Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

``டிவில்லியர்ஸ் கம்பேக்!’’ - ஜோகன்னஸ்பெர்க் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

 
 

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். 

India_16229.jpg

 

Photo: Twitter/OfficialCSA


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வென்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ்  மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். 

காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாடாத தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் இந்தப் போட்டியின் மூலம் அணிக்குத் திரும்பியிருக்கிறார். இது அந்த அணியின் மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் சேர்க்கும் என்று கருதப்படுகிறது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாகக் காயமடைந்த கேதர் ஜாதவுக்குப் பதிலாக, ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா களமிறங்கியுள்ளது. அதேநேரம், இந்தப் போட்டியிலும் வென்று தொடரை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் கண்டுள்ளது. 

https://www.vikatan.com/news/sports/116040-india-win-the-toos-and-elected-to-bat-in-4th-odi-against-sa.html

  • தொடங்கியவர்

நூறாவதில் நூறு; தவான் சாதனை!

 

நூறாவது போட்டியில் நூறு ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ஆரம்ப வீரர் ஷிகர் தவான் பெற்றார்.

7_Shikhar.JPG

இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ரபாடாவுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் என்ன ராசிப் பொருத்தமே தெரியவில்லை, இந்த முறையும் ரோஹித்தின் விக்கெட்டை ரபாடாவே வீழ்த்தினார்.

இந்தச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக ஆறு முறை ரோஹித்தின் விக்கெட்டை ரபாடாவே வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோலியும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

75 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.

எனினும் தனது நூறாவது போட்டியில் விளையாடும் ஷிகர் தவான், சிறப்பாக ஆடி 100 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம், நூறாவது போட்டியொன்றில் நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்தார். இது அவரது பதின்மூன்றாவது ஒருநாள் சதமாகும்.

109 ஓட்டங்களுடன் ஷிகர் தவான் ஆட்டமிழக்க, அணியின் ஓட்ட வேகம் குறைய ஆரம்பித்துள்ளது.

தற்போது 42 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 240 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

டோனி 18 ஓட்டங்களுடனும் ஷ்ரியாஸ் ஐயர் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.virakesari.lk/article/30505

 

6.png&h=42&w=42

269/6 * (48.2/50 ov
 
  • தொடங்கியவர்
இந்திய அணி தோல்வி ( 5 விக்கெட்)

South Africa won by 5 wickets (with 15 balls remaining) (D/L method)

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அவரது தன்னம்பிக்கைக்கு பின்னால் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி உந்து சக்தியாக இருப்பதும்

இவர்கள் இருவருமே இன்று மணி அடித்து விட்டார்கள்....

  • தொடங்கியவர்

4வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

 

தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. #SAvsIND

 
 
4வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா
 
ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

201802110213300626_1_cricket-sa-johannesburg-india-4th-odi-at_7dfd1816-0e90-11e8-9ced-6b0f736beaca._L_styvpf.jpg

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தவான், கோலி இருவரும் அரைசதம் கடந்தனர்.

இடையில் மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 75 ரன்கள் (7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தார்.

201802110213300626_2_cricket-sa-johannesburg-india-4th-odi-at_87035970-0e90-11e8-9ced-6b0f736beaca._L_styvpf.jpg

கோலி, தவான் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தவான் சதம் அடித்தார். இது அவரது 13-வது சதமாகும்.

அவரை தொடர்ந்து ரகானே களமிறங்கினார். சதமடித்த தவான் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரகானேவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனி மட்டும் ஓரளவு விளையாடினார்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. டோனி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் ரபாடா, நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மோர்னே மார்கல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 290 ரன்களை இலக்காக கொண்டு தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரமும்  ஆம்லாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது, மார்க்ரம் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்ரிக்கா 28 ஓவர்களில் 202 என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினியை குல்தீப் 10 ரன்களில் அவுட்டாக்கினார். அதன்பின் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 77 ஆக இருக்கும்போது ஆம்லாவை 33 ரன்களில் குல்தீப் அவுட்டாக்கினார்.

201802110213300626_3_f5t45bx0._L_styvpf.jpg

அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக ஆடினார். இருவரும் சேர்ந்து சிக்சர், பவுண்டரியாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 102 ஆக இருக்கும்போது டி வில்லியர்ஸ் பாண்ட்யாவிடம் அவுட்டானார். அவரை தொடர்ந்து கிளாசன் இறங்கினார்.

அதிரடியாக ஆடிய டேவிட் மில்லருக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. சாஹல் வீசிய பந்தை மில்லர் தூக்கியடிக்க, எல்லை கோட்டின் அருகில் நின்ற ஷ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார். இதேபோல், சாஹல் பந்து வீச்சில் மில்லர் கிளீன் போல்டானார். ஆனால் அது நோ பால் என தெரிய வந்ததால் மில்லர் தப்பினார்.

இதையடுத்து, இந்திய பந்து வீச்சை இருவரும் திறமையாக அடித்து ஆடினர். 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் சாஹல் பந்துவீச்சில் எல் பி டபிள்யு ஆனார். அவர் 28 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து பெலுகுவாயோ களமிறங்கினார். அப்போது தென் ஆப்ரிக்கா 26 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.

ஒருபுறம் கிளாசன் அதிரடியாக ஆட, பெலுகோவியாவும் அடித்து ஆடினார். இருவரும் சேர்ந்து கடைசி 11 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க, தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. அந்த அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கிளாசன் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 42 ரன்களுடனும், பெலுகோவியா 5 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், பும்ரா, பாண்ட்யா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருதை கிளாசன் பெற்றார். நூறாவது போட்டியில் சதமடித்த ஷிகார் தவானின் ஆட்டம் வீணானதே என ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்தனர்.

இந்த ஆட்டத்தில் தோற்றாலும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி 13-ம் தேதி நடைபெறுகிறது. #SAvsIND

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/11021330/1145278/southafrica-beat-india-by-5-wickets-in-fourth-oneday.vpf

  • தொடங்கியவர்

பிங்க் டே போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் தென் ஆப்ரிக்கா

 
அ-அ+

தென் ஆப்ரிக்கா அணி தான் பங்கேற்ற அனைத்து பிங்க் டே போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது. #SAvsIND #PinkDay #SouthAfrica

 
பிங்க் டே போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் தென் ஆப்ரிக்கா
 
ஜோகன்னஸ்பெர்க்:

தென் ஆப்ரிக்கா அணி தான் பங்கேற்ற அனைத்து பிங்க் டே போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது.

தென் ஆப்ரிக்கா அணியினர் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக விளையாடி வருகின்றனர். அன்றைய தினத்தில் அவர்கள் இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்து பிங்க் டே போட்டியில் பங்கேற்கின்றனர்.

201802110541555546_1_cricket-sa-johannesburg-india-4th-odi-at_8301dff4-0e90-11e8-9ced-6b0f736beaca._L_styvpf.jpg

இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மார்பக புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் பிங்க் டே போட்டி நடைபெற்று வருகிறது. பிங்க் டே போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி கால்பதிப்பது இது 6-வது முறையாகும். இத்தகைய போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா ஒரு போதும் தோற்றதில்லை.

மேலும், இளஞ்சிவப்பு உடை டிவில்லியர்சுக்கு ரொம்பவே பிடிக்கும். பிங்க் டேயில் அவர் 5 ஆட்டங்களில் 450 ரன்கள் (சராசரி 112.5) குவித்துள்ளார். இதில் 2015-ம் ஆண்டு இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 44 பந்துகளில் 149 ரன்கள் நொறுக்கியதும் அடங்கும்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பிங்க் டே போட்டியிலும் தென் ஆப்ரிக்க அணி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

இந்த போட்டியின் மூலம் சுமார் 90 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை கிடைத்துள்ளது. இந்த தொகை மார்பக புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SAvsIND #PinkDay #SouthAfrica

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/11054207/1145283/southafrica-continue-won-in-pink-day-oneday-matches.vpf

  • தொடங்கியவர்

பிங்க் சீருடை வெற்றி தொடர்கிறது: சாஹல், குல்தீப் யாதவுக்கு விளாசல்; தென் ஆப்பிரிக்கா வெற்றி

 

 
Sa

சிக்ஸ் அடித்து வென்ற பெலுக்வயோ மற்றும் ஆட்ட நாயகன் கிளாசன்.   -  படம். | ஏ.எஃப்.பி.

வாண்டரர்ஸ் ஒருநாள் போட்டியில் தொடரை இழக்கும் அபாயத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை முதலில் 289 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, பிறகு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் திருத்தப்பட்ட இலக்கான 28 ஓவர்களில் 202 ரன்கள் இலக்கை 25.3 ஓவர்களில் விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து ஷிகர் தவணின் சதம், கோலியின் 75 ரன்கள், இவர்க்ள் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்த 158 ரன்கள் பிறகு தோனியின் பினிஷிங் மூலம் 289 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் ஸ்கோர் திருத்தப்பட 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டும், ஆனால் 25.3 ஓவர்களில் 207/5 என்று அதிரடியில் வெற்றி பெற்று தொடரில் 3-1 என்று பின் தங்கியுள்ளது.

