Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டம் (காணொளி)

Featured Replies

 

 

தினேஷ் கார்த்திக்கின் சாகச துடுப்பாட்டம் (காணொளி)

  • தொடங்கியவர்

’பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி’ - இணையத்தை அதிர வைக்கும் கிரிக்கெட் மீம்கள்

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்ற நிலையில், வங்கதேச அணியை கேலி செய்யும் மீம்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள் பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள்

பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - வைரலாகும் கிரிக்கெட் மீம்கள்

 

 

பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - இணையத்தை அதிர வைக்கும் கிரிக்கெட் மீம்கள்

 

பாம்புகளுக்கு பாலூட்டிய இந்திய அணி - இணையத்தை அதிர வைக்கும் கிரிக்கெட் மீம்கள்

 

http://www.bbc.com/tamil/india-43454554

  • தொடங்கியவர்

எட்டு பந்தில் 29 ரன்கள்... கடைசி பந்தில் ஃபிளாட் சிக்ஸர்... டிகே யூ பியூட்டி! #INDvBAN

 

விஜய் சங்கருக்கு நேற்றிரவு தூக்கமே வந்திருக்காது. ட்விட்டர் நோட்டிஃபிகேஷன் முழுவதும் கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிந்திருக்கும். விஜய் ஹஸாரே டிராபிக்கும், நிடாஹஸ் டிராபிக்கும் இடையிலான வித்தியாசம் புரிந்திருக்கும். அனுபவத்துக்கும் இளமைக்குமான இடைவெளி விளங்கியிருக்கும். பதற்றம் எப்படியெல்லாம் படுத்தி எடுக்கும் என்பது தெரிந்திருக்கும். முஸ்டஃபிசுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரின் அந்த ஐந்து பந்துகள் திரும்பத் திரும்ப மனத்திரையில் வந்து போயிருக்கும். #INDvBAN

Dinesh Karthik  #INDvBAN

 

`பேக் ஆஃப் எ லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த முதல் பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனபோதே சுதாரித்திருக்க வேண்டும். குட் லென்த்தில் அதே திசையில் வந்த அடுத்த பந்தை கவர் திசையில் ஒரு Punch அடிக்க நினைத்ததை, முஸ்டஃபிசுர் ஆஃப் கட்டரால் வெல்வார் என நினைத்துப் பார்க்கவேயில்லை. வெற்றிக்கு 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற சூழலில் பதற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் பதற்றத்தை எதிர் முனையில் இருந்த மணீஷ் பாண்டே தலையில் திணித்திருக்கலாம். இப்போது நினைத்து பிரயோஜனமில்லை. 

மூன்றாவது பந்தை அம்பயர் வைடு கொடுத்திருந்தால், கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்திருக்கும். நான்காவது பந்தையும் அதே லைனில், அதே லென்த்தில் வீசுவார் என எதிர்பார்க்கவில்லை. முஸ்டஃபிசுர்  அற்புதமான பெளலர். அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. ச்சே... முக்கியமான கட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ரன் எடுக்கவில்லை என்பதை விட, பந்தை பேட்டால் தொடவே இல்லை.  இதற்கு மணீஷ் பாண்டே போல தூக்கிக் கொடுத்து அவுட்டாகியிருக்கலாம். ஒருவேளை ஸ்டம்ப்பிலிருந்து ஆஃப் சைடு நகராமல் இருந்திருக்கலாம். நகர்ந்து நின்றதுதான் பிரச்னை. அதுமட்டுமா பிரச்னை?

Dinesh Karthik  #INDvBAN

முஸ்டஃபிசுர் என் மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். இந்த மாதிரி தருணத்தில் பெளலரின் மனதை நான் படித்திருக்க வேண்டும். ஒருவேளை தினேஷ் கார்த்திக் மட்டும் அடித்துக் கொடுக்கவில்லை எனில், தோற்றிருப்போம். மொத்த பழியும் நம் மீது விழுந்திருக்கும். இப்ப மட்டும் என்னவாம். இந்தக் கறை எளிதில் போகாது. இந்நேரம் லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு லாயக்கில்லை என முடிவு கட்டியிருப்பார்களோ?! வாஷி நிரூபித்துவிட்டான். டிகே அண்ணன் கம்பேக் கொடுத்துவிட்டார். நான்தான்...!’ - கேள்விகளும் பதில்களும் மாறிமாறி எழுந்து விஜய் சங்கரைக் குழப்பி எடுத்திருக்கும். இதிலிருந்து மீள அவருக்கு நாளாகும். 

ரொம்ப நாள் கழித்து தினேஷ் கார்த்திக் நேற்றிரவு நிம்மதியாகத் தூங்கியிருப்பார். மீடியா, சோசியல் மீடியா எங்கு திரும்பினாலும் அவர் புராணம்தான். எட்டு பந்துகளில் 29 ரன்கள்... கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி... வாட்டே இன்னிங்ஸ்... சச்சின் டெண்டுல்கரில் இருந்து சாமானிய கிரிக்கெட் ரசிகன் வரை அனைவரும் பாராட்டுகிறார்கள். வேறென்ன வேண்டும். இத்தனை ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு முன் அவருக்கு இப்படியொரு புகழ் கிடைத்ததில்லை. `எல்லாமே பெர்ஃபெக்ட் கிரிக்கெட் ஷாட்... அதிலும் கடைசியாக அடித்த அந்த ஃபிளாட் சிக்ஸர்.... இன்கிரிடிபிள்’ - என்கிறார் கவாஸ்கர். 

