Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவாலிகள் தேர்தலில் – அரசியல் மோசமாகவே இருக்கும் – நீதிமன்ற தீர்ப்பு அநீதியானது. – கூல்..

Featured Replies

காவாலிகள் தேர்தலில் – அரசியல் மோசமாகவே இருக்கும் – நீதிமன்ற தீர்ப்பு அநீதியானது. – கூல்..

 

 

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு, நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் காவற்துறையினருக்கு வழங்கி இருந்தோம். காவற்துறை  அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்க வில்லை. ஏன் அவர்கள் அதனை சமர்ப்பிக்க வில்லை.

எங்கள் நாட்டில் 500 ரூபாய்யுடன் காவற்துறையைக் கொண்டு எதுவும் செய்யலாம். அவ்வாறு எதுவும் நடத்தா என தெரியாது. எனக்கு தெரியாத விடயத்தை நான் பேசவிரும்பவில்லை. ஏன் இந்த படங்களை காவற்துறை ஏன் காட்டவில்லை.

நீதிமன்றம் ஒரு பக்க தரப்பினை வாதத்தை மட்டும் கேட்க முடியாது. மற்றைய தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் ஏன் நீதிமன்று என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் நீதிமன்றுக்கு அன்றைய தினம் செல்ல வில்லை என கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு மன்றுக்கு வருமாறு அழைப்பாணை தரப்படவில்லை.

நீதிமன்றம் இரு தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும். ஒரு தரப்பு நியாயத்தை கேட்டு தீர்ப்பு வழங்க முடியாது. அது மட்டுமின்றி என்னிடம் விசாரணை செய்யும் படி எனது ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார். நீதி படித்தவருக்கு தெரிய வேண்டும் சட்டத்தின் பிரகாரம் நாங்கள் சுயாதீன ஆணைக்குழு என்னிடம் கேள்வி கேட்க கூடிய அதிகாரம் பாராளுமன்றுக்கு தான் அதிகாரம் உண்டு. ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லாத போது அதனை ஏன் நீதிமன்றம் செய்ய வேண்டும்.

Guru-ratnajeevan.jpg?resize=443%2C212

சட்டத்தரணி குருபரன் அமெரிக்க ஓக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பயின்றவர். அவருக்கு ஆங்கிலம் தெரியுமோ தெரியாது. தெரியும் என நினைக்கிறேன். நான் கட்டுரையில் “பிக் டீல்” என எழுதியது ஒரு வம்பு. அதை வைத்து நீதிபதியுடன் டீல் பேசினது என வாதாடுவது வம்பு தனமானது. இப்படியானவர்கள் தான் அரசியலை கெடுக்கின்றார்கள்.

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பது எமது கடமை. அதனை நாங்கள் செய்கின்றோம். அதனை ஏன் நீதிமன்றம் தடுத்தது என்பது எனக்கு தெரியவில்லை. என் கருத்தை கேட்காது ஏன் தீர்ப்பு வழங்கினார்கள் என தெரியவில்லை. ஏன் நீதிமன்றம் அவரச பட்டது என்பது தெரிய வில்லை. இனி இதை பற்றி நான் கதைத்தால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள்.

இவர்கள் வாய்க்கு வந்ததை பேசுபவர்கள். அவர்கள் செய்தனை படங்களுடன் காவற்துறையிடம் முறையிடப்பட்டது. ஆனால் அதனை போலீசார் நீதிமன்றில் சமர்ப்பிக்க வில்லை.

ஆலய வளாகத்தில் தேர்தல் விஞ்ஞாபம் வெளியிடப்பட வில்லை எனில் எதற்காக ஆலய குருக்களுக்கு மன்று அறிவுறுத்தல் வழங்கியது ? ஆக எங்கோ தவறு நடந்து உள்ளது. அது எங்கே என தெரியவில்லை.

காவற்துறையினருக்கு கையூட்டு வழங்கி சிலர் காரியம் செய்திருக்கலாம். அல்லது இந்த வழக்கில் வழக்காடிய சட்டத்தரணிகள் அனைவரும் அதே மன்றில் வழக்காடுபவர்கள். அதனால், பொலிசாருடன் நட்பு ஏற்பட்டு இருக்கலாம் அந்த நட்பின் அடிப்படையில் செய்து இருக்கலாம்.