பிங்க் சீருடையில் 6-வது போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்றது. டிவில்லியர்ஸ் அணிக்கு வந்தவுடனேயே அந்த அணியின் உடல் மொழியே வேறு ஒரு தன்னம்பிக்கையை எட்டியதைப் பார்க்க முடிந்தது. அதனால்தான் முதல் 3 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை நேற்று புரட்டி எடுத்தனர். இவர்கள் இருவரும் 11.3 ஒவர்கள் வீசி 119 ரன்கள் விளாசப்பட்டனர். அதாவது குல்தீப் யாதவ் 6 ஓவர்களில் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாஹல் 5.3 ஒவர்கள் 68 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்க அணி ஆடிய ஷாட்கள் சில திகைப்பூட்டும் புதுவகை ஷாட்களாக அமைந்தன. விக்கெட் கீப்பர் கிளாசன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்களையும், டேவிட் மில்லர் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்களையும் விளாசியதோடு 47 பந்துகளில் 72 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சாஹல், குல்தீப் யாதவ்வை அடித்து நொறுக்குவது என்ற திட்டத்துடன் களமிறங்கியது போல் தெரிகிறது. பெலுக்வயோ இறங்கி 5 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்தார், வெற்றிக்கான ஷாட்டே சிக்ஸ்தான்.

தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர் மார்க்ரம் அருமையாக ஆடி 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது இடி-மின்னல் மழைக்கு முன்பாக பும்ராவின் சற்றே ஃபுல் லெந்த் பந்தை ஷார்ட் பிட்ச் பந்தாக தவறாகக் கணித்து லெக் திசையில் அடித்து ஆட நினைக்க பந்து கால்காப்பைத் தாக்கியது, நடுவர் அவுட் கொடுக்க ரிவியூ அதனை உறுதி செய்தது. ஆனால் 7.2 ஒவர்களில் 43 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை பெற்றது தென் ஆப்பிரிக்கா,

பிறகு இடி-மின்னல்-மழை தாக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் நின்று போனது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 28 ஓவர்களில் 202 ரன்கள் என்று திருத்தப்பட்டது.

ஆட்டம் தொடங்கியவுடனேயே 9வது ஓவரில் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார், அந்த ஓவரில் அவர் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். குல்தீப் 2வது ஓவரையும் சிக்கனமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 11 ஓவர்களில் 57/1. வெற்றிக்கு 17 ஓவர்களில் 145 ரன்கள் தேவையாக இருந்தது. அதன் பிறகு பாண்டியா ஓவரில் ஆம்லா பீட்டன் ஆனார், ஒரு இன்சைடு எட்ஜும் எடுத்து அதிர்ஷ்டம் அமைய எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் ஆம்லா. 16 ஓவர்களில் 137 ரன்கள் தேவை.

டுமினி சர்ச்சைக்குரிய அவுட்:

குல்தீப் யாதவ் தன் 3வது ஓவரை வீச வந்த போது 10 ரன்களில் இருந்த டுமினி நன்றாக மேலேறி வந்து ஆட முற்பட்டார், ஆனால் குல்தீப்பின் பந்து வந்த விதம் அவர் அக்ராஸ் த லைனில் ஆட வைத்தது கால்காப்பில் வாங்கினார் நடுவர் ஜீலே கையை உயர்த்தினார், தென் ஆப்பிரிக்காவிடம் ரிவ்யூ எதுவும் இல்லை. அதிருப்தியுடன் வெளியேறினார் டுமினி, சுமார் 3-4 அடி அவர் மேலேறி வந்து ஆடியிருப்பார். இதையெல்லாம் அவுட் கொடுப்பது அரிதே. டிவில்லியர்ஸ் களமிறங்கி 2 ரன்களை எடுக்க 13 ஓவர்கள் முடிவில் 70/2.

புவனேஷ்வர் குமாரின் அற்புத கேட்ச்:

அடுத்த பாண்டியா ஓவரில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வர டிவில்லியர்ஸ் அதனை முறையாக டீப் மிட்விக்கெட் பவுண்ட்ரிக்கு அனுப்பினார். மறுமுனையில் ஹஷிம் ஆம்லா 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை ஒரு சிப் ஷாட் ஆடினார், பந்து லாங் ஆஃபில் சிக்ஸ் நோக்கிச் சென்றது, பவுண்டரிக்கு வெகு அருகே புவனேஷ்வர் குமார் உயரே எழும்பி தலைக்கு மேல் கேட்ச் எடுத்தார், ஆனால் சமநிலை குலைந்து எல்லைக் கோட்டை கடந்து விடுவோம் என்று நினைத்த அவர் பந்தை மீண்டும் உள்ளுக்குள் தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் வந்து பிடித்தார். நெருக்கடியான தருணத்தில் அபாரமான கேட்ச் அது. ஆம்லா வெளியேற மில்லர் அதே ஓவரின் கடைசி பந்தை அசுர ஸ்வீப் ஷாட்டில் பவுண்டை விளாச 15 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 83/3. குல்தீப் யாதவ் இதுவரை அருமையாக வீசி 4 ஒவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தார்.

திருப்பு முனை ஓவர்: சாஹலுக்கு விளாசல்

16வது ஓவரில் யஜுவேந்திர சாஹல் வீச அழைக்கப்பட்டார். 4-வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆன பந்தை டிவில்லியர்ஸ் முழங்காலை சற்றே மண்டியிட்டு மிட்விக்கெட்டில் ஒரே தூக்கு தூக்க சிக்ஸ் ஆனது, அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் ஆக அமைய அதனை மீண்டும் மிட்விக்கெட்டில் பளாரென்று சிக்ஸ் அடித்தார். முதல் ஓவரிலேயே சாஹல் 17 ரன்களை கொடுத்தார்.

அடுத்த ஓவரை பாண்டியா வீச 18 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த டிவில்லியர்ஸ், பாண்டியாவின் பந்தை மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க நினைத்துத் தூக்க லாங் லெக்கில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானதல்ல. 11 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடினமாகவே தோன்றியது.

ஷ்ரேயஸ் ஐயர் மில்லருக்கு விட்ட கேட்ச்... அல்ல மேட்ச்... அல்ல தொடர்:

பாண்டியா ஒருமுனையில் அபாரமாக வீச டேவிட் மில்லரை ஒரு முறை பீட்டனும் செய்திருந்தார், முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்த சாஹல் அடுத்த ஓவரை வீச வர டேவிட் மில்லர் மிடில் அண்ட் ஆஃபுக்கு வந்த பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார் முன் விளிம்பில் பட்டு பந்து உயரே எழும்ப ஷ்ரேயஸ் ஐயர் வலது புறம் ஓடி பிடிக்க முயன்றார் பந்து அவரது மணிக்கட்டில் பட்டு தவறியது. இது மிகப்பெரிய கணமாக அமைந்தது, கேட்சை விட்டதோடு மேட்சையும் விட்டு இந்திய அணி தொடரை முடிக்க வேண்டிய வாய்ப்பையும் தற்காலிகமாக இழக்க நேரிட்டது.

இவர் கேட்ச் விட்டதனால் புத்துயிர் பெற்ற டேவிட் மில்லர் அடுத்த பாண்டியா ஓவரில் மிட் ஆஃப்க்கு மேல், பாயிண்டுக்கு மேல் மிட்விக்கெட்டுக்கு மேல் என்று 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது 19 ஓவர்கள் முடிவில் 121/4. மில்லர் 13 பந்துகளில் 21, கிளாசன் 3 ரன்கள். பிறகு சாஹல் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கொடுக்க. மறுமுனையில் குல்தீப் யாதவ்வை கிளாசன் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசி அடுத்து சிங்கிள் எடுத்து மில்லர் கையில் கொடுக்க அவர் குல்தீப் யாதவ்வின் நல்ல பந்தைக் கூட மிட்விக்கெட் மீது அசுர சிக்ஸ் அடித்தார். 42 பந்துகளில் 57 ரன்கள் தேவை என்று தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியின் வெளிச்சம் கிடைத்தது.

பிறகு சாஹலை கிளாசன் ஒரு பவுண்டரி, பிறகு லாங் ஆன் மேல் ஒரு மிகமிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கொடுக்க சாஹல் 4 ஓவர்களில் 45 ரன்கள் என்று விளாசப்பட்டார், ஆனால் மில்லர் கொடுத்த கேட்சை ஐயர் எடுத்திருந்தால் ஒருவேளை தென் ஆப்பிரிக்கா தோற்றிருக்கும் சாஹலும் புகுந்திருப்பார்! கடைசியில் சாஹலின் ஷார்ட் பிட்ச் பந்தை மீண்டும் ஒரு அரக்க சிக்ஸ் அடித்து 28 பந்துகளில் 39 ரன்கள் என்று ஆடி வந்த போது சாஹல் ஒரு பந்தை சற்றே வேகம் குறைவாக வீச பந்து உள்ளே வந்தது, கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார்.

