது.

அத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில் கடந்த அரச தலை­வர் தேர்­த­லுக்­காக ஐ.தே.கட்சி பெரு­ம­ள­வில் நிதி செல­விட்­டி­ருந்­தது. ஐ.தே.கட்­சிக்­குப் பெரும் கடன் சுமையை ஏற்­ப­டுத்­தியே அரச தலை­வர் தேர்­தல் இடம்­பெற்று முடிந்­தி­ருந்­தது.

அந்­தக் கடனை செலுத்தி முடித்து, அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லான 2015 ஆம் ஆண்­டின் ஓகஸ்ட் மாத நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­காக செலவு செய்­வ­தற்­கான நிதி­யைத் திரட்ட ஒரு சிலர் பிணை­முறி ஏலத்­தைப் பயன்­டுத்­தி­யி­ருக்­க­லாமோ என எண்ண வேண்­டி­யுள்­ளது.

ஆனால் இடம்­பெற்ற மோசடிக்கு முழு அர­சுமே பொறுப்­பா­­கும். அர­சின் முன்­றைய வெற்­றி­யின் பின்­ன­ணி­யில் இந்­தப் பிணை­முறி மோசடி மூல­மான நிதி பயன்­பட்­டுள்­ளது. இது பார­தூ­ர­மா­ன­தொரு நிலை­யா­கும். கடந்த அர­சின் காலத்­தில் இடம்­பெற்ற பிணை­மு­றி­மோ­சடி, தற்­போ­தை­யதை விட பெரிய அள­வி­லா­னது என இன்­றைய அரசு குற்­றஞ்­சு­மத்­தக்­கூ­டும். அது உண்­மை­யா­கக் கூட இருக்­கக் கூடும்.

ஆயி­னும் இந்த ஊழல் என்ற பாவத்­தி­லி­ருந்து அர­சால் இலே­சில் தப்­பித்­துக் கொள்ள இய­லாது. ஏனெ­னில் முன்­னைய அரசு தவ­றி­ழைத்­த­தன் மூல­மாக மட்­டும், இன்­றைய அர­சும் தவ­றி­ழைக்க முடி­யு­மென எவ­ரா­லும் வாதிட இய­லாது.

தற்­போ­தைய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லின் பின்­னர் அரசு தொடர்ந்­தும் இதே­வி­தத்­தில் செயற்­பட வாய்ப்­ப­மை­யப் போவ­தில்லை.

இடம்­பெ­ற­வுள்ள தேர்­த­லில் பெரிய வெற்­றியை அரச தலை­வ­ரது தரப்பு பெறத் தவ­று­மா­னால் மற்­றும் அரச தலை­வ­ரது செயற்­பா­டு­கள் கார­ண­மாக ஐ.தே.கட்­சிக்கு பாதிப்­பான நிலை ஏற்­ப­டு­மா­னால் இவ்­விரு தரப்­பு­கள் மத்­தி­யி­லு­மான உற­வில் பார­தூ­ர­மான விரி­சல் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க இய­லாது போய்­வி­டும். தற்­போதுகூட அ்த்தகைய விரி­சல் நிலை நில­வியே வரு­கின்­றது.

அதே­ச­ம­யம் தற்­போ­தைய மற்­றும் முன்­னாள் அரச தலை­வர்­க­ளது தரப்­புக்­கள் மத்­தி­யில் எத்­த­கைய இணக்­கப்­பாடோ உற­வின் நெருக்­கமோ ஏற்­பட இடமே இல்லை. உண்­மை­யில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­ல­ரங்­கில் பெரும் சிக்­கல்­கள் உரு­வா­வது தவிர்க்க இய­லா­த­தொன்றாக ஆகி­வி­டும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லின் பின்­னர் இலங்கை அர­சி­ய­லில் பல்­வேறு குழப்­பங்­கள் தலை­தூக்­க­லாம்

இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல் முடி­வு­க­ளின்­படி, இன்­றைய மற்­றும் முன்­னாள் அரச தலை­வர்­கள் மற்­றும் தற்­போ­தைய தலைமை அமைச்­சர் ஆகிய முத்­த­ரப்­புக்­க­ளின் கீழ் செயற்­ப­டும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் பலர் கட்­சித் தாவ வாய்ப்­புண்டு என்­ப­து­டன், அரச தலை­வ­ருக்கு எதி­ராக அரச தரப்­பி­னரே நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வர­வும் மற்­றும் அமைச்­சர்­கள் கைது செய்­யப்­ப­ட­வும் வாய்ப்­புக்­கள் உண்­டென்­ப­தை­ம­றுக்க இய­லாது.

