Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்கி மாற்­றத்தை கண்­டதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்

Featured Replies

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்கி மாற்­றத்தை கண்­டதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்

ranil-856418876f18526807c6eeb6cffb1fa8e2f04fcf.jpg

 

கூட்­ட­மைப்பும் ஜே.வி.பி.யுமே முதலில் முன்­மொ­ழிந்­தன என்­கிறார் பிர­தமர் 

(ஆர்.யசி)

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நான் கள­மி­றங்­காது பொது வேட்­பா­ளரை கள­மி­றக்க இணக்கம் தெரி­விக்க வேண்­டிய தேவை இருந்­தது. சகல சக்­தி­க­ளையும் எம்­முடன் ஒன்­றி­ணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் முதலில் யோசனை முன்­வைத்­தன என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பொது வேட்­பா­ளரை கள­மி­றக்கி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யதில் இன்றும் எனக்கு மகிழ்ச்­சி­யா­கவே உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் இரவு தனியார் தொலைக்­காட்சி ஒன்றின் நேர்­காணலில் கலந்­து­கொண்ட போதே இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்.

தேசிய அர­சாங்­கத்தில் பிர­தான இரண்டு கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­வது எந்­த­வித முரண்­பா­டு­க­ளையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. எனினும் பொரு­ளா­தார கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் போதே சில முரண்­பா­டுகள் எழு­கின்­றன. இரண்டு கட்­சி­களின் பொரு­ளா­தார கொள்­கை­களும் வெவ்­வே­றாக உள்ள கார­ணத்­தினால் சில முரண்­பா­டுகள் எழு­கின்­றன. ஆனால் சில இடங்­களில் நாம் இறுக்­க­மான தீர்­மானம் ஒன்றை எடுக்­க­ வேண்டும்.

இவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருந்தே நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். இந்த நாட்டை நாம் பார­மெ­டுக்கும் போது பாரிய கடன் நெருக்­க­டியில் இருந்தோம். இப்­போதும் கடன் நெருக்­கடி உள்­ளது. எனினும் நாம் பொரு­ளா­தார கொள்­கை­யினை சரி­யாக கையாண்டு வரும் கார­ணத்­தினால் சில நல்ல செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றது. 2020 ஆம் ஆண்டின் பின்னர் பொரு­ளா­தார மாற்­றங்கள் ஏற்­படும். எவ்­வாறு இருப்­பினும் அர­சாங்­க­மாக முன்­னெ­டுக்கும் தீர்­மா­னங்கள் எவையும் மாற­வில்லை. தனித்து போனாலும், இணைந்து செயற்­பட்­ட­போ­திலும் கொள்­கை­களில் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் அனைத்து சக்­தி­க­ளையும் ஒன்­றி­ணைக்க வேண்டும் என்­பதே எமது அவ­சி­ய­மா­கி­யது. இதற்­காக பல தரப்­புடன் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­ போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுமே இணைந்து செயற்­ப­டுவோம் என்ற யோச­னை­யினை முதலில் முன்­மொ­ழிந்­தன.

அப்­போ­தைய நாட்டின் நிலை­மையில் நாம் இணைந்து செயற்­ப­டு­வது மிகப்­பெ­ரிய பல­மாக அமையும் என்­பதை உணர்ந்தோம். அத்­துடன் எமக்­கி­ருந்த சரி­யான தெரிவும் அது­வா­கவே இருந்­தது. அதேபோல் இணைந்து சென்றால் பொது வேட்­பாளர் ஒரு­வரும் வேண்டும் என்­பது எமக்கு தெரியும். பொது வேட்­பா­ளரை கள­மி­றக்கி நாம் வெற்­றி­ கொண்டு இன்று மாற்­றத்தை அனு­ப­வித்து வரு­கின்றோம். எனக்கு இன்றும் அது மகிழ்ச்­சி­யா­கவே உள்­ளது. இப்­போது அர­சியல் கார­ணி­க­ளுக்­காக இரண்டு கட்­சி­களின் மூலமும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் நாம் தீர்­மானம் எடுத்தே பொது வேட்­பா­ளரை நிய­மித்தோம், அவரை ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கவும் தீர்­மானம் எடுத்தோம், இப்­போது அவரின் மூல­மாக நாடு வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றது ஆகவே அவரை விமர்­சிக்­கக்­கூ­டாது என்­பதை நான் எனது கட்­சி­யி­ன­ருக்கு தெரி­வித்­துள்ளேன்.

மேலும் மஹிந்த ராஜபக் ஷவினால் பிர­தமர் ஆக­மு­டி­யாது, ஜனா­தி­பதி பல சந்­தர்ப்­பங்­களில் இதனை கட்­சிக்குள் தெரி­வித்­துள்ளார். இன்று அவர்­களின் பிள­வுக்கும் இதுவே கார­ண­மாகும். இது எமக்கு சாத­க­மாக மாறி­யது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ பிர­தமர் ஆனால் கூட அது நாட்­டுக்கு பாரிய நெருக்­க­டி­யா­கவே அமைந்­தி­ருக்கும். மேலும் ஊழல் குற்­றங்கள் என கடந்த காலங்­களில் காணப்­பட்ட பல சம்­ப­வங்கள் குறித்து இன்று அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

குறிப்­பாக கடந்த காலத்தில் பாரிய குற்­றங்கள் என்ற வகையில் 410-420 குற்­றங்கள் தொடர்பில் இப்­போது விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பகுதி பகு­தி­யாக இவை விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்றில் முக்­கி­ய­மான வழக்­குகள் முதலில் எடுக்­கப்­படும். வழக்­கு­களும் தொடுக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு காலம் அவ­சி­ய­மா­கின்­றது. ஆகவே விரைவில் தீர்­மா­னங்­களை எடுக்க புதிய சட்ட திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. காலம் கடத்தி குற்­றங்­களை மறைக்கும் செயற்­பா­டுகள் நடை­பெ­றக்­கூ­டாது, ஆகவே புதிய சட்ட திருத்­தங்­களை உரு­வாக்கி விரைவில் வழக்­கு­களை நிறை­வு­ப­டுத்த வேண்டும்.

புதிய அர­சியல் அமைப்பு குறித்து நாம் சக­லரும் கலந்து ஆராய்ந்து வரு­கின்றோம். எனது செயற்­பாட்டை நான் சரி­யாக செய்­துள்ளேன். இப்­போது கட்­சிகள் அனைத்தும் இணைந்து தீர்வு பெற வேண்டும். மாற்று வழி­யொன்று இனம்­காணும் நிலையில் கட்­சிகள் எவ்­வா­றான தீர்­மா­னங்­களை கையாள்­வார்கள் என்­பதே இப்­போது முக்­கி­ய­மா­னது. சமஷ்டி வழங்கும் யோச­னை­யொன்றில் இணக்கம் காணப்­ப­ட­வில்லை. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கார பகிர்வு பற்­றியே நாம் பேசி வருகின்றோம். மேலும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை என்ன செய்வது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டில் வேட்பாளர் யார் என்பதை பார்க்கலாம். புதிய அரசியல் அமைப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன என்பதை ஆராயவில்லை. கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன ஆனால் தீர்மானம் ஏதும் எடுக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என நம்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-31#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.