Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன அலு­வ­ல­கத்­திற்கு என்ன நடக்­கின்­றது?

Featured Replies

காணாமல் போன அலு­வ­ல­கத்­திற்கு என்ன நடக்­கின்­றது?

 

யுத்­த­கா­லத்தின் போதும் அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் காணா­மல்­போ­ன­வர்கள் குறித்து என்ன நடந்­தது என்­பது இது­வரை தெரி­யா­ம­லேயே இருக்­கி­றது. காணா­மல்­போ­ன­வர்­களை கண்­டு­பி­டித்து தரு­மாறு கோரி பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வரு­கின்ற போதிலும் இது­வரை ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­ம­லேயே இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற நிலையில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களோ தொடர்ந்து தமது உற­வு­களை கண்­டு­பி­டித்து தரு­மாறு கோரி வீதி­களில் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

யுத்தம் முடி­வ­டைந்து 9ஆண்­டுகள் நிறை­வ­டை­யப்­போ­கின்ற நிலை­யிலும் கூட இது­வரை காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற கேள்­விக்கு பதில் கிடைக்­க­வில்லை. காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களும் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாமல் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். காணா­மல்­போன தமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்லையா என்­பது கூடத் தெரி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் தினம் தினம் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். எந்­த­வி­தத்­திலும் அவர்­களின் பிரச்­சினை குறித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஆழ­மா­ன­ நோக்கில் அணு­கு­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­ய­வில்லை.

ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் இந்த விவ­கா­ரமும் ஒரு தீர்­வு­கா­ணப்­ப­டாத விட­ய­மாக நீடித்து வரு­கின்­றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நாட்டின் நிலை­மை­களை சீர்­ப­டுத்­து­மாறு ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­த­துடன் விசே­ட­மாக காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கும் தீர்­வு­கா­ணு­மாறு வலி­யு­றுத்­தி­யது. எனினும் முன்­னைய அர­சாங்கம் எத­னையும் செய்­து­வி­ட­வில்லை. மாறாக காணா­மல்­போனோர் என்ற வகையில் யாரும் இல்லை என்ற விச­னத்­துக்­கு­ரிய பதி­லையே அப்­போ­தைய அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­தது.

அதே­போன்று கடும் விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் அர­சாங்கம் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவை அமைத்து யுத்தம் ஏற்­பட்­ட­மைக்­கான காரணம் குறித்து ஆராய்ந்­தது. நல்­லி­ணக்க ஆணைக்­குழு நாடு­மு­ழு­வதும் விசா­ரணை அமர்­வு­களை நடத்தி பொது­மக்­க­ளிடம் சாட்­சி­யங்­களைப் பெற்­றது. இந்­நி­லையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நடை­பெற்ற நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­களில் பங்­கேற்ற பாதிக்­கப்­பட்ட மக்­களில் அதி­க­மானோர் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் தீர்வைப் பெற்றுத் தரு­மாறு சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர். உற­வுகள் காணா­மல்­போன நிலையில் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்கள் நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­பாக கதறி அழுது தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர். அதன் பின்னர் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பரிந்­து­ரைக்கு அமை­வாக அப்­போ­தைய அர­சாங்கம் ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தலை­மையில் காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரிக்க ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்­தது. அந்த ஆணைக்­கு­ழுவும் நாடு­ மு­ழு­வதும் விசா­ர­ணை அமர்­வு­களை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளிடம் எழுத்­து­மூல முறைப்­பா­டு­களைப் பெற்­றுக்­கொண்­டது. அந்­த­வ­கையில் சுமார் 20 ஆயிரம் எழுத்து மூல முறைப்­பாடுகள் பர­ண­கம ஆணைக்­கு­ழு­விற்கு கிடைத்­தி­ருந்­தன. அந்த ஆணைக்­குழு தனது செயற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆட்­சி­ மாற்றம் ஏற்­பட்­டது. 2015 ஆம் ஆண்டு ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் முடிக்­கப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

எனினும் காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை. அதன்­பின்னர் 2015ஆம் ஆண்டு இறு­திப்­ப­கு­தியில் பல­வந்­த­மாக காணாமல் போகும் செயற்­பாடு­களை தடுப்­ப­தற்­காக ஐக்­கி­ய­நா­டு­களின் செயற்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு காணாமல் போனோர் தொடர்­பாக ஆராய்ந்­தி­ருந்­தனர். அவர்கள் இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் நோக்கில் காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்தை அமைக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு பரிந்­துரை செய்­தி­ருந்­தனர். மேலும் மிக அதி­க­மான பரிந்­து­ரை­களை அந்த செயற்­குழு செய்­தி­ருந்த நிலையில் இந்த காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் ஆணைக்­குழு தொடர்­பா­க­ ப­ரிந்­து­ரையே முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக காணப்­பட்­டது.

இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக கொண்­டு­ வ­ரப்­பட்ட பிரே­ர­ணையில் இந்த காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் தொடர்­பான பரிந்­துரை உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கிய நிலையில் அது நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி அர­சாங்கம் விரை­வாக காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என சர்­வ­தேசம் வலி­யு­றுத்­தி­யது. எனினும் நீண்­ட­கால இழுத்­த­டிப்­பு­க­ளுக்குப் பின்­னரும் அது­தொ­டர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதன்­பின்னர் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் நிறு­வப்­பட்­ட­துடன் அதற்­கான உறுப்­பி­னர்­களும் நிய­மிக்­கப்­பட்­டனர். எனினும் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்து மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் இது­வரை இந்த காணா­மல்­போனோர் அலு­வலகம் தொழிற்­பட ஆரம்­பிக்­க­வில்லை.

மாறாக காணா­மல்­போ­னோரின் உற­வுகள் தொடர்ந்து வீதி­களில் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்­வு­கா­ணப்­ப­டாத நிலை­மையே நீடிக்­கின்­றது. அன்­புக்­கு­ரி­ய­வர்­களை தொலைத்­து­விட்டு காணா­மல்­போ­னோரின் உற­வுகள் எதிர்­கொண்டு வரு­கின்ற கஷ்­டங்­களும் நெருக்­க­டி­களும் சொற்­க­ளினால் விப­ரிக்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். பொரு­ளா­தார ரீதி­யிலும் சமூகப் பாது­காப்பு ரீதி­யிலும் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் பாரிய பாதிப்­புக்­களை சந்­தித்து வரு­கின்­றனர். எனவே இந்த விட­யத்­திற்கு விரை­வாக தீர்­வு­கண்டு அந்த மக்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து கூற­வேண்­டி­யது அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்­களின் பொறுப்­பாகும்.

குறிப்­பாக தொடர்ந்து இந்தப் பிரச்­சினை நீடித்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தில் இன்னும் இரண்டு வரு­டங்கள் மீத­மி­ருக்­கின்­றன. கடந்த மூன்­று­வ­ரு­ட­கா­லத்தில் காணா­மல்­போனோர் விட­யத்தில் ஒரு முறைப்­பாட்­டுக்­குக்­கூட தீர்வு கிடைக்­க­வில்லை. தற்­போது எஞ்­சிய இரண்டு வரு­ட­கா­லத்தில் என்ன நடக்கும் என்­பதே கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது. இது­தொ­டர்பில் மக்கள் சந்­தே­கமும் அதி­ருப்­தியும் வெளி­யி­டு­கின்­றனர். எனவே ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் தனிப்­பட்ட ரீதியில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். விசே­ட­மாக காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை விரை­வாக தொழிற்­பட வைத்து இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். அது­மட்­டு­மன்றி பாதிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். சர்­வ­தே­சமும் ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் வலி­யு­றுத்­து­கின்ற பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் ஒரு முக்­கிய அம்­ச­மான நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடும் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும். அத­னூ­டாக காணா­மல்­போன சம்­ப­வங்­களின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். காணா­மல்­போனோரின் உற­வுகள் கடும் பொரு­ளா­தார ரீதி­யி­லான கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

எனவே இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் ஒரு பொறி­மு­றையின் ஊடாக ஆராய்ந்து பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்டும். இந்த விட­யத்தில் காணா­மல்­போனோர் அலு­வ­லகம் ஒரு வகி­பா­கத்தை வகிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. விசே­ட­மாக காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை ஆராய்­வது மட்­டு­மன்றி காணா­மல்­போ­னோரின் குடும்­பத்­தி­ன­ருக்­கான வாழ்­வா­தார நிவா­ர­ணங்­க­ளுக்­கான பரிந்­து­ரை­க­ளையும் காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­லகம் முன்­வைக்­க வேண்டி வரும் என்­பதே யதார்த்­த­மாகும்.

எனவே தற்­போது பல்­வேறு தடை­க­ளுக்கும் இடை­யூ­று­க­ளுக்கும் மத்­தியில் காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான உறுப்­பி­னர்­களும் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன. எனவே தொடர்ந்தும் இந்த செயற்­பாட்டில் தாம­தத்தை ஏற்­ப­டுத்­தாமல் விரைந்து காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் தொழிற்­பா­டு­களை ஆரம்­பிக்­க­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்­தியின் மத்­தியில் தொடர்ந்தும் நீதிக்­காக ஏங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அந்த மக்­களின் நீதிக்­கான எதிர்­பார்ப்பை வீண­டித்­து­வி­டக்­கூடாது. இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அமோக ஆத­ர­வுடன் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-27#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.