Dinesh Karthik  #INDvBAN

கவாஸ்கர் சொல்வதுபோல எல்லாமே பெர்ஃபெக்ட் ஷாட்கள். டிகே களமிறங்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை. அதற்கு முந்தைய ஓவரில்தான்  முஸ்டஃபிசுர் இந்த டோர்னமென்ட்டின் சிறந்த ஓவரை வீசிச் சென்றிருக்கிறார். 19-வது ஓவரை வீசும் ருபெல் ஹுசைனுக்கும் அந்தப் பெயரை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்பதில் தினேஷ் கார்த்திக் கவனமாக இருந்தார். இனி ஒவ்வொரு பந்தும் முக்கியம். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிக்க வேண்டும். முதல் பந்து புல் டாஸ். இதை விட வேற வாய்ப்பு கிடைக்காது. டிகே அதை அப்படியே லாங் ஆனில் சிக்ஸர் பறக்க விட்டார். நம்பிக்கை பிறந்தது. இந்தியாவுக்கும், அவருக்கும்... டென்ஷன் இப்போது வங்கதேசம் வசம். 

வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் வேகமாக ஓடி வந்து ருபெல் காதில் ஏதோ சொல்கிறார். ருபெல் தலையாட்டினாரே தவிர, பதற்றம் குறையவில்லை. இந்தப் பதற்றத்தில் அவரால் யார்க்கர் வீச முடியாது. டாட் பால் வீசமுடியாது. அல்ல, பந்து எந்த லென்த்தில் வந்தாலும், எந்த லைனில் வந்தாலும் அடிக்கலாம் என டிகே கான்ஃபிடன்ட்டாக இருக்கிறார். ஃபீல்டிங் மாற்றப்படுகிறது. லாங் ஆன், லாங் ஆஃப், டீப் மிட் விக்கெட் என எல்லா ஏரியாவிலும் கேட்ச் பிடிக்க ஆள் நிறுத்தியாகிவிட்டது. எங்கெங்கு ஆள் நிறுத்தினாலும் பேட்ஸ்மேன் அடிக்க ஆரம்பித்து விட்டால் எப்படியும் கேப் கிடைக்கும். ஆம், இரண்டாவது பந்தில் லாங் ஆனில் பவுண்டரி. கொழும்பு ஆர்ப்பரித்தது சென்னை சேப்பாக்கம் போல!

Dinesh Karthik  #INDvBAN

ஷகிப் அல் ஹசன் விக்கித்து நின்றார். அவரிடம் வார்த்தையில்லை. `அடுத்த பந்தை இப்படிப் போடு’ என சொல்லமுடியவில்லை. மூன்றாவது பந்து. குட் லென்த்தில் லெக் ஸ்டம்பை நோக்கி வருகிறது. Stand and deliver என்று சொல்வார்களே, அப்படி அடித்தார் டிகே. ஸ்கொய் லெக் பக்கம் சிக்ஸர். வெற்றி, வங்கதேசத்தின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து இந்திய டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் கதவைத் தட்டியது. அடுத்த பந்து டாட் பால். டி-20-க்கே உரிய டென்ஷன். ஆனால், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்த டிகே, கடைசி பந்தில் மண்டி போட்டு லாங் லெக் பக்கம் ஸ்கூப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். டிகே - டி வில்லியர்ஸாக மாறிய தருணம் அது. அந்த ஓவரில் 22 ரன்கள். ருபெல் வங்கதேச ரசிகர்களின் எதிரியானார். 

#INDvBAN NIDAHAS TROPHY

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. ஒரு வைட், முதல் பந்தில் ரன்னில்லை. இரண்டாவது பந்தில் விஜய் சங்கர் சிங்கிள், மூன்றாவது பந்தில் டிகே சிங்கிள், நான்காவது பந்தில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்துவிட்டு, அடுத்த பந்தில் அவுட்டாக, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை. சிக்ஸர் மட்டுமே ஒரே சாய்ஸ். 4 அடித்தால் மேட்ச் சூப்பர் ஓவருக்குப் போகும். செளமியா சர்க்கர் அந்தக் கடைசி பந்தை எப்படி போடப் போகிறார்... மீண்டும் டென்ஷன். ரிசல்ட் என்னவானாலும் நல்ல பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்தாகிவிட்டது என்பதால், தினேஷ் கார்த்திக்  நிதானமாகவே இருந்தார். கடைசி பந்து. அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைன். டிகே அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபிளாட்டாக சிக்ஸர் அடித்தார். பெர்ஃபெக்ட் ஷாட். இந்தியா வெற்றி. செளமியா சர்க்கார் தலைமேல் கைவைத்து பிட்ச்சிலேயே நிலைகுலைந்தார். இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் அநியாயத்துக்கு அலம்பல் செய்த சப்ஸ்டிட்யூட் பிளேயர் நுருல் தலைமேல் கைவைத்தார். வங்கதேச வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களால் நாகினி டான்ஸ் ஆட முடியவில்லை. அதை இப்போது இலங்கை ரசிகர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். ஆம், இலங்கை ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினர். இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக்கை உச்சி முகர்ந்தனர். 

