Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலப்பு தேர்தல் முறை காலை வாரியுள்ளதா?

Featured Replies

கலப்பு தேர்தல் முறை காலை வாரியுள்ளதா?

 

நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இலங்­கையின் அர­சியல் நெருக்­கீ­டு­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக அமைந்­தி­ருந்­தது. இலங்­கையின் வர­லாற்றில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லா­னது தேசிய ரீதியில் பாரி­ய­ளவு அர­சியல் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி இருந்­த­தென்றால் அது இம்­முறை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலே ஆகும் என்­ப­தனை சக­லரும் ஏற்றுக் கொள்வர். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் இடம்­பெற்ற அர­சியல் அதிர்­வ­லைகள் இன்னும் முற்­றாக ஓய்ந்­து­வி­ட­வில்லை.

எதுவும் எப்­போதும் நடக்­கலாம் என்ற நிலையே இருந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இம்­முறை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் இடம்­பெற்­றி­ருந்­தமை ஒரு சிறப்­பம்­ச­மாக காணப்­ப­டு­கின்­றது. இக்­க­லப்பு முறை தொடர்பில் பல அதி­ருப்­தி­யான வெளிப்­பா­டுகள் இப்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் பல்­வேறு பாத­க­வி­ளை­வு­க­ளையும் கலப்பு முறையின் மூலம் அனு­ப­விக்க வேண்­டி­யி­ருப்­ப­தாக புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர். அத்­தோடு பெரும்­பான்­மை­யி­னரை பொறுத்­த­வ­ரை­யிலும் கலப்­பு­முறை திருப்தி தரு­வ­தாக இல்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

ஜன­நா­ய­கமும் தேர்­தலும்

தற்­போது ஜன­நா­யகம் குறித்து அதி­க­மா­கவே பேசப்­பட்டு வரு­கின்­றது. 'எல்லா மக்­க­ளு­டை­யதும் எல்லா மக்­க­ளி­னாலும் எல்லா மக்­க­ளுக்­கான ஒரு அர­சாங்­கமே ஜன­நா­ய­க­மாகும்' என்று 1850 ஆம் ஆண்டில் அறிஞர் தியோட்டர் பாக்கர் ஜன­நா­ய­கத்­தை வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்தி இருக்­கின்றார். இதனை மேலும் சுருக்­க­மாக ‘மக்­களின் மக்­களால் மக்­க­ளுக்­கான அர­சாங்கம்’ என்று ஆபிரகாம் லிங்கன் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்தி இருந்தார். ஜன­நா­யகம் தொடர்பில் எந்­த­ள­விற்கு சிறப்­பித்துக் கூறப்­ப­டு­கின்­றதோ அந்­த­ள­விற்கு ஜன­நா­யகம் ஏற்­ப­டுத்தும் குளறு­ப­டிகள் தொடர்­பிலும் விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன. ஜன­நா­யகம் மக்கள் ஆட்சி என்று வர்­ணிக்­கப்­பட்­ட­போ­திலும் அதன் உள்­ளார்ந்த தன்மை குறித்து சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ள­தனை புத்­தி­ஜீ­விகள் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். ஜன­நா­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் வாக்­கு­களின் எண்­ணிக்கை மட்­டுமே கருத்தில் கொள்­ளப்­ப­டு­கின்­றது. ஜன­நா­ய­கத்தில் மக்கள் அர­சுடன் அல்­லது அர­சாங்­கத்­துடன் குறைந்த தொடர்­பு­க­ளையே கொண்­டுள்­ளனர்.

