Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பியோடு சேர யாரும் தயா­ரில்லை!!

Featured Replies

  • ஈ.பி.டி.பியோடு சேர யாரும் தயா­ரில்லை!!
 
37745-640x400.jpg

ஈ.பி.டி.பியோடு சேர யாரும் தயா­ரில்லை!!

 

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்­கில் ஆட்சி அமைப்­ப­தில் தொங்கு நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் சபை­க­ளைக் கைப்­பற்­றி­யுள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்போ, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணியோ ஈ.பி.டி.பியு­டன் கூட்­டுச் சேரு­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டை எடுத்­துள்­ளன என்று அறிய முடி­கின்­றது.

ஈ.பி.டி.பியு­டன் கூட்­டுச் சேரு­வ­தன் ஊடாக சில சபை­க­ளில், இரு கட்­சி­க­ளும் ஆட்சி அமைப்­ப­தற்கு வாய்ப்­புக்­கள் உள்­ளன. ஆனா­லும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் ஈ.பி.டி.பியு­டன் சேரு­வ­தில்லை என்ற முடிவை எடுத்­துள்­ளன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஈ.பி.டி.பியு­டன் கூட்­ட­மைப்­பின் பிர­மு­கர்­கள் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர் என்று செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யில், அப்­படி எந்­தப் பேச்­சும் நடத்­த­வில்லை. ஆட்சி அமைப்­ப­தற்­காக யாரு­ட­னும் பேசப்­போ­வ­தில்லை. கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் ஆட்சி அமைக்­க­வேண்­டும். மற்­றை­ய­வர்­கள் அத­னைக் குழப்­பக் கூடாது, இது­தான் கட்­சி­யின் நிலைப்­பாடு என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

http://newuthayan.com/story/68429.html

  • கருத்துக்கள உறவுகள்

 வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாலாய் வார்த்து, தேனாய் ஊத்தினாலும் ஒருநாள் அது தன் சொந்தப் புத்தியை காட்டியே தீரும். யுத்த காலத்தில் நடந்த கொலை, கொள்ளைகளை நினைத்தால் இன்றும் நெஞ்சு பதறுது. எத்தனை வாழ வேண்டிய இளந்தளிர்களை கதறக் கதற  வீதியெங்கும் சுட்டுப்போட்ட  அரக்கனோட மானமுள்ள எந்தத் தமிழனும் கூட்டுச் சேரக்கூடாது. அதோட சேர்ந்து இயங்கிய, அதனால் வாழ்ந்த , அதின்ர எச்சி பொறுக்கியள் ஆதரிக்கட்டும். மனசாட்சியுள்ளவன் எவனும்  உதைக் கண்டால் அருவருத்து ஒதுக்குவான்.

  • தொடங்கியவர்

எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்க தயார்: ஈ.பி.டி.பி.

 

EPDP

 

உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ள கட்சி எதுவாக இருப்பினும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாவும் எதிர்காலத்தில் அவர்களின் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கம் ஆதரவளிக்க  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி. கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பெரும்பாலானவற்றில் யாரும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் வடக்கு கிழக்கில் நுாற்றுக்கும்  மேற்பட்ட ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஈ.பி.டி.பி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன், யாழ். மாநகர சபை உட்பட சில சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஈ.பி.டி.பி ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=621168-எந்தவொரு-கட்சிக்கும்-ஆதரவளிக்க-தயார்:-ஈ.பி.டி.பி.

  • தொடங்கியவர்

ஈ.பி.டி.பியின் இறுதி முடிவு வெளியானது! ஆதரவு யாருக்கு??

உள்ளூராட்சிசபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், ஈ.பி.டி.பி உயர்மட்டம் இது தொடர்பில் இறுதி முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெளியிலிருந்து ஆதரிக்க முடிவெடுத்துள்ளது.

அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த ஆதரவை வழங்குவதென்றும், ஆறு மாத காலத்தில் திருப்திகரமான நிர்வாகத்தை வழங்கினால் ஆதரவை தொடர்வதென்றும் முடிவெடுத்துள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/174151?ref=home-imp-flag

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.