Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண எல்லை மீள்­நிர்­ணயம்: கை உயர்த்­துமா ‘கறுப்பு ஆடுகள்’?

Featured Replies

மாகாண எல்லை மீள்­நிர்­ணயம்: கை உயர்த்­துமா ‘கறுப்பு ஆடுகள்’?

samakalamprovnice25-03-2018-5a758380d07e10daf94dd1ed5f946148294988cb.jpg

 

ஏ.எல்.நிப்றாஸ்

 

சிரி­யாவில், பலஸ்­தீ­னத்தில் தம்மைத் தாக்­கு­வ­தற்கு வரு­கின்ற கவச வாக­னங்­க­ளுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்­கின்ற வய­தான பெண்­களின் தைரி­யமும் துணிச்­சலும் கூட, இலங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பல­ருக்கு இல்லை என்­ப­தைத்தான் நெடுங்­கா­ல­மாக கண்டும் உணர்ந்தும் வரு­கின்றோம்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­வாக்க, யாப்பு ரீதி­யான அநி­யா­யங்கள், கொள்கை வகுத்­தல்கள், மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் ‘நக்­குண்டார் நாவி­ழந்தார்’ என்­பது போல எல்­லா­வற்­றுக்கும் ஆத­ர­வ­ளிக்­கின்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், ‘பொறு­மை­காத்தல்’ என்ற பெயரில் வாய்­மூடி மௌன­மாக இருக்கும் முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள், எது நடந்­தாலும் நடக்­கட்டும் ‘நமக்கு நாலு காசு ஆனால் சரி­தானே’ என்று இருக்­கின்ற அர­சி­யல்­வா­திகள் என பல ரக­மா­ன­வர்கள் நமது அர­சி­யலில் உள்­ளனர்.

பத­வியில் இருக்­கின்ற அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் தள­ப­தி­க­ளுக்கும், அர­சாங்­கத்தை எதிர்த்துப் பேசினால் பத­வி­களும், வரப்­பி­ர­சா­தங்­களும் இல்­லாது போய்­விடும் என்ற பயம் பிடுங்கித் தின்­கின்­றது. பத­வி­யில்­லாத அர­சி­யல்­வா­திகள், ‘பத­வி­யி­ருந்தால் சாதித்­தி­ருப்போம். இப்­போது அதி­கா­ர­மில்­லாமல் எத­னையும் செய்­ய­மு­டி­யாது’ என்று வாழா­வி­ருக்­கின்­றனர். இதுதான் நிதர்­சனம்.

கண்டி வன்­மு­றைகள் போல சில சந்­தர்ப்­பங்­களில் அத்­திபூத்தாற்போல் குரல்­கொ­டுக்­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் உரை­களும், இன வன்­மு­றையை சர்­வ­தே­சத்­திற்கு கொண்டு சென்­ற­மையும் சற்று ஆறுதல் தரு­கின்­றன. என்­றாலும், அவ்­வாறு பேசிய ஒரு பிர­தி­ய­மைச்­ச­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பதா என கட்சி யோசிப்­ப­தா­கவும், அவர் பிர­த­மரை விமர்­சித்­த­தற்­காக கட்­சிக்குள் கோபப் பார்­வையால் நோக்­கப்­ப­டு­வ­தா­கவும் வெளி­யா­கின்ற தக­வல்கள், நமது முஸ்லிம் கட்­சி­களும் அர­சி­யல்­வா­தி­களும் ஐ.தே.க.விலும் சு.க.விலும் எந்­த­ள­வுக்கு அட­மானம் வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்­ப­தற்கு மிகப் பிந்­திய உதா­ர­ண­மாக துருத்திக் கொண்டு நிற்­கின்­றன.