அவர்கள் சுய­ந­லன்­களை ஏற்படுத்திக்­கொண்­டி­ருக்கும் கருத்தின் அள­விற்கு ஆட்சி, அனு­ப­வங்கள் குறித்து அக்­கறை எடுப்­ப­தில்லை. மக்கள் தமது ஆட்சி முறையில் தாமே ஆட்­சி­யா­ளர்கள் என்­ப­தனை அநே­க­சந்­தர்ப்­பங்­களில் சரி­வர புரிந்து கொள்­வ­தில்லை. மேலும் ஜன­நா­யக முறை­களில் மக்கள் போதி­ய­ளவு கல்­வி­ய­றிவு இல்­லா­த­வர்­க­ளாக இருப்­பதும் அதன் வழியே தம்மை எதிர்­நோக்கும் நெருக்­க­டி­களில் சரி­யான தீர்­மா­னத்­திற்­கு­வர முடி­யாதிருப்­ப­தும்­ கூட குறை­பா­டு­க­ளே­யாகும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இத­னைப்­போன்று பல விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஜன­நா­யகம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­போதும் தற்போது உல­க­ளா­விய ரீதியில் பல நாடு­களில் ஜன­நா­யக ஆட்­சிக்கே வலு­சேர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. சில நாடு­களில் நிலவும் பெய­ர­ளவு ஜன­நா­யக ஆட்சி தொடர்­பிலும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இல்­லாமல் இல்லை. எவ்­வா­றெ­னினும் ஜன­நா­ய­கத்தின் வெற்­றிக்கு தேர்­தல்கள் உந்துசக்­தி­யாக விளங்­கு­கின்­றன என்­பதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாகும். தேர்­தலின் ஊடாக பிர­தி­நி­தி­களின் தெரிவு இடம்­பெ­று­கின்­றது.

மக்கள் தமது சார்பில் பிர­தி­நி­தி­களை தெரி­வு­செய்து தங்­க­ளது நலன்­களை பேணு­வ­தற்­கா­கவும் சமூக அபி­வி­ருத்­திக்­கா­கவும் அர­சி­ய­லுக்கு அனுப்பி வைக்­கின்­றார்கள். எனினும் சில சந்­தர்ப்­பங்­களில் மக்­களின் எதிர்­பார்ப்­புகள் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ள­தையும் கூறி­யாதல் வேண்டும். சுய­நலன் பேணும் அர­சியல் கலா­சா­ரத்­தினால் அப்­பாவி மக்கள் பக­டைக்­கா­ய்களாக்­கப்­ப­டு­வதும் தெரிந்த விட­ய­மே­. மக்­களை அட­கு­வைத்து குளிர்­காயும் அர­சி­யல்­வா­திகள், ஊழல்­வா­திகள் ஜன­நா­யக அமைப்பின் சாபக்­கே­டு­க­ளே­.

தேர்தல் தொடர்பில் நாம் பேசு­கின்­ற­போது தேர்தல் முறை தொடர்­பிலும் பேச­வேண்­டிய கட்­டாயமுள்­ளது. தேர்தல் முறையில் ஏற்­படும் ஒழுங்­கீ­னங்கள் பல்­வேறு பாத­க­வி­ளை­வு­க­ளுக்கும் இட்­டுச்­செல்­வ­தாக அமையும் என்­பதும் உண்­மை­யே­. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட விகி­தா­சார தேர்தல் முறை இதற்­கொரு சிறந்த உதா­ர­ண­மாகும். ஒரு தேர்தல் மாவட்­டத்தில் முறை அல்­லது பல் அங்­கத்­துவத் தேர்தல் தொகு­தியில் ஒரு கட்­சியோ அல்­லது குழுவோ பெற்ற வாக்­கு­களின் விகி­தா­சா­ரத்­திற்­கேற்ப ஆச­னங்­களை பகிர்ந்­த­ளிக்­கின்ற ஒரு கணித ரீதி­யான தேர்தல் முறை இது­வாகும்.

தேர்தல் தொகு­தி­யொன்றில் போட்­டி­யிடும் ஒவ்­வொரு கட்­சியும் குழுவும் மக்கள் மத்­தியில் பெற்­றி­ருக்கும் செல்­வாக்­கிற்கு ஏற்ப அவற்­றிற்­கு­ரிய ஆச­னங்­களை அல்­லது பிர­தி­நி­தித்­து­வத்­தை பங்­கிட்டு வழங்­கு­கின்ற தேர்­தல்­முறை என்றும் விகி­தா­சார முறை கூறப்­ப­டு­கின்­றது.