சபீர் ரஹ்மானின் 77 ரன்கள், சாஹல், வாஷிங்டன் கூட்டணியின் சுழல் ஜாலம், ரோஹித் ஷர்மாவின் மெத்தன அரைசதம்,  முஸ்டஃபிசுர் ரஹ்மானின் பெஸ்ட் ஓவர் இவையனைத்தையும் 15 நிமிடத்தில், எட்டு பந்துகளில், மூன்று சிக்ஸர்களில், இரண்டு பவுண்டரிகளில் ஓவர்டேக் செய்துவிட்டார் தினேஷ் கார்த்திக். அரை மணி நேரத்துக்கு முன்புவரை டாப் ஆர்டரில் இறக்கிவிடவில்லை என கடுப்பில் இருந்த டிகே, இப்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார். ``நான் அவுட்டாகி dugout சென்றபோது, தன்னை 6-வதாக இறக்கவிடவில்லை என தினேஷ் அப்செட்டில் இருந்தார். உங்கள் திறமையை வைத்து, கடைசி நான்கைந்து ஓவர்களில் நீங்கள்தான் ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். அவர் இப்போது அணியை வெற்றிபெறச் செய்த மகிழ்ச்சியில் இருக்கிறார்’’என்றார் கேப்டன் ரோஹித். தினேஷ் இந்த ருத்ராதாண்டவம் ஆடாமல் இருந்திருந்தால், விஜய் ஷங்கருக்கு விழும் திட்டுகள் அனைத்தும் ரோஹித்துக்கும் விழுந்திருக்கும். இப்போதும் சமூக வலைதளங்களில், இதன் பெயர் Brilliant Captaincy decision தானா என ரோஹித்தை வசைபாடிக்கொண்டு இருக்கின்றனர். 

" இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினம். வாய்ப்பு கிடைத்தால், அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் "  மேட்ச் வின்னர் தினேஷ் கார்த்திக் உதிர்த்த வார்த்தைகள் இவை. சக தமிழக வீரர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், அனைத்து இந்திய வீரர்களுமே கூட. இரண்டாம் இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழன் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துகள்!

https://www.vikatan.com/news/sports/119568-dinesh-karthik-finished-in-style-as-india-clinched-nidahas-trophy.html

  • தொடங்கியவர்

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆடுவதற்கு கார்த்திக் தயார் – ரோஹித் சர்மா…

Karthick.jpg?resize=692%2C319எந்தவொரு சூழ்நிலையிலும் ஆடுவதற்கு தினேஸ் கார்த்திக் தயாராக உள்ளார் என இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இந்தியா சம்பியன் பட்டம் வென்றதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான நிலைமைகளிலும் தினேஸ் கார்த்திக் ஆடுவதற்கு தயார் நிலையில் இருப்பார் என புகழாரம் சூட்டியுள்ள அவர் துடுப்பாட்ட வரிசையில் முன்னால் சென்று ஆடுவதற்கு கார்த்திக் மெய்யாகவே விரும்பிய போதிலும் அணியின் நலனைக் கருத்திற்கொண்டு, அவரை இறுதி ஒவர்களில் துடுப்பெடுத்தாட தக்க வைத்துக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார். தினேஸ் கார்த்திக் அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் என ரோஹித் சர்மா
குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/71427/

  • தொடங்கியவர்

இப்படிப்பட்ட பேட்டிங் வரலாற்றில் அரிது, அதிசயம்... : தினேஷ் கார்த்திக் பாராட்டில் இணைந்த ஷாகிப் அல் ஹசன்

 

 
shakib

தோல்வியின் அதிர்ச்சியில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன்.   -  படம்.| ஏ.எஃப்.பி.

கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் திருப்புமுனை இன்னிங்ஸை ஆடி வென்றதையடுத்து அவரைப் பாராட்டுபவர்கள் வரிசையில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இணைந்துள்ளார்.

ஆனாலும் ரூபல் ஹுசைனிடம்தான் நான் மீண்டும் பந்தை அளித்திருப்பேன், ஏனெனில் எல்லாம் திட்டப்படிதான் சென்றது, ஆனால் தினேஷ் கார்த்திக்கின் அதிசய, அரிய ஆட்டத்தினால் ரூபல் ஹுசைன் ஓவர் தவறு போல் தெரிகிறது என்று ரூபல் ஹுசைனுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார் ஷாகிப் அல் ஹசன்.

 

வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:

“உள்ளபடியே நேர்மையாகக் கூற வேண்டுமெனில் திட்டப்படிதான் ரூபல் வீசினார். முதல் பந்திலேயே இறங்கியவுடன் சிக்ஸ் அடிக்கும் சில வீரர்கள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. முதல் பந்தில் சிக்ஸ், அடுத்து ஒருநான்கு பிறகு மீண்டும் சிக்ஸ், இப்படி ஒருசிலரால்தான் ஆட முடியும்.

இம்மாதிரியான பேட்டிங் வரலாற்றில் அரிதானது, இது அதிசயக்கத்தக்க பேட்டிங், ஆனால் கார்த்திக் இதனைச் செய்து காட்டினார். ஆனால் முதல் 2 பந்துகளில் 10 ரன்கள் கொடுத்தவுடனேயே ரூபல் ஹுசைன் பதற்றமடைந்து விட்டார், இது இயற்கையானதே. ஆனால் இதே போன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் வந்தாலும் நான் ரூபல் ஹுசைனிடம்தான் பந்தை அளிப்பேன்.

தோல்விக்காக அழுது ஒரு பயனும் இல்லை. உணர்ச்சிகள் அதனுடன் தொடர்புடையதுதான், ஆனால் அதனால் என்ன செய்ய முடியும்?

காலத்தில் நாம் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது, இதே போன்ற சூழல் அடுத்து ஏற்படும் போது இன்னு சிறப்பாக ஆட முடியும் அவ்வளவே. நிறைய நெருக்கமான போட்டிகளையும் இறுதிப் போட்டிகளையும் இழந்திருக்கிறோம்

இது 5வது இறுதிப் போட்டி, அனைத்துமே நெருக்கமான போட்டிகள். இதில் மிகவும் நெருக்கமானது ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியாகும், பிறகு இந்தப் போட்டி அதைவிடவும் நெருக்கமானது. நாங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன்.

