Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமி­ழர்­களும் தேசிய நல்­லி­ணக்­கத்தின் கட்­டாயத்தேவையும்

Featured Replies

இலங்கைத் தமி­ழர்­களும் தேசிய நல்­லி­ணக்­கத்தின் கட்­டாயத்தேவையும்

1-e7d14fd4f1b2d9ab849290f2186c9c330ce4f43c.jpg

 

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் 2015இல்­ ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையும் நிறு­வ­னங்­க­ளையும் மீள­மைத்து வலு­வூட்­டு­வ­தற்­கா­க­வும்­ சட்ட ஆட்­சியை ஸ்தாபிப்­ப­தற்­கா­க­வும்­ ஊழலை ஒழிப்­ப­தற்­கா­கவும் மற்றும் தேசிய ஒற்­று­மையை மேம்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கு­மான மக்கள் ஆணையைப் பெற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

 குடி­மக்கள் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைப்­புக்­க­ளி­னாலும் மற்றும் பல அர­சியல் கட்­சி­க­ளி­னாலும் அடை­யாளம் காணப்­பட்ட குறிக்­கோள்­களை அடை­யும்­பொ­ருட்டு தேசிய அர­சொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கா­க­வும்­ நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கா­கவும் ஜனா­தி­பதியும் தனது பங்­கிற்கு உத்­த­ர­வாதம் வழங்­கி­யி­ருந்தார். 2015 தேர்­தலில் ஒரு புது­மை­யான விடயம் என்­ன­வென்­றால்­ ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் இனம்,­ மத,­ பிராந்­திய உணர்வு மற்றும் அர­சியல் கட்சிப் பிரி­வுகள் போன்ற சகல தடை­க­ளையும் தாண்டி வெற்­றி­பெற்­ற­மை­யாகும். நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளி­னாலும் வழி­ந­டத்­தப்­பட்ட தேசிய அர­சாங்கம் அதன் முத­லாண்டு காலப்­ப­கு­தியில் ஜனா­தி­ப­தியின் ஆட்சிக் காலத்தை ஐந்து ஆண்­டு­க­ளுக்கு மட்­டுப்­படுத்­த­வும்­ பொலிஸ் சேவை ஆணைக்­குழு மற்றும் நீதிச்­சே­வைகள் ஆணைக்­குழு ஆகிய இரண்டு சுதந்­திர ஆணைக்­கு­ழுக்­களை அமைப்­ப­தற்­கு­மான சட்­டத்­தினை அங்­கீ­க­ரித்­தது. இந்தச் செயற்­பா­டுகள் முன்­னைய ஜனா­தி­ப­தி­களின் காலத்தில் பிர­தம மந்­திரி பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்­த­போது நடத்­திய போராட்­டங்­களின் விளை­வாகும். இந்த விட­யங்கள் தொடர்­பான சட்டம் ஆக்­கப்­பட்­ட­மை­யா­னது இந்த நாட்டின் ஜன­நா­யக அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் முக்­கிய மைல் கல்­லாகும். அதி­கார துஷ்பிர­யோ­கத்தைக் கட்­டுப்­ப­டுத்­த­வும்­ ஊழலை ஒழிப்­ப­தற்­கும்­ எல்­லா­வற்­றிற்கும் மேலாக சட்­டத்தின் ஆட்­சியின் மீயுயர் நிலையை உறு­திப்­ப­டுத்­தவும் அத்­துடன் தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­க­வும்­ வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடி­ய­து­மான நெகிழ்­திறன் கொண்ட பொரு­ளா­தா­ரத்­து­ட­னான நவீன ஜன­நா­ய­கத்தை இலங்­கையில் மீளு­ரு­வாக்கம் செய்­வ­தற்­கான அடித்­த­ளத்தை இடு­வ­தற்கும் இக்­கரு­விகள் மிகவும் அவ­சி­ய­மா­ன­வை­யாகும். அதி­கா­ரத்­தி­லுள்ள தேசிய அர­சாங்கம் இன,­ மத,­ பிராந்­திய தடை­களைத் தாண்டித் தேசிய அடை­யாள உணர்வை விருத்தி செய்­வ­தற்­கான தனது உறு­தி­மொ­ழியைச் செயற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­வே­ளை ­­வ­ர­லாற்று மற்றும் குடிப்­ப­ரம்பல் ரீதி­யான யதார்த்த நிலை­யான இலங்கைச் சமூ­கத்தின் பன்­முகத் தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. அது­­ பா­ரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றி­ய­மைத்து தேசிய இணக்­கத்தின் அடிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்கும் செயல்­மு­றையை ஆரம்­பித்­துள்­ளது. எல்லாச் சிறு­பான்மைக் கட்­சி­களும் குறிப்­பா­க­ இலங்கைத் தமிழ்­மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­வாக்கச் செயற்­பா­டு­களில் பங்­க­ளிப்புச் செய்து வரு­கின்­றன. இலங்கைத் தமிழ்­மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சி­க­ளாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் மக்கள் ஜன­நா­யக முன்­னணி ஆகி­யன உள்­ளன. அத்­தோ­டு­ அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்கச் செயற்­திட்டம் ஒன்­றையும் ஆரம்­பித்­துள்­ளது. இது கடு­மை­யான போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க அவர்­களின் நேரடி வழி­காட்­டலின் கீழ் உரு­வாக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட சுது நெலும் (வெண்­தா­மரை) இயக்­கத்தை நினை­வூட்­டு­வ­தாக உள்­ளது. இந்த இயக்கம் போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக தேசியப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிக்குப் பெரும்­பான்மைச் சிங்­கள மக்­களின் ஆத­ரவைத் திரட்­டு­வதில் சிறப்­பான வெற்­றியைக் கண்­டது.