விகி­தா­சாரத் தேர்தல் முறை பல்­வேறு குழப்பநிலை­க­ளையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. ஐக்­கியம் மிக்க நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சவா­லாக இருந்த இம்­மு­றை­யா­னது உட்­கட்சிப் பூசல்­க­ளுக்கும் வித்­திட்­டி­ருந்­தது. எனினும் சாதக விளை­வு­களும் இம்­மு­றை­யின்­மூலம் இருக்­கத்தான் செய்­தன. விகி­தா­சார தேர்தல் முறையின் குறை­பா­டுகள் மேலெ­ழும்­பிய நிலையில் புதிய தேர்தல் முறையின் அவ­சியம் தொடர்பில் அதி­க­ வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­று­வந்­த­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

சுய­நலன் பேணும் அர­சியல் கலா­சா­ரத்­தினால் அப்­பாவி மக்கள் பகடைக் காய்­க­ளாக்­கப்­ப­டு­வதும் தெரிந்த விட­ய­மாகும். மக்­களை அட­கு­வைத்து குளிர்­காயும் அர­சி­யல்­வா­திகள், ஊழல்­வா­திகள் ஜன­நா­யக அமைப்பின் சாபக்­கே­டு­க­ளே­யாவர்.

 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல்

விகி­தா­சார தேர்தல் முறை­யை மாற்­றி­ய­மைத்து புதிய தேர்தல் முறை ஒன்றை அறி­முகம் செய்யும் நோக்கில் கலந்­து­ரை­யா­டல்கள், கோரிக்­கைகள் என்­பன அவ்­வப்­போது இடம்­பெற்று வந்­தன. கடந்த அர­சாங்­கத்தின் காலத்­திலும் இவ்­வி­டயம் தொடர்பில் அதி­க­மாக பேசப்­பட்டு வந்­தமை குறித்து நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். இதற்­கி­டையில் ஆட்­சிக்­கு­வந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் தேர்தல் முறை மற்றும் புதிய அர­சியல் யாப்பு போன்ற விட­யங்­களில் முக்­கிய கவனம் செலுத்தியிருந்­தது.

புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் நாட்டு மக்­களின் கருத்­த­றி­யப்­பட்டு காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்ற நிலையில் இன­வாத சிந்­த­னை­யா­ளர்­களின் கோஷங்கள் புதிய அர­சியல் யாப்பு குறித்த முன்­னெ­டுப்­பு­களை ஸ்தம்­பி­த­ம­டையச் செய்­தி­ருக்­கின்­றன. மேலும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஏற்பட்ட சில அதி­ருப்­தி­யான நிலை­மை­களும் புதிய அர­சியல் யாப்­பினை கேள்விக் குறி­யாக்கியிருப்­பதும் தெரிந்த விட­ய­மாகும். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு சாத்­தி­ய­மா­குமா என்ற கேள்­விக்கு இப்­போது உறு­தி­யான பதில் எத­னையும் கூற­மு­டி­யா­தி­ருக்­கின்­றது.

ஏற்­க­னவே நடை­மு­றையிலிருந்த விகி­தா­சார தேர்தல் முறை­யை மாற்­றி­ய­மைத்து உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கலப்பு முறை­யை அர­சாங்கம் அறி­முகம் செய்­தது. தொகு­தி­வாரி முறை மற்றும் விகி­தா­சார முறை என்­ப­வற்றின் கல­வை­யாக புதிய தேர்தல் முறை அமைந்­தி­ருந்­தது. இத­ன்­அடிப்­ப­டையில் 60 சத­வீதம் தொகு­தி­வாரி முறை­யை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் 40 சத­வீதம் விகி­தா­சார முறை­யை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் கலப்பு தேர்தல் முறை அமைந்­தி­ருந்­தது.