சிறு இடைவெளி தோல்விகளைத் தவிர்க்க இனி மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவோம், இது எங்களுக்கு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.”

இவ்வாறு டெய்லி ஸ்டார் ஊடகத்துக்கு ஷாகிப் அல் ஹசன் பேட்டியளித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23293265.ece?homepage=true

  • தொடங்கியவர்

காத்திருந்து சாதித்த தினேஷ் கார்த்திக்: தோனியின் இடத்தை நிரப்புவாரா?

தினேஷ் கார்த்திக்படத்தின் காப்புரிமைINSTAGRAM/GETTY IMAGES

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தினேஷ் கார்த்திக் மட்டையை சுழற்றியபோது, பிரம்மாண்ட மின்னணு திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மட்டுமல்ல, களத்தில் இருந்த வீரர்களின் உணர்வுகளும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

2 ஓவர்களில் 34 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற கடினமான நிலையில் களம் இறங்கினார் தினேஷ்.

தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை வெற்றிக்கொண்டு, இந்தியாவுக்கு எதிராக தனது முதல் தொடர் வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்யப்போகிறது என்ற முடிவுக்கு ஏறக்குறைய அனைவருமே வந்துவிட்டனர்.

ஆனால், தினேஷ் கார்த்திக் நிதாகஸ் கோப்பையை இந்திய அணி வென்றே தீரவேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கினார். 19-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் மீண்டும் சிக்ஸர் என அதிரடியாக ரன் குவித்தார். நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள், ஆறாவது பந்தில் நான்கு ரன்கள் என அவரது மட்டை ரன் மழையை பொழிந்தது.

தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத இன்னிங்ஸ்!

12 ரன்களில் 34 என்ற வெற்றி இலக்கு வியக்கத்தக்க வகையில் 6 பந்துகளில் 12 ரன்கள் என்று குறைந்ததும், ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனம் தடதடக்கத் தொடங்கியது.

ஒருவேளை இந்தியா கோப்பையை கைநழுவவிட்டிருந்தால், அதற்கு காரணம் விஜய்ஷங்கர் மற்றும் தினேஷுக்கு முன் களத்தில் இருந்த ரோஹித் ஷர்மா என்று இன்று பேசிக்கொண்டிருப்போம்.

கடைசி ஓவரின் முதல் பந்து வைட் ஆக, அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. மீண்டும் வெற்றி எட்டாக்கனியாகும் என்று ரசிகர்கள் மனம் சோர்வுற, அடுத்த பந்தில் ரன் எடுத்தார் விஜய்ஷங்கர். இப்போது தினேஷ் மட்டை வீச வேண்டும். அடுத்த பந்தில் கார்த்திக் ஒரு ரன் எடுக்க மீண்டும் ஆட்டக்காரர்களின் இடம் மாறியது.

இப்போது மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள் தேவை என்ற நிலை. தோல்விக்கு நெருக்கமாக இந்திய அணி செல்வதைப்போல் தோன்றியது. விஜய் ஷங்கர் மட்டை வீசி பவுண்ட்ரி அடித்தார். அடுத்த பந்தை கேலரி ஷாட் அடிக்க முயன்ற ஷங்கரின் முயற்சி வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றிக்கு 5 ரன்கள் தேவை, ஆனால், இருந்தது ஒரேயொரு பந்து.

வெற்றிக் கோப்பையை தந்த கடைசிப்பந்து

दिनेश कार्तिकபடத்தின் காப்புரிமைINSTAGRAM

நான்கு ரன்கள் எடுத்தால் ஆட்டம் சூப்பர் ஓவராகிவிடும் குறைவானால் வங்கதேசம் கோப்பையைக் கைப்பற்றும் என்பது தினேஷ் கார்த்திக்குக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், வங்கதேசத்துக்கு அதிர்ச்சியையும், இந்தியாவுக்கு ஆனந்தத்தையும் கொடுத்த அந்த கடைசி பந்தை ஆஃப் திசையில் சிக்ஸாராக அடித்த தினேஷ் கார்த்திக் வெற்றிக்கனியை தனது மட்டைவீச்சால் இந்தியாவுக்கு சமர்ப்பித்தார்.

பொதுவாக எந்தவொரு குழு விளையாட்டிலும் வெற்றி அல்லது தோல்விக்கு தனியொருவர் காரணம் கிடையாது என்றாலும், விதிவிலக்குகளும் உண்டு.

நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு இருபது ஓவர் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கைவண்ணமே இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தினேஷ் எதிர்கொண்ட கடைசி பந்து சிக்ஸரானதும், இந்திய அணியினர் ஆட்டக்களத்திற்குள் ஓடி வந்தனர். இலங்கை பார்வையாளர்களோ, தங்கள் அணியே கோப்பையை வென்றது போல் ஆரவரித்தனர்.

ஆனால் ஒன்பது பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய தினேஷின் முகத்தில் புன்னகையை மட்டுமே காண முடிந்தது. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் அணி செயல்பட்டபோது இதே கார்த்திக்கின் திறமை குடத்தில் இட்ட விளக்காக இருந்தது.

தோனியின் அதிரடி

தினேஷ் கார்த்திக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த வியத்தகு வெற்றிக்கு பிறகும் தோனி மட்டும் பெரிய அளவு உற்சாகத்தை காட்டவில்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா ''இந்த பெர்ஃபாமென்ஸால் எனக்கும் அணியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியே. இந்த போட்டித்தொடரில் நன்றாக விளையாடினோம், இறுதிப் போட்டியில் வெற்றி பெற மிகவும் போராட வேண்டியிருந்தது.''

