Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊவா மாகாண சபையில் பதற்றம் ; பொலிஸார் குவிப்பு, தாக்கப்பட்ட உறுப்பினர்கள் வைத்தியசாலையில்

Featured Replies

ஊவா மாகாண சபையில் பதற்றம் ; பொலிஸார் குவிப்பு, தாக்கப்பட்ட உறுப்பினர்கள் வைத்தியசாலையில்

 

 

 

ஊவா மாகாண சபையில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

uva.jpg

ஊவா மாகாண சபை அமர்வு இன்று இடம்பெறவிருந்த நிலையில், கட்சிதாவிய மாகாணசபை உறுப்பினரான கணேசமூர்த்தி மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஆர்.எம். ரத்னாயக்கவின் வாகனத்தில் ஏறி சபைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக ஊவா மாகாண சபையில் பொதுமக்கள் கூடியிருந்துள்ளனர்.

 

ஊவா மாகாண சபைக்குள் கட்சிதாவிய கணேசமூர்த்தி உள்நுழைகையில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை, அங்கு நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான உபாலி சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அம்பியூலன்ஸ் மூலம் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

சம்பவத்தையடுத்து ஊவா மாகாணசபை வளாகத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

 

இந்நிலையில், சபை அமர்வு ஆரம்பமானதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரொருவர் தாம் சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லையெனவும் இராணுவத்தினருடன்  தான் சபைக்கு வரவேண்டுமெனவும் தெரிவித்தார்.

அதையடுத்து புதிதாக மாகாணக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் தொண்டமானும் தமக்கு சபைக்கு வருவதற்கு பாதுகாப்பு வழங்குமாறும் சபையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சர் இது தொடர்பில் தான் சட்டபூர்வமான நடடிவக்கை எடுப்பதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார்.

 

சம்பவம் நடந்ததை கேள்வியுற்று அப்பகுதிக்கு விரைந்த அமைச்சர் ஹரீன்பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஊவா மாகாண சபையில் கூடியிருந்த பொதுமக்களுடன் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தாக்குதல் நடத்தியோர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக செய்தியாளர்  மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/29895

  • தொடங்கியவர்

ஊவா மாகாண சபைக்கு முன்னால் பெரும் கலகம்

p24-4976e3b75d399c0d921d1d7d5b94caff989681cb.jpg

 

உறுப்பினர்களான கணேசமூர்த்தி, சேனாரட்ன மீது தாக்குதல்; பலரும்  வைத்தியசாலையில் அனுமதி; சபையில் தாக்குதலுக்கு கடும் கண்டனம்
(பதுளை நிருபர்)

ஊவா மாகாண சபைக்கு முன்னால் நேற்று ஏற்­பட்ட கல­வ­ரத்தின் கார­ண­மாக ,மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான ஆ. கணே­ச­மூர்த்தி, உபாலி சேனா­ரட்ன ஆகியோர் காய­ம­டைந்­தனர். காய­ம­டைந்த இவர்கள் பதுளை அர­சினர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப் பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.    ஊவா மாகாண சபைக்கு முன்னால், நேற்றுக் காலை 10 மணி­ய­ளவில் மாகாண தமிழ்க்  கல்வி அமைச்­ச­ராகப் பொறுப்­பேற்ற செந்தில் தொண்­ட­மா­னுக்கு வர­வேற்பு அளிக்கும் முக­மாக விசேட நிகழ்வு இடம்­பெற்­றது.  

அவ்­வே­ளையில், ஊவா மாகாண சபை அமர்வும் நேற்­றைய தினம் நடை­பெற்­ற­தி னால், அச்­சபை அமர்­வுக்கு வருகை தந்த சபை உறுப்­பி­னர்­க­ளான  ஆ. கணே­ச­மூர்த்தி மற்றும் உபாலி சேனா­ரட்ன ஆகியோர் சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் ஆர்.எம். ரட்­ணா­யக்­கவின் வாக­னத்தில் சபை வளா­கத்­திற்குள் வாயிற்­க­தவால் உள் நுழைந்­தனர். அப்­போது, அங்கு திடீ­ரென்று வந்த குழு­வினர், மாகாண சபை உறுப்­பினர் ஆ. கணே­ச­மூர்த்­தியை பல­மாகத் தாக்­கி­யுள்­ளனர். அத்­துடன் அவரை பாது­காக்க முனைந்த மற்­றைய உறுப்­பினர் உபாலி சேனா­ரட்­ணவும் அந்­தக்­கு­ழு­வி­னரால் தாக்­கப்­பட்டார். 

