Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிவர்ஸ் ஸ்விங்கின் அறிவியலும் ஆஸ்திரேலியா வைத்துக்கொண்ட ஆப்பும்! #SAvAUS

Featured Replies

ரிவர்ஸ் ஸ்விங்கின் அறிவியலும் ஆஸ்திரேலியா வைத்துக்கொண்ட ஆப்பும்! #SAvAUS

 
 

ஆஸ்திரேலியா மொத்தமும் அப்சட்டாக இருக்கிறது. அனுபவமற்ற வீரர் ஒருவர் ஒழுக்கமற்ற செயலில் இறங்க, அது 'எங்கள் திட்டம்' என்று கேப்டன் அப்ரூவர் ஆகிவிட, ஆஸ்திரேலிய பிரதமரே அதைப் பற்றி நேரடியாக பேட்டி கொடுத்தார். கேப்டன், துணைக் கேப்டன் ராஜினாமா... இருவர் சஸ்பென்ஷன்... லீடர்ஷிப் குழு மீது விசாரணை என இரண்டு நாளில் ஏகப்பட்ட களேபரங்கள். மற்ற நாட்டு வீரர்களெல்லாம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸி அணி மீதான தங்களின் வன்மத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் நிர்வாகம் முதல் ராஜஸ்தான் ராயலஸ் போர்டு வரை அடுத்து என்ன செய்வது எனக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு சம்பவம் சாம்பியன்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்டுவிட்டது. இத்தனை சம்பவங்களுக்குமான அடிப்படைக் காரணம் - ரிவர்ஸ் ஸ்விங்!

reverse swing - ஆஸ்திரேலியா

 

பேங்க்ராஃப்ட் என்ன செய்தார் என்பதைப் பற்றி மொத்த உலகமும் போதுமான அளவு விவாதித்துவிட்டது. இதைச் செய்த முதல் ஆள் இவரா என்றால் இல்லை. முன்பு இதுபோன்ற தருணங்களில் இப்படி பிரச்னை பெரிதானதா என்றால் அதுவும் இல்லை. அப்படியிருக்கையில் இப்போது மட்டும் ஏன்? இதை அறிந்துகொள்வதற்கு முன்னால், 'அதை அவர் ஏன் செய்தார்' என்ற கேள்விக்கு நாம் பதில் அறிந்துகொள்வது அவசியம். அதற்கு ரிவர்ஸ் ஸ்விங் (Reverse swing) பற்றி அறிந்துகொள்வதும் அவசியம். 

கூக்ளி, தூஸ்ரா, லெக் பிரேக், ஆஃப் பிரேக் என ஸ்பின்னர்களுக்கு எக்கச்சக்க ஆயுதங்கள் உண்டு. அதைப்போல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பௌன்ஸ், யார்க்கர், ஸ்விங் போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், ஓவரின் ஆறு பந்துகளையும் பௌன்ஸராக வீச முடியாது. ஒன்று அல்லது இரண்டுதான். அதேபோல் யார்க்கரை ஒவ்வொருமுறையாகவும் துல்லியமாக வீசிவிட முடியாது. ஃபுல் டாஸாக மாறி விணையாகவும் வாய்ப்புண்டு. ஆக, ஃபாஸ்ட் பௌலர்கள் நம்பக்கூடிய ஒரே ஆயுதம் ஸ்விங் மட்டுமே. அதுவும் பந்து புதிதாக இருக்கும்வரை மட்டுமே இன்ஸ்விங் அல்லது அவுட்ஸ்விங் செய்ய முடியும். பந்து பழசாகிவிட்டால் ஸ்விங் செய்தவது இயலாத காரியம். பழைய பந்திலும் எப்படியாவது பேட்ஸ்மேனைத் திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்ற பௌலர்களின் எண்ணம்தான் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஆயுதத்தை அறிமுகப்படுத்தியது.

swing

'conventional swing' எனப்படும் சாதாரண ஸ்விங்குக்கு பந்து புதிதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது, (வலது கை பேட்ஸ்மேன்களுக்கு) ஷைனிங்காக இருக்கும் பக்கம் கையின் வலதுபுறம் இருந்தால் அவுட் ஸ்விங்கும்,  இடது புறம் இருந்தால் இன்ஸ்விங்கும் ஆகும். இதற்கு நேர் எதிரானதுதான் ரிவர்ஸ் ஸ்விங். ஷைனிங் பகுதி வலது புறமிருந்தால் இன்ஸ்விங்கும், இடது புறமிருந்தால் அவுட்ஸ்விங்கும் ஆகும். 'conventional swing' ரிவர்ஸாக நடப்பதால் அதற்கு ரிவர்ஸ் ஸ்விங் என்று பெயர். 

ரிவர்ஸ் ஸ்விங் மன்னன் எனப் புகழப்பட்ட பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், "ஸ்விங் என்பது ஒரு அறிவியல்" என்று கூறுவார். ஆம், உண்மையில் அதன் பின்னால் அறிவியல்தான் ஒளிந்திருக்கிறது. பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவண்டுமென்றால், அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது. பந்தின் இரு பகுதிகளின் எடையிலும் எடையில் வித்யாசம் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது, எடை அதிகமாக இருக்கும் பகுதியை (ஷைனிங் பகுதி) வலதுபுறம் வைத்து வீசினால் அவுட்ஸ்விங் ஆவதற்குப் பதிலாக இன்ஸ்விங் ஆகும். காரணம், எடை அதிகமாக இருக்கும் பகுதியை விட, குறைவாக இருக்கும் பகுதியில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும். அது பந்தை உள்நோக்கித் தள்ளுவதால், இன்ஸ்விங் ஆகும். பந்து காற்றில் இருக்கும்போதே உள்நோக்கி நகரத் தொடங்குவதால், (உதாரணமாக) ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரிலீஸ் ஆகும் பந்து, பிட்ச் ஆகும்போதே மிடில் ஸ்டம்ப் லைனுக்கு நேராக பிட்ச் ஆகும். ஷைனிங் பகுதியைக் கவனித்து, அவுட் ஸ்விங் ஆகும் என நினைக்கும் பேட்ஸ்மேன், பிட்ச் ஆகும் இடத்தினாலும், அதன்பின் ஆகும் இன்ஸ்விங்கினாலும் ஏமாந்து போவார். இதனால்தான், ரிவர்ஸ் ஸ்விங் பௌலர்களின் மிகப்பெரிய ஆயுதமாகக் கருதப்படுகிறது. 

 

 

சரி, அதெப்படி பந்தின் ஒரு பகுதி எடை அதிகமாகவும், மற