பல்­லின நாடொன்றில் மத, இன அடை­யா­ளங்­களை எவ்­வாறு சரி­யாக வெளிப்­ப­டுத்­து­வது? எவ்­வாறு முஸ்­லிம்கள் முஸ்­லிம்­க­ளாக வாழ்­வது என்­பதை சிந்­திக்­கா­மலும், தமது நட­வ­டிக்­கை­களை மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­தா­மலும் முஸ்­லிம்கள் காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு காலச்­சூ­ழலில், சியோ­னி­சமும் இரு வகை­யான இன­வா­தங்­களும் அத­னுடன் இணைந்து ஒட்டுக் குழுக்கள் தொடக்கம் வர்த்­தக போட்­டி­யா­ளர்கள் வரை எல்­லோரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வேலை செய்து கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பதும் இனக்­க­ல­வ­ரங்­களை முடுக்­கி­வி­டு­வதும் இல­கு­வாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­பதும் ரக­சி­ய­மல்­லவே.

கண்­ணை­மூடி ஆத­ரவு

இப்­பேர்ப்­பட்ட ஒரு காலப்­ப­கு­தி­யி­லேயே மாகாண சபை­க­ளுக்­கான எல்லை மீள்­நிர்­ணய அறிக்­கையும் அதன்­பின்னர் அது தொடர்­பான சட்­ட­மூ­லமும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­வுள்­ளன. 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்­தல்கள் சட்­டத்தின் 3ஏ(11)பிரி­வினை திருத்­திய 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்­டத்­திற்கு அமை­வாக எல்லை மீள்­நிர்­ணய குழு தமது அறிக்­கையை அண்­மையில் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் கைய­ளித்­தி­ருந்­தது. இந்த அறிக்­கையை கடந்த வியாழக் கிழமை பாரா­ளு­மன்­றத்தில் 14ஆவது நட­வ­டிக்­கை­யாக சமர்ப்­பிப்­ப­தற்கு ஒழுங்குப் பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த போதிலும் அன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. எவ்­வா­றி­ருப்­பினும் ஓரிரு தினங்­களில் இந்த அறிக்கை சபைக்கு வர­வுள்­ளது.

சட்­ட­வாக்­கங்கள், தேர்தல் முறை மாற்­றங்கள், சட்டத் திருத்­தங்கள், யாப்பு மாற்ற முன்­னெ­டுப்­பு­களால் எத்­த­னையோ தடவை இலங்கை முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக வட்­டார மற்றும் உள்­ளூ­ராட்சி எல்லை மீள்­நிர்­ணயம் மேற்­கொள்­ளப்­பட்­டது. அது விட­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு நியாயம் நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப பல பிர­தே­சங்­களில் உறுப்­பி­னர்கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. வட்­டா­ரங்கள் பிரிப்பு முறை­யாக இடம்­பெ­ற­வில்லை. இது­வெல்லாம் முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மா­னது என்று அறிக்­கை­விட்டுக் கொண்டே முஸ்லிம் எம்.பி.க்கள் ஆத­ர­வ­ளித்­தனர். இரட்டை வட்­டா­ரத்தில் இரு உறுப்­பி­னர்­களும் வெற்­றி­பெறும் கட்­சிக்கே கிடைக்கும் சட்ட ஏற்­பாடு முஸ்லிம் எம்.பி.க்களி;ன் ஆத­ர­வின்­றியே நிறை­வேற்­றப்­பட்­டது. 21 எம்.பி.க்கள் இருந்தும் எதையும் தடுத்து நிறுத்த முடி­ய­வில்லை.

இதற்கு முன்­ன­தாக மஹிந்­தவை இன்­னு­மொரு தடவை ஜனா­தி­ப­தி­யாக்கும் 18ஆவது திருத்­தத்­திற்கு அதா­வுல்லா, ஹக்கீம், றிசாட் உட்­பட அநேகர் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர். திவி­நெ­கும சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தனர். 20ஆவது திருத்தம் என்­ன­வென்று தெரி­யா­ம­லேயே கிழக்கு மாகாண சபை அதற்கு ஒப்­புதல் அளித்­தது, பத­வி­யி­லி­ருந்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் புதிய தேர்தல் முறை­மைக்கு ஆத­ர­வாக கையு­யர்த்­தினர்.

