Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்­திய வெளி­யு­ற­வுக்­கொள்கை தொடர்­பான சி.வி.யின் கோரிக்கை

Featured Replies

இந்­திய வெளி­யு­ற­வுக்­கொள்கை தொடர்­பான சி.வி.யின் கோரிக்கை

 

அண்மைக் கால­மாக இலங்கை சம்­பந்­த­மான இந்­திய வெளி­யு­றவுக் கொள்கை வெறும் பொரு­ளா­தார வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தி­லேயே கவனம் செலுத்­தி­யது. இனி­யா­வது ஒரு வலி­மை­யான அர­சியல் ரீதி­யான நெருக்­கு­தலை மத்­திய அர­சாங்­கத்­துக்கு கொடுத்து இந்த நாட்டில் இணைப்­பாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா வழி அமைக்­க­வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டம் கூட இந்­தி­யாவின் அறி­வு­ரைக்­கேற்ப தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. 1992ஆம் ஆண்டு அதில் தரப்­பட்ட சொற்ப அதி­கா­ரங்­களும் மத்­திய அர­சாங்­கத்­தினால் தட்­டிப்­ப­றித்து எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இனி­யா­வது ஒரு விறு­வி­றுப்­பான வெளி­யு­றவுக் கொள்­கையை இந்­தியா கடைப்­பி­டிக்க வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்­கைக்­கான இந்­தி­யாவின் துணைத் தூதுவர் ஏ. நட­ராஜன் இலங்­கையில் தனது சேவை­யினை முடித்­துக்­கொண்டு புது­டில்­லிக்கு மீண்டும் கட­மைக்குச் செல்­ல­வுள்ளார். இவ­ரது பிரி­யா­விடை வைபவம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்­றி­ருந்­தது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் இந்தக் கோரிக்­கையை பகி­ரங்­க­மாக விடுத்­துள்ளார்.

எம்மை விட்டுப் பிரிந்­து­செல்­ல­வி­ருக்கும் நட­ராஜன் இந்­தி­யாவில் புது­டில்­லி­யில் பணி­பு­ரிந்­தாலும் எமது பிரச்­சினை தொடர்­பாக கூடிய கவ­ன­மெ­டுத்து சம­ரசத் தீர்வு ஏற்­ப­டு­வ­தற்கு வழி­ச­மைக்க வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இலங்­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ற விடயம் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரும் நிலையில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இந்­தி­யா­ வானது தனது வெளி­ய­றவுக் கொள்­கை­யினை மாற்றி இலங்­கையின் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்று கோரிக்கை விடுத்­துள்­ளமை முக்­கி­ய­மான விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

ஏனெனில் தமிழ் மக்கள் கடந்த 6 தசாப்­தங்­க­ளுக்கு மேலாக தமது உரி­மை­களைப் பெறு­வ­தற்­காக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். தமிழ் மித­வாதத் தலை­வர்கள் 3 தசாப்த காலத்­துக்கு மேலாக அகிம்சா வழியில் உரிமை கோரி போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். தந்தை செல்­வ­நா­யகம் மாறி­மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்தி ஒப்­பந்­தங்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தார். பண்டா – செல்வா ஒப்­பந்தம், டட்லி – செல்வா ஒப்­பந்தம் என்­பன மேற்­கொள்­ளப்­பட்டு அவையும் நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் குப்­பையில் போடப்­பட்­டன.

3 தசாப்­த­கால தொடர்ச்­சி­யான அகிம்­சா­வழிப் போராட்டம் ஆட்­சி­யாளர்­களால் கணக்­கி­லெ­டுக்­கப்­ப­டாத நிலையில் தனி ஈழத்­துக்­கான வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வேண்­டிய சூழ்­நிலை அன்று மித­வாதத் தமிழ் தலை­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. தமி­ழர்­களின் உரி­மை­களைப் பெறு­வ­தற்கு அகிம்­சா­வழிப் போராட்­டங்கள் பய­ன­ளிக்­கா­த­தை­ய­டுத்து தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமை உரு­வா­னது.