அடுத்த ஓவரை குல்தீப் வீச கிளாசன் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார், பெலுக்வயோ இதே ஓவரில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடித்து குல்தீப் யாதவ் ஸ்பெல்லை காலி செய்தார்.

பெலுக்வயோ என்ன மூடில் இறங்கினார் என்று தெரியவில்லை அடுத்த சாஹல் ஓவரை பிரித்தார். சாஹல் 3 போட்டிகளில் வீசியது போல் வேகத்தைக் குறைத்து வீசினார், ஆனால் தடதடவென மேலேறி வந்த பெலுக்வயோ நேராக ஒரு சிக்ஸ் விளாசினார். பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் மிட்விக்கெட் சிக்ஸ். இத்துடன் ஸ்கோர் 207/5 என்று ஆனது, தென் ஆப்பிரிக்க அணியின் அதிர்ஷ்ட பிங்க் வெற்றி தொடர்ந்தது. பெலுக்வயோ 5 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட், கிளாசன் 23 பந்துகளில் 47 நாட் அவுட்.

ஆட்ட நாயகனாக விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி பேட்டிங்கில் இடி மின்னல் நிறுத்தத்துக்குப் பிறகு தவண், ரஹானே, பாண்டியா ஆகியோரது விக்கெட்டை குறைந்த இடைவெளியில் இழக்க 20-30 ரன்கள் குறைவானது, மேலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக வீச கடைசி 16 ஓவர்களில் 92 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். 35வது ஒவரில் இந்திய அணி 197/2 என்று நல்ல நிலையில்தான் இருந்தது, அதன் பிறகு பேட்டிங் சரிவு, நல்ல பந்து வீச்சினால் ரன்கள் மட்டுப்பட, பிறகு மழைகாரணமாக டக்வொர்த் முறையில் ரன் இலக்குக் குறைக்கப்பட, சாஹல், குல்தீப் வெளுத்து வாங்கப்பட, டேவிட் மில்லருக்கு ஷ்ரேயஸ் ஐயர் முக்கியமான கேட்சை விட இந்திய அணி தோல்வி கண்டது.

http://tamil.thehindu.com/sports/article22719681.ece

  • தொடங்கியவர்

தென்ஆப்பிரிக்கா கேப்டனுக்கு 20 சதவீதமும் வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம்

 
அ-அ+

ஜோகன்னஸ்பர்க் 4-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #SAvIND #PINKODI

 
தென்ஆப்பிரிக்கா கேப்டனுக்கு 20 சதவீதமும் வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம்
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தவான் 109 ரன்களும், விராட் கோலி 75 ரன்களும், டோனி 42 ரன்களும் எடுக்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் சேர்த்தது.

தென்ஆப்பிரிக்கா மோர்னே மோர்கல், ரபாடா, கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலுக்வாயோ ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இந்த ஐந்து பேரும் இணைந்து 46 ஓவர்கள் வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர் டுமினி நான்கு ஓவர்கள் வீசினார்.

201802111620112758_1_ngidi-s._L_styvpf.jpg

ஐந்து வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியதால் போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்கா கேப்டன் மார்கிராமிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளார்.

இன்னும் 12 மாதத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால், மார்கிராம் கேப்டனாக செயல்பட்டால் தடைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது போட்டி நாளைமறுநாள் (13-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/11162011/1145347/SAvIND-Johannesburg-ODI-south-africa-captain-markram.vpf

  • தொடங்கியவர்

இன்று 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை: தொடரை கைப்பற்றுவதில் இந்தியா தீவிர முனைப்பு

13chpmuGround

மிரட்டும் மழை மேகங்களின் கீழ் பச்சை பசேல் என காட்சியளிக்கும் போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானம்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. புத்துணர்ச்சி அடைந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதன்முறையாக இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை கைப்பற்றும் கனவை தொடர்ந்தபடி இன்றைய ஆட்டத்தை அணுகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

‘மேன் இன் புளூ’ என வர்ணிக்கப்படும் இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 3-1 என முன்னிலை வகிக்கிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், செஞ்சுரியனில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மீண்டு வந்தது.

மழை மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பிங்க் நிற உடையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரானது இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கும், தென் ஆப்பிக்க அணியின் பேட்டிங் வரிசைக்குமான நேரடி மோதலாக இருந்து வருகிறது. இது இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என்றே கருதப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க் போட்டியில் இருமுறை மழை குறுக்கிட்டதால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணியின் உத்வேகம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

கணிசமான அளவில் இலக்கு குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் விரைவாக ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட போதிலும் அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்களிடம் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் போனது. கிட்டத்தட்ட டி 20 வடிவில் அமைந்த இந்த இன்னிங்ஸில், ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்திக் கொண்டு டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் ஜோடி ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தாக்குதல் பேட்டிங்கை கையாண்டு வெற்றியின் தருணங்களை இந்திய அணியிடம் இருந்து பறித்தனர்.

டேவிட் மில்லருக்கு கேட்ச்சை தவற விட்டது, நோபாலில் அவரை போல்டாக்கியது என இரண்டு முக்கிய காரணிகள் இந்திய அணி ஆட்டத்தின் முடிவை தாரை வார்த்தது போன்று அமைந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு எதிராக எந்த வகையில் ரன் குவிக்க வேண்டும் என்ற யுத்தியை தென் ஆப்பிரிக்க வீரர்கள் கண்டறிந்து கொண்டதாகவே கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தாக்குதல் ஆட்டம் தொடுத்த போதிலும் விராட் கோலி பந்து வீச்சில் மாற்றம் செய்யாமல் தவறிழைத்தார்.

டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை சரியாக பயன்படுத்தத் தவறினார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும் தொடர்ந்து அவர்கள் மீது அதிக நம்பிக்கையை செலுத்தினார் கோலி. ஆனால் அவர்களால் தாக்குதல் பேட்டிங்குக்கு எதிராக சரியான பதிலடி கொடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்துக்கான அணித் தேர்வில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடை பகுதியில் காயம் அடைந்துள்ள கேதார் ஜாதவின் உடல் தகுதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான அவர், ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் விளையாடாதது அணியின் சமநிலையை பாதிப்புக்குள்ளாக்கியது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்ட நிலையில் கூடுதல் யுத்தியாக மாற்று பந்து வீச்சாளர் இல்லாததால் இந்திய அணி சற்று அழுத்தத்துக்கு உள்ளானது. ஏனெனில் சில ஆட்டங்களில் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாத நிலையில் கேதார் ஜாதவ் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால் அவரது இடத்தை நிரப்பும் வகையிலான வீரரை பயன்படுத்த வேண்டிய நிலை இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

எனினும் அதற்கான போதிய தேர்வுகளை அணி கொண்டிருக்கவில்லை. ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்படக்கூடியவர்கள்தான். ஸ்ரேயஸ் ஐயர் தனது அறிமுக தொடரான இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஒரு ஓவர் வீசியுள்ளார். மாறாக ரோஹித் சர்மா கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீசியிருந்தார். எனினும் கேதார் ஜாதவ் போன்று இவர்கள் இருவரும் நம்பகத்தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள் இல்லை.

இவர்களுடன் விராட் கோலியும் மற்றொரு போட்டியாளராக உள்ளார். ஆனால் அவர் பந்து வீச்சின் தையல் பகுதியை பயன்படுத்தி பந்து வீசக்கூடியவர். சுருக்கமாகக் கூறினால் பேட்டிங்கை காட்டிலும் பந்து வீச்சில் சற்று கூடுதல் திறனை வெளிப்படுத்தும் கேதார் ஜாதவ் இல்லலாதது அணியின் சமநிலை உகந்ததாக இல்லை என்பதையே காட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க இந்தத் தொடரின் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங் சரியாக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. 4-வது இடத்தில் களமிறக்கப்பட்டுள்ள அஜிங்க்ய ரஹானே முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆனால் அதன் பின்னர் அவர், இரு ஆட்டங்களில் முறையே 11 மற்றும் 8 ரன்களே சேர்த்தார். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்ததோடு சரி, அதன் பின்னர் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கடைசியாக நடைபெற்ற இரு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சேர்த்த ரன்கள் 14 மற்றும் 9 மட்டுமே. இந்த தடுமாற்றமான மிடில் ஆர்டர் பேட்டிங்கின் ஊடாக ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் தோனி சிறப்பாக பேட் செய்து 43 பந்துகளில், 42 ரன்கள் சேர்த்தார். அந்த ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் இந்திய அணி ரன்கள் சேர்க்க தடுமாற்றம் அடைந்த நிலையில் தோனியின் ஆட்டம் அணியை பாதுகாக்கும் வகையில் இருந்தது.