இவ்­வாறு பல சந்­தர்ப்­பங்­களில் ஆட்­சியில் அங்கம் வகிக்­கின்ற எல்லா முஸ்லிம் எம்.பிக்­களும் திருத்­தங்­க­ளுக்கு சார்­பாக கையு­யர்த்தி விட்டு நொண்டிச் சாட்­டுக்­களை சொல்லி இருக்­கின்­றார்­களே தவிர என்ன நடந்­தாலும் பர­வா­யில்லை சமூ­கத்­திற்கு நல்­லது நடக்க வேண்டும் என்று துணிச்­ச­லுடன் எழுந்து நின்­ற­வர்கள் என்று தற்­கால அர­சியல் மேய்ப்­பர்கள் யாரையும் குறிப்­பிட முடி­யாது.

இந்த இலட்­ச­ணத்தில், பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள மாகாண எல்லை நிர்­ண­யத்­திற்கும், நமது அர­சியல் தலை­மை­களும் ஏனைய எம்.பி.க்களும் முட்­டாள்­த­ன­மாக பழக்க தோசத்தில் கையு­யர்த்தி விடு­வார்­களோ என்ற நியா­ய­மான சந்­தேகம் முஸ்லிம் சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக வட்­டார மற்றும் உள்­ளூ­ராட்சி சபை எல்­லைகள் மீள் வரை­யறை செய்­யப்­பட்­டது போலவே, மாகாண சபை தேர்­த­லுக்கு முன்­ன­தாக மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற தேர்தல் மாவட்­டங்கள் மற்றும் தொகு­தி­களின் எல்­லை­களை மீள் வரை­யறை செய்யும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு தனது அறிக்­கையை விட­யத்­திற்குப் பொறுப்­பான அமைச்­ச­ரிடம் கைய­ளித்­துள்­ளது. இருப்­பினும் இன்னும் இது சட்­ட­வலுப் பெறு­வ­தற்கு, பல கட்­டங்­களைக் கடந்து செல்ல வேண்­டி­யி­ருக்­கின்­றது.

மாகா­ணங்­களின் எல்லை மீள்­நிர்­ணய குழுவில் முஸ்­லிம்கள் சார்­பாக நிய­மிக்­கப்­பட்­டவர் ஆய்­வா­ளரும், புவி­யியல் பேரா­சி­ரி­ய­ரு­மான எஸ்.எச். ஹஸ்­புல்லாஹ் ஆவார். முஸ்லிம் சமூகம் பற்றி இயல்­பா­கவே அக்­கறை கொண்­ட­வ­ரான இவர் ஏதா­வது அடிப்­ப­டையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு எடுத்த முயற்­சிகள் பல­ன­ளிக்­க­வில்லை. சில பரிந்­து­ரைகள் தட்டிக் கழிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. இதனால் அவர் பல தடவை இக் குழுவில் இருந்து விலகிக் கொள்ள முயன்றார். அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. கடைசி அறிக்­கையில் தமது பரிந்­து­ரைகள் முழு­மை­யாக உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­றதும் தனி­யான ஒரு அறிக்­கை­யையும் ஹஸ்­புல்லாஹ் சமர்ப்­பித்­தி­ருக்­கின்றார்.

எல்லை நிர்­ணய குழு­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சுகள் இன்னும் திருத்­தப்­பட இட­முண்டு. ஆனால் ஒரு­வேளை இந்த அறிக்­கையே சட்ட வலுப்­பெ­று­மாக இருந்தால், அதனால் 50இற்கு 50 என்ற புதிய மாகாண சபைத் தேர்தல் முறை­மையின் கீழ் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் கடு­மை­யாக குறை­வ­டையும் என்­ப­துதான் இப்­போ­தி­ருக்­கின்ற பிரச்­சி­னை­யாகும். எனவே இது குறித்து முஸ்­லிம்கள் விரைந்து செயற்­பட்டு தமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டிது அவ­சி­ய­மாகும். அடுத்த, - அதற்­க­டுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கா­கவும் இன்­றைய தலை­முறை மீது இருக்­கின்ற பாரிய கடப்­பாடும் ஆகும்.