தாக்­கப்­பட்ட பின்­னரும் அவர்கள் சபை அமர்வில் சமூ­க­ம­ளித்த போதிலும் வருத்தம் கடு­மை­யா­ன­மை­யினால் அவர்கள் இரு­வ­ரையும் தூக்கிச் சென்று, அம்­புலன்ஸ் வாக­னத்தில் சக உறுப்­பி­னர்கள் ஏற்றி பதுளை அர­சினர் வைத்­திய சாலைக்கு கொண்டு சென்­றனர். இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த சம்­ப­வத்தை அடுத்து மத்­திய அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ, ஐ.தே.க. வின் பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஸ் ஆகி­யோரும் மாகா­ண­சபை வளா­கத்­திற்குள் உட­ன­டி­யாக வருகை தந்து காய­ம­டைந்த உறுப்­பி­னர்­களை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல உத­வினர்.

இந்த மோதல் நிலையை அடுத்து , கலகம் அடக்கும் பொலிசார் பெரு­ம­ளவில் ஊவா மாகாண சபைக்கு முன்­பாக குவிக்­கப்­பட்­டனர். அத்­துடன் வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொண்ட மக்­களை பொலிசார் வெளி­யேற்­றினர். அப்­போது சபை வளா­கத்­திற்கு வெளியே இருந்த குழு­வினர் இவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யதை அடுத்து வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொண்ட மக்­களில் 9 பேர் பாதிக்­கப்­பட்டு, அவர்­களும் பதுளை அர­சினர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இச் சம்­ப­வத்தின் போது சபையின் எதிர்க்­கட்சித் தலை­வரின் வாக­னத்­திற்கும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

தாக்­குதல் சம்­ப­வத்தை அடுத்து நேற்று முற்­பகல் சபை அமர்வு ஆரம்­ப­மா­னதும், மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க உரை­யாற்­று­கையில், ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றேன். இனிமேல் இது­போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெ­ற­மாட்­டாது. சம்­ப­வத்தில் காய­முற்ற சபை உறுப்­பி­னர்கள் விட­யத்தில் பெரும் கவ­லை­ய­டை­கின்றேன். சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு பூரண பாது­காப்பு வழங்­கப்­படும் என்றார்.

மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தன­து­ரையில், இடம்­பெற்ற சம்­ப­வத்­தினை நானும் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றேன். சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு பூரண பாது­காப்பு வழங்க வேண்டும். சபைக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் பாது­காப்பு போதாது என்றார்.

இத­னை­ய­டுத்து சபை உறுப்­பி­னர்கள் பலரும், இடம்­பெற்ற சம்­ப­வத்தை கட்­சி­பே­த­மின்றி கண்­டித்­தனர்.

ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்­பெற்ற இச்­சம்­பவம் வர­லாற்றில் தடம்­ப­திக்க வேண்­டி­ய­தொன்­றாகும். இச்­சம்­பவம், ஊவா மாகாண சபைக்கு பெரும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக, சபையில் ஜே.வி.பி. உறுப்­பினர் சமந்த வித்­தி­யா­ரட்ண தெரி­வித்தார்.

இதே­வேளை காய­ம­டைந்து பதுளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட மாகாண சபை உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பதுளை மாவட்ட எம்.பி. அர­விந்­த­குமார் சென்று பார்­வை­யிட்டு ஆறுதல் கூறி­யுள்ளார்.

செந்தில் தொண்­டமான் கருத்து

இதே­வளை இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கருத்து தெரி­வித்த மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான்

என்னை வர­வேற்க்க வந்த ஆத­ர­வா­ளர்கள் மற்றும் பொது­மக்கள் மீது கண்­மூ­டித்­த­ன­மாக தாக்­குதல் நடத்­திய தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அமைச்சர் ஹரீன் பெர்­னான்டோ மற்றும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளையும் அவர்கள் மீது எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­காது பக்­க­சார்­பாக நடந்­துக்­கொண்ட பொலி­ஸா­ரையும் வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன்.

நேற்று ஊவா மாகாண கல்வி அமைச்­ச­ராக பத­வி­யேற்­றுக்­கொள்ள நான் சென்ற போது என்னை வர­வேற்­ப­தற்­காக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஊவா மாகாண சபைக்கு வந்­தி­ருந்­தனர். நான் ஏற்­க­னவே சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட பொலி­ஸா­ரிடம் என் பத­வி­யே­றப்­புக்கு அதி­க­ள­வி­லான என் தொண்­டர்கள் வரு­வார்கள். அவர்­க­ளுக்கு உரிய பாது­காப்பை வழங்க வேண்டும் என கோரி­யி­ருந்தேன்.