பெண்­களின் அர­சியல் பங்­கேற்பு என்­பது ஆணா­திக்க கருத்­தி­யலை கொண்­ட­வர்­க­ளினால் சாத்­தி­யப்­ப­டாதிருந்த நிலையில் பெண்­க­ளுக்­கான 25 சத­வீத இட­ஒ­துக்­கீட்­டிற்கு கலப்பு தேர்­தல்­முறை களம் அமைத்துக் கொடுத்­தி­ருந்­தது. இந்­நி­லையில் பெண்­ணி­லை­வா­திகள் மற்றும் அமைப்­புக்கள் என்­பன இதனை பெரிதும் வர­வேற்றுப் பேசியிருந்­தன. அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நீண்­டநாள் மேற்­கொண்ட முயற்­சியின் பலன் இது­வா­கு­மென்றும் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன. கலப்பு தேர்தல் முறையை ­ கட்­சிகள் பலவும் வர­வேற்றுப் பேசியிருந்­தன.

இந்­நி­லையில் கலப்புத் தேர்தல் முறை­யினை காட்­டிலும் கடந்­த­கால விகி­தா­சார தேர்தல் முறையே சிறந்­த­தா­கு­மென்று சிறு­பான்மை கட்­சிகள் சில ஓங்கிக் குரல் கொடுத்­தி­ருந்­தன. விகி­தா­சார முறையே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சாத­க­மா­னது என்­கிற கருத்தும் சிறு­பான்மை கட்­சி­க­ளி­டையே நில­வி­யதும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

கலப்பு தேர்தல் முறை­யின்கீழ் இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இதன் அடிப்­ப­டையில் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன 239 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கைப்­பற்றிக் கொண்­டது. ஐக்­கிய தேசிய கட்சி 42, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு 38 என்று உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. மக்கள் விடு­தலை முன்­னணி இத்­தேர்­தலில் 431 உறுப்­பி­னர்­களை தன­தாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. 2011 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுடன் ஒப்­பி­டு­கையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உறுப்­பினர் தொகை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக உள்­ளது. இத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரிய பின்­ன­டை­வை சந்­தித்­தி­ருக்­கின்­றது. இந்­நி­லையில் ஒருசில கட்­சிகள் தமது தேர்தல் பின்­ன­டை­விற்கு கலப்பு தேர்தல் முறையை­ காரணம் காட்டி கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

 

தேர்தல் பின்­ன­டைவு

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் சில கட்­சி­களின் வாக்­கு­வீ­தமும் பெற்­றுக்­கொண்ட பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கையும் மிகவும் குறை­வாக உள்­ளது. பிர­தான கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாக்­குகள் குறை­வ­டைந்­துள்­ளன. சுமார் 15 வீத வாக்­கு­க­ளையே இக்­கட்சி பெற்­றுள்­ள­மையும் தெரிந்த விட­ய­மாகும். புதிய தேர்தல் முறை­யினால் தமது கட்­சிக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருப்­பதை ­ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். புதிய தேர்தல் முறை­யினால் தொடர்ந்து வெற்றி பெற்­று­வந்த இடங்­களில் தமது கட்சி தோல்­வியை சந்­தித்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி அண்­மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமு ட­னான சந்­திப்பு ஒன்­றின்­போது வலி­யு­றுத்தி இருந்தார். இதே­வேளை புதிய தேர்தல் முறை தொட­ரு­மானால் ஏற்­படும் சிக்­கல்­க­ளையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் விளக்கிக் கூறியிருந்தார். ஜனா­தி­ப­தியும் இதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தோடு தேர்தல் சட்­டத்தில் புதிய திருத்­தங்­களை கொண்­டு­வர வேண்டும் என்று கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, கூட்டு எதிர்க்­கட்சி என்­ப­னவும் இது குறித்து தமது அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருக்­கின்­றன. எதிர்­வரும் தேர்­தல்­களை புதிய தேர்தல் முறையில் நடத்­து­மி­டத்து ஏற்­படும் குழப்­ப­நிலை குறித்தும் இக்­கட்­சிகள் எடுத்­துக்­கூறியிருக்­கின்­றன. கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கருத்து தெரி­விக்­கையில்; "புதிய தேர்தல் முறை­மையில் பல்­வேறு குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே இது தொடர்பில் பாரா­ளு­மன்றக் கூட்­டத்­திலும் ஆராய்ந்­துள்ளோம்.

