Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் அழுத்தம் பிர­யோ­கிக்கும்

Featured Replies

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் அழுத்தம் பிர­யோ­கிக்கும்

 

 

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர்  ஜெனி­வாவில்  நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் எதிர்­வரும்   21 ஆம் திகதி இலங்கை  மனித உரிமை நிலை­வரம் குறித்த விவாதம்  நடை­பெ­ற­வுள்­ளது. 

கடந்த  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட  இலங்கை குறித்த பிரே­ரணை எவ்­வாறு    இலங்கை அர­சாங்­கத்­தினால்  அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்தே   இந்த விவாதம் நடத்­தப்­ப­டு­கின்­றது. 

இதில் முதலில் ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்­கையை வெ ளியிட்டு உரை­யாற்­றுவார். அல் ஹுசேன் ஏற்­க­னவே இலங்கை தொடர்பில்  வெளியிட்­டுள்ள அறிக்­கையை மேற்­கோள்­காட்­டியே     ஹுசேன் கருத்து வெளியி­ட­வுள்ளார்.  

அதனைத் தொடர்ந்து இலங்­கையின் சார்பில் தூதுக்­கு­ழுவின் தலைவர் உரை­யாற்­றுவார். பெரும்­பாலும் வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இந்த விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அதன் பின்னர்   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­களின்  பிர­தி­நி­திகள் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளினால் எழுப்­பப்­ப­டு­கின்ற கேள்­வி­க­ளுக்கு   இலங்­கையின் சார்பில் பதி­ல­ளிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இம்­முறை  கூட்டத் தொடரில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில்  மக்கள் பிர­தி­நி­திகள்  கலந்­து­கொண்டு  உரை­யாற்­ற­வுள்­ளனர். குறிப்­பாக  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி மற்றும்  பல்­வேறு அர­சியல் கட்­சி­களின் மக்கள் பிர­தி­நி­திகள்  ஜெனி­வாவில் முகா­மிட்டு  பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை தொடர்பில்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.

விசே­ட­மாக ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள   14 க்கும் மேற்­பட்ட  விசேட உபக்­கு­ழுக்­கூட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். 

 அதே­போன்று தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து  இரா­ணு­வத்தை பாது­காக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள்   ஜெனி­வாவில் முகா­மிட்டு    பிர­சா­ரங்­களை செய்­ய­வுள்­ளனர்.  

இது இவ்­வாறு இருக்க சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும்  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பாக ஜெனிவா வளா­கத்தில் இம்­மு­றையும் பல்­வேறு  உபக்­கு­ழுக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.  தென்­னிந்­தி­யாவின் பசுமை தாயகம்  உள்­ளிட்ட சில அமைப்­புக்­களும் இலங்கை  தொடர்பில் உப­குழுக் கூட்­டங்­களை  நடத்­த­வுள்­ளன. 

இந்த உபக்­கு­ழுக்­கூட்­டங்­களில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள்,  சர்­வ­தேச சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் மற்றும்  புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்­கள்   ஆகியோர் கலந்து கொண்டு   உரை­யாற்­ற­வுள்­ளனர்.   

 இது இவ்­வாறு இருக்க  வெளி­வி­வ­கார அமைச்சர்  தலை­மையில் அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும்  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளனர். பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமான 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. 

இலங்கை  அர­சாங்கம்  சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும்  அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. 

அந்தப் பிரே­ர­ணை­யா­னது கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்­பிக்­கப்­பட்டு  இலங்­கைக்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதன்­படி  எதிர்­வரும்  2019ஆம் ஆண்டு வரை   இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.   

இதே­வேளை இலங்கை குறித்த அறிக்­கையை வெ ளியிட்­டி­ருந்த  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன் இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் செயற்­பாட்டில்  சர்­வ­தேச  நியா­யா­திக்­கத்தை  பயன்­ப­டுத்­து­வது தொடர்பில்  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் ஆரா­ய­வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்ளார். 

அத்­துடன் இலங்­கையின்  பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில்  ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேரவை  முன்­னெ­டுத்து வரு­கின்ற வகி­பாகம்  மீண்டும்   தொட­ர­வேண்டும்.   2017 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் செயற்­பாடு கடந்த ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக   தேங்­கிக்­கி­டக்­கின்­றது என்றும்  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன்  தெரிவித்திருக்கின்றார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய  பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு  அரசியல் ஒத்துழைப்பு கிடைக்காத நிலைமை இலங்கையில் காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் என்பன முன்னெடுக்கப் படாமையே காணப்படுகின்றன என்றும் செயிட் அல் ஹுசைன் குறிப்பிட்டிருக்கின் றார்.

http://www.virakesari.lk/article/31166

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.