பதின்­மூன்று தொகு­தி­களே

எல்லை நிர்­ணய அறிக்­கையில் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட 13 தொகு­தி­களே பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. அம்­பாறை மாவட்­டத்தில் 3 தொகு­தி­களும் மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, கொழும்பு, புத்­தளம் மாவட்­டங்­களில் முஸ்­லிம்­களை கணி­ச­மாகக் கொண்ட தலா இரு தொகு­தி­களும், கண்டி, களுத்­துறை மாவட்­டங்­களில் ஒரு தொகு­தியும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டின் எல்லா மாவட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்கள் பர­வ­லாக வாழ்­கின்ற போதும் ஏனைய மாவட்­டங்­களில் ஒரு முஸ்லிம் பெரும்­பான்மை தொகு­தி­யா­வது உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.

இரட்டை அங்­கத்­தவர் தொகு­திகள் தொடர்பில் சட்­டத்தில் தெளி­வின்மை காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்ற நிலையில், இரட்டை அங்­கத்­தவர் தொகு­தியை உரு­வாக்கி, முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும் இன்னும் அதி­க­மான முஸ்லிம் பெரும்­பான்மை தொகு­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கும் பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லா முன்­வைத்த சிபா­ரி­சுகள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இதனால் 13 மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளையே நிச்­ச­ய­மாக முஸ்­லிம்­களால் பெறக் கூடி­ய­தாக இருக்கும். அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக வேறு அடிப்­ப­டை­களில் சில முஸ்லிம் உறுப்­பி­னர்­களை பெறும் வாய்ப்பு அரி­தாகக் காணப்­ப­டு­கின்­றது. என்­றாலும் அது எந்­த­ள­வுக்கு சாத்­தியம் என்­பது நிச்­ச­ய­மில்லை. அதேபோல் பெரும்­பான்மைக் கட்­சி­களால் புண்­ணி­யத்தில் வழங்­கப்­படும் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளுக்­காக பிச்சைப் பாத்­திரம் ஏந்­த­வேண்­டிய நிலையே ஏற்­படும்.

இந்த சிபா­ரிசு அறிக்­கையின் படி, 222 தொகு­திகள் உரு­வாக்­கப்­பட சாத்­தி­ய­முள்­ளது. அதன் பிர­காரம் நாட்டில் 78.8 வீத­மாக வாழ்­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கு 74.9 வீத­மான உறுப்­பு­ரி­மையும், 11.26 வீத­மான தமி­ழர்­க­ளுக்கு 11.1 வீத­மான உறுப்­பு­ரி­மையும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதில் சந்­தோ­சமே. ஆனால்; 9.7 வீத­மாக வாழும் இரண்­டா­வது சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ்­லிம்­க­ளுக்கு 5.85 வீத­மான உறுப்­பு­ரி­மையே பெற வழி­செய்­யப்­பட்­டுள்­ளமை அநீ­தியும் கவலை தரும் விட­ய­மு­மாகும்.

இந்த அறிக்­கையின் சிபா­ரி­சுகள் சட்­ட­மாகும் என்றால், முஸ்­லிம்­களின் பூர்­வீ­க­மான வட மாகாணம் உள்­ள­டங்­க­லாக 5 மாகா­ணங்­களில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் என்­பது குதிரைக் கொம்­பா­கவே இருக்கும். அதா­வது 18 மாவட்­டங்­களின் கீழ் வரும் தேர்தல் தொகு­தி­களில் முஸ்லிம் ஒரு­வரை மாகாண சபை உறுப்­பி­ன­ராக ஆக்­கு­வது என்­பது பெரும் பாடாக இருக்கும் என்று பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் போன்றோர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இன்னும் சொல்லப் போனால், வடக்கு கிழக்கில் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யு­மாக இருந்­தாலும் அதற்கு வெளியில் சிதறி வாழ்­கின்ற 70 வீத­மான முஸ்­லிம்கள் 6 இற்கு உட்­பட்ட மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளையே பெறும் வாய்ப்­பி­ருக்­கின்­றது. இதன் பாதிப்பு அதற்கு அடுத்­த­ப­டி­யாக நடை­பெறும் பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­த­லிலும் வெளிப்­படும் என்று அனு­மா­னிக்க முடி­கின்­றது.

