Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் செய்திகள்

Featured Replies

முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் செய்திகள்

0
 

 

மெல்போர்ன்: முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடர், அடுத்த மாதம் (பிப். 3–21) ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியிருப்பதால், ‘ரெகுலர்’ கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு, விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர், அணியை வழிநடத்த உள்ளார். சிட்னி சிக்சர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் பென் டிவார்ஷுயிஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வீரர் ஷார்ட், அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர். கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட கிறிஸ் லின், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸி., அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் பின்ச், ஆஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பென் டிவார்ஷுயிஸ், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.

http://sports.dinamalar.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

5.png&h=42&w=42

117/9
 

 

2.png&h=42&w=42

66/2 * (8.4/15 ov, target 95)
 
  • தொடங்கியவர்

டி20: மேக்ஸ்வெல், கிறிஸ் லின் ஆட்டத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 

முத்தரப்பு டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #AUSvNZ

 
டி20: மேக்ஸ்வெல், கிறிஸ் லின் ஆட்டத்தால் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
 
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

மார்ட்டின் கப்தில் 5 ரன்னிலும், முன்றோ 3 ரன்ன்னிலும் ஸ்டேன்லேக் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் கேன் வில்லியம்சனை 8 ரன்னில் டை வெளியேற்ற, ப்ரூஸ்-ஐ 3 ரன்னில் வெளியேற்றினார் ஸ்டேன்லேக் இதனால் 34 ரன்னுக்குள் நியூசிலாந்து முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

அதன்பின் வந்த ராஸ் டெய்லர் 24 ரன்னும், பிளன்டெல் 14 ரன்னும், கிராண்ட்ஹோம் அவுட்டாகாமல் 38 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தயாராகும்போது மழை பெய்தது. ஆட்டம் பாதிக்கப்பட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 15 ஓவரில் 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

90 பந்தில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வார்னர், டி'ஆர்கி ஷார்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷார்ட் 4 ரன்னிலும், வார்னர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

201802031902030686_1_australia001-s._L_styvpf.jpg

அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு கிறிஸ் லின் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ஆஸ்திரேலியா 11 ஒவரில் 87 ரன்கள் எடுத்திருக்கும் போது கிறிஸ் லின் 33 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேரி களம் இறங்கினார்.

12-வது ஓவரில் மேக்ஸ்வெல் இரண்டு பவுண்டரி அடிக்க ஆஸ்திரேலியா 11.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 24 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான போட்டி வருகிற 7-ந்தேதி ஹோபர்ட்டில் நடக்கிறது.
 

 

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/03190203/1143892/AUSvNZ-Tri-T20-tri-series-australia-beats-new-zealand.vpf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முத்தரப்பு டி20: 58 பந்துகளில் 103 நாட் அவுட்; மேக்ஸ்வெல் விளாசல்; இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸி.

 

 
maxwell

இங்கிலாந்துக்கு எதிரான ஹோபார்ட் டி20 போட்டியில் சதம் விளாசிய ஆட்ட நாயகன் மேக்ஸ்வெல்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ட்ரான்ஸ்-டாஸ்மேனியன் டிராபி முத்தரப்பு டி20 தொடரில் இன்று ஹோபார்ட்டில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது.

இதன் மூலம் 2 போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா 4 புள்ளிகல் பெற்று அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது.

முதலில் பேட் செய்ய கேப்டன் டேவிட் வார்னரால் அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் தாண்டவமாட 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கிளென் மேக்ஸ்வெல் அபாரமான முறையில் வெளுத்துக் கட்டினார். ஆனால் சர்ச்சை இல்லாமலில்லை. வெற்றி பெற 53 ரன்கள் தேவை என்ற நிலையில் அடில் ரஷீத் பந்தை மேக்ஸ்வெல் தூக்கி அடித்தார், ஜேசன் ராய் அதனைத் தாழ்வாகப் பிடித்தார், கேட்ச் தரையில் பட்டு எடுக்கப்பட்டதா என்பது டிவி நடுவர் பார்வைக்குச் சென்றது, வழக்கம்போல் ரீப்ளேயில் எதுவும் உறுதியாகக் கூற முடியாததால் சந்தேகத்தின் பலன் கிளென் மேக்ஸ்வெலுக்குச் சாதகமாக அளிக்கப்பட்டது. இதனை அவர் பயன்படுத்திக் கொண்டார். வழக்கம் போல் வெற்றிக்கான ரன்களை சிக்ஸ் மூலம் அடித்து முடித்து அதில் தன் சதத்தையும் நிறைவு செய்தார் கிளென் மேக்ஸ்வெல்.

ஆனால் இங்கிலாந்து நல்ல தொடக்கத்தை வீண் செய்தது. 6 ஓவர்களில் 60/1 என்ற நிலையிலிருந்து சரிந்து 155/9 என்று முடிந்தது. பந்துவீச்சிலும் மேக்ஸ்வெல் சிறப்பாகத் திகழ்ந்தார். 2 ஓவர்களில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆஷ்டன் ஆகர் 3 ஒவர்களில் 15 ரன்களுக்கு 2 விக்கெட். இருவரும் இங்கிலாந்தின் சரிவுக்குப் பெரும் காரணமாகினர். கேன் ரிச்சர்ட்சன், ஏ.ஜே.டை ஆகியோரும் வேகம் குறைந்த பந்துகளால் இங்கிலாந்தைக் கட்டிப் போட்டனர். இதனால் 155 ரன்களுக்கு மட்டுப்பட்டது இங்கிலாந்து, இந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மலான் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 36 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். மோர்கன், ஹேல்ஸ் தலா 22 ரன்கள் எடுத்தனர்.

இலக்கை விரட்டும் போது ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் (4), கிறிஸ் லின் (0) ஆகியோரை டி.ஜே.வில்லே ஒரே ஓவரில் காலி செய்து தடுமாற்றத்தை உருவாக்கினார். ஆனால் டியார்ச்சி ஷார்ட் (30), மேக்ஸ்வெல் இணைந்து 8 ஓவர்களில் 78 ரன்களைக் குவித்தனர். டியார்க்கி ஷார்ட் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தில் அவரிடமே கேட்ச் (அபாரமான ஒரு கை கேட்ச்) ஆகி வெளியேறினார், இதில் வில்லே பந்தை புல் ஷாட்டில் மிகப்பெரிய சிக்ஸர் அடித்தார் ஷார்ட். ஸ்டாய்னிஸ் நீடிக்கவில்லை.

ஆனால் மேக்ஸ்வெல், அடில் ரஷீத் பந்தில் ஜேசன் ராய் கேட்ச் சர்ச்சையில் மீண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.

58 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக்த் திகழ்ந்தார். பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகள் என்பதால் ஆல்ரவுண்ட் திறமைக்கு ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

http://tamil.thehindu.com/sports/article22679938.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.