தற்போதைய தொடரில் இந்திய அணியின் ரன்குவிப்பு வலுவான டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையிடம் இருந்தே வெளிப்பட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா விதிவிலக்காக உள்ளார். தொடர்ச்சியாக மோசமான திறனை வெளிப்படுத்தி வரும் அவர், 4 இன்னிங்ஸில் சேர்த்த மொத்த ரன்கள் 40 மட்டுமே. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் அவரது சராசரி மேலும் குறைந்துள்ளது. இதுவரை 12 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 11.45 சராசரியையே கொண்டுள்ளார். மாறாக இந்தத் தொடரில் விராட் கோலி 393 ரன்களும், ஷிகர் தவண் 239 ரன்களும் வேட்டையாடி உள்ளனர். இது இந்திய அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் சேர்த்த ரன்களை விட (239) ஏறக்குறைய 3 மடங்கு அதிகமானதாகும்.

இதுவும் தற்போது இந்திய அணிக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சிதைக்கும் விதமாக ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோரை குறைந்த ரன்களில் விரைவாக ஆட்டமிழக்கக் செய்வதற்கான வழிகளை கண்டறிவதற்கான முயற்சிகளில் தென் ஆப்பிரிக்க அணி கவனம் செலுத்தக்கூடும் என கருதப்படுகிறது. இந்த வழியை அவர்கள் கண்டறிந்தால், நிச்சயம் ஆதாயம் பெறக்கூடிய வழியில் பயணிக்க நேரிடும். இதற்கிடையே அந்த அணியின் பந்து வீச்சு சேர்க்கையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் பிரதான சுழற்பந்து வீச்சாளரான இம்ரன் தகிர் சேர்க்கப்படவில்லை. மாறாக பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான ஜேபி டுமினி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்தார். ஆனால் இன்றைய ஆட்டம் நடைபெறும் போர்ட்எலிசபெத் செயின்ட் ஜார்க் பார்க் மைதானமானது கடந்த காலங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு கைகொடுத்துள்ளது. கடைசியாக இங்கு விளையாடப்பட்ட இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரன் தகிர் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதேபோல் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தபராசி ஷம்சி 36 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஆரோன் பாங்கிசோ 2 விக்கெட் கைப்பற்றினார்.

செயின்ட் ஜார்க் பார்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 32 ஆட்டங்களில் விளையாடிய 11 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் 6 தோல்விகள் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவையாகும். அதேவேளையில் இந்திய அணியின் சாதனைகளும் இந்த மைதானத் தில் சிறப்பானதாக இல்லை. 1992-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையடிய இந்திய அணி ஒன் றில் கூட வெற்றி பெறவில்லை. இதில் 4 தோல்விகள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரானது. ஒரு ஆட்டத்தில் கென்யா அணியிடம் இந்தியா தோல்வி கண்டிருந்தது.

இந்த 5 ஆட்டங்களிலும் இந்திய அணி 200 ரன்களை கூட எட்டியது இல்லை. அதிகபட்சமாக 2001-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 176 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியாக இந்திய அணி மீண்டும் ஒரு முறை போராட வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் போட்டித் தொடரை வென்று சாதனை படைக்கும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை இழந்துவிடக்கூடாது என்பதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

 

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ்பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ், ஜேபி டுமினி, இம்ரன் தகிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி நிகிடி, பெலுக்வயோ, ரபாடா, தப ராஸ் ஷம்சி, கயா ஸோண்டோ, பெகார்தின், ஹென் ரிச் கிளாசென். - பிடிஐ

நேரம்: மாலை 4.30

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1

http://tamil.thehindu.com/sports/article22738384.ece

  • தொடங்கியவர்

10,000 ரன்கள் மைல்கல்லை எட்டுவாரா தோனி? இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்பு: நாளை 5-வது போட்டி

 

 
dhoni

குல்தீப், கோலி, தோனி.   -  படம். | ஏ.பி.

பிங்க் உடையில் 4ம் ஒருநாள் போட்டியில் ராசி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா நாளை (செவ்வாய்) போர்ட் எலிசபெத் மைதானத்தில் தங்கள் வழக்கமான பச்சை உடையில் இந்திய அணியை 5-ம் ஒருநாள் (பகலிரவு) போட்டியில் எதிர்கொள்கிறது.

குறிப்பாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை பாடாய்ப்படுத்தி வரும் குல்தீப், சாஹல் ஜோடியை பிரித்து எடுத்து வென்றதும், இந்திய அணியை கடைசி ஓவர்களில் கட்டுப்படுத்தியதும், தாக்குதல் ஆட்டத்தை சாஹலை 2 சிக்சர்கள் மூலம் தொடங்கி வைத்த டிவில்லியர்ஸ் வருகையினாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு புதிய உத்வேகம் கூடியுள்ளது.

தோனி இன்னும் 46 ரன்கள் எடுத்தால் 10,000 ஒருநாள் போட்டி ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார், நாளை நிச்சயம் தோனி இந்தச் சாதனையை நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை விராட் கோலியின் பார்ம் பெரிய தலைவலியாக உள்ளது, இறங்கும்போதெல்லாம் அனாயசமாக அவர் சர்வசாதாரணமாக பெரிய அதிரடி இல்லாமலேயே பெரிய ஸ்கோர்களை எடுத்து விடுகிறார் என்பதே. அவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்தும் உத்தியை தென் ஆப்பிரிக்கா கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்

நிச்சயம் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயஸ் ஐயர் நிரூபிக்க வேண்டும், இவர்களிடமிருந்து பங்களிப்பு இல்லை, இதோடு ஷ்ரேயஸ் ஐயர் கேட்சைக் கோட்டை விடுபவராக இருக்கிறார், மணீஷ் பாண்டேயை, உமேஷ் யாதவ்வை அழைத்துச் சென்று வேடிக்கை பார்க்க வைக்கும் ஒரே அணித்தேர்வு நிர்வாகம் இந்திய அணி நிர்வாகமாகவே இருக்கும்.

போர்ட் எலிசபெத் மைதான ஆடுகளம் தென் ஆப்பிரிக்காவின் மெதுவான பிட்ச், எனவே இந்திய ஸ்பின் பவுலர்களுக்கு ஓரளவு உதவிகரமாக இருக்கும். இந்த மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் சராசரியாக இன்னிங்ஸுக்கு 320 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. மதியம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்திய அணி இந்தப் போட்டியில் வென்று முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் வரலாற்றை நிகழ்த்த நிச்சயம் ஆக்ரோஷமாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம், தென் ஆப்பிரிக்கா கடைசியாகப் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் களமிறங்கும். எனவே இன்னொரு விறுவிறுப்பான போட்டியாக இது அமையும்.

சாஹல், குல்தீப் யாதவுக்கு எதிராக கடந்த போட்டியில் கையாண்ட உத்தி கைகொடுத்ததால் நிச்சயம் நாளையும் அதே ஆக்ரோஷ பேட்டிங்கை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

சாஹல், குல்தீப் பிரச்சனை என்ன?

சாஹல், குல்தீப் போன்ற புதிர்வீச்சாளர்களிடம் உள்ள பிரச்சினை என்னவெனில் ஒன்று விக்கெட்டுகள் இல்லையேல் ரன்களை வழங்குவது என்று இருப்பதுதான், இடைப்பட்ட நிலையான இறுக்கமாக சில ஓவர்களை வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி நெருக்கடியை அதிகரித்து பிறகு விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவும் ரகம் இல்லை. அதனால்தான் இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பதை விட ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் ஒரு சாதாரண ஸ்பின்னரை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஒரு தொடரில்தான் அபாரமாக வீச முடிந்தது, அதன் பிறகு அவர் பந்தை புரிந்து கொண்டதால் கடுமையாக சாத்து வாங்கி இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தே காணாமல் போய்விட்டார், எனவே உலகக்கோப்பையில் குல்தீப், சாஹல் சேவை தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அதிகம் எதிரணி வீரர்களின் கண்களில் காட்டக்கூடாது, காரணம் இவர்கள் வீசும் கைகள் எதிரணி பேட்ஸ்மென்களுக்கு பழக்கமாகிவிட்டால் சாத்துதான்! எனவே இது குறித்து மாற்று யோசனைகளை இந்திய அணி நிர்வாகம் வைத்துக் கொள்வது நல்லது.

http://tamil.thehindu.com/sports/article22733402.ece

  • தொடங்கியவர்

5-வது ஒருநாள்: டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பீல்டிங்

kohli-markram

மார்க்ரம்- கோலி   -  படம். | ஏ.பி.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கைத்த் தேர்வு செய்தது.

இந்திய அணியில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் கிறிஸ் மோரிசுக்கு சிறு காயம் காரணமாக தப்ரைஸ் ஷம்சி என்ற ஸ்பின்னர் வந்துள்ளார்.

டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறியதாவது:

என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். விளக்கொளியில் பந்துகள் சறுக்கும் என்று கருதுகிறேன் அதனால் இலக்கை துரத்துவது சரியெனப் பட்டது. தற்போது வானிலை மேகமூட்டமாக இருப்பதால் பவுலிங் எடுக்கும். நன்றாகத் தொடங்கி, இந்திய மிடில் ஆர்டரைக் காலி செய்ய வேண்டும். தன்னம்பிக்கை, ஆற்றல், உற்சாகமட்டம் அதிகமாக உள்ளது, யாரும் களைப்படைந்ததாகக் கருதவில்லை, என்றார்.

விராட் கோலி: நாங்களும் முதலில் பவுலிங் தான் தேர்ந்தெடுத்திருப்போம். விரட்ட முடியக்கூடிய இலக்குக்கு அவர்களை மட்டுப்படுத்துவோம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் வீசுவார்கள். ஆனால் பிட்ச் முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் போல்தான் தெரிகிறது. அவர்களுக்கு வெற்றிபெற்றேயாக வேண்டிய ஆட்டம். நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம், ஒரளவுக்கு நல்ல ரன்களை எடுத்து அவர்களை மட்டுப்படுத்த வேண்டும். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அடிவாங்கினாலும் பரவாயில்லை. அவரக்ள் எதிர்பார்ப்புகளுக்கு மேல் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/article22742367.ece?homepage=true

  • தொடங்கியவர்

5 வது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம்!

 
 

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடக்கும் இந்திய அணிக்கெதிரான 5 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

 

டாஸ் போடும் இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணி கேப்டன்கள்

 

Photo: Twitter/ICC


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த விராட் படை, ஒரு நாள் தொடரின் முதல் 4 போட்டிகளில் மூன்றை வென்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4 வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்காவின் கேப்டன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாகத் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். தவான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர், 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 36 ரன்களில் ரன் அவுட்டானார். ரஹானேவும் 8 ரன்களில் ரன் அவுட் ஆக மறுமுனையில் ரோஹித் ஷர்மா நிலையாக நின்று விளையாடி சதமடித்தார். இது அவருக்கு 17 வது ஒரு நாள் சதமாகும். இந்திய அணி தற்போது 41 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.  

 

போர்ட் எலிசபெத் மைதானத்தைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே தோல்வியையே சந்தித்திருக்கிறது. அதேபோல், இந்த மைதானத்தில் முதல்முறையாக 200 ரன்களை இந்தியா கடந்துள்ளது.

https://www.vikatan.com/news/sports/116296-south-africa-have-won-the-toss-and-elected-to-bowl-first-in-the-5th-odi.html

  • தொடங்கியவர்
இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரை வென்று சாதனை
  • தொடங்கியவர்

தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை

 
அ-அ+

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. #SAvIND #INDvSA

 
 
 
 
தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை
 
ஜொகன்னஸ்பர்க்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார். தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 23 பந்தில் 8 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

201802140028337098_1_x8ovnca2._L_styvpf.jpg

அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 50 பந்தில் அரைசதம் அடித்தார். விராட் கோலி 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ரகானேவும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரோகித் சர்மா தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 107 பந்தில் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

201802140028337098_2_qhd16hhu._L_styvpf.jpg

ஷ்ரேயாஸ் அய்யர் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டோனி 13 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமார் கடைசி வரை நின்று 19 ரன்கள் அடிக்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நிகிடி 9 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

201802140028337098_3_indvssa - Copy._L_styvpf.jpg

அதைத்தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாசிம் அம்லாவும், எய்டன் மார்க்ரமும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டுமினி 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அம்லா உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக விளையாடிய அம்லா அரைசதம் கடந்தார். மில்லர் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஹெய்ன்ரிச் கிளாசென் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய அம்லா 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பெலுக்வாயோ ரன் எடுக்காமலும், ரபாடா 3 ரன்னிலும், கிளாசென் 39 ரன்னிலும், ஷம்சி ரன் எடுக்காமலும், மோர்னே மார்கல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், பாண்டியா, சஹால் ஆகியோர் 2 விக்கெட்களும், பும்ரா ஒரு விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

201802140028337098_4_indvssa1._L_styvpf.jpg

தென்ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது. #SAvIND #INDvSA

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/14002834/1145747/India-Beat-South-Africa-by-73-runs-to-clinch-series.vpf

 

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தொடரை வென்று வரலாறு: கோலி தலைமையில் இந்திய அணி சாதனை

 

 
kohli

கொண்டாடும் விராட் கோலி.   -  படம். | ஏ.எஃப்.பி.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 4-1 என்று கைப்பற்றி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 42.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சதமெடுத்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன்

rohitjpg

ஆட்ட நாயகன் விருதுடன் சதமெடுத்த ரோஹித் சர்மா.   -  படம். | ஏ.பி.

 

மீண்டும் குல்தீப் யாதவ் (4/57), சாஹல் (2/43) ஆகியோரிடம் 100 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டது. மேலும் இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா இழந்த 43 விக்கெட்டுகளில் 30 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ், சாஹல் ஜோடி கைப்பற்றியுள்ளது என்றால் தென் ஆப்பிரிக்காவின் ஸ்பின் பலவீனம் என்னவென்பது புரிகிறது.

166 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று 35வது ஓவரில் இருந்த தென் ஆப்பிரிக்கா 43 ஓவர்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணியில் ஹஷிம் ஆம்லா அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்து பாண்டியாவின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக அது திருப்பு முனையாக அமைந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஹர்திக் பாண்டியா இன்று பவுலிங்கில் முக்கிய விக்கெட்டான அபாய வீரர் டிவில்லியர்ஸ் மற்றும் ‘டுமீல்’ டுமினியையும் அடுத்தடுத்து வீழ்த்தி முதற்கட்ட திருப்பு முனையை ஏற்படுத்தினார். 2 விக்கெட்டுகள், ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச் என்று பாண்டியா இன்று அசத்தினார்.

ஆனால் அவர் எடுத்த விக்கெட்டுகளுக்கான இரண்டுபந்துகளுமே விக்கெட் எடுக்கத் தகுதியுடைய பந்துகள் அல்ல, சாஃப்ட் டிஸ்மிசல் என்பார்களே அதுதான் இரண்டும், டிவில்லியர்ஸ் ஸ்விங் ஆகாத ‘நேர் நேர் தேமா’ பந்தை எப்படி எட்ஜ் செய்தார் என்பது புரியாத புதிர். டுமினிக்கு கோலி தேர்ட்மேனில் சிங்கிள் போகாமல் இருப்பதற்காக வைடு ஸ்லிப் ஒன்றைக் கொண்டு வர டுமினியும் பாண்டியாவின் விக்கெட் பெற தகுதியில்லாத பந்தைக் குறிபார்த்து அந்த ஒரே பீல்டரிடம் பின்னால் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் அணி வெற்றி பெறத் தகுதியில்லாத அணியாகும். இவரையெல்லாம் இறங்கி நாலு சாத்து சாத்தினால் அதன் பிறகு அவருக்கு கை வராது, ஆனால் அவர் வீசிய ஒன்றுமில்லாத பந்துக்கு விக்கெட்டுகளை கொடுப்பது அராஜகம். பும்ராவுக்கு விக்கெட் கொடுத்திருந்தால் அதில் அர்த்தமுண்டு. ஆனால் தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரமே 32 ரன்களில் பும்ராவின் கோணத்தைப் பயன்படுத்தி மிட்விக்கெட்டின் மேல் சிப் ஷாட் ஆட முனைந்தா, ஆனால் பந்து சரியாக மட்டையில் சிக்கவில்லை கோலியிடம் கேட்ச் ஆனது. இதுவும் ஒரு சாஃப்ட் டிஸ்மிசல்தான்.

ஆனால் இவர் 9 ரன்களில் இருந்த போது பும்ரா பந்தை பின்னால் சென்று கவர் திசையில் அடித்தார், தரையில் இல்லை, தூக்கித்தான் அடித்தார், நேராக எக்ஸ்ட்ரா கவரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது, ஆனால் அவரோ கையை வைத்து பந்து பட்டு விடக்கூடாது என்பது போல் ஏடாகூடமாக கையைக் கொண்டு போய் கடைசியில் தொப்பென்று தரையில் விட்டார். கடந்த போட்டியில் மில்லருக்கு கேட்ச் விட்டு போட்டியை இழக்கச் செய்தார் இன்று மார்க்ரமுக்கு கேட்சை விட்டார், உடனேயே புவனேஷ்வர் குமார் ஓவரில் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியும் மிக அருமையாக ஸ்கொயர்லெக் மேல் ஒரு அபாரமான சிக்ஸும் அடித்தார் மார்கரம். மீண்டும் குமார் ஓவரிலேயே மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரியும் அதே ஓவரில் கவர் பாயிண்டில் காது செவிடாகும் சத்தத்துடன் இன்னொரு அரக்க ஷாட்டையும் அடித்து பவுண்டரி விளாசினார். 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில்தான் பும்ரா பந்தில் சாஃப்ட் ஆன கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டுமினி களமிறங்கி பும்ராவின் உள்ளே வந்த பந்தை எட்ஜ் செய்ய அது தோனிக்குச் சற்று முன் விழுந்தது. இந்நிலையில் 11 வது ஓவரை பாண்டியா வீச வர, 5வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி மேலும் வெளியே சென்றது, பந்தை ஒன்று ஆடாமல் விட்டிருக்க வேண்டும், அல்லது ஒரு காட்டு சுத்து சுத்தியிருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் மட்டையை அதனிடம் கொண்டு செல்ல எட்ஜ் ஆகி ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது, டுமினி 1 ரன்.