இந்­நி­லையில் இ.தொ.காவின் முன்னாள் உறுப்­பி­ன­ராக இருந்து பின்னர் ஐக்­கி­ய­தே­சிய கட்­சிக்கு மாறி இன்று ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் ஊவா­மா­காண சபை உறுப்­பி­ன­ராக உள்ள கணே­ச­மூர்த்­தியும் நேற்று மாகாண சபைக்கு வருகை தந்­தி­ருந்தார். அவர் மீது நிதிக் கொடுக்கல் வாங்கல் சம்­பந்­தப்­பட்ட 30க்கும் மேற்­பட்ட வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

பொலிஸார் அவர் மீது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தயங்­கு­கின்­றனர். காரணம் அவர் ஐக்­கிய தேசிய கட்­சியை சேர்ந்­தவர் என்­பதே ஆகும். சுதந்­திர கட்­சியை சேர்ந்த முத­ல­மைச்சர் மீது ஒரே­நாளில் நட­வ­டிக்கை எடுத்த பொலி­ஸாரால் சாதா­ரண மாகா­ண­சபை உறுப்­பினர் மீது ஒரு மாத கால­மா­கியும் நடி­வ­டிக்கை எடுக்க முடி­ய­வில்லை.

இந்­நி­லையில் நேற்று மாகாண சபைக்கு வந்த கணே­ச­மூர்த்­தி­யிடம் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் நான் பத­வி­யேற்பு முடிந்து அமைச்­சுக்கு சென்­று­விட்டேன். அப்­போது என்னை வர­வேற்க வந்த ஆத­ர­வா­ளர்கள் வெளி நுழை­வு­வா­யிலை கடந்து செல்ல முடி­யாத வகையில் ஹரின் பெர்­னன்­டோவும் அவ­ரது ஆத­வா­ளர்­களும் தங்­க­ளது அரச வாக­னங்­களை இடை­நி­றுத்தி வைத்து கணேச மூர்­தி­யுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்ட மக்­க­ளுடன் சேர்த்து எனது ஆத­ர­வா­ளர்­க­ளையும் தாக்­கி­யுள்­ளனர். தாக்­கு­தலில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் டீ சேர்ட்­டு­களை அணிந்­தி­ருந்­தனர். இது தொடர்­பான காணொளி ஆதாரம் என்­னிடம் உள்­ளது. இத்­தாக்­குதல் சம்­ப­வத்தால் 15க்கும் மேற்­பட்ட எனது ஆத­ர­வா­ளர்கள் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் நான் கடும் கண­ட­னத்தை பதிவு செய்­வ­தோடு நட­வ­டிக்கை எடுக்­காது பக்­க­சார்­பாக செயற்­படும் பொலி­ஸாரை வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன் என்று தெரி­வித்­துள்ளார்.

கணே­ச­மூர்த்தி கருத்து

தாக்­கு­த­லுக்­குள்­ளான மாகா­ண­சபை உறுப்­பினர் ஆ.கணே­ச­மூர்த்தி குறிப்­பி­டு­கையில் தோட்ட தொழி­லாளி சமூ­கத்தை சேர்ந்த நான் அர­சி­ய­லுக்கு வந்­ததன் கார­ண­மா­கத்தான் தாக்­கப்­பட்­டேனா? புதிய அமைச்சு பதவி கிடைத்­ததும் அதனை கொண்டு எனது குரலை அடக்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி இது ஆகும். இதனால் பாதிப்­ப­டை­வது எமது சமூ­கமே ஆகும். அரா­ஜக அர­சியல் கார­ண­மா­கத்தான் இவ்­வாறு தாக்­கப்­பட்டேன்.என் சமூ­கத்­திற்­காக நான் வேலை செய்ய துடித்த போது இ.தொ.கா என்னை மட்­டந்­தட்டி வைத்­தி­ருந்­தது. இத­னா­லேயே அங்­கி­ருந்து நான் வெ ளியேற வேண்­டி­ய­தா­யிற்று. எனது இறுதி மூச்­சி­ருக்கும் வரை எந்த சவால்­க­ளையும் சந்­திப்பேன். என் மீது களங்கம் சுமத்துவோருக்கு காலம் பதில் சொல்லும் என்றார்.

 அமைச்சர் ஹரீன் கருத்து

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், எங்கு நல்லாட்சிக்கான ஆரம்பம் இருந்ததோ அங்கு அது நாற்றம் எடுக்க தொடங்கியுள்ளது. மக்கள் பிரதிநிதிக்கு மாகாண சபைக்கு வர முடியாமல் சண்டித்தன அரசியல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பொறுப்பு வாய்ந்த பலர் உள்ளனர்.சட்டமும் மௌனிக்கின்றது.அரசியல் இலாபத்திற்காக நடைபெறும் இது போன்ற அநாகரிக செயலை வன்மையாக கண்டிக்கிறேன் கணேசமூர்த்தி செந்திலுடன் இருக்கும் போது கண்டுக்கொள்ளப்படாத குற்றங்கள் வடிவேலுடன் சேர்ந்த பின்னர் தான் பேசப்படவேண்டுமா?அதை சட்டம் பார்த்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.