''களத்திற்கு சென்றால் நன்றாக மட்டை வீசவேண்டும். அதற்காகத்தான் நான் பயிற்சி செய்கிறோம். இன்று அதிர்ஷ்டமும் துணை நின்றது."

ஆனால், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டபோது கார்த்திக் பேசியது அவரின் மகிழ்ச்சிக்கு பின்னால் மறைந்திருந்த வருத்தத்தையும், வலியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

தினேஷ் சொன்னார், ''இந்திய அணிக்குள் நுழைவதே கடினமான ஒன்று என்ற நிலையில், வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.''

தினேஷ் கார்த்திக்கு இனிமேல் எப்படி வாய்ப்பு கிடைக்கும்?

தினேஷ் கார்த்திக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தினேஷ் கார்த்திக்குக்கு எந்த அளவு வாய்ப்புகள் கிடைத்திருக்கவேண்டுமோ அந்த அளவு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அவர் திறமையானவர் என்று அனைவரும் கருதினாலும், அது தேவைக்கு அதிகமானது என்றும் கருதப்பட்டது.

ஆனால் தற்போது அவரிடம் மாற்றம் காணப்படுகிறது. அந்த மாற்றத்தோடு முக்கிய தருணங்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் கலையும் வெளிப்படுகிறது. இதைத்தான் ஆட்டத்தின் ஃப்னிஷரின் திறமை என்று சொல்வார்கள்.

இதுவரை மகேந்திர சிங் தோனி சிறந்த ஃப்னிஷர் என்று அழைக்கப்பட்டார், அவருக்கு முன்பு யுவராஜ் சிங். பல ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியும் ஃபினிஷராக பரிமளித்திருக்கிறார்.

ஆகாயத்தில் இரண்டு நட்சத்திரங்கள் ஒளிரும்போது, ஒன்றின் பிரகாசம் மற்றொன்றின் பிரகாசத்தை ஏதோ ஒரு விதத்தில் குறைத்துவிடும். தினேஷின் ஒளி, தோனியின் பிரகாசத்தில் மங்கிப்போனது.

தோனிக்கும் முன்னால் வந்தவர் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தோனிக்கு முன்னரே கிரிக்கெட் வாழ்க்கையை கார்த்திக் தொடங்கி இருந்தாலும், தோனியின் சிகையலங்காரமும் ஆக்ரோஷமான பேட்டிங்கும் அவரை பிரபலப்படுத்தியது, அணியின் கேப்டனகவும் உயர்த்தியது.

இது தோனியின் திறமைக்கு கிடைத்த பலன் என்றாலும், கார்த்திக்கின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத்தற்கும், தோனிக்கும் என்ன சம்பந்தம்? தோனி சிறந்த விக்கெட் கீப்பர் என்பது, மற்றொரு விக்கெட் கீப்பரான கார்த்திக்குக்கு பின்னடைவாகிவிட்டது.

பல நல்ல இன்னிங்ஸ்களில் விளையாடி இருந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறந்த திறமையை வெளிக்காட்டியிருந்தாலும், விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட கார்த்திக்குக்கு அணியில் தோனி இருக்கும்போது உரிய இடம் கிடைக்கவில்லை.

ஆனால், கார்த்திக்கின் சில சமீபத்திய இன்னிங்ஸ்கள் இப்போது பேசப்படுகிறது. 23 டெஸ்ட் போட்டிகளில், ஆயிரம் ரன்கள் எடுத்திருக்கிறார், சராசரியாக 28 ரன்கள் என்று சொல்லலாம். 79 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1496 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஒப்பீடு

தினேஷ் கார்த்திக்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மறுபுறம் மகேந்திர சிங் தோனி. 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள், 318 ஒருநாள் போட்டிகளில் 9967 ரன்கள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் 1444 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆனால், உண்மையில் இருவரின் பேட்டிங்கையோ விக்கெட் கீப்பிங்கையோ ஒப்பிடமுடியாது. இருவரும் பங்கு பெற்ற போட்டிகளுக்கு இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. உண்மையில், தோனியின் திறமைக்கும், அவர் பெற்ற புகழுக்கும் முன் வேறு எதையும் ஒப்பீடு செய்ய முடிந்ததில்லை.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தோனியின் மட்டை வீச்சும் முன்புபோல் இல்லை, கேட்பன் என்ற பொறுப்போ கோலியிடம் சென்றுவிட்டது.

டுவிட்டர் இவரது பதிவு @bhogleharsha: Dinesh Karthik made his debut before Dhoni. But he is still only 32 and batting better than ever before. Could well be a wonderful second wind for him if he can keep his form from the last 2 years

இத்தகைய சூழ்நிலையில், செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால், தினேஷ் கார்த்திக், தோனிக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார்.

ஆனால், இப்போது முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர் விராட் கோலி. கேப்டன் கோலி, தற்போது தோனியையே நம்புவதாக தோன்றுகிறது.

நிதாகஸ் கோப்பை இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான ஆட்டம், இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும். தினேஷ் கார்த்திக்கை தவிர்ப்பது இனியும் சாத்தியமானதல்ல.