டிவில்லியர்ஸ் இறங்கி 6 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கையில் ஒன்றுமில்லாத பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நேராகச் சென்றது ஸ்விங்கும் இல்லை ஒன்றுமில்லை. உடலுக்கு தள்ளி மட்டையைக் கொண்டு சென்று ஸ்லாஷ் செய்தார் டிவில்லியர்ஸ் எட்ஜ் ஆனது தோனி பிடித்தார், இதுதான் திருப்பு முனையை ஏற்படுத்தியது. டிவில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இப்படி பாண்டியா ‘ரக’ பவுலர்களிடம் அவுட் ஆனால் என்ன செய்ய முடியும்? இங்குதான் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை கவனிக்கத்தக்கது, டிவில்லியர்ஸ் ஆக இருந்தாலும் பாண்டிங்காக இருந்தாலும் பாண்டியாவிடம் அவுட் ஆனால் அடுத்த போட்டியில் இருக்க மாட்டாய் என்பதைத் தெளிவாகக் கூறிவிடுவார்கள்.

மில்லர் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 13 ரன்களில் இருந்த போது சாஹல் பந்து ஒன்று திரும்பி கால்காப்பைத் தாக்க பெரிய எல்.பிமுறையீடு நடுவர் நாட் அவுட் என்க கோலி ரிவியூ செய்தார், அதிலும் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது, இதனால் நாட் அவுட். அதன் பிறகு சாஹலை நேராக ஒரு சிக்ஸ் அடித்தார்.

அந்த 7 ஓவர்கள்!

19 ஓவர்கள் முடிவில் 95/3 என்ற நிலையில் ஆம்லா 28 ரன்களுடனும், மில்லர் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த சிக்சருக்குப் பிறகு குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் டைட்டாக வீசினர் பவுண்டரிகளே வரவில்லை. ரன் விகிதம் குறையத் தொடங்கியது ஆம்லா 38 ரன்களில் இருந்த போது பாண்டியாவின் பந்தை கட் ஷாட் ஆடினார் ஷார்ட் பாயிண்டில் நேராக ரஹானேவிடம் சென்றது, அவர் சிங்கிளைத் தடுக்க அருகில் இருந்ததால் கேட்சை எடுக்கமுடியவில்லை. ஆகவே 19 ஓவர்களில் 95/3 என்பதிலிருந்து 26வது ஓவர் முடிவில் ஸ்கோர் 122/3 என்றுதான் உயர்ந்தது. பவுண்டரிகளே வரவில்லை, அதாவது 7 ஓவர்களில் வெறும் 27 ரன்களே வந்தது. அழுத்தம் எகிற அடுத்த சாஹல் ஓவரில் ஆம்லா ஸ்வீப் பவுண்டரி அடித்து 7 ஓவர்களுக்குப் பிறகு ’இந்தா’ பவுண்டரி என்றார்.

வெற்றி பெறத் தேவையான ரன் விகிதம் ஓவருக்கு 6.37 என்றுதான் உள்ளது, கூட்டணியை பில்ட் அப் செய்வதை விடுத்து மில்லர் 36 ரன்களில் இருந்த போது மிகவும் மெதுவாக வந்த பந்தை மேலேறி வந்து அடிக்கப் பார்த்தார், பந்தை விட்டு விட்டார் பவுல்டு ஆனது. சாஹல், குல்தீப் மெதுவாக தூக்கி வீசுகின்றனர் என்று புரிவதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை, பந்து வந்தவுடன் வெளுப்பதை விட்டு விட்டு அவசரப்பட்டு ஆடினால் மில்லர் போல்தான் பவுல்டு ஆக வேண்டி வரும்.

அதன் பிறகு ஆம்லா, சாஹலின் பந்தை ஸ்வீப் ஆடமுயன்று கால்காப்பில் வாங்கினார் அதற்கு ஏன் நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார் என்பது புதிர். கோலி நடுவரிடம் வாதிட்டது சரியென்று தோன்றுகிறது. அதன் பிறகு ஆம்லா 72 பந்துகளில் அரைசதம் எடுத்தார். சாஹலை கிளாசன் ஸ்வீப் பவுண்டரி அடிக்க 31வது ஓவரில் 9 ரன்கள் வந்தது, தென் ஆப்பிரிக்கா 148/4, வெற்றி பெற ரன் விகிதம் 6.68.

பிறகு புவனேஷ்வர், பும்ரா ஆகியோரை இரண்டு அற்புத பவுண்டரிகள் அடித்த ஆம்லா 92 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்திருந்தா, கிளாசன் 12 ரன்களில் இருந்தார். அப்போது தான்...

திருப்புமுனை பாண்டியா த்ரோ: ஆம்லா ரன் அவுட்:

ஆட்டத்தின் 35வது ஓவரின் 3வது பந்தை புவனேஷ்வர் குமார் வீச பின் காலில் சென்று மிட் ஆஃபில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க வேகமாக ஓடினார், பாண்டியாவின் நேர் த்ரோ ஸ்டம்புகளைப் பெயர்க்க ஏகப்பட்ட ரீப்ளேக்களுக்குப் பிறகு ஆம்லா மட்டையின் எந்த ஒரு பாகமும் கிரீஸிற்குள் இல்லை என்பதை உறுதியானது, ஆம்லா ரன் அவுட்.

167/5 என்ற நிலையிலிருந்து சரிவு தொடங்கியது பெலுக்வயோ ரன் எடுக்காமல் குல்தீப் பந்துக்கு மட்டையையும் காலையும் ஒன்றாகக்கொண்டு செல்லாமல் வீக் டிபன்ஸ் ஆட பந்து உள்ளே புகுந்து பவுல்டு ஆனது, மீண்டும் மிகமிக மெதுவாக வீசப்பட்ட பந்து.

கிளாசன் பிறகு முடிவுடன் ஆடி குல்தீப் யாதவ்வின் ஒரே ஓவரில் 16 ரன்கள் விளாசினார் இதில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும், ஒன்று இறங்கி வந்து நேராக அடித்த சிக்ஸ், மற்றொன்று ஸ்டன்னிங் ஷாட், பின்னால் சென்று மெதுவாக தாழ்வாக வந்த பந்தை நேராக அடித்த ஒரு அரிய சிக்ஸ். அதன் பிறகு ரன்கள் வரவில்லை.

ரபாடா மீண்டும் ஒரு மிக மெதுவான பந்தை லெக் திசையில் அடிக்க முனைந்து அருகிலேயே மிட்விக்கெட்டில் சாஹலிடம் கேட்ச் ஆனார். கிளாசன் இனி நின்று ஆடி என்ன பயன் என்று மேலேறி வந்து குல்தீப்பிடம் ஸ்டம்ப்டு ஆனார், ஷம்சி, வந்தவுடன் தூக்கி அடித்து பாண்டியாவிடம் வெளியேறினர், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குல்தீப். கடைசி விக்கெட்டான மோர்கெலை சாஹல் எல்.பியாக்கினார், தென் ஆப்பிரிக்கா 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்று வரலாறு படைத்தது.

ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article22746528.ece

  • தொடங்கியவர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்: குல்தீப்-சாஹல் கூட்டணிக்கு 30 விக்கெட்

 
அ-அ+

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து ஜோடி என்ற பெருமையை குல்தீப்-சாஹல் இருவரும் பெற்றனர்.

 
 
 
 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்: குல்தீப்-சாஹல் கூட்டணிக்கு 30 விக்கெட்
 
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சுழற்பந்து வீரர்களான குல்தீப் யாதவ்- சாஹல் அசத்தி வருகிறார்கள். அவர்களது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் திணறி வருகிறார்கள். தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வெல்ல இருவரும் முக்கிய காரணமாக திகழ்கிறார்கள்.

இருவரும் இதுவரை நடந்துள்ள 5 போட்டியில் 30 விக்கெட்டுக்கு வீழ்த்தி இருக்கிறார்கள். குல்தீப் யாதவ் 16 விக்கெட்டும், சாஹல் 14 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இதன்மூலம் இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.

இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய சுழற்பந்து வீரர்கள் 27 விக்கெட் (6 போட்டி) வீழ்த்தி இருந்தனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/14140549/1145846/India-vs-South-Africa-Series-kuldeep-yadav-chahal.vpf

  • தொடங்கியவர்

'ஷிகர் தவானை வெளியேற்றிய' ரபாடாவுக்கு அபராதம்

 
bcci

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா   -  படஉதவி: பிசிசிஐ ட்விட்டர்

இந்திய அணி வீரர் ஷிகர் தவானை ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றி அவருக்கு ஆத்திரமூட்டும் வகையில் சைகை செய்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தண்டனை வழங்கியுள்ளது.

