Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் போட்டியில் வெறும் 58 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது எப்படி?

Featured Replies

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட்

 
 
 

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடக்குகிறது.#NZvENG

 
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் நாளை தொடக்கம்
 
ஆக்லாந்து:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது.

நியூசிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதே நேரத்தில் அந்த அணி ஏற்கனவே பகல்-இரவு டெஸ்டில் ஆடி இருக்கிறது. அறிமுக பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் (அடிலெய்ட், 2015) 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

நியூசிலாந்து விளையாடும் 2-வது பகல்-இரவு டெஸ்ட் ஆகும். இங்கிலாந்து அணி விளையாடும் 3-வது பகல்-இரவு போட்டியாகும். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியாவுடன் விளையாடி இருக்கிறது.

இதில் வெஸ்ட்இண்டீசை இன்னிங்ஸ் மற்றும் 209 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. ஆஸ்திரேலியாவிடம் 120 ரன்னில் தோற்றது

முன்னணி நாடுகளில் இந்தியா மட்டும் தான் டெஸ்டில் விளையாடவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணி அக்டோபர்- நவம்பர் மாதம் இந்தியா வரும்போது பகல்-இரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐதராபாத் அல்லது ராஜ்கோட்டில் இதை நடித்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 8 பகல்-இரவு டெஸ்ட்டுகள் நடந்து உள்ளன. இதில் ஆஸ்திரேலியா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

பகல்-இரவு டெஸ்டில் இளம் சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/21124949/1152257/England-vs-New-Zealand-pinkball-Test-match-on-Tomorrow.vpf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரு பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷத்தில் 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி!

 

 
boult12

 

நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அது மிகச்சரியான முடிவாகவும் அமைந்தது.

குக் 5 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிலிருந்து சரிவு தொடங்கியது. கேப்டன் ரூட் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தொடக்க வீரர் ஸ்டோன்மேன், 9-வது வீரராகக் களமிறங்கிய ஓவர்டன் ஆகிய இருவர் மட்டுமே 10 ரன்களைத் தாண்டினார்கள். இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து இங்கிலாந்து வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். 9 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்கிற மோசமான நிலையில் கடைசி விக்கெட்டுக்கு கிரேக் ஓவர்டனும் ஜேம்ஸ் ஆண்டர்சனும் 31 ரன்கள் சேர்த்து ஓரளவு ஆறுதல் அளித்தார்கள். ஓவர்டன் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் போல்ட், செளதி ஆகிய இருவர் மட்டுமே பந்துவீசி அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். போல்ட் 6 விக்கெட்டுகளையும் செளதி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். இங்கிலாந்து எடுத்த 58 ரன்கள், அதன் டெஸ்ட் வரலாற்றில் எடுத்த 6-வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

southee432.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/22/boult-southee-dismantle-england-for-58-2885541.html

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டியில் வெறும் 58 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது எப்படி?

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் ஆட்டத்தின் முதல் போட்டியில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இங்கிலாந்து அணி இழந்துள்ளது.

நியூசிலாந்தின் பந்துவீச்சால் 58 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களில் சுருண்டது.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் 32 ரன்களை கொடுத்து 6 விக்கெட்களையும், டிம் செளத்தி 25 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை எடுத்திருந்தனர்.

27 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இங்கிலாந்து இழந்திருந்த நிலையில், கிரேய்க் ஓவர்டென் அவுட் ஆகாமல் 33 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை 58 ஆக உயர்த்தினார்.

ஆஸ்திரேலியாவில் இறுதியாக விளையாடிய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தோல்வியை தழுவிய நிலையில் தற்போது சொற்ப ரன்களில் இங்கிலாந்து அணி மொத்த விக்கெட்களையும் இழந்துள்ளது.

டிம் செளத்தியை வாழ்த்தும் சக வீரர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிம் செளத்தியை வாழ்த்தும் சக வீரர்கள்

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் போல்ட் மற்றும் செளத்தி பந்தின் சுவிங் நிலையை நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள்.

நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கையாண்ட ஆட்ட பாணி படு சொதப்பலாக அமைந்தது.

இங்கிலாந்து விக்கெட்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரன்களில் சரிய, மார்க் ஸ்டோன்மென் மட்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி ஒருவழியாக இரட்டை இலக்க ரன்களை அடைந்தார்.