11 ஆண்டுகளில் 19 டி20 போட்டிகளில் மட்டுமே கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளில் 79 ஒருநாள் போட்டிகளில் கார்த்திக் விளையாடியுள்ளார். ஆனால், தினேஷ் கார்த்திக்குக்கு இதைவிட அதிகமான வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுவதை கேப்டன் கோலியால் பரிசீலிக்காமல் இருக்கமுடியாது.

http://www.bbc.com/tamil/sport-43459128

  • தொடங்கியவர்

தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார்; சூப்பர் ஓவருக்கு தயாரானேன்- சஸ்பென்ஸ் உடைத்த ரோஹித் சர்மா

 

 
dinesh-karthik-afp

வங்கதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பந்தை ஸ்வீப் செய்த காட்சி   -  படம்: ஏஎப்ஃபி

வங்கதேசத்துக்கு எதிரான டி20 முத்தரப்பு இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார் என்று நினைத்து நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி மோதியது.

இதில் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் ‘எக்ஸ்ட்ரா கவர்’ திசையில் அமர்க்களமாக சிக்ஸ்ர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 8 பந்துகளைச் சந்தித்த தினேஷ் கார்த்த்திக் 29 ரன்கள் சேர்த்தார். இந்திய ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு சென்ற இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிக்ஸர் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திட்டது.

ஏற்கனவே இலங்கை வீரர்களுடன் லீக் ஆட்டங்களில் வங்கதேச அணியினர் மோதல் போக்கை கடைபிடித்து சர்ச்சையில் சிக்கினர். இது மட்டுமல்லாமல் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினர், களத்தில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதேபோன்ற நிலைமை இந்திய அணி தோற்றால் சந்திக்க நேரிடுமோ வங்கதேசத்தின் பாம்பு டான்ஸ் ஏளனத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் உள்மனதுக்குள் ஒருவிதமான படபடப்பு இருந்தது. இவை அனைத்தையும் தினேஷ் கார்த்திக்கின் சிக்சர் நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் என்ன செய்யப்போகிறார் என்று இந்திய வீரர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த இடத்தில் ரோகித்சர்மா மட்டும் இல்லை. அப்போது எங்கு சென்றார் என்று அனைவரும் தேடினர். வெற்றிக்குபின் அது குறித்து நிருபர்கள் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அளித்த பதில்:

தினேஷ் சந்தித்த கடைசிப் பந்தை எல்லோரும் பார்க்க ஆர்வமாக இருந்தபோது நான் மட்டும்அந்த இடத்தில் இல்லை. கடைசிப் பந்தில் எப்படியும் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார் என்று நினைத்துக்கொண்டேன். அதனால், சூப்பர் ஓவர் வரும் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்று எண்ணினேன். இதனால், நான் ஓய்வறைக்குச் சென்று என்னுடைய கால்காப்புகளைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தேன்.

ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்த செய்தி கிடைத்ததும் நான் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றேன். அவரின் உண்மையான சக்தியையும், திறமையையும் வெளிப்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் தினேஷ் கார்த்திக் திறமையுள்ளவர் என்று நம்பியே அவரை 7-ம் வீரராக களம் இறக்கினேன். அதை நிறைவேற்றிக்கொடுத்துவிட்டார். என் அணியின் பேட்டிங் குழுமீது எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

மிகச்சிறந்த போட்டியாக இருந்தது, ரசிகர்களும் எங்களுக்கு நாடு வித்தியாசமின்றி ஆதரவு அளித்தனர். இலங்கை அணியுடன் விளையாடும்போதுதான் ரசிகர்கள் ஆதரவு குறைந்திருந்தது. ஆனால், இந்தபோட்டிக்கு எங்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23294740.ece?homepage=true

  • தொடங்கியவர்

‘விஜய் சங்கர் வாழ்க்கையையும் காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்’- ட்விட்டரில் கலாய்த்த ரசிகர்கள்

 
vijay-shankar-ap

விஜய் சங்கர்   -  படம்: ஏபி

வங்கதேசத்துக்கு எதிரான நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சங்கர் விளையாடிய விதத்தை ட்விட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

கொழும்பு நகரில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ரசிகர்களை உச்சகட்ட பரபரப்புக்கு இந்தஆட்டம் கொண்டு சென்றது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரும் களத்தில்இருந்தனர். இதில் விஜய் தான் சந்தித்த முதல் பந்து வைடானது, அடுத்த பந்தில் ரன் அடிக்காமலும், 2-வது பந்தில் ஒரு ரன் மட்டும் அடித்தார். இதனால், ரசிர்கள் உச்சகட்ட வெறுப்புக்கு சென்றனர். 3வது பந்தில் தினேஷ் கார்த்திக் ரன் எடுத்து மீண்டும் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

4-வது பந்தில் ஒருபவுண்டரி அடித்த சங்கர், அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அனைத்து ரசிகர்களின் கோபத்தையும் வாங்கிக்கட்டிக்கொண்டார். தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும், கடைசி ஒருபந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டுமே என்று கையை பிசைந்துகொண்டு இருந்தனர்.

ஆனால், சவுமியா சர்க்கார் வீசிய கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ்ர் அடித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து தினேஷ் கார்த்திக் காப்பாற்றினார்.

இந்த வெற்றிக்கு பின், இந்திய ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து ஒருபக்கம் ட்விட் செய்தாலும், விஜய் சங்கரை கிண்டல் செய்யவும் மறக்கவில்லை. டவிட்டரில் ரசிகர்கள் செய்த டிவிட்கள் சில இதே உங்களுக்காக.

இதில் ஒரு ரசிகர், ‘விஜய் சங்கருக்கு இதுதான் முதல்தொடரும், இதுதான் கடைசித் தொடராகவும் அமைந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் மிகவும் கிண்டலாக ‘எங்கிருந்து இப்படிப்பட்ட வீரரை பிடித்துக்கொண்டு வந்தீர்கள், செவ்வாய் கிரகத்திலிருந்தா, பேட்டிங் செய்யத்தெரியவில்லை’ என்று பதிவிட்டு, அதில் ஒருவர் மற்றொருவரை துரத்தி, துரத்தி அடிப்பதுபோல ஒரு படத்தை பதிவிட்டு அதில் விஜய் சங்கரின் பெயரைப் போட்டு கிண்டல் செய்துள்ளார்.