இந்தத் தரு­ணத்­தில்­ டொனமூர் ஆணைக்­குழு நாட்­களில் இருந்து இலங்கைத் தமி­ழர்­களின் அர­சியல் தொடர்­பாக பின்­நோக்கிப் பார்­வையைச் செலுத்­து­வது பொருத்­த­மா­ன­தாகும். அந்த நாள் வரை­யிலும் மற்றும் இரண்­டா­யிரம் ஆண்­டு­கால உள்­நாட்டு முடி­யாட்சிக் காலத்­திலும் தீவில் வாழ்ந்த சிங்­கள மற்றும் தமிழ் மக்­க­ளி­டை­யே­யான உறவு இணைந்து வாழ்­தல்­, நல்­லி­ணக்கம் மற்றும் பங்­கு­டமை அடிப்­ப­டையில் இருந்­துள்­ள­தா­க­ இந்த நாட்டின் எல்லா மொழி­க­ளி­லு­முள்ள தொல்­லியல் மற்றும் வர­லாற்றுக் கூற்­றுக்­களில் இருந்து பெறப்­பட்ட சான்­றா­தா­ரங்­க­ளுடன் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. முற்­கால வர­லாற்று மர­பு­களில் தமிழர் எதிர் உணர்­வுகள் அந்­நி­ய­மா­ன­வை­யாக இருந்­த­தாக தீப­வம்சம் மற்றும் மகா­வம்சம் என்ற இரண்டு பாளி மொழி­யி­லான வர­லாற்றுக் குறிப்­புக்­களைக் கவ­ன­மாகப் பரி­சீ­லித்­த­போது காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆக்­கி­ர­மிப்­பா­ள­னாகக் கரு­தப்­பட்ட எல்­லா­ள­னுக்கு எதி­ராக தித்­த­கா­மினி அபய என்­ப­வனால் மேற்­கொள்­ளப்­பட்ட போர்­ சிங்­கள – தமிழர் மோத­லாக இந்த வர­லாற்றுக் குறிப்­புக்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