மோசமான பேட்டிங் - முன்னாள் பந்துவீச்சாளர்

இன்றைய போட்டி குறித்து பிபிசியிடம் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேமி சுவான், வீசப்பட்ட முதல் பந்திலிருந்தே இங்கிலாந்து வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், பேட்ஸ்மேன்கள் தெளிவற்ற முறையில் ஆடியதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து எடுத்த குறைந்த ரன்களின் பட்டியல்

45 ரன்கள் - ஆஸ்திரேலியா, சிட்னி, 1887

46 ரன்கள் - மேற்கிந்திய தீவுகள், போர்ட் ஆஃப் ஸ்பெயின், 1994

51 ரன்கள் - மேற்கிந்திய தீவுகள், கிங்ஸ்டன், 2009

52 ரன்கள் - ஆஸ்திரேலியா, தி ஓவல், 1948

53 ரன்கள் - ஆஸ்திரேலியா, லார்ட்ஸ், 1888

58 ரன்கள் - நியூசிலாந்து, ஆக்லாந்து, 2018

நி்யூசிலாந்து முன்னிலை

இங்கிலாந்தை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய நேரம் ஒரு மணி நிலவரப்படி, 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்திருந்தது.

http://www.bbc.com/tamil/sport-43496749

  • தொடங்கியவர்

2 ஆம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 229 ஓட்டங்கள்!

 

2 ஆம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 229 ஓட்டங்கள்!


இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 229 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி முதல 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் போன்றவற்றில் விளையாடி வருகின்றது.

2 ஆம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 229 ஓட்டங்கள்!

இதனடிப்படையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3 ற்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2 ஆம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 229 ஓட்டங்கள்!

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நேற்று மற்றும் இன்று நடைபெற்ற போட்டியில் 92.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து நாளை 3 ஆம் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/Newzealand-vs-england-1st-test-2nd-day

  • தொடங்கியவர்

 

இங்கிலாந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்ட காணொளி

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் வில்லியம்சன் சதம் விளாசல்: மார்ட்டின் குரோவ், ராஸ் டெய்லர் சாதனை தகர்ப்பு

 

 
24CHPMUWILLIAMSON

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.   -  REUTERS

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சம் சதம் விளாசினார். இது அவரது 18-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்திருந்த மார்ட்டின் குரோவ், ராஸ் டெய்லர் ஆகியோரது சாதனைகளை முறியடித்தார் வில்லியம்சன்.

ஆக்லாந்து நகரில் நேற்றுமுன்தினம் தொடங்கிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி டிரென்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோரது அனல் வேகப் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியால் 20.4 ஓவர்களில் 54 ரன்களுக்கு சுருண்டது. 5 பேட்ஸ்மேன்கள் டக் ஆக 9-வது வீரராக களமிறங்கிய கிரெய்க் ஓவர்டன் 33 ரன்கள் சேர்த்து மிக மிகக்குறைந்த ரன்களுக்கு ஒட்டுமொத்த அணியும் வீழ்ந்து மோசமான சாதனை படைப்பதில் இருந்து காப்பாற்றினார்.

அவரை தவிர்த்து அலாஸ்டர் குக் 5, மார்க் ஸ்டோன்மேன் 11, டேவிட் மலான் 2, கிறிஸ் வோக்ஸ் 5, ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 ரன்கள் சேர்த்தனர். டிரென்ட் போல்ட் 6, டிம் சவுதி 4 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

ஜீத் ராவல் 3, டாம் லதாம் 26, ராஸ் டெய்லர் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். வில்லியம்சன் 91 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 117 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. நேர்த்தியாக பேட் செய்த வில்லியம்சன் 196 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 18-வது சதமாக அமைந்தது.

இதன் மூலம் நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த மறைந்த முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் தற்போது அணியில் விளையாடி வரும் சீனியர் வீரர் ராஸ் டெய்லர் ஆகியோரது சாதனைகளை முறியடித்தார் வில்லியம்சன். இருவரும் தலா 17 சதங்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணி 79 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட ஆட்டத்தில் இங்கிலாந்து அணி புதிய பந்தை கையில் எடுத்ததும், வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 220 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்த வில்லியம்சன், ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ஹென்றி நிக்கோல்ஸூடன் இணைந்து வில்லியம்சன் 83 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து வாட்லிங் களமிங்கினார். ஹென்றி நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட வாட்லிங், மட்டையை சுழற்றினார்.

நியூஸிலாந்து அணி 92.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாததால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஹென்றி நிக்கோல்ஸ் 143 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களுடனும், வாட்லிங் 17 பந்தில் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 171 ரன்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது. - ஏஎப்பி

http://tamil.thehindu.com/sports/article23339974.ece?homepage=true

  • தொடங்கியவர்

கைவசம் 7 விக்கெட்- தோல்வியை தவிர்க்க கடைசி நாள் முழுவதும் இங்கிலாந்து சமாளிக்குமா?