இதன்­படி உரிய திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது" என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதே­வேளை புதிய தேர்தல் முறையில் காணப்­படும் குறை­பா­டு­களை உடன் நிவர்த்தி செய்ய வேண்­டி­யதன் அவ­சி­யத்தை கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் வலி­யு­றுத்தியிருக்­கின்றார்.

ஜாதிக ஹெல உறு­ம­யவும் புதிய தேர்தல் முறை குறித்த தனது அதி­ருப்­தி­யை வெளி­யிட்­டி­ருக்­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாகவுள்­ளது. புதி­ய­முறை குறை­பா­டுகள் நிவர்த்தி செய்­யப்­ப­ட­வேண்டும். இல்­லையேல் பழைய முறையிலேயே தேர்­தல்­களை இனி­வரும் காலங்­களில் நடத்­த­வேண்டும் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சாளர் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கி­டையில் புதிய தேர்தல் முறையிலுள்ள குறை­பா­டு­களை ஆராயும் நோக்கில் சபா­நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரிய, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோ­ருக்கிடை­யி­லான சந்­திப்பு ஒன்று கடந்த 19ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. பல்­வேறு விட­யங்கள் குறித்தும் இதில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இச் சந்­திப்பில் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் கலந்து கொண்­டி­ருந்தார்.

 

மஹிந்த தேசப்­பி­ரிய

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் புதிய முறை­யா­னது பல்­வேறு குழப்ப சூழ்­நி­லை­க­ளுக்கும் வித்­திட்­டி­ருப்­ப­தை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவும் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெண் பிர­தி­நி­தித்­துவ தெரி­வு­களில் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. பெண்­க­ளுக்­கென்று 25 சத­வீத ஒதுக்­கீடு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள போதிலும் அவற்றை நிய­மிப்­பதில் சிக்­கல்கள் தலை­தூக்­கி­யுள்­ளன. சில மன்­றங்­களில் ஒரு பெண் பிர­தி­நி­தியை மாத்­திரம் நிய­மிக்கும் நிலை­மை­களும் காணப்­ப­டு­கின்­றன.

இதே­வேளை ஆசன ஒதுக்­கீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­போதும் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆகவே இப்­போது உள்ள தேர்தல் சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்டு வர­வேண்டியிருக்­கின்­றது. 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­காத நிலை­யிலும் மன்­றங்­களை நடத்திச் செல்ல முடியும் போன்ற திருத்­தங்­களை கொண்­டு­வ­ர­வேண்டும். அவ்­வா­றான நிலையில் முரண்­பா­டுகள் இல்­லாது செயற்­ப­டுத்த முடியும்.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் முடி­வுகள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அல்ல. ஜனா­தி­பதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்று உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் பெரும்­பான்மை விருப்பு என்ற நிலைப்­பாட்­டை எட்­ட­மு­டி­யாது என்றும் மஹிந்த தேசப்­பி­ரிய மேலும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இத­ன­டிப்­ப­டையில் புதிய தேர்தல் முறை­யா­னது பல­ரி­னதும் விமர்­ச­னத்­திற்குள்­ளாகி இருப்­பதை அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

 

மாகாண சபைத் தேர்தல்

புதிய தேர்தல் முறை எதிர்­பார்த்த சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. குள­று­ப­டிகள் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் எதிர்­வரும் மாகாண சபைத் தேர்­தலை பழைய முறைப்­படி நடத்த வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­வ­தை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் எண்­ணமும் இது­வா­கவே இருப்­பதையும் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. மாகா­ண­சபைத் தேர்­தலில் தேர்தல் சட்­டத்தில் புதிய திருத்­தங்­களை மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கையும் இடம்­பெற உள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. புதிய முறையின் கீழ் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தாது பழைய முறை­யின்­படி நடத்­த­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை ஐ.தே.க, ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்த எண்ணம் கொண்­டுள்­ளது. அண்­மையில் அல­ரி­மா­ளி­கையில் ரணில் விக்கர­ம­சிங்க மற்றும் ஐ.தே.க.வின் அமைச்­சர்­க­ளுக்­கி­டையில் இவ்­வி­டயம் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ள­தா­கவும் செய்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன.

