Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பை உடைக்க மக்­களே இட­ம­ளி­யா­தீர்­கள்! -முன்­னாள் போராளி

Featured Replies

  • கூட்­ட­மைப்பை உடைக்க மக்­களே இட­ம­ளி­யா­தீர்­கள்! -முன்­னாள் போராளி
tna-01-300x130.png

கூட்­ட­மைப்பை உடைக்க மக்­களே இட­ம­ளி­யா­தீர்­கள்! -முன்­னாள் போராளி

 

உலக அரங்­கில் ஈழத்­த­மி­ழன் வளர்ந்­து­விட்­டான் என்­ப­தற்­காகப் பல நாடு­கள் ஒன்­றி­ணைந்து தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை அழித்­தன. அந்த வளர்ச்சி தற்­போது அர­சி­யல் ரீதி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஊடாக பலம் பெற்­று­விட்­ட­தால் கூட்­ட­மைப்பை அழிக்­கவே பல முனை­க­ளி­லும் தாக்­கு­தல்­கள் இடம்­பெ­று­கின்­றன. அதற்கு எவ­ரும் இட­ம­ளித்­து­வி­டா­தீர்­கள்.

இவ்­வாறு தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் முக்­கி­ய­மான உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வ­ராக இருந்த முன்­னாள் போராளி செழி­யன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் சுழி­பு­ரம் பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு சேர்க்­கும் முக­மாக சங்­கா­னை­யில் நேற்று பரப்­புரை இடம்­பெற்­றது. ஆதில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் இந்­தத் தேசத்­திலே வாழ்ந்து கொண்­டி­ருக்­கும்­போது எமது உரி­மை­கள் தட்­டிக் கழிக்­கப்­பட்­டன. இத­னால் ஆரம்­பத்­தில் ஜன­நா­யக ரீதி­யாக உரி­மை­க­ளைக் கேட்­டுப் போரா­டி­னார்­கள். ஆனால் அவை வஞ்­சிக்­கப்­பட்­டது.

 
 

இதன்­வி­ளை­வாக நாம் ஆயு­தம் ஏந்­திப் போரா­ட­வேண்­டிய சூழ்­நி­லைக்கு ஆளா­னோம். இந்­தப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு தமது உடல்­களை சித­ற­டித்­தும் உயிர்­க­ளைத் தியா­கம் செய்­தும் எமது போரா­ளி­கள் போராட்­டத்தை நடத்­தி­னார்­கள். உல­கில் முப்­ப­டை­க­ளை­யும்­கொண்ட, உலக அரங்­கில் வீரம் பொருந்­திய இயக்­க­மாக எமது இயக்­கம் விளங்­கி­யது.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் வளர்ச்­சி­யைப் பார்த்து எமது நாடு வியந்­தது, இந்த உல­கமே வியந்­தது. தமி­ழன் வளர்ந்­து­விட்­டான் என்று உல­கம் எம்­மீது கங்­க­ணம் கட்ட ஆரம்­பித்­தது. அதன் விளை­வாக 2009 ஆம் ஆண்டு பல நாடு­கள் ஒன்­றி­ணைந்து எமது விடு­தலை இயக்­கத்தை மௌனிக்க வைத்­தது. முள்­ளி­வாய்க்­கால் கொடூ­ரத்­தின் ஊடாக பல உயிர்­கள் காவு கொள்­ளப்­பட்­டன.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் அர­சி­யல் ரீதி­யாக எமது உரி­மை­களை வென்­றெ­டுக்க பல தரப்­புக்­க­ளை­யும் இணைத்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­னார். விடு­த­லைப் புலி­கள் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் தமிழ் மக்­க­ளின் முழுப் பல­மா­கத் தற்­போது கூட்­ட­மைப்பே விளங்­கு­கின்­றது.

ஆயு­தப் போராட்டத்­தால் முயற்­சித்த உரி­மை­க­ளைக் கூட்­ட­மைப்­பி­னர் தற்­போது அர­சி­யல் ரீதி­யா­கப் பெற்­று­வி­டு­வார்­கள் என்ற அச்­சத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உடைத்­தெ­றிய வேண்­டும் என்று கங்­க­ணம் கட்­டிப்­பல தரப்­புக்­கள் களம் இறங்­கி­யுள்­ளன.

மேடைக்கு மேடை கருத்­துக்­களை கூறும் ஏனைய அர­சி­யல்­வா­தி­கள் மற்­றைய கட்­சி­கள் எத­னை­யும் விமர்­சிக்­காது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை மட்­டும் விமர்­சிக்­கின்­ற­னர். அதற்­குக் கார­ணம் அவர்­கள் அனை­வ­ரும் யாரோ ஒரு­வர் பின்­னால் இயங்­கு­கின்­ற­னர் என்­பதே. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உடைக்­கவே அவர்­கள் இயக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

30 வருட ஈழப் போராட்­டத்­தின் பின்­னர் தமிழ் மக்­க­ளின் பல­மா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு விளங்­கு­கின்­றது. இதன் வெற்­றியை உல­கமே அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கும். எனவே மக்­கள் எமது பிர­தி­நி­துத்­து­வத்தை அறிந்து தேர்­த­லில் கூட்­ட­மைப்­புக்கே வாக்­க­ளிக்க வேண்­டும. – என்­றார்.

http://newuthayan.com/story/66592.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.