 

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து கடைசி நாளில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிபெற வாய்ப்புள்ளது. #NZvENG

 
கைவசம் 7 விக்கெட்- தோல்வியை தவிர்க்க கடைசி நாள் முழுவதும் இங்கிலாந்து சமாளிக்குமா?
 
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பகல் - இரவு ஆட்டமாக ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. நிக்கோல்ஸ் 52 ரன்னுடனும், வாட்லிங் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழையால் நேற்றைய ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 427 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 268 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 145 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் செஞ்சுரி அடித்து இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

369 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் 5 ரன்கள் எடுத்த குக், இதில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

அரைசதம் அடித்த இருவரும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியாமல் வெளியேறினார்கள். ஸ்டோன்மேன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 4-வது நாள் ஆட்டம் முடிவதற்கு சிலநிமிடங்களே இருந்த நிலையில், 51 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் அவுட் உடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

201803251439505508_1_cook-s._L_styvpf.jpg

இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து 237 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.

நாளைய கடைசி நாள் ஆட்டமுழுவதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். இல்லையெனில் மழை குறுக்கிட வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடந்தால் மட்டுமே இங்கிலாந்து தோல்வியை தவிர்க்க முடியும்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/25143950/1153078/NZvENG-Auckland-Test-England-trail-by-237-runs-with.vpf

  • தொடங்கியவர்

முக்கியக் கட்டங்களில் வாக்னர் வீசிய பவுன்சர்களில் வீழ்ந்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

 

 
wagner

முக்கியக்கட்டங்களில் பவுன்சரை ஆயுதமாக்கிய நீல் வாக்னர்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

ஆக்லாந்தில் நடைபெற்ற, பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை ட்ரா நோக்கிச் செலுத்திய ஸ்டோக்ஸ், வோக்ஸ் இருவரையும் பவுன்சரில் காலி செய்தார் நீல் வாக்னர், 4ம் நாள் நன்றாக ஆடி வந்த மார்க் ஸ்டோன்மேனையும் பயங்கர பவுன்சரில் வீழ்த்தினார் வாக்னர். இவரது பவுன்சர்கள் விக்கெட்டாக மாறிய தருணங்கள அனைத்துமே மிக மிக முக்கியமானவை, இங்கிலாந்து அணி நன்றாக ஆடியக் காலக்கட்டமாகும், ஸ்டோன்மேனும் ஜோ ரூட்டும் (51) இணைந்து 6/1-லிருந்து 94/1 என்று கொண்டு சென்றபோதுதான் வாக்னரின் பவுன்சரில் அரைசதம் எடுத்து அருமையாக ஆடிய ஸ்டோன்மேன் வீழ்ந்தார்

5ம் நாளான இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் என்று தொடங்கிய இங்கிலாந்து அணி 127வது ஓவரில் 320 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து போல்ட், சவுதி ஸ்விங்குக்கு 58 ரன்களுக்கு பரிதாபமாக மடிய நியூஸிலாந்து அணி கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் சதங்களுடன் 427/8 என்று டிக்ளேர் செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 102 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 10-வது முறை நியூஸிலாந்து இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் டாட் ஆஸ்டில் 3 விக்கெட்டுகளையும் போல்ட் மீண்டும் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.

டேவிட் மலானை, சவுதி எட்ஜ் செய்ய வைத்தார், தள்ளிச் சென்ற பந்து ஆடத்தூண்டப்பட்டார் விளிம்பில் பட்டு 2வது ஸ்லிப்பில் லேதமிடம் கேட்ச் ஆக 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அபாய வீரர் ஜானி பேர்ஸ்டோ இறங்கியவுடனேயே 0-வில் லெக் திசை கேட்சை விக்கெட் கீப்பர் வாட்லிங் விட்டார். இவர் மீண்டும் 21 ரன்களில் இருந்த போது மோசமான டாட் ஆஸ்ட்ல் பந்தை மோசமாக பேர்ஸ்டோ ஆடி மிட் ஆனில் கேட்ச் கொடுக்க அதனை மோசமாக போல்ட் கோட்டை விட்டார். மிக எளிதான கேட்ச் தரைதட்டியது. ஆனால் டாட் ஆஸ்ட்ல் வீசிய இன்னொரு ‘எங்கு வேண்டுமானாலும்’ அடிக்கலாம் என்ற ரகப் பந்தை மிட் விக்கெட்டில் பேர்ஸ்டோ அடிக்க இம்முறை கேப்டன் கேன் வில்லியம்சன் தலைக்கு மேல் அபாரமாகப் பிடித்தார், 26 ரன்களில் பேர்ஸ்டோவின் மோசமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