புதிய முறை­யின்­படி மாகா­ண­ச­பைகள் அமைக்­கப்­பட்டால் அது பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதால் பழைய முறை­யின்­படி நடத்­து­மாறு சிறு­பான்மை கட்சித் தலை­வர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கோர வேண்­டு­மென்றும் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை உரி­ய­வாறு மேற்­கொள்­வ­தற்கும் விசே­ட­குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. சிறு­பான்மை கட்­சி­க­ளி­டை­யேயும் புதிய தேர்தல் முறை குறித்து அதி­ருப்தி நில­வு­வதை காண­மு­டி­கின்­றது. இலங்கை தொழி­லாளர் காங்­கிர­ஸின் முன்னாள் தலை­வரும் சிறிய ஆரம்ப கைத்­தொழில் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான முத்து சிவ­லிங்கம் புதிய தேர்தல் முறை குறித்த தனது அதி­ருப்­தி­யை தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்றார். இதே­வேளை விகி­தா­சார தேர்தல் முறையே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மிகவும் சாத­க­மா­னது என்றும் இவர் தெரி­வித்­தி­ருக்­கின்­ற­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாகும்.

இதே­வேளை தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் ஒரு மாறு­பட்ட கண்­ணோட்­டத்தில் புதிய தேர்தல் முறை­யை நோக்­கு­கின்றார். கலப்பு தேர்தல் முறை இப்­போது பரீட்­சார்த்­த­ ­நிலையில் உள்­ளது. நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு இத்­தேர்தல் முறையை உட­ன­டி­யாக தூக்கியெறிந்­து­வி­ட ­மு­டி­யாது என்று கூறும் லோரன்ஸ் கலப்பு தேர்தல் முறை­மூலம் சிறு­பான்மை பிர­தி­நி­திகள் அதி­க­மா­ன­வர்கள் தெரி­வாகியிருக்­கின்­றனர்.

மலை­ய­கத்­திலும் இந்­நி­லை­மையை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. சுயேச்சைக் குழுக்­கள்­கூட சில இடங்­களில் வெற்­றியை தக்­க­வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஐம்­ப­துக்கு ஐம்­பது வேண்டும் என்றும் விருப்­பத்­தெ­ரிவு முறை­யை நீக்­க­வேண்­டு­மென்றும் ஜேர்­ம­னிய தேர்­தல்­முறை வேண்­டு­மென்றும் கட்­சிகள் நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றன. இத­னா­லேயே கலப்­பு­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­தவும் நேர்ந்­தது. கலப்பு முறையின் கீழ் உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கி­யுள்ள நிலையில் புதிய தேர்தல் முறை பிழை­யென்று கைகளை உயர்த்­தக்­கூ­டாது. அது முறையும் இல்லை. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சிறு­பான்மை சமூ­கத்­தினர் பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கைப்­பற்றும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும். கலப்புத் தேர்தல் முறையே இதற்கு வழி­யமைத்­தது என்­ப­தை மறந்­து­வி­ட­லா­காது.

இத் தேர்தல் முறைக்கு மக்கள் பழக்­கப்­ப­ட­வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி இரண்­டாக உடைந்­துள்ள இந்த விசேட நிலையில், புதிய தேர்தல் முறை தொடர்பில் எடுத்த எடுப்பில் கருத்­துக்­களை கூற முடி­யாது என்றார் லோரன்ஸ்.

