Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் – மைத்திரி நம்பிக்கை

Featured Replies

வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் – மைத்திரி நம்பிக்கை

 

வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சில திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள்  கிடைக்கும் – மைத்திரி நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்காவிலுள்ள கிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான பல்நோக்கத் திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் மு்னனேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், எதிர்காலத்திலும் கிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் இத்தகைய பல்நோக்கத் திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக கிராமிய வறிய மக்களை வலுவூட்டும் நோக்குடன் விவசாயத் துறையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் உதவியை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கிராமிய விவசாய சமுகத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீர்ப்பாசனத் துறையில் விரிவான அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதிஇ இதற்காக தொடர்ந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சில திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிற்துறையை கட்டியெழுப்புவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் தேசிய கைத்தொழிற்துறையை முன்னேற்றுவதன் மூலம் ஏற்றுமதி இயலுமையை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதிஇஇதற்கு உதவுமாறு ஆசிய அபிவிருத்தி வங்கி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் உடனடியாக ஆராய்ந்து வழங்க முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் இலங்கை விவகாரங்களுக்கான அணித் தலைவருமான சாத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் கலாநிதி சரத் ராஜ பத்திரன, தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை முப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பொதுமக்களின் நிதியை பெருமளவில் சேமிக்கும் வகையில் மிக வினைத்திறனுடன் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவரும் தொழிற்பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் தற்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.

முப்படையினரின் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினதும் திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தப்படும் ”சிறிசர” செயற்திட்டத்தினதும் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

சிறிசர செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 14 குளங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருப்பதுடன், மேலும் 10 குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

அத்துடன் அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு படை தலைமையகத்தின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விமானப் படையினரின் தொழிற்பங்களிப்புடன் அநுராதபுரம் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சிறுநீரக மத்தியநிலையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் கடற்படையினரின்  தொழிற்பங்களிப்புடன் சிறுநீரக நோயினால் துயருரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனானாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இலங்கை கப்பற்படையின் பதவிநிலை பிரதானி ரியல் அட்மிரல் என்.பி.ஜே.ரொசைரோ, சிசில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/maithiri-speech-with-tamil-people

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்களுக்கு  ஏதாவது  செய்யணும் என்றால்

ஒரு  தீர்வை  வையுங்கள் சாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.