இன்னும் சிலர், ‘இந்திய அணியில் விஜய் சங்கர் எப்படி இடம் பிடித்தார், இவர் தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்’ என்று தெரிவித்துள்ளனர்.

‘தினேஷ் கார்த்திக் இந்திய அணியை மட்டும் காப்பாற்றவில்லை, விஜய் சங்கரையும், வங்கதேசத்தின் நாகின் நடனத்தை பார்ப்பதில் இருந்தும் இந்திய ரசிகர்களை காப்பாற்றிவிட்டார்’ என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

சில ரசிகர்கள் மிகக் கடுமையாக ‘விஜய் சங்கர் ஒரு பைத்தியம், யாராவது இக்கட்டான நேரத்தில் 4 பந்துகளை வீணாக்குவார்களா?’ என்று தெரிவித்துள்ளனர்.

‘விஜய் சங்கரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக தடை செய்ய வேண்டும், இவர் டென்னிஸ்பந்தில் கிரிக்கெட் விளையாடத்தான் தகுதியானவர்’ என்று ட்விட்டரில் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

‘மக்கள் ஏன் நோட்டாவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்கு விஜய்சங்கர்தான் காரணம்’ என்றும், ‘விஜய் சங்கரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த வங்கதேச வீரர் ஹசன் மிர்சாவுக்கு இந்திய ரசிகர்கள் சார்பில் நன்றி’ என்று கிண்டல் செய்துள்ளனர்.

‘இந்திய அணியை மட்டுமல்லாமது, விஜய் சங்கரின் கிரக்கெட் வாழ்க்கையையும் தினேஷ் கார்த்திக் காப்பாற்றிவிட்டார்’ என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23295258.ece

  • தொடங்கியவர்

புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!

9db386df7c76496204c4ed2e65bc5e92-696x463
 

காத்திருஎன்ற வார்த்தை தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையின் தாரக மந்திரமாகவே இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் நிலையான ஒரு விக்கெட் காப்பாளருக்கான இடத்தைப் பெற முடியாமல் போனது.

எனினும், 2005இல் டோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும், கார்த்திக்கின் இடம் முகவரி இல்லாமல் சென்றுவிட்டது. இதனையடுத்து இந்திய அணிக்கான கதவும் கார்த்திக்குக்கு ஒருசில தருணங்களில் தான் திறக்கப்பட்டன.

இந்திய அணியில் மொஹீந்தர் அமர்நாத்துக்குப் பிறகு அதிகமுறை அணிக்குத் திரும்பி வந்தவர் என்ற பெயர் தினேஷ் கார்த்திக்கைச் சாரும். இந்திய அணியில் போர்மில் இருந்துகொண்டும் அணிக்குத் தேர்வாகி விளையாடுவதில் சந்தர்ப்பம் கிடைக்காமல் காத்திருந்த வீரரும் இவர்தான்

 

அதிலும், டோனி உபாதைகளுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கும் சந்தர்ப்பங்களில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடும் வாய்ப்பை பெறுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்த கார்த்திக், விக்கெட் காப்பாளராக மாத்திரமல்லாது ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டு தனது 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதில் முன்னிலை வீரராகவும் திகழ்ந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து டோனி ஓய்வுபெற்றதுடன், அவரின் இடத்தில் விருத்திமன் சஹா விளையாடி வருகின்றார். எனினும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் டோனி இன்னும் விளையாடி வருவதால், இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தினேஷ் கார்த்திக் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் 2017இல், தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் மீண்டும் காற்று வீசுவதற்கு ஆரம்பித்தது. அதிலும், கோஹ்லியின் தலைமைத்துவத்தின் கீழ் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், இந்திய அணி ஒரு மாற்று விக்கெட் காப்பாளர் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை, எனவே இளம் வீரர்களுடன் போட்டியிட்டு அணியில் நிலையான இடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக தினேஷ் கார்த்திக்கிற்கு போராட வேண்டியிருந்தது.

இதனையடுத்து கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றுக்கொண்ட கார்த்திக், இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடியிருந்ததுடன், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தான் இறுதி நேரத்தில் களமிறங்கி சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

 

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி நேற்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

சுமார் 20,000 பேர் போட்டியைக் காண மைதானத்துக்கு வருகை தந்திருந்தாலும், போட்டியை நடாத்துகின்ற இலங்கை அணிக்கு இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை. அதிலும், பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் துரதிஷ்டவசமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவியதுடன், பரபரப்பை ஏற்படுத்திய அப்போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டமை கிரிக்கெட் உலகிற்கு மிகப் பெரிய இழுக்கையும் பெற்றுக்கொடுத்தது.