பொடு­போக்­குத்­தனம்

இதற்கு கார­ணங்கள் என்­ன­வென்­பது நமக்கு தெரிந்­த­வைதான். குறிப்­பாக பல்-­அங்­கத்­தவர் தொகுதி முறைமை பற்­றிய தெளி­வின்­மையும், அது தொடர்­பான சட்ட ஏற்­பாடும், முஸ்­லிம்­களின் பரம்பல் பற்­றிய அறி­வின்மை மற்றும் விஷேட நிலை­மை­களை கையா­ளவும் ஒவ்­வொரு இனக் குழு­மத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தவும் அவ­சி­ய­மான விஷேட ஏற்­பா­டு­களை கொண்­டி­ருக்­காமை என எல்லை மீள் நிர்­ணயக் குழு பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. மறு­பு­றத்தில் இன­மே­லா­திக்க, மாற்­றாந்தாய் மனப்­பாங்கும், ஹஸ்­புல்­லாவின் சிபா­ரி­சுகள் கணக்­கெ­டுக்­கப்­ப­டா­மையும் ஏகத்­திற்கு நடந்­தி­ருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

இத்­த­னையும் நடந்து கொண்­டி­ருக்­கின்ற போதிலும் முஸ்லிம் கட்­சிகள் எந்தக் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­யையும் எடுத்­த­தாகத் தெரி­ய­வில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸோ, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸோ ஜனா­தி­ப­தி­யி­டமோ அல்­லது பிர­த­ம­ரி­டமோ பாரிய அழுத்தம் ஒன்றையும் கொடுக்­க­வில்லை. தேசிய காங்­கிரஸ் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்துக் கூறி முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாகவும் தெரி­ய­வில்லை.

பெரும் எதிர்­பார்ப்­புக்­க­ளோடு உரு­வாக்­கப்­பட்ட ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்போ (முஸ்லிம் கூட்­ட­மைப்பு) அதன் தலைவர் எம்.ரி. ஹசன்­அ­லியோ அம்­பாறை மற்றும் கண்டிக் கல­வ­ரங்கள் பற்றி ஒரு அறிக்­கையை தானும் விடாத நிலையில் இது பற்­றி­யா­வது மக்­களை தெளி­வு­ப­டுத்­த­வில்லை.

முஸ்­லிம்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் என்­பது தலை­யாய முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாகும். 21 எம்.பி.க்களும் ஏகப்­பட்ட மாகாண சபை உறுப்­பி­னர்­களும் இருந்தும் இத்­தனை அநி­யா­யங்கள், இன ஒடுக்­கு­மு­றைகள் முஸ்­லிம்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சூழலில் உறுப்­பு­ரிமை குறைந்தால் என்ன நடக்கும் என்­பதை சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. தற்­கால முஸ்­லிம்கள் சரி­யான மக்கள் பிர­தி­நி­தி­களை, தலை­மைத்­து­வங்­களை தெரி­வு­செய்­ய­வில்லை என்­பது வேறு­கதை. ஆனால் அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்­கா­வது அதனை செய்­வ­தற்கு ஏது­வான சட்ட ஏற்­பாடு இருக்க வேண்டும். அப்­ப­டி­யானால் முஸ்­லிம்­களும் அவர்­க­ளது அர­சி­யல்­வா­தி­களும் என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்­யலாம்?