பத்திரிகைகளில் மாவை கந்தன் ஆலயத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது என செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை செய்திருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் முதலில் தனது முகநூளில் பகிர்ந்து இருந்தார். பிறகு அதனை முகநூளில் இருந்து அகற்றி விட்டார். ஒரு பக்க நியாயத்தை கேட்டு தீர்ப்பளித்தது அநீதியானது. நீதிவான் என்பதால் அவரின் தீர்ப்பில் நியாயம் இருக்கலாம் அது எனக்கு தெரியாது. நான் அவரை குற்றம் செல்ல வில்லை.

என்னை யாழ்.மாநகர சபை வேட்பாளர் வி. மணிவண்ணன் மிரட்டியதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யபப்ட்டமை தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.முறைப்பாடு பதிவு செய்து இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன.

நேற்று காவற்துறை  வீட்டுக்கு வந்து சமாதானமாக போக விரும்பு கின்றீர்களா என கேட்டனர். நான் அவர்களுடன் சமாதானமாக போக விரும்பவில்லை. அவர்கள் காவாலி தனம் செய்கின்றார்கள். சண்டித்தனத்தில் ஈடுபடுகின்றார்கள். அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பது என்றால் அவர்கள் மனம் திருந்த வேண்டும். ஆனால் அவர்கள் மனம் திருந்தின மாதிரி தெரிய வில்லை.

தேர்தல் சட்டங்களின் பிரகாரம் என்னுடைய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை நடந்து குற்றவாளியாக கண்டால் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். எனக்கு அதான் வேண்டும். நீதிவான் அதனை கொடுக்க வேண்டும்.

இவர்களை அகற்றினால் தான் எமது அரசியல் புனிதமாகும். இவ்வாறன காவாலிகள் தேர்தலில் போட்டியிடும் போது அரசியல் மோசமாக தான் இருக்கும். என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64680/

  • தொடங்கியவர்
  • மைத்­தி­ரிக்­கும், ரணி­லுக்­கும் எதி­ராக முறைப்பாடு!!
Capture-1.jpg

மைத்­தி­ரிக்­கும், ரணி­லுக்­கும் எதி­ராக முறைப்பாடு!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வுக்கு எதி­ரா­க­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் எதி­ரா­கவே நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கோரி­யுள்­ளேன்.

இவ்­வாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர் ரட்­ண­ஜீ­வன் கூல் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது-,

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்­தல் பரப்­பு­ரை­யின்­போது, போர் வீரர்­க­ளான இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க விட­மாட்­டேன் என்று கூறி­யி­ருந்­தார். அவர்­கள் தேசிய வீரர்­கள் – போர் வீரர்­கள் என்­றால், போரில் கொல்­லப்­பட்ட மக்­கள் மனி­தர்­கள் இல்­லையா?.

இது­வும் தேர்­தல் விதி­முறை மீறல்­தான். இதற்கு எதி­ரா­க­வும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் கோரி­யுள்­ளேன்.

 
 

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் ஐக்­கிய தேசி­யக் கட்சி, ஆயி­ரம் விகா­ரை­கள் அமைப்­ப­தற்கு நிதி ஒதுக்­கி­யுள்­ளது என்று கூறி­யுள்­ளது. இது ஒரு­வ­கை­யில் தேர்­தல் விதி­முறை மீறல்­தான். தேர்­தல் காலத்­தில் நிதி உதவி வழங்­கப்­ப­டு­கின்­றது என்று சொல்­லப்­பட்­டுள்­ளது. இதற்கு எதி­ரா­க­வும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கோரி­யுள்­ளேன்.

ஆனால் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கச் சொன்­னா­லும், நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது. அண்­ணாந்து பார்த்து துப்­பு­வ­தைப் போன்­ற­து­தான் இது. சுவ­ரொட்டி ஒட்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­போம். இவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது.

இதனை தேர்­தல்­கள் ஆணைக்­குழு பகி­ரங்­க­மா­கக் கூற­வேண்­டாம் என்று கூறி­யி­ருக்­கின்­றது. ஆனா­லும் தேர்­தல் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது எமது கடமை – என்­றார்.

http://newuthayan.com/story/66218.html

  • தொடங்கியவர்

மாவிட்டபுரம் வழக்கு – காவல்துறையினர் சகல ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்தனர். – நீதிமன்றை விமர்சித்தமை தண்டனைக்குரிய குற்றம். – குருபரன்.

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினரினால் ; படங்கள் ,ஆதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு , அவை வழக்கேட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்ததுடன் பொய்களையும் கூறியுள்ளார் என யாழ்.பல்கலைகழக சட்டத்துறை தலைவரும் , சட்டத்தரணியுமான கு.குருபரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் தேசிய பேரவை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை கூறியுள்ளார். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் விமர்சித்து உள்ளார்.

