Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவசக்திஆனந்தன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்

Featured Replies

சிவசக்திஆனந்தன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்

sumanthiran2.jpg?resize=300%2C238
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தனுக்கு வவுனியாவில் இருந்து உளவு வேலை செய்வதற்காக வழங்கப்பட்ட விடுதியினையே கட்சி அலுவலகமாக பாவித்துக்கொண்டிருந்ததாகவும் தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிய பின்னரே இப்போது அது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித் அவர் தற்போது, மக்களின் அபிவிருத்திக்கான கருத்துக்களைக் கேட்பதை தவறென்று சொல்கின்றார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசின் காலத்தில் இங்குள்ள ஒரு அமைச்சரின் கருத்துக்களின் படி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது எனவும் இங்கு செலவிட்ட பணத்தின் அளவு தமக்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு துளி கூட இல்லை எனவும் அவர் தான் அந்த அபிவிருத்திகளைச் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த விடயம் எல்லை மீறிப் போயுள்ளது. ஆகவே சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64476/

  • தொடங்கியவர்

சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கையில் இறங்குகிறது கூட்டமைப்பு

 

sumanthiranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

”கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் கூறுகின்ற விவகாரம் எல்லை மீறிப் போய் விட்டது. அவ்வாறு கூறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஓரிரு நாட்களில் இந்த சட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டவாளர்கள் ஊடாக அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியிருப்பதாகவும், உண்மையை எடுத்துக் கூறவில்லை என்றும், தமது தரப்பு நியாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/01/news/28783

  • கருத்துக்கள உறவுகள்

சிவசக்தி ஆனந்தனுக்கெதிராக சட்ட நடவடிக்கை

Sivasakthy-Anandan-600x381

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி தனது வழக்கறிஞர்கள் ஊடாக சிவசக்தி ஆனந்தனுக்கெதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் அது தொடர்பில் வழக்கறிஞர்கள் சிவசக்தி ஆனந்தனுக்கு தெரிவிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசின் இவ்வருடத்திற்கான வரவு செலவிற்கு ஆதரவளிப்பதற்கு தன்னை தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு கோடி இலஞ்சம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.

குறித்துக் கருத்து தொடர்பிலேயே சிவசக்தி ஆனந்தனுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.dailyceylon.com/149101

  • தொடங்கியவர்
  • ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யி­னர் மீது இலஞ்ச, ஊழல் குற்­றச்­சாட்­டு­க்கள்
sumanthiran_2.jpg

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யி­னர் மீது இலஞ்ச, ஊழல் குற்­றச்­சாட்­டு­க்கள்

 

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் தவி­சா­ளர்­க­ளா­கப் பதவி வகித்த கோப்­பாய் மற்­றும் வல்­வெட்­டித்­துறை உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லேயே ஊழல் மோச­டி­கள் இடம்­பெற்­றன என்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

அதே­போன்று வடக்கு மாகாண சபை­யில் அமைச்­ச­ராக இருந்த ஐங்­க­ர­நே­சன் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை சேர்ந்­த­வர். அவர் மீது மோச­டிக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

அத­னைச் சுமத்­தி­யது நான் அல்ல. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் அமைத்த விசா­ர­ணைக்­கு­ழு­தான். இவ்­வா­றா­ன­தொரு லட்­ச­ணத்­தில்­தான் எம் மீது இலஞ்­சக் குற்­றச்­சாட் டுக்­கள் சுமத்­து­கின்­ற­னர்.

 
 

யாழ்ப்­பாண மாந­கரை எப்­ப­டிச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­போமோ அதைப்­போன்றே நாமும் சுத்­த­மா­ன­வர்­கள்­தான்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

நிரந்­தர தீர்வு நோக்­கிய பய­ணத்­தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளின் வகி­பா­கம் என்ற தொனிப்­பொ­ரு­ளில் நீரா­வி­யடி இலங்கை வேந்­தன் கலைக் கல்­லுரி மண்­ட­பத்­தில் நேற்று நடந்த கருத்­தா­டல் நிகழ்­வில் கலந்து கொண்டு கருத்­துக்­களை தெரி­விக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­த­தா­வது-

அர­சி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இரண்டு கோடி ரூபா இலஞ்­சம் பெற்­ற­னர் எனக் கூறிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு எதி­ராக இன்று அல்­லது நாளை சட்ட நட­வ­டிக்கை எடுக்க ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளோம்.

சட்­ட­ந­ட­வ­டிக்கை தொடர்­பான அறி­வித்­தலை சட்­டத்­த­ர­ணி­கள் அறி­விப்­பார்­கள். நடேசு சிவ­சக்­தி­யின் பொய்­க­ளுக்கு ஊட­கங்­கள் கொடுக்­கும் முக்­கி­யத்­து­வம் எமது விளக்­கங்­க­ளுக்கு கொடுப்­ப­தில்லை. நிதி ஒதுக்­கீட்டை புத்­தி­யுள்ள எவ­ரும் இலஞ்­சம் என்று கூற­மாட்­டார்­கள்.

ஒக்­ரோ­பர் மாதம் ஒதுக்­கப்­பட்ட நிதியை டிசெம்­ப­ரில் வாக்­க­ளித்த வரவு – செல­வுக்கு ஆத­ரவு அளிக்க வாங்­கி­னோம் என்று கூறு­கின்­றார்.

நாம் இந்த வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு மட்­டும் ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை. கூட்­ட­ர­சின் அனைத்து வரவு – செல­வுத்­திட்­டத்­துக்­கும் ஆத­ர­வாக வாக்­க­ளித்து வரு­கின்­றோம். நாம் அர­சி­யல் தீர்­வொன்­றைப் பெறு­வ­தற்­காக முயற்சி செய்து வரு­கின்­றோம்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு நாடா­ளு­மன்­றில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மைக்­காக விடப்­ப­டும். இந்த அர­சில் எப்­போ­தும் பெரும்­பான்மை இருக்­கின்­றது என்­பதை உணர்த்­தவே நாம் ஆத­ர­வாக வாக்­க­ளித்து வரு­கின்­றோம்.

அதி­லும் எமக்கு தேவை­யா­ன­வற்றை உள்­ள­டக்­கியே ஆத­ரவு கொடுத்து வரு­கின்­றோம். கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னும் இத­னைக் கூறி வரு­கின்­றார். நானும் அத­னையே கூறு­கின்­றேன்.

நடேசு சிவ­சக்­திக்கு வவு­னி­யா­வி­லி­ருந்து உள­வு­வேலை செய்­வ­தற்­காக விடு­தி­யொன்று வழங்­கப்­பட்­டது. அதையே தனது கட்சி அலு­வ­ல­க­மாக சில நாள்­கள் முன்பு வரைக்­கும் பாவித்­துக் கொண்­டி­ருந்­தார்.

தேர்­தல் ஆணைக்­குழு அர­சி­டம் ஒப்­ப­டைக்­க­வேண்­டு­மென்று கூறிய பின்­னரே அர­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தேர்­தலை வைத்து தெற்­கில் அர­சில் குழப்ப நிலை ஏற்­ப­டக் கூடிய சூழ்­நிலை இருக்­கின்­றது. அதற்கு நாம் ஒன்­றும் செய்ய முடி­யாது. இதற்கு இணை­யாக நாமும் மகிந்­த­வைச் சூடேற்­று­கின்ற வேலையை செய்ய முடி­யாது – என்­றார்.

http://newuthayan.com/story/66168.html

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.