Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் தீவிரவாத தாக்குதல்: இருவர் பலி

Featured Replies

பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் தீவிரவாத தாக்குதல்: இருவர் பலி

 

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் தீவிரவாதி நடத்திய துப்பாக்சிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளார்.

மேலும் எட்டு பேர் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சூட்டு சம்பவத்தில் பலியானவர் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் மேலும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.

இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்., தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/world-affairs/france-shooting-hostage-taking-at-supetmarket-

  • தொடங்கியவர்

பிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

 

பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

france.jpg

ஆயுததாரிகள் கொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு முன்னர் மேற்கொண்ட துப்பாகிப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

29405245_10209255855068142_487188905_o.j

இந்நலையில் ஆயுததாரிகளால் பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் சந்தேகம் உள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திவெளியிட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/31893

  • தொடங்கியவர்

நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம்

 

பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

france.jpg

குறித்த துப்பாக்கிதாரியால் மூன்று பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரால் குறித்த ஆயுததாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் குறித்த துப்பாக்கிதாரி தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸாரை நோக்கி குறித்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

 

அதிகளவிலான ஆயுதங்களுடன் இருந்ததாக கூறப்படும் குறித்த துப்பாக்கிதாரி, கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேக நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

 

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரெஞ்சு உளவுப்பிரிவினர் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும், மேலும் அவருடைய தாயார் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.

http://www.virakesari.lk/article/31898

  • தொடங்கியவர்

பிரான்ஸ்: பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை

பிரான்ஸ்: பிணைக்கைதிகளை பிடித்துவைத்திருந்தவர் சுட்டுக்கொலைபடத்தின் காப்புரிமைEPA

பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மூன்று பொதுமக்களை கொன்றதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிதாரி போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி, தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி இதே நபர் சுட்டதில் போலீஸ் ஒருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெஞ்சு பல்பொருள் அங்காடியில் பிணையக்கைதிகள் பிடித்துவைப்புபடத்தின் காப்புரிமைGOOGLE MAPS

அதிகளவிலான ஆயுதங்களுடன் இருந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல்தாரி, கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13ல் தலைநகர் பாரிஸில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேக நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரெஞ்சு உளவுப்பிரிவினர் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும், மேலும் அவருடைய தாயார் நிகழ்விடத்தில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை பிரான்சில் நடந்த முக்கியமான தாக்குதல்கள்

அக்டோபர் 1, 2017 - மார்சே ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் குத்தி கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

ஜூலை 26, 2016 - நார்மண்டியிலுள்ள தேவாலயத்தில் இரண்டு தாக்குதலாளிகள் மதகுரு ஒருவரின் தொண்டையை அறுத்தனர். தாக்குதலாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜூலை 14, 2016 - நைஸ் கடற்கரையோர பகுதியில் பாஸ்ட்டீல் தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் அதிகளவில் குழுமியிருந்த இடத்தில் லாரி ஒன்றை கொண்டு ஏற்றியதில் 86 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது; தாக்குதலாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜூன் 13, 2016 - மான்யாங்வில் பகுதியில் போலீஸ் ஒருவரும், அவரது இணையும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறிய ஜிகாதி ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு, அவர் போலீசால் கொல்லப்பட்டார்.

நவம்பர் 13, 2015 - ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடத்திய தாக்குதலில் 130 உயிரிழந்தனர், 350 பேர் காயமுற்றனர்.

ஜனவரி 7-9, 2015 - பிரெஞ்சு மொழி இதழான சார்லி ஹெப்டோவில் இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த தினங்களில் நடந்த தாக்குதல்களில் ஒரு போலீஸ் உள்பட ஐந்து பேரும், தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டனர்.

http://www.bbc.com/tamil/global-43516605

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் மக்களை பிடித்திவைத்து மிரட்டிய தீவிரவாதி இவன் தான்! வெளியானது புகைப்படம்!

 
 
 
FotorCreated-84-696x391.jpg

பிரான்சில் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய தீவிரவாதி தொடர்பான புகைப்படத்தை முதல் முறையாக பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரான்சில் Carcassonne பகுதியில் மர்ம நபர் ஒருவன் 4 பொலிஸ்காரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அதன் பின் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து மிரட்டினான்.