குறித்த வழக்கில் கடந்த 11ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றுக்கு வருமாறு மாவிட்டபுரம் ஆலய பிரதமகுருவான ஞானஸ்கந்த சர்மா குருக்களுக்கு நீதிமன்றால் அறிவித்தல் (ழேவiஉந) வழங்கப்பட்டது. அது அழைப்பாணை (ளுரஅஅழளெ) அல்ல.

அதன் பிரகாரம் நீதிமன்றில் முன்னிலையான குருக்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அதன் போது சம்பவ தினத்தில் ஆலயத்தில் அர்ச்சனை செய்தார்கள் எனவும் , தேர்தல் பரப்புரைகளோ அல்லது தேர்தல் தொடர்பிலான துண்டு பிரசுரங்களோ , பதாகைகளோ ஆலயத்தினுள் வைக்கபப்ட வில்லை என குருக்கள் மன்றில் தெரிவித்தார்.

அதன் பின்னர் நீதவானால் , தேர்தல் சட்டங்கள் தொடர்பில் குருக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. ஆலயத்தில் தேர்தல் பரப்புரைகள் நடைபெற அனுமதிக்க கூடாது என மன்று அறிவுறுத்தி இருந்து. அது எச்சரிக்கை அல்ல.

அந்நிலையில் வழக்கு இந்த மாதம் 07ஆம் திகதிக்கு ஓத்தி வைகபப்ட்டு இருந்தது. அதற்கு இடையில் முறைப்பாட்டளராக அல்லாத தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் வலிந்து காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

அது மட்டுமன்றி அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதி இருந்தார். வழக்கு விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என.

அத்துடன் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வழக்கு விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என வடபிராந்திய சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார். அதன் பின்னர் கபவல்துறை உயர் அதிகாரிகளில் பணிப்பின் பேரில் மீள காங்கேசன்துறை கபவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 07ஆம் திகதி வழக்கு விசாரணை திகதியிடப்பட்டு இருந்த நிலையில் , 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துகொள்ளபப்ட்டது. அன்றைய தினம் முறைப்பாட்டாளரான வலி.வடக்கு பிரதேச சபை வேட்பாளர் எஸ்.சுகிர்தன் , யாழ்.மாநகர சபை மேஜர் வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் , வலி.வடக்கு பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசிய பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் , மற்றும் கலாநிதி றட்ணஜீவன் கூல் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

அந்த அறிவித்தல் தனக்கு கிடைக்க வில்லை என றட்ணஜீவன் கூல் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால் ஏனையவர்களுக்கு அந்த அறிவித்தல் கிடைக்க பெற்று அவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். குருக்கள் அன்றைய தினம் ஆலயத்தில் இலட்சாஅர்ச்சனை இருப்பதனால் மன்றுக்கு சமுகமளிக்க முடியவில்லை என தனது சட்டத்தரணி க.சுகாஸ் ஊடாக மன்றுக்கு தெரிவித்தார்.

அதில் றட்ணஜீவன் கூலுக்கு மாத்திரம் எவ்வாறு அறிவித்தல் கிடைக்க பெறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஊடக சந்திப்பில் ஒரு இடத்தில் கூறியுள்ளார்.’ தேர்தல் நேரத்தில் நான் வேலை பளு மத்தியில் கொழும்பில் நிற்கும் போது நீதிமன்றம் வா என்றால் எப்படி வர முடியும் ?’ என பின்னர் பிறிதொரு இடத்தில் சொல்லுறார் தனக்கு அறிவித்தல் வரவில்லை என முன் பின் முரணான தகவல் தெரிவிக்கின்றார என தெரிய வில்லை.

அன்றைய தினம் (29ஆம் திகதி) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, போலீசார் தம்மிடம் இருந்த ஆதாரங்கள் படங்களை மன்றில் சமர்பித்து இருந்தனர். அவை முன்னராக நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டவை.அவை அனைத்தும் வழக்கேட்டில் இணைக்கபப்ட்டு உள்ளன.

ஆனால் றட்ணஜீவன் கூல் படங்களை போலீசார் மன்றில் சமர்ப்பிக்கவில்லை என கூறியுள்ளார். அது முற்றிலும் பொய். பொலிசாரினால் சமர்ப்பிக்கபட்ட படங்கள் வழக்கேட்டில் உள்ளன.