 இது ஓர் இன மோத­லாகப் பார்க்­கப்­ப­டு­கின்ற மன உணர்­வு­ 19ஆம் நூற்­றாண்டில் ஆரம்­பித்த நவீன வர­லாற்றுப் பதிவுக் குறிப்­புக்­களில் உள்ள தவ­றாகும். ஹன்டி பேரின்­ப­நா­யகம் தலை­மையின் கீழ் செயற்­பட்ட யாழ்ப்­பாண இளைஞர் காங்­கி­ரஸின் தூண்­டு­த­லின்­படி அரச சபைக்­காக நடை­பெற்ற முத­லா­வது தேர்­தலை வடக்குத் தமிழ் மக்கள் புறக்­க­ணித்­தமை ஒரு பேரி­ட­ரா­கவே அமைந்­தி­ருந்­தது. குடி­யேற்ற நாட்­டுக்­கான முழு­மை­யான சுதந்­தி­ரம்­ டொனமூர் ஆணைக்­கு­ழு­வினால் சிபார்சு செய்­யப்­ப­ட­வில்லை என்ற அடிப்­ப­டை­யி­லேயே இந்தப் புறக்­க­ணிப்பு இருந்­தது.

இலங்கைத் தேசிய காங்­கிரஸ் கூட டொமி­னியன் அந்­தஸ்­துக்­கான விரை­வான முன்­னேற்­றத்தைக் கோர­வில்லை. சில காலங்­க­ளுக்குக் கால­னித்­துவ அர­சாங்கம் அன்­னி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தோ­டு­ குறித்த புறக்­க­ணிப்­பானது இரண்டு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான இன­வாத அர­சி­யலின் ஆரம்­பத்­திற்­கான அடித்­த­ளத்தைத் தயா­ரித்­தி­ருந்­தது. குறிப்­பிட்ட இளைஞர் காங்­கிரஸ் தலைமை சிந்­த­னை­வா­தியே தவிர அர­சி­யலில் அனு­ப­வ­மற்­றி­ருந்­தது. இந்­திய தேசிய சுதந்­திர இயக்­கத்தின் செயற்­பா­டு­களால் அவர்கள் கவ­ரப்­பட்­டி­ருந்­தார்கள். சுதந்­திர இந்­தியா மொழி மாநி­லங்­களின் ஒன்­றி­ய­மா­கவே இருக்கும் என்று மகாத்மா காந்தி செய்த பிர­க­ட­னத்தின் முக்­கிய அம்­சத்தை அவர்கள் கவ­னிக்கத் தவ­றி­யி­ருந்­தனர். இந்­திய அர­சி­ய­ல­மைப்பில் உள்ள இத்­த­கைய முறை­மைக்­கான ஏற்­பா­டுகள் பிரி­வி­னைக்­கான வாய்ப்­புக்­களைத் தவிர்த்­த­தோ­டு­ ஒப்­பிட முடி­யாத அளவில் பாரிய வேறு­பா­டு­களைக் கொண்ட ஒரு நாட்டின் வலு­வான அடை­யா­ளத்தை முன்­னேற்­ற­வும்­ இந்­தியன் என்ற அடை­யா­ளத்தைப் புரிந்­து­கொள்­ளவும் கூடி­யதாய் இருந்­தமை நவீன அர­சி­யலில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­ற­மாகும்.