அவனுடைய இந்த கண்மூடித்தனமான தாக்குதலால் 3 பேர் இறந்தனர், 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அவன் தொடர்பான புகைப்படமும், சில தகவல்களையும் பொலிசார் முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

தாக்குதல் நடத்திய நபர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என கூறினான். அவன் உண்மையிலே தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவனா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

அதுமட்டுமின்றி இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவனின் பெயர் Redouane Lakdim(26) எனவும் இவனை Super U மார்க்கெட்டில் உள்ளூர் நேரப்படி 11.15 மணியளவில் பொலிசார் சுற்றி வளைத்துவிட்டனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த அவன் உங்களை எல்லாம் கொல்லப் போகிறேன் என்று கத்தியபடியே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்துள்ளான்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இவன் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். 26 வயதுடைய இவன் மோராக்கோ நாட்டைச் சேர்ந்தவன்.

Carcassonne பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இவனுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

இந்நிலையில் இவன் குறித்து அருகில் இருக்கும் நபர் ஒருவர் கூறுகையில், அமைதியான பையன் அவன், தினமும் உள்ளூர் மசூதியில் கலந்து கொள்வான்.

காலையில் அவனது சகோதரியை இவன் தான் அழைத்துச் சென்று விட்டு வருவான், இப்படிப்பட்ட பையன் ஏன் இப்படி செய்தான் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தாக்குதல் நடத்திய நபர் ஏற்கனவே தீவிரவாதிகள் சந்தேகத்திற்குரிய கவனிப்புப் பட்டியலில் இருந்ததாகவும், அவனை பொலிசார் கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவனுடைய நெருங்கிய தோழியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறிய பொலிசார், அவன் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

https://www.quicknewstamil.com/2018/03/24/பிரான்சில்-மக்களை-பிடித்/

  • தொடங்கியவர்

பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு

நெகிழ வைக்கும் பிரான்ஸ் போலீசின் உயிர் தியாகம்படத்தின் காப்புரிமைEPA

பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த அர்னாட் பெல்ட்ராம் "ஒரு சிறந்த நபர்" என்றும் "விதிவிலக்கான தைரியத்தை" வெளிக்காட்டியதாகவும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் பாராட்டியுள்ளார்.

தெற்கு பிரான்சில் மூன்று பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை கொன்று அங்கு நிலவிய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு இந்த போலீஸ் அதிகாரி காரணமாக திகழ்ந்தார்.

பெல்ட்ராமின் தியாகம் குறித்து வானொலி நேர்காணல் ஒன்றில் பேசிய அவரது சகோதரர், "அவர் வழிப்போக்கர்களுக்காக தனது உயிரையே கொடுத்துள்ளார். தான் உயிர் பிழைப்பதற்குரிய வாய்ப்பே கிடையாது என்பது குறித்து அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கக் கூடும். இந்த செயல் அவரை உயர்ந்த மனிதராக ஆக்காவிட்டால் வேறென்ன ஆக்க முடியும்?" என்று கூறியுள்ளார்.

முன்னதாக பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த துப்பாக்கிதாரி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால், அந்த துப்பாக்கிதாரி ஒரு பெண்ணை மனித கேடயமாக வைத்திருந்தார்.

பிரெஞ்சு பல்பொருள் அங்காடியில் பிணையக்கைதிகள் பிடித்துவைப்புபடத்தின் காப்புரிமைGOOGLE MAPS

அந்த பெண்ணிற்கு பதிலாக, பிணையாக அர்னாட் உள்ளே சென்றார்.

மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி லக்டிம், தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்.

போலீஸ் அதிகாரியான அர்னாட் உயிரிழந்ததை ட்விட்டரில் அறிவித்த அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கெரார்ட் கொலொம்ப், "அவர் தன் நாட்டுக்காக உயிரிழந்துள்ளார். அவரது துணிவையும், தியாகத்தையும் பிரான்ஸ் என்றும் மறக்காது" என்று கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர், 16 பேர் காயமுற்றனர் மற்றும் இருவர் படுகாயமடைந்தனர். இது "இஸ்லாமிய பயங்கரவாதத்தின் செயல்" என்று அதிபர் மக்ரோங் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ்படத்தின் காப்புரிமைபோலீஸ்

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13ல் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேகத்திற்குரிய நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு இத்துப்பாக்கிதாரி வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லக்திமின் கூட்டாளி என்று நம்ப்பபட்ட மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி இதே நபர் சுட்டதில் போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.

 

http://www.bbc.com/tamil/global-43516605

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.