நாட்­டின் எதிர்­கால நிலை குறித்த அக்­க­றையோ, கவ­லையோ இன்­றைய அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் காணப்­ப­டு­வ­தா­கக் கூறிக்­கொள்ள இய­ல­வில்லை. போர் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து நாட்­டில் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­மென நாட்டு மக்­கள் எதிர்­பார்த்­த­னர். ஆனால் அது தவ­றான கணிப்­பாக ஆகி­விட்­டது. இன்று நாட்­டில் போர்ச் சூழல் இல்­லை­யே­யா­யி­னும், பெரு­ம­ள­வி­லான சிக்­கல்­கள் தலை­தூக்­கி­யுள்­ளன.

வெளி­நா­டு­க­ளி­டம் பெற்ற கடன் தொகை­யின் கட்­டுப்­ப­ணம் மற்­றும் வரு­டாந்த வட்டி என்­ப­வற்றை ச் செலுத்­து­வ­தா­யின், அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் போன்ற நாட்­டின் பெள­தீக வளங்­களை விற்­கவோ அல்­லது குத்­த­கைக்கு விடவோ வேண்­டிய அள­வுக்கு நாட்­டின் பொரு­ளா­தா­ரம் கடும் நலி­வு­நி­லைக்கு உட்­பட்­டுள்­ளது.

அதே­வேளை மற்­றொ­ரு­பு­றம் நாட்­டின் பெள­தீக வளங்­கள் திட்­ட­மிட்­டுக் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 30 ஆண்­டு­கள் வரை­யான கால­மாக நாட்­டில் இயல்பு நிலை நில­வ­வில்லை. இந்த நாட்­டின் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­னர். சமூக, அர­சி­யல் நடை­மு­றை­கள் குழப்­ப­ம­டைந்­தி­ருந்­துள்­ளன.

பொதுச் சொத்­துக்­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­தல் அரச நிர்­வா­கத்­தில் நிரந்­தர செயற்­பா­டொன்­றாக ஆகி­விட்­டுள்­ளது. அர­சி­யல் கட்­சி­க­ளி­லுள்ள எவ­ரது கைக­ளும் சுத்­த­மா­ன­வை ­யாக இல்லை.அவர்­க­ளில் பலர் பெரிய அள­வில் இந்த நாட்டு மக்­க­ளுக்­குச் சொந்­த­மான நிதி மற்­றும் வளங்­க­ளைத் திரு­டி­யுள்­ள­ னர்.

அரசு மாறி­னா­லும் கூட இந்த நாட்­டின் மேற்­கு­றிப்­பிட்ட அர­சி­யல் கலா­சா­ரங்­க­ளில் எந்­த­வொரு மாற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை. போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் மகிந்த மேற்­கு­றித்த விட­யங்­கள் குறித்து அக்­கறை காட்­டிச் செயற்­பட்­டி­ருந்­தால், நாடு இன்று இந்த அள­வுக்­குச் சகல துறை­க­ளி­லும் நலி­வுற்­றி­ருக்­க­மாட்­டாது.

இன்று இந்த நாடு பெரும் அபா­ய­நிலை நோக்­கிப் பய­ணித்து வரு­கி­றது. நாட்­டில் அரா­ஜ­கம் தலை­வி­ரித்­தா­டு­கி­றது. இந்த நிலை­யில் நாட்­டின் பொது­மக்­கள் கட்சி வேறு­பா­டு­களை மறந்து சுதந்­தி­ர­மா­கச் சிந்­தித்­துச் செயற்­பட வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

இன்று இலங்­கை­யின் பாரம்­ப­ரிய அர­சி­யல்­கட்­சி­கள் செய­லி­ழந்து போகும் நிலை, விலா­ச­மற்­றுப் போகும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதே­ச­ம­யம் புதிய அர­சி­யல் பய­ண­மொன்­றின் ஆரம்­பம் நாட்­டில் தலை­யெ­டுக்க வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் கருத முடி­கி­றது.

http://newuthayan.com/story/64304.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.