ஆயு­தப்­போ­ராட்­ட­மா­னது 3 தசாப்­தங்கள் நீடித்­தது. நாட்டில் பேர­ழி­வு­களும் இந்தப் போராட்­டத்தால் ஏற்­பட்­டி­ருந்­தன. இலட்­சக்­க­ணக்­கான தமிழ் மக்கள் பலி­யாகும் நிலை­மையும் உரு­வா­கி­யி­ருந்­தது. 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆயு­தப்­போ­ராட்­டத்­தி­னாலும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்­தி­செய்­யக்­கூ­டிய தீர்வை பெற­மு­டி­யாது போனது.

தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்­டத்­துக்கு அன்று இந்­தி­யா­வா­னது பேரு­தவி புரிந்­தது. தமி­ழ­கத்தில் தமிழ் போராளி குழுக்­க­ளுக்கு பயிற்­சிகள் அளிக்­கப்­பட்­ட­துடன் நிதி உத­வியும் ஆயுத உத­வி­களும் வழங்­கப்­பட்­டன. இந்­தி­யாவின் பிர­த­ம­ராக இந்­தி­ரா ­காந்தி பத­வி­வ­கித்­த­போது ஈழத்­தமிழ் மக்­களின் போராட்­டத்­துக்கு இந்­தியா ஒத்­து­ழைப்­பாக செயற்­பட்­டது. பல்­வேறு வகை­யிலும் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு இந்­திய மத்­திய அர­சாங்கம் உதவி வந்­தது.

பல்­வேறு இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் வடக்கு, கிழக்கில் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது, தமிழ் மக்கள் அழி­வு­களை சந்­தித்­த­போது இந்­தியா குரல்­கொ­டுத்­தது. வட­ம­ராட்­சியில் இரா­ணு­வத்­தி­னரால் ஒப்­ப­ரேஷன் லிப­ரேஷன் தாக்­குதல் பெரும் எடுப்பில் மேற்கொள்­ளப்­பட்­ட­போது அந்தத் தாக்­கு­தலை நிறுத்­து­மாறு இந்­தியா வலி­யு­றுத்­தி­யது. இலங்கை அர­சாங்­க­மா­னது இந்­தி­யாவின் கோரிக்­கையை ஏற்­கா­த­தை­ய­டுத்து இந்­திய விமா­னங்கள் வடக்கில் யாழ். வான் பரப்பில் பறந்து நிவா­ரணப் பொதி­களை போட்­டன. இவ்­வாறு இலங்­கைக்கு இந்­தியா எச்­ச­ரிக்­கையும் அன்று விடுத்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்தே 1987ஆம் ஆண்டு இலங்கை இந்­திய – ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக மாகாண சபை முறைமை அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இவ்­வாறு இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தியா பெரும் பங்­காற்­றி­யது.

ஈழத்­த­மி­ழர்கள் விவ­கா­ரத்தில் ஒதுக்­க­மு­டி­யாத பாத்­தி­ரத்தை இந்­தியா வகித்து வந்­தது. இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தியா பல்­வேறு வகி­பா­கங்­களை வகித்­த­போ­திலும் தற்­போது அந்த நிலைமை மாறி­யி­ருக்­கின்­றது. முன்னாள் இந்­தியப் பிர­தமர் ரஜீவ்­காந்­தியின் படு­கொ­லைக்குப் பின்னர் இந்­தி­யாவின் வெளி­யு­றவுக் கொள்கை இலங்கை விவ­கா­ரத்தில் மாற்­றத்தைக் கண்­டது.