1947இல் உரு­வாக்­கப்­பட்ட பாகிஸ்தான் அர­சு­ அதன் ஆரம்­ப­கர்த்­தா­வான மொகமட் அலி ஜின்னா மொழி­சார்ந்த பிரச்­சினை தொடர்­பாகக் கொண்­டி­ருந்த நெகிழ்ச்­சி­யற்ற நிலைப்­பாட்டின் கார­ண­மா­கவே உரு­வா­கி­யது. பாகிஸ்­தானின் மொழி உரு­து­வா­கவே இருக்­கு­மென்­றும்­ வேறு­வி­த­மாகச் சிந்­திக்கும் எந்த நபரும் பாகிஸ்­தானின் எதி­ரியே எனவும் அவர் கூறினார். கவர்ச்­சியும் உணர்­வு­பூர்­வ­மான சிந்­த­னையும் கொண்ட சேய்க் முஜிபுர் ரஹ்மான் வேறு வித­மாகச் சிந்­தித்­த­மை­யினால் 1947இல் ஆரம்­பிக்­கப்­பட்ட பாகிஸ்தான் 1970 இன் பின்னர் அவ்­வா­றி­ருக்­க­வில்லை. இலங்கை இன உறவில் ஏற்­பட்ட முன்­னேற்ற மாதி­ரிகள் அயல் உப கண்­டத்தில் ஏற்­பட்ட மாதி­ரி­களைப் போன்று இருக்­க­வில்லை.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­, ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன மற்றும் எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் ஆகிய இந்த நாட்டின் மூன்று தலை­வர்­களும் இன உறவில் மேலா­திக்கப் பங்­க­ளிப்பைச் செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் தாராள ஜன­நா­ய­க­வா­தி­க­ளாகத் தீர்க்­க­த­ரி­ச­ன­மா­கவும் நடு­நி­லை­யா­கவும் நெகிழ்ச்சித் தன்­மை­யான பண்­பு­க­ளோடு இனப்­பி­ரச்­சி­னையை நோக்­கி­னார்கள். அவர்கள் எல்­லோரும் இலங்கைச் சமூகம் பன்­மு­கத்­தன்மை கொண்­ட­தென்ற யதார்த்­தத்தை ஏற்­றி­ருந்­தனர். தாரா­ள­வாத ஜன­நா­யக மரபில் கல்­வி­ய­றிவு பெற்ற அவர்கள் ஜன­நா­யக அடிப்­ப­டை­யி­லான அர­சாங்­கத்தில் உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­தனர். ஆயி­னும்­­நி­றை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­ ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவின் ஒரு புறம்­பான எண்­ணக்­க­ரு­வாகும். பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பே அவர்கள் மறைந்­து­விட்­டா­லும்­ இன நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்­கான அணு­கு­முறை சார்ந்த விட­யங்கள் மற்றும் குறிப்­பாக இலங்கைச் சிங்­கள தமிழ் மக்­க­ளி­டையே முற்­கா­லத்தில் காணப்­பட்ட இணைந்த வாழ்­வு­ நல்­லி­ணக்கம் என்­ப­ன­வற்றை மீள ஏற்­ப­டுத்­து­வதில் அவர்­களின் வகி­பா­கத்தை பின்­நோக்­கியும் நடு­நி­லை­யா­கவும் பார்க்க வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களின் செயல்­ முரண்­பாட்டின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்­கு­தீர்வு காண்­ப­தற்­கான அடித்­த­ளத்தை இட்­டி­ருந்­தது. 