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா 8-வது ஓவரில் ஒரு பவுன்ஸர் வீசினார். அதை இந்திய வீரர் ஷிகார் தவான் டீப் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க அதில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

அப்போது தவான் ஆட்டமிழந்து வெளியேறும்போது, அவரை ஓய்வு அறையைச் சுட்டிக்காட்டி, ரபாடா வெளியேறு என்று சைகையில் கூறினார். இந்த செயலால் தவானும் பதிலுக்கு கூறினார்.

சர்வதேசப் போட்டிகளில் எதிரணி வீரருக்கு ஆத்தரமூட்டும் வகையில் சைகை செய்வதும், பேசுவதும் குற்றமாகும்.

இதையடுத்து, ஐசிசி ஒழுங்கு விதிகள் 2.1.7-ன்படி, சர்வதேசப் போட்டியின் போது, பேட்ஸ்மனை ஆத்திரமூட்டும் வகையிலோ, பந்து வீச்சாளரை ஆத்திரமூட்டும் வகையிலோ சைகை, வார்த்தைகள் கூறுவது ஒழுங்கு விதிகளை மீறியதாகும். அதை ரபாடா மறீயதால், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும், ஒழுங்குக்குறைவுக்கு ஒரு மைனஸ்புள்ளியும் வழங்கி தண்டனை வழங்கப்படுகிறது என ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரபாடா ஒழுக்கக் குறைவாக நடந்து 5 மைனஸ் புள்ளிகள் வரை பெற்றுள்ளார். 24 மாதங்களுக்குள் சர்வதேசப் போட்டிகளில் 4 மைனஸ் புள்ளிகள் வரை முதல் முறையாக ஒரு வீரர் பெற்றால், அவர் அடுத்த ஒரு போட்டிக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்.

அந்த வகையில் ரபாடா 4 புள்ளிகள் பெற்று, கடந்த 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட அனுமதிக்கப்படாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இனி 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இன்னும் 3 மைனஸ் புள்ளிகள் பெற்றால், மீண்டும் ஒரு டெஸ்ட் போட்டிக்கோ அல்லது 2 அல்லது 4 ஒருநாள் அல்லது 4 டி20, போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்.

http://tamil.thehindu.com/sports/article22753787.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒப்புக்கொள்கிறேன், எங்களிடம் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை: காலிஸ் கருத்து

 

 
kallis

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ்: கோப்புப் படம்

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடி பழகாததும், இங்கு தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததுமே தோல்விக்கு காரணம், இதை ஒப்புக்கொள்கிறேன் என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தபோதிலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியது.

இதனால், 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 எனக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரும்பாலானோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சாஹல் 14 விக்கெட்டுகளையும், யாதவ் 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ஜாக் காலிஸ் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொதுவாக சிறந்த லெக் ஸ்பின்னர்கள் பந்துகளை கணித்து விளையாட சிறிது நேரம் ஆகும். தென் ஆப்பிரிக்கா வீரர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை போதுமான அளவில் விளையாடாததும், தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாததுமே தோல்விக்கு காரணமாகும்.

சிறந்த லெக் ஸ்பின்னர்கள் இல்லாததை நான் இந்த நேரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டம் இளைஞர்கள் கற்றுக்கொள்ளும் காலமும்.

அனுபவம் என்பது கிரிக்கெட்டில் முக்கியமானது. லெக் பிரேக் பந்துவீச்சை கணிப்பதில் இருவகைகள் உள்ளன. பந்துவீச்சாளரின் கையைவிட்டு பந்து வரும்போதே கணிப்பது, 2-வது வகை, பந்து தரையில் பிட்ச் ஆனபின் கணித்து விளையாடுவது. ஆனால், இதை ஒரே நேரத்தில் பேட்ஸ்மன் செய்ய முடியாது.

ஒருவர் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றால்தான், அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும். தனக்கு தெரிந்தவகையில் விளையாடினால், இது போன்ற சிரமங்களைத்தான் சந்திக்க வேண்டியது இருக்கும்.

முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித்துக்கு பின் வந்தவர்களில் பெரும்பாலான வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை கணித்து ஆழ்ந்து அனுபவம் இல்லை.

இப்போதாவது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுபவமான வீரர்கள் அணியில் இல்லாவிட்டால், அணியின் நிலை என்னாகும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக டீவில்லியர்ஸ், டூ பிளசிஸ் ஆகியோர் இல்லாததன் விளைவுதான் வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள்.

ஆதலால், இளம்வீரர்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகப்படுத்தும் முன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

நான் விளையாடிய காலத்தில் ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். ஆனால், இப்போது, முழுமையான ஆல்ரவுண்டர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

இந்திய வீரர் ஹர்திக் பாண்டயா பொறுத்தவரை இளம் வீரராக இருந்தாலும், அதிகமான விஷயங்களை கற்று வருகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்ஸ்மன், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என சமநிலையுடன் வீரர்கள் உள்ளனர். சுப்மான் கில், கம்லேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மவி ஆகிய இளம் வீரர்களும் உள்ளனர்.

இவ்வாறு காலிஸ் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article22759683.ece?homepage=true

  • தொடங்கியவர்

கடைசி வெற்றி யாருக்கு? இன்று 6-ஆவது ஒருநாள் ஆட்டம்

 

 
virat

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 6-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மொத்தம் 6 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 5 ஆட்டங்கள் முடிவில் 4-1 என முன்னிலை வகிக்கிறது இந்தியா. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-ஆவது ஆட்டத்தில் வென்றதன் மூலம், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது. அத்துடன், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
கடைசி ஆட்டத்திலும் வென்று, ஒருநாள் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. மறுபுறம், இந்தத் தொடரில் இதுவரை ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா. அந்த ஆறுதல் வெற்றியோடு கூடுதலாக ஒரு வெற்றி பெறும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா களம் காணும்.
இரு அணிகளிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. எனினும், இந்தியாவின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.
இலங்கை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை புவனேஷ்வர் குமார் 19 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களிலும், ஜஸ்பிரீத் பும்ரா 20 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனர். எனவே, அடுத்த சுற்றுப் பயணத் தொடர்களுக்கு முன்பாக அவர்கள் இருவருக்கும் அளிக்கப்படும் ஓய்வு பயனுள்ளதாக இருக்கும்.
வேகப்பந்துவீச்சில் இந்தியா இவர்களை மட்டுமே நம்பியுள்ளது. 2019 உலகக் கோப்பை போட்டி நெருங்கியுள்ள நிலையில், மாற்று வீரர்களையும் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. முகமது ஷமி 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு 3 ஒருநாள் தொடர்களில் மட்டுமே ஆடியுள்ளார். 4-ஆவது தேர்வான ஷர்துல் தாக்குர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது. இத்தொடரில் 4 முதல் 7-ஆவது எண் வரையிலான பேட்ஸ்மேன்களால் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே, ஓய்வு காரணமாக இந்திய அணியினர் வியாழக்கிழமை பயிற்சி மேற்கொள்ளவில்லை. 

list2.JPG

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/16/கடைசி-வெற்றி-யாருக்கு-இன்று-6-ஆவது-ஒருநாள்-ஆட்டம்-2864062.html

  • தொடங்கியவர்

6-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 204 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா

 
அ-அ+

சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஷர்துல் தாகூர் பந்து வீச்சால் 6-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #SAvIND

 
6-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 204 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த அணியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்கா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷம்சி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டு சோண்டோ, பெஹார்டியன், மோரிஸ், இம்ரான் தஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

மார்கிராம், அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 23 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. அம்லா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

4-வது மற்றும் ஐந்தாவது போட்டியில் ஏமாற்றம் அளித்த டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் ரசிகர்களை குஷி படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 34 பந்தில் 4 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

201802162011486687_1_zondo001sss-s._L_styvpf.jpg

டி வில்லியர்ஸ் அவுட்டான பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய சோண்டோ மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 74 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த கிளாசன் (22), பெஹார்டியன் (1), கிறிஸ் மோரிஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 151 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. 8-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் மோர்னே மோர்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. மோர்கல் 19 பந்தில் 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

201802162011486687_2_chahal001-s._L_styvpf.jpg

9-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் இம்ரான் தஹிர் ஜோடி சேர்ந்தார். தாஹிர் 2 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் நிகிடி ஜோடி சேர்ந்தார். பெலுக்வாயோ 42 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 46.5 ஓவரில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். #SAvIND #INDvSA
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/16201150/1146245/SAvIND-centurion-ODI-south-africa-204-all-out.vpf

  • தொடங்கியவர்

6-வது ஒருநாள் போட்டியில் கோலியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

 
அ-அ+

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #SAvIND #INDvSA

 
6-வது ஒருநாள் போட்டியில் கோலியின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 
செஞ்சூரியன்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மார்கிராம், அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 23 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. அம்லா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

3-வது வீரராக களம் இறங்கிய டி வில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அதன் பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி திணற ஆரம்பித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய சோண்டோ மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 74 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த கிளாசன் (22), பெஹார்டியன் (1), கிறிஸ் மோரிஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 151 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. 8-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் மோர்னே மோர்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. மோர்கல் 19 பந்தில் 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
 
201802162331593711_1_indvssa-thakur162._L_styvpf.jpg


9-வது விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் இம்ரான் தஹிர் ஜோடி சேர்ந்தார். தாஹிர் 2 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு பெலுக்வாயோ உடன் நிகிடி ஜோடி சேர்ந்தார். பெலுக்வாயோ 42 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 46.5 ஓவரில் 204 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கோலி ஜோடி சேர்ந்தார். தவான் நிதானமாக விளையாட, கோலி அதிரடியாக விளையாடி ரன்குவித்தார்.