 

விசேட ஏற்­பா­டுகள்

சிறு­பான்மை சமூ­கத்­தினர் இந்த நாட்டில் பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம் கொடுக்க வேண்­டிய ஒரு நிலைமை மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. உரி­மைகள் பல சந்­தர்ப்­பங்­களில் கேட்டும் அவர்­க­ளுக்கு கிடைப்­ப­தில்லை. அர­சியல், சமூகம், பொரு­ளா­தாரம், தொழில்­வாய்ப்பு என்ற ரீதியில் சிறு­பான்­மை­யி­னரை ஓரம்­கட்டும் நட­வ­டிக்­கை­களே இன்­னு­மின்னும் தொடர்ந்தவண்­ண­ம் உள்­ளன. இந்­நி­லையில் அது தேர்தல் முறை­யா­யினும் சரி அல்­லது வேறு எந்த ஒரு விட­ய­மாக இருந்­தாலும் சரி சிறு­பான்­மை­யி­னரின் நலன் கருதி விசேட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­ப­தை திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் வலியுறுத்தியிருக்கின்றார். கனடா, பெல்ஜியம், இந்தியா போன்ற நாடுகளிலுள்ள விசேட ஏற்பாடுகள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுக் கூறுகின்றார்.

சிறுபான்மையினரின் அரசியல் எழுச்சி உள்ளிட்ட பல மேலெழும்புகைகளை பெரும்பான்மை இனவாத சக்திகள் விரும்புவதில்லை. பெரும்பான்மை கட்சிகள் கூட சிறுபான்மையினரை மட்டம் தட்டுவதற்கே எண்ணம் கொண்டுள்ளன. சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்குவது நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமையும் என்று சிலர் கருதுகின்றனர்.

பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்க மறுப்பதன் காரணமாகவே சிறுபான்மை கட்சிகளும் அமைப்புக்களும் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு உதயமாகின. உதாரணமாக மலையகத்தை பொறுத்தவரையில் சம்பள உயர்வு, தொழில் வாய்ப்பு, வீட்டு வசதி என்று பலவற்றுக்கும் குரல் கொடுக்கவேண்டிய ஒரு தேவை மேலெழுந்திருக்கின்றது. சிறுபான்மை மக்களின் தீர்மானங்களை நிறைவேற்றுவது இனவாத கண்ணோட்டத்துடனேயே நோக்கப்படுகின்றது. சிறுபான்மை மக்கள் சார்பாக தேசியத் திட்டங்கள் முன்வைக்கப்படுவதில்லை. தேசியத் திட்டங்கள் கிராமப்புற மக்களை பெரும்பான்மையினரை திருப்திப்படுத்துவதாகவே உள்ளன.

சிறுபான்மையினரின் நலன்கருதிய திட்டங்கள் விஸ்தரிக்கப்படவேண்டும். கலப்பு தேர்தல் முறைபற்றி இன்னும் ஆழமாக ஆராய வேண்டியிருக்கின்றது. தொடர்ச்சியான மதிப்பீடுகளும் அவதானிப்புகளும் கலப்பு தேர்தல் முறையின் விளைவுகளை தெரிந்துகொள்ள உதவும்.

 

கசப்பான வரலாறு

விகிதாசார தேர்தல் முறை இந்த நாட்டின் கறைபடிந்த அத்தியாயங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. கசப்பான வரலாறுகளை உண்டுபண்ணியிருக்கின்றது. இதற்கு மாறுதல் தேவை என்ற நிலையில் கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறை புதிய சிக்கல்களை உண்டுபண்டுவதாக அமைதல் கூடாது.

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதைக்கு ஒப்பாக நிலைமைகள் அமைந்துவிடக்கூடாது. கலப்பு தேர்தல் முறை தொடர்பில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் அதன் குறைபாடுகள் களையப்படவேண்டும். சிறுபான்மை கட்சிகள் கலப்பு தேர்தல் முறையை தமக்கு சாதகமாக்க முனைதல் வேண்டும். சமூக அபிவிருத்தியில் அரசியல் பிரதிநிதித்துவம் அவசியமானது. இதனை உறுதிப்படுத்திக்கொள்ள தேர்தல் முறையில் உரிய கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-24#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.