மாகாண எல்லை மீள்­நிர்­ணய அறிக்கை இன்னும் இற்­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அது பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­பட்டு வாதத்­திற்கு விடப்­ப­ட­வுள்­ளது. அங்கு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம். அத்­துடன் இதனை நிறை­வேற்­று­வ­தற்கு மூன்­றி­லி­ரண்டு அறுதிப் பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். அறுதிப் பெரும்­பான்மை இல்­லா­த­வி­டத்து வேறு அடிப்­ப­டையில் நிறை­வேற்­றப்­ப­டலாம் என்று அர­சியல் அவ­தா­னிகள் சொன்­னாலும்,இதில் திருத்­தங்­களை மேற்­கொள்ள இன்னும் சந்­தர்ப்பம் உள்­ளதை மறந்­து­விடக் கூடாது.

குறிப்­பாக, புதி­தாக பொல­ன­றுவை, மாத்­தளை, கேகாலை, கம்­பஹா, காலி, அனு­ரா­த­புரம் போன்ற மாவட்­டங்­களில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த முஸ்லிம் கட்சித் தலை­வர்­களும், எம்.பி.க்களும் கடு­மை­யாக குரல் கொடுக்க வேண்டும். மேற்­படி மாவட்­டங்­களில் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக தொகு­தி­களை உரு­வாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இய­லாத பட்­சத்தில் பல்-­அங்­கத்­தவர் தொகு­தி­களை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­வ­கை­களை பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக மேற்­கொள்­வது அவ­சி­ய­மாகும். அதே­போன்று ஆய்­வாளர் வை.எல்.எஸ்.ஹமீட் போன்றோர் கூறு­வது போல இரட்டை வாக்­குச்­சீட்டு முறைக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இப்­போ­தி­ருக்­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் யாருமே இனக் கல­வ­ரங்கள் ஏற்­பட்ட சந்­தர்ப்­பத்­திலோ அல்­லது முஸ்­லிம்­களின் இனத்­துவ, மத அடை­யா­ளங்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலோ தமது பத­வி­களை துறந்­தது கிடை­யாது. ஒரு தேர்தல் காலத்தில் அன்றி வேறெந்த சமூகக் காரணத்திற்காகவும் கட்சி தாவல்களோ இராஜினாமாக்களோ மேற்கொள்ளப்பட்ட வரலாறும் கிடையாது. குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டமூலங்களை எதிர்ப்பது கூட மிக மிக அரிதாகவே நடக்கின்றது. ஆனால் இந்த எல்லை நிர்ணய விடயத்தில் அவ்வாறு செயற்படக் கூடாது

அரசாங்கம் நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் கட்சிகளின் முட்டுக்கொடுத்தல் மிக அவசியமாக அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இந்தத் தருணத்தை முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் சரியாக பயன்படுத்த வேண்டும். தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்புகின்றதா இல்லையா என்ற எந்த விடயத்தையும் கருத்திற் கொள்ளாமல், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதிலேயே விட்டுக் கொடுப்பில்லாமல் செயற்பட வேண்டியுள்ளது.

திருப்திப்படும் விதத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எல்லை நிர்ணயத்திற்கே எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்தவொரு சட்ட ஏற்பாட்டுக்கும் எதிராக பாராளுமன்றத்தில் பேசவும் எதிர்த்து வாக்களிக்கவும் வேண்டும். வாக்களிப்பில் இருந்து விலகியிருப்பது எதிர்ப்பை வெளிக்காட்ட சரியான முறையல்ல. அதைவிடுத்து, அமைச்சை பறித்துவிடுவார்கள், ஜனாதிபதி கோபித்து விடுவார், பிரதமர் முகம்சுழித்து விடுவார், வருமான வழிகள் முடக்கப்பட்டு விடும், வாகனங்களும் இன்னபிற சொகுசுகளும் குறைந்துவிடும் என்ற எந்தக் காரணத்திற்காகவும், மக்களுக்கு பொய்யான கற்பிதம் ஒன்றைச் சொல்லி விட்டு வழக்கம் போல எந்தக் ‘கறுப்பு ஆடுகளும், முஸ்லிம்களுக்கு பாதகமான எல்லை நிர்ணயத்திற்கு ஆதரவளிக்கக் கூடவே கூடாது. ஓநாய்கள் பரவாயில்லை, இப்போதெல்லாம் கறுப்பு ஆடுகளிடம்தான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-25#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.