அத்துடன் முறைப்பாட்டலரான சுகிர்தனிடம் நீதிவான் வேறு ஆதாரங்கள் , படங்கள் உண்டா என கேட்ட போது , வேறு எவையும் இல்லை என கூறினார்.

நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் என்ன நடந்தது என தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பிலும் , வழக்கு விசாரணை தொடர்பிலும் எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியவை.

குறித்த வழக்கு தொடர்பிலான வழக்கேட்டின் பிரதியை சட்டத்தரணி ஒருவர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் குறித்த வழக்கில் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் நிகேதன் ஆகியோரை மன்றுக்கு அழைக்க வேண்டும் என பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என போலீசார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

ஆகவே குறித்த வழக்கில் றட்ணஜீவன் கூல் தனிப்பட்ட ஆர்வம் காட்டி மேலதிக நேரம் செலவழிச்சு பணிபுரிந்துள்ளார். ஆனால் தான் கட்சி சார்பானவன் அல்ல என தெரிவிக்கின்றார்.

தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக இருந்து கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சாடி தொடர்ந்து ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருகின்றார்.

நீதிமன்றில் விசாரணை நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கும் வழக்கு தொடர்பில் வழக்கின் போக்கை விமர்சித்து , வழக்கினை திசைமாற்றும் விதமாக கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தண்டனைக்கு உரிய குற்றங்கள் ஆகும்.

அதேவேளை றட்ணஜீவன் கூல் என்பவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நான் நன்கறிவேன். வௌ;வேறு நிறுவனங்களில் எவ்வாறான வகிபங்குகளை கடந்த காலத்தில் வகித்தார் என்பது தொடர்பில் அறிவேன் ஆனால் அது தொடர்பில் நான் பேச விரும்பவில்லை. என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/64908/

2 hours ago, நவீனன் said:

அந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் றட்ணஜீவன் கூல் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்ததுடன் பொய்களையும் கூறியுள்ளார் என யாழ்.பல்கலைகழக சட்டத்துறை தலைவரும் , சட்டத்தரணியுமான கு.குருபரன் தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா தேர்தலை ஒட்டி மத ரீதியான கருத்துகளைச் சொன்னபோது மதவெறியரான கூல் மௌனமாக இருப்பது ஏன்?

முறைப்பாடு செய்தவர் எவராகவோ இருக்க மதவெறியரான கூலை நீதிமன்றம் அழைக்க வேண்டும் என்று கூல் ஊளையிடுவது என்?  

மதவெறியரான கூல் எந்த அடைப்படையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டார்?

அவருக்கு என்ன தகுதிகள் உண்டு?

கடந்த காலங்களில் பல சகுனி வேலைகளை செய்த கூல் காவலிகள் என வேட்பாளர்களை அழைப்பது கூல் காடையர் கும்பல்களின் சுயரூபத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2018 at 1:18 PM, போல் said:

மேர்வின் சில்வா தேர்தலை ஒட்டி மத ரீதியான கருத்துகளைச் சொன்னபோது மதவெறியரான கூல் மௌனமாக இருப்பது ஏன்?

எவருமே முறைப்பாடு செய்யாத போது நீங்கள் ஏன் ஊளையிடுகிறீர்கள்?

முறைப்பாடு செய்தவர் எவராகவோ இருக்க மதவெறியரான கூலை நீதிமன்றம் அழைக்க வேண்டும் என்று கூல் ஊளையிடுவது என்?  

நீங்கள் ஊளையிடலாம் அவர் ஊளையிட கூடாதா?

மதவெறியரான கூல் எந்த அடைப்படையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டார்?

மதவெறியர் ஜனாதிபதியாகலாம், தேர்தல் ஆணையாளராக கூடாதா? 

 

21 hours ago, Jude said:

எவருமே முறைப்பாடு செய்யாத போது நீங்கள் ஏன் ஊளையிடுகிறீர்கள்?

நீங்கள் ஊளையிடலாம் அவர் ஊளையிட கூடாதா?

மதவெறியர் ஜனாதிபதியாகலாம், தேர்தல் ஆணையாளராக கூடாதா?

உங்களது ஊளையிடும் தொழிலை மற்றவர்கள் மேல் திணிப்பது சர்வதேச அரங்கில் எடுபடாது!
நீங்கள், கூல் கும்பல் போன்றவர்கள் அவரர் ஊளையிடும் தொழிலை தவறாது செய்யுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.