பென் ஸ்டோக்ஸ் வழக்கத்துக்கு விரோதமாக தன் 66 ரன்களுக்கு 188 பந்துகள் ஆடி ட்ராவுக்கு முயற்சி செய்தார். மொயின் அலி மாறாக ஷாட்களை ஆடினார் 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்து ஒன்று இன்ஸ்விங் ஆகி மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வர வாங்கினார். பலத்த முறையீடுக்கு நாட் அவுட் பதிலாக வர வில்லியம்சன் தைரியமாக ரிவியூ செய்தார். பேட்தானோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்ததால் மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் வில்லியம்சன் ஆர்வம் காட்டினார், அவரது நம்பிக்கை வீண் போகவில்லை முதலில் கால்காப்பில்தான் பட்டது, அவுட்.

217/6 என்ற நிலையில் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் (52) இணைந்து சுமார் 31 ஓவர்கள் விக்கெட்டைக் கொடுக்காமல் நியூஸிலாந்தை வெறுப்பேற்றியதோடு ஸ்கோரை 300 ரன்களுக்கு உயர்த்தினர். மேலும் ரன் இடைவெளியை 152-லிருந்து ரன்களிலிருந்து 69-ஆக குறைத்தனர்.

நீல் வாக்னர் அதுவரை மிகமிக அருமையாக ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்துகளை திறம்பட வீசி வந்தார், ஆனால் பலன் கிட்டவில்லை. தன் முதல் விக்கெட்டாக வாக்னர் ஸ்டோன்மேனை (55) வீழ்த்தியபோது மிகப்பெரிய பவுன்சரில்தான் இதனைச் சாதித்தார், தொண்டை வரை எழும்பிய பவுன்சரில் ஸ்டோன்மேன் கேட்ச் ஆனார்.

stokesjpg

போராட்ட இன்னிங்ஸில் ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

 

இம்முறை ட்ரா செய்து விடலாம் என்று ஆடிய ஸ்டோக்ஸ் (66) விக்கெட்டையும் பவுன்சரில் வீழ்த்தினார் வாக்னர். இடைவேளைக்கு இன்னும் 3 பந்துகளே உள்ள நிலையில் வாக்னர் பவுன்சரை பாயிண்டில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை 26 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகாமல் காப்பாற்றிய ஓவர்டன் 3 ரன்களில் ஆஸ்ட்ல் பந்தில் எல்.பி.ஆனார். கிறிஸ் வோக்ஸ் 118 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்திருந்த போது விளையாடவே முடியாத பவுன்சரை வீசினார் வாக்னர். வோக்ஸ் முகத்தை நோக்கிச் சென்ற பவுன்சர் அது. கால்கள் இரண்டும் தரையிலிருந்து எழும்ப தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மட்டையை கொண்டு செல்ல நேரிட்டது. கிளவ்வில் பட்டு ஷார்ட் லெக்கில் எளிதான கேட்ச் ஆனது. உண்மையில் வாக்னர் வீசிய 3 பவுன்சர்களில் ஸ்டோன்மேன், ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகியோர் முக்கியத் தருணங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

5 ஆண்டுகளுக்கு முன்னர்...

5 ஆண்டுகளுக்கு முன்னர் இரு அணிகளும் இதே மார்ச் 26-ம் தேதி ஈடன் பார்க் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டியும் இப்படிப்பட்ட ஒரு பரபரப்பு டெஸ்ட் போட்டியாக அமைந்தது அப்போது இங்கிலாந்து ட்ரா செய்தது, ஆனால் இப்போது பென் ஸ்டோக்ஸ் விக்கெட் அந்த வாய்ப்பை முறியடித்தது.

மேலும், அப்போது தேநீர் இடைவேளைக்கு முன் வீசப்பட்ட கடைசி ஓவரில் இயன் பெல் ஆட்டமிழந்தார். கடைசி 2 மணி நேர ஆட்டத்தின் போது 7 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இன்றும் பென்ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும் போது 300/7, இடைவேளைக்கு முன்னர் ஆட்டமிழந்தது நடந்துள்ளது.

ஆனால் அன்று விக்கெட் கீப்பர் மேட் பிரையர் நிற்க 1 விக்கெட்டை நியூஸிலாந்தால் வீழ்த்த முடியாமல் டிரா ஆனது, ஆனால் இன்று நீல் வாக்னரின் தீர்மானகரமான பவுன்சர்கள் இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச்சில் நடக்கிறது, நியூஸிலாந்து இந்தத் தொடரை இழக்க வாய்ப்பில்லை, ஆனால் இங்கிலாந்துக்கு ட்ரா செய்ய வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23354790.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.