Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் முகாமிடவுள்ள மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர் : பல்தரப்பு பிரசாரங்கள், பலமுனைப் போட்டி

Featured Replies

ஜெனிவாவில் முகாமிடவுள்ள மக்கள் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோர் : பல்தரப்பு பிரசாரங்கள், பலமுனைப் போட்டி

04-b42e58de6400504f6442f87a156dc90a22fbe0fd.jpg

 

(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்க ளின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை பொது அமைப்புக் களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும்  கலந்துகொண்டு உப நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.   

தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் , மக்கள் பிரதிதிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பல்வேறு தரப்பினர் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர்.   

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட ஐந்துபேரைக் கொண்ட குழு ஜெனிவா நோக்கி செல்லவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பனர் சிறிதரன் இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே இம்முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பாக எடுத்துரைப்பாகவும் கூறியுள்ளார். அத்துடன் ஜெனிவா வளாகத்தில் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் இம்முறை ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளனர். குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் இம்முறை ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறவுள்ளனர்.

இதேவேளை வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரனும் வழமைபோன்று இம்முறையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு காணாமல் போன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த இருக்கின்றார்.

 பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் , அரச சார்பற்ற மக்கள் பிரதிநிதிகள் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதுடன் சர்வதேச ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்,.

இது இவ்வாறிருக்க தென்னிலங்கையின் ""எலிய"" அமைப்பின் பிரதிநிதியான முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பிரசாரம் செய்யவிருக்கிறார். அதாவது இலங்கை அராங்கம் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் செயிட் அல் ஹுசைன் கூறுகின்ற அனைத்தையும் அரசாங்கம் கேட்பதாகவும் அவர் ஜெனிவாவில் எடுத்துக்கூறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அரசாங்கத் தரப்பு தாம் எவ்வாறு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது குறித்து ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதுடன் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபக்குழுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தவுள்ளது.

இதற்காக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு ஜெனிவா செல்லவுள்ளது. அதேபோன்று வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கூட்டங்களில் உரையாற்றவுள்ளனர்.

அதேபோன்று சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக பல்வேறு விடயங்களை வலியுறுத்தவுள்ளது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இலங்கை தொடர்பாக உரைகளை நிகழ்த்தவுள்ளனர். குறிப்பாக இலங்கையான 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தவேண்டுமென்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டுமென்றும் சர்வதேச சமூகம் வலியுறுத்தவுள்ளது.

மார்ச் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதேபோன்று மார்ச் 21ஆம் திகதி ஜெனிவாப் பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதமும் நடைபெறவுள்ளது. அதேபோன்று 14 க்கும் மேற்பட்ட உபகுழுக்கூட்டங்களும் ஜெனிவா வளாகத்தில் இம்முறை கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளன.

 இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.

அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.