தவான் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரகானே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 82 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 35-வது சதமாகும். மேலும் இந்த ஒருநாள் தொடரில் அவரது மூன்றாவது சதமாகும்.
 
201802162331593711_2_indvssa-kholi162._L_styvpf.jpg


இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. விராட் கோலி 129 ரன்களுடனும், ரகானே 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் நிகிடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணியின் விராட் கோலி ஆட்டநாயகன் விருதையும், தொடர்நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அடுத்ததாக இந்தியா - தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி 18-ம் தேதி நடைபெற உள்ளது. #SAvIND #INDvSA

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/16233200/1146264/India-beat-South-Africa-by-8-wickets-in-last-ODI.vpf

  • தொடங்கியவர்

35-வது சதம்; ஆட்ட, தொடர் நாயகன் விராட் கோலி அசத்தல்: ஒருநாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா

 

 
virat%20kohli

ஒரு நாயகன் விராட் கோலி சதம் எடுக்க இன்னொரு நாயகன் டிவில்லியர்ஸ் கைத்தட்டுகிறார்.   -  படம். | ஏ.எஃப்.பி.

செஞ்சூரியன் மைதானத்தின் மீதான விராட் கோலியின் காதல் மீண்டுமொரு முறை நிரூபணமானது, 35-வது ஒருநாள் சதத்தை மீண்டும் ஒரு வெற்றிகரமான விரட்டலில் விரட்டல் மன்னன் விராட் கோலி எடுக்க இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 5-1 என்று கைப்பற்றியது இந்தியா.

82 பந்துகளில் அனாயசமான சதம் கண்ட விராட் கோலி 96 பந்துகளில் 19 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 129 நாட் அவுட், ரஹானே 50 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 நாட் அவுட். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி மோசமான பேட்டிங்கில் 204 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

இலக்கை விரட்டுவதன் மூலம் இதுகாறும் இருந்த வசதியான இடத்திலிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வோம் என்றார் விராட் கோலி, ஆனால் எந்தச் சவாலுக்கும் தயாராக தென் ஆப்பிரிக்கா இல்லை, ரபாடா, மில்லர், மோர்கெல் என்று என்ன தைரியத்தில் வீர்ர்களை நீக்கம் செய்தது என்பதும் புரியவில்லை. எப்போதும் கடைசி போட்டியை வெல்வது அடுத்த தொடருக்கான உத்வேகமாகும். இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதையடுத்து பெற்ற உத்வேகம்தான் ஒருநாள் தொடரில் செலுத்திய ஆதிக்கமாகும். எனவே இந்த விதத்தில்தான் கோலியின் எதிர்பார்ப்பை முறியடிக்க முடிந்துள்ளது தென் ஆப்பிரிக்காவினால், அதாவது சவாலான இலக்கை விரட்டிப் பழக வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்த கோலியின் எதிர்பார்ப்பை தென் ஆப்பிரிக்கா முறியடித்ததுதான் அந்த அணிக்கு ஒரே ‘வெற்றி’ யாகும்.

ஏற்கெனவே தொய்வடைந்து விட்ட பந்து வீச்சில் கோலி 35வது சதம் எடுப்பார் என்பது தெரிந்ததுதான், அதுவும் சதமெடுப்பது ஒரு வழக்கமான பிறகு இந்த வழக்கமான பந்து வீச்சில் இன்னொரு வழக்கமான, ஆனால் அனாயசமான சதமெடுப்பது ஆச்சரியமில்லை.

இந்த ஒருநாள் தொடரில் 558 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி, இருதரப்பு தொடரில் ஒரு பேட்ஸ்மென் எடுக்கும் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும் இது. இதில் 3 சதங்கள் அடங்கும், இந்த ஒருநாள் தொடரில் கோலியின் குறைந்த எண்ணிக்கையே 36 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சதம் கண்ட விறுவிறுப்பில் இறங்கிய ரோஹித் சர்மா கட்ஷாட்களை அபாரமாகப் பயன்படுத்தி ஆடத் தொடங்கினார் 13 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்த போது, லுங்கி இங்கிடி ஒரு பந்தை லெக் ஸ்டம்பில் எகிறச் செய்ய பந்தின் வேகம் 126 கிமீதான் என்றாலும் கொஞ்சம் கூடுதல் உயரம் எழும்பியதால் ஃபைன் லெக்கில் அது போகும் வழியில் அப்படியே பவுண்டரி அடிக்க முயன்ற ரோஹித் மட்டையில் சரியாகச் சிக்காமல் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் ஆனது.

சரி ஒரு விக்கெட்டை ஷார்ட் பிட்ச் பந்தில் எடுத்தாகிவிட்டது பேசாமல் ஒழுங்கான லைன் லெந்தில் வீச வேண்டியதுதானே? எதற்கெடுத்தாலும் ஷார்ட் பிட்ச் பந்தை பயன்படுத்தத் தொடங்கினர். மந்தமான பிட்சில் இது தேவையற்ற சோதனை.

அதுவும் கோலிக்கு ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கலாமா? அது அவர்களுக்கே பெருஞ்சோதனையானது, கிடைக்கோட்டு மட்டை ஷாட்களை கோலி இருபுறமும் பிரயோகிக்க 25 பந்துகளில் 38 ரன்கள் என்று தொடக்கத்திலேயே எகிறினார். ஷிகர் தவண் மறு முனையில் ஸ்லோ பிட்ச் என்பதால் டைமிங் கிடைக்காமல் தடவி 30 பந்துகளில் பாதி ரன்களையே எடுத்திருந்தார், கடைசியில் 18 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிடி பந்தை கட் ஆடினார், நேராக பாயிண்டில் ஸோண்டோவிடம் கேட்ச் ஆனது இந்தியா 80/2, ஆனால் 12.4 ஓவர்களில் 80 ரன்கள். கிட்டத்தட்ட ஓவருக்கு 7 ரன்கள் வீதத்தில் ரன்கள் வந்து கொண்டிருந்தது.

அதன் பிறகு கோலி, ரஹானே 117 பந்துகளில் 129 ரன்களை 3-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கோலி 82 பந்துகளில் சதமெடுத்தார், சதமெடுத்த பிறகு பொறுத்தது போதும் பொங்கி எழு என்று இம்ரான் தாஹிரை ஒரு மிட்விக்கெட் சிக்ஸும் பிறகு மேலேறி வந்து மிக அழகாக ரசிகர்களைத் தாண்டி நேராக ஒரு அற்புத சிக்சரையும் அடித்தார்.

எதிரணியினரின் ரன்களில் கிட்டத்தட்ட 70% ரன்களை கோலியே எடுத்து விட்டார். எந்த வித சவாலும் அவருக்கு அளிக்கப்படவில்லை, ஷார்ட் பிட்ச் பந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதை கோலி ரன் எடுக்கும் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். இயன் சாப்பல் இருந்திருந்தால் புகழ்ந்து தள்ளியிருப்பார், காரணம், ஷார்ட் பிட்ச் பந்துகள் ரன் ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு என்பதை அவர் தொடர்து வலியுறுத்துபவர், இதனால் கோலி இன்று அவருடைய வாக்கை மெய்ப்பித்தார்.

வெற்றிக்கான ஷாட்டை அவர் நேராக அடித்த போது எந்தவித உணர்ச்சியும் அவரிடத்தில் இல்லை, இறுக்கமான ஒரு முகத்துடன் டிவில்லியர்சை ஆரத்தழுவினார். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார் விராட் கோலி.

இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா விராட் கோலி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரிடம் இழந்தது. எனவே தென் ஆப்பிரிக்காவை ‘கோலிசாஹல்தீப்’ செய்து விட்டது இந்தியா என்று அயர்லாந்து இலக்கிய மேதை ஜேம்ஸ் ஜாய்ஸ் பாணி Portmonteau word பிரயோகம் செய்து எள்ளல்-சுருக்கமாக மதிப்பிடுவோம்.

http://tamil.thehindu.com/sports/article22778494.ece?homepage=true

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.