எனவே, நேற்றைய இறுதிப் போட்டியில் இலங்கை ரசிகர்கள் முதற்தடவையாக இந்தியாவுக்கு பூரண ஆதரவு கொடுக்க, பரபரப்புக்கு மத்தியில் இந்திய அணியினர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

ரோஹித் சர்மாவின் பொறுப்பான ஆட்டத்துடன் இந்திய அணி வெற்றியிலக்கை நெருங்கினாலும், அவ்வணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஓட்ட வேகத்திற்கு ஏற்ப துடுப்பெடுத்தாட தடுமாறியது. இதில் 18 பந்துகளுக்கு 35 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் முஸ்தபிசூர் ரஹ்மான் வீசிய 18ஆவது ஓவர் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளுக்கும் ஒரு ஓட்டத்தை கூட பெற முடியாமல் விஜய் சங்கர் தடுமாறினார். தொடர்ந்து ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக துடுப்பாடி வந்த மனிஷ; பாண்டே 28 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

 

எனினும் அடுத்த ஓவருக்கு முகம்கொடுக்க களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வானவேடிக்கை காட்டினார். ருபெல் ஹொசைனின் முதல் மூன்று பந்துகளுக்கும் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி விளாசியதோடு கடைசி பந்துக்கு மற்றொரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 22 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனையடுத்து கடைசி ஓவருக்கு 12 ஓட்டங்களைப் பெறவேண்டி ஏற்பட்டது. இந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி ஒன்றை விளாசிய விஜய் சங்கர் ஐந்தாவது பந்தில் பிடிகொடுத்து 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்துக்கு 5 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது. இதன்போது துடுப்பெடுத்தாடிய தினேஷ; கார்த்திக் அபார சிக்ஸர் ஒன்றை விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

இதில் கார்த்திக் களமிறங்கும் போது 2 ஓவர்களில் 34 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவை என்ற கடினமான நிலை, மிகப் பெரிய அழுத்தம், வெற்றி பெற முடியவில்லை என்றால் வசை, ஏமாற்றம் அனைத்தையும் சுமந்திருப்பார் கார்த்திக். ஆனால் தனது அனுபவமான துடுப்பாட்டத்தை அணிக்கு தேவையான கட்டத்தில் வெளிப்படுத்தி, தோல்வியிலிருந்தும் அணியையும் மீட்டார்.

தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அபரிமிதமான அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை போட்டியின் பிறகு தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தினார்.

இந்திய அணிக்காக இவ்வாறு விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்காக மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொடரில் நாங்கள் உள்ளபடியே நன்றாக விளையாடினோம். ஆகவே இறுதிப்போட்டியில் வெல்லாமல் போயிருந்தால் அது துரதிஷ்டம்தான்.

இந்த ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு கடினமாக இருந்தது. அதுவும் முஸ்தபிசூர் பந்து வீசிய விதம். எனவே இறுதியாக களமிறங்கி நன்றாக அடித்து ஆட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. நான் கடுமையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதாவது பந்து வரும் திசையிலேயே அடிப்பதற்கான அடிப்படைகளை மேற்கொண்டு வந்தேன். அதிஷ்டவசமாக இந்தப் போட்டியில் அந்த யுக்திகள் கைகொடுத்தது.

 

வாய்ப்பு கிடைக்க கடினமான ஒரு அணி இந்திய அணி, ஆனால் ஒருமுறை பெற்ற வாய்ப்பை விட்டுவிடக்கூடாது, எனக்கு உதவியாக இருந்து பின்னணியிலிருந்த அனைவர்களுக்கும் நன்றி. அவர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்திருக்கின்றனர், உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

எனவே இந்திய அணிக்காக சுமார் 13 வருடங்களாக விளையாடி வருகின்ற தினேஷ் கார்த்திக், இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளிலும், 79 ஒரு நாள் மற்றும் 19 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் அபார துடுப்பாட்டம் தொடர்பில் சமூகவலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்:

அபாரமான வெற்றி! தினேஷ் கார்த்திக்கின் சிறந்த துடுப்பாட்டம், இதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த ரோஹித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ்! இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான பினிஷிங்!

 

View image on Twitter
 

Amazing victory by #TeamIndia. Superb batting by @DineshKarthik. A great knock by @ImRo45 to set the platform.

What a finish to a final!!#NidahasTrophy2018 #INDvsBAN

விராத் கோஹ்லி:

என்ன அருமையான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக விளையாடி கிடைத்த மிகப் பெரிய வெற்றி. பாராட்டுக்கள் தினேஷ் கார்த்திக்.

 

What a game of cricket last night, Complete team performance! Big up boys!!! ??Well done DK @DineshKarthik ?@BCCI #NidahasTrophy2018 #INDvsBAN

ரவிச்சந்திரன் அஷ்வின்

தினேஷ் கார்த்திக்கின் நம்பமுடியாத இன்னிங்ஸ். அவரை நன்கு அறிந்தவராக அவருடைய திறமையை நேற்று இரவு பார்க்க முடிந்தது.

 

What an unbelievable knock from @DineshKarthik last night, knowing him well this was something that he always wanted to do and it came through on the finals night. ?

யூசுப் பதான்:

வெல் டன் டீம் இந்தியா! என்ன ஒரு பிரமாதமான வெற்றி! நெருக்கடி தருணத்தில் என்ன ஒரு இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக். இளம் வீரர்கள் இந்தத் தொடரில் அற்புதமாக விளையாடி விட்டனர்.

 

Well done Team India @BCCI . What an amazing win. @DineshKarthik what a knock under pressure. This is a bunch of youngsters and they've done so well on this tour. #INDvBAN

 

அஞ்செலோ மெதிவ்ஸ்:

அருமையான கிரிக்கெட் ஆட்டம். வாழ்த்துக்கள் இந்தியா, தினேஷின் ஆட்டம் சிறப்பு.

 

Incredible game of cricket .congrats to @BCCI tough luck @BCBtigers .@DineshKarthik what a knock ??

 

ரஸல் ஆர்னல்ட்:

வாவ் டி.கே. உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன் தினேஷ் கார்த்திக்.

 

Wow DK ... just Wow !!!! @DineshKarthik soo happy for you ???#NidahasTrophy2018 final

இந்நிலையில், சவ்ரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண், பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

http://www.thepapare.com

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.