20ஆம் நூற்­றாண்டின் சிங்­களத் தேசியத் தலை­வர்­களுள் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்கா பகுத்­த­றிவுச் சிந்­தனை கொண்ட ஒரு­வ­ராக இருந்­துள்ளார். அவரின் அர­சியல் ஆரம்ப வரு­டங்­க­ளில்­ உயர்­நி­லையில் மத்­தி­ய­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட அர­சாங்கம் இந்த நாட்டுப் பாரம்­ப­ரி­யங்­க­ளுக்குப் பொருத்­த­மற்­ற­தென்­பதை அவர் கண்­ட­றிந்­தி­ருந்தார். மேலும்­1944இல் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனவால் முன்­மொ­ழி­யப்­பட்ட உத்­தி­யோக மொழி தொடர்­பான திருத்­த­மொன்­றிற்­கான தனது ஆத­ர­வையும் வழங்­கி­யி­ருந்தார். இந்த நாட்டின் உத்­தி­யோக மொழி­யாக சிங்­க­ளமும் தமிழும் இருக்க வேண்­டு­மென்ற அந்தத் திருத்தம் ஆர்.நல்­லையாவால் முன்­மொ­ழி­யப்­பட்­ட­போ­து­ பண்­டா­ர­நா­யக்காவின் ஆத­ர­வுடன் அது அரச சபையில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. சுதந்­தி­ரத்­திற்குப் பின்பு இந்த நாட்டு அர­சாங்­கத்­தினால் இலங்கைத் தமி­ழர்கள் பாகு­பாட்­டுக்­கோ­ அழுத்­தங்­க­ளுக்கோ உட்­ப­டுத்­தப்­பட மாட்­டார்கள் என்ற உத்­த­ர­வா­தத்தை வழங்கும் வகையில் உரு­வாக்­கப்­பட்ட சட்­ட­வாக்­க­மா­கவே இது பார்க்­கப்­ப­டு­கின்­றது. தமி­ழர்கள் ஆரம்ப காலந்­தொட்டு அதிக எண்­ணிக்­கையில் வாழும் இரண்டு மாகா­ணங்­களை ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­வதன் மூலம் உரு­வாக்­கப்­படும் ஓர் அல­கி­னையும் உட்­ப­டுத்­திய மூன்று அல­கு­களைக் கொண்ட சமஷ்டி அர­சி­ய­ல­மைப்­பொன்றைச் செய்ய வேண்­டு­மென அப்­போது கண்­டி­யர்­களால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையால் அவர்கள் கவ­ரப்­பட்­ட­மைக்­கான முக்­கிய காரணம் இது­வே­யாகும். அப்­போது கண்­டி­யர்­களின் கோரிக்­கைக்கு உரி­ய­வாறு செயற்­ப­டாமல் விட்­டமை பாரிய தவ­றா­கவே பிற்­கா­லத்தில் நிகழ்ந்த நிகழ்­வுகள் நிரூ­­பித்­தன.