இறுதி யுத்­தத்­தின்­போது அன்­றைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­துக்கு இந்­திய மத்­திய அர­சாங்­க­மா­னது பல்­வேறு உத­வி­க­ளையும் வழங்­கி­யுள்­ளது. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு இந்­தி­யாவின் உத­வியே கார­ண­மென்று அன்­றைய அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, அன்­றைய பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உட்­பட பலரும் பகி­ரங்­க­மா­கவே கருத்­து­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­தி­யா­வுடன் மிக நெருங்­கிய உறவை தாம் கொண்­டி­ருந்­த­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்­த­துடன் இந்­தி­யா­வுக்கு நன்­றி­யையும் அவர் அப்­போது தெரி­வித்­தி­ருந்தார். இறுதி யுத்­தத்­தின்­போது தமிழ் மக்கள் பேர­ழி­வு­களைச் சந்­தித்திருந்­தனர். இவ்­வாறு பேர­ழிவு இடம்­பெற்­ற­போது தமி­ழ­கத்தில் யுத்­தத்தை நிறுத்­து­மாறு கோரி பெரும் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. பலர் தீக்­கு­ளித்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டனர். ஆனாலும் இந்­திய மத்­திய அர­சாங்­க­மா­னது யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும் என்ற முடிவில் உறு­தி­யாக இருந்­த­தா­கவே அப்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தற்கு உத­விய இந்­திய மத்­திய அர­சா­னது அந்த யுத்­தத்­துக்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­கான அழுத்­தங்­களை இலங்கை அர­சாங்­கத்­துக்கு வழங்­க­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். இத­னைத்தான் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தற்­போது வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்தார். புது­டில்லி சென்­றி­ருந்த அவர் அன்­றைய இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்­சிங்கை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது 13ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் சென்று பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் அன்­றைய ஆட்­சிக்­கா­லத்தில் அந்த உறு­தி­மொ­ழி­கூட நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறை­மையை உள்­ள­டக்­கிய தீர்­வையே தமிழ்­மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழ் இணைக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இன்று தனித்­த­னி­யாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விடயம் தொடர்­பிலும் இந்­தியா மௌனம் காத்து வரு­கின்­றது.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து யுத்­தத்­துக்கு உத­விய இந்­தியா தீர்­வுக்­கான வலி­யு­றுத்­தல்­களை உரி­ய­வ­கையில் முன்­னெ­டுக்­க­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்சுக்­களை நடத்தி உரிய தீர்­வினைக் கண்­டி­ருக்­க­மு­டியும். யுத்த வெற்றிக் கொண்­டாட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்த அன்­றைய அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினை வழங்­கி­யி­ருந்தால் அன்­றைய சூழ்­நி­லையில் சிங்­கள மக்கள் அதனை ஒரு­போதும் எதிர்த்­தி­ருக்­க­மாட்­டார்கள். ஆனால் அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா முன்­னைய அர­சாங்­கத்­துக்கு வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­மாறு மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துக்கு இந்­தியா உரிய வகையில் அழுத்தம் கொடுத்­தி­ருந்தால் பேச்­சுக்கள் நடை­பெற்­றி­ருக்கும். ஆனால் அத்தகைய அழுத்தம் இன்மையினாலேயே கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்களை இடைநடுவில் அன்றைய அரசாங்கம் முறித்துக்கொண்டிருந்தது.

தற்போது நாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த நல்லாட்சி இடம்பெற்று வருகின்றது. 2015ஆம் ஆண்டு அரசாங்கம் பதவியேற்றவுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் உடன் அக்கறை காண்பித்திருந்தால் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டிருக்கலாம். ஆனால் இந்த விடயத்திலும் இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் தற்போது அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சி சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

எனவே இனியும் இழுத்தடிப்புகளை மேற்கொள்ளாது அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை எடுக்கவேண்டியது அவசியமாகவுள்ளது. இதற்கு இந்தியாவானது தனது வெளியுறவுக்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க உதவ வேண்டும். வடமாகாண முதலமைச்சரின் கோரிக்கையை கருத்தில்கொண்டு இந்திய மத்திய அரசாங்கம் செயற்பட்டால் அதனை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-02#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.