ஜி.ஜி.பொன்­னம்­பலத்தினால் முன்­வைக்­கப்­பட்ட ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்­கை­யா­ன­து­ பகுத்­த­றி­வற்­ற­தா­க­வும்­ ஜன­நா­யக விரோ­த­மா­ன­தா­க­வும்­ ஆத்­தி­ர­மூட்­டு­வ­தா­கவும் அமைந்­தி­ருந்­தது. சட்­ட­வாக்க சபையில் பிர­தி­நி­தித்­துவ விட­யங்­களில் ஒரு சமூகம் தமது ஆட்­புல மற்றும் குடிப்­ப­ரம்பல் அடிப்­ப­டையில் அதற்குக் கிடைக்க வேண்­டிய ஆசன எண்­ணிக்­கையைப் பெறு­வதைத் தடுக்க முடி­யாது. அதனால் இந்தக் கோரிக்­கையைச் சோல்­பரி ஆணைக்­கு­ழு­வா­னது இயல்­பா­கவே நிரா­க­ரித்­தது. காங்­கிரஸ் தலைவர் தனது சொல்­லாட்­சி­யினால் தனது பார்­வை­யா­ளர்­களை இயக்­கித்­தன்னைப் பின்­பற்ற வைத்­தாரே தவி­ர­ சர்­வ­தேச ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விதி­மு­றை­க­ளோடும் செயன்­மு­றை­க­ளோடும் இணைந்து செல்­லக்­கூ­டிய பிரே­ர­ணை­களை உரு­வாக்கும் செயற்­றிறன் அவ­ரிடம் இருக்­க­வில்லை. அவ­ரு­டைய தலை­மை­யா­னது உயர்ந்த அள­வான தோல்­வி­யையே நிரூ­­பித்துக் காட்­டி­யது. அவரின் செயல்­களால் பெரிய வாய்ப்பு ஒன்று இழக்­கப்­பட்­ட­தோ­டு­ அதன் பின்­பு­ அதிக அளவில் மத்­தி­ய­ம­யப்­பட்ட அர­சியல் முறை­மை­யி­னா­லும்­ பெரும்­பான்மை மேலா­திக்க அர­சி­ய­ல­மைப்பின் கார­ண­மா­கவும் மிகக் குறைந்த அள­வா­ன­வற்­றையே செய்ய முடிந்­தது. 1956 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­தினால் ஆக்­கப்­பட்ட சட்­ட­மொன்­றின்­படி இலங்­கையின் உத்­தி­யோக தனி மொழி­யாக சிங்­களம் ஆக்­கப்­பட்­ட­தோ­டு­ உத்­தி­யோக மொழி தொடர்­பாக அரச சபையில் முன்னர் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் செய­லி­ழக்கச் செய்­யப்­பட்­டது. இந்­த­வே­ளையில் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­யகம் இலங்கைத் தமி­ழர்­களின் தலை­வ­ராக மேலெ­ழுந்­த­தோ­டு­ அந்த நேரத்­தி­லி­ருந்து அவ­ரது கட்சி தமிழ் அர­சி­யலில் மேலா­திக்கம் பெற்­றி­ருந்­தது. ஏற்­கெ­னவே குறிப்­பிட்­டுள்­ள­ப­டி­ இந்த நாட்டில் சமஷ்­டியை ஆத­ரித்­த­வர்­களில் அவர் முத­லா­னவர் அல்ல. அர­சாங்­கத்தின் பாகு­பா­டான கொள்­கை­க­ளுக்கு தமிழ் மக்­களின் எதிர்ப்பைக் காட்­டு­வ­தற்­கா­கவே அவ­ரு­டைய காலம் முழு­வதும் அவர் செயற்­பட்டார். அவ­ரிடம் பேச்­சாற்றல் திறமை இருக்­க­வில்லை. அவர் சுருக்­க­மா­கவே தனது கருத்­துக்­களைத் தெரி­விக்­கும்­போது பாரா­ளு­மன்­றிலும் மற்றும் தேர்தல் கூட்­டங்­க­ளிலும் மிக அமை­தி­யாகப் பார்­வை­யா­ளர்கள் அவ­ரது பேச்சை உன்­னிப்­பாகச் செவி­ம­டுப்­பார்கள். அவர் எல்லா இடங்­க­ளிலும் ஒரே விட­யத்­தையே பேசினார். அவரின் பின்பு வந்த இரண்டு பரம்­ப­ரை­யினர் அவர் கொண்­டி­ருந்த அர­சியல் கொள்­கைகள் மற்­றும் ­நிலைப்­பா­டுகள் பற்­றிய தெளிவற்ற நிலை­யி­லேயே இருந்­தனர். நாடு இரண்­டாகப் பிரிக்­கப்­ப­டு­வ­தற்கு அவர் எதி­ரா­ன­வ­ரா­கவே இருந்தார் என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும். 65 வரு­டங்­க­ளுக்கு முன்பு அவர் என்ன கூறினார் என்­பது தற்­போ­தைய ஆசி­ரி­ய­ருக்குத் தெளிவாக நினைவில் உள்­ளது. பார்­வை­யா­ளர்கள் சிலர் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதி­லாக அவர் கூறி­ய­தா­வது தமிழ் மக்­களின் உரி­மை­களைப் போலவே நாட்டின் ஒரு­மைப்­பாடும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதே. தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான அவ­ரு­டைய அணு­கு­மு­றை­யா­னது நிதானப் போக்­கு­டை­ய­தா­கவே இருந்­தது. முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு கட்டங்­கட்­ட­மான தீர்வே எதிர்­பார்ப்­பாக இருந்­தது. பண்டா – செல்வா ஒப்­பந்தம் கைவி­டப்­பட்ட பின்­ன­ரும்­கூட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்கா மீது அவர் மென்­மை­யான கருத்­தையே கொண்­டி­ருந்தார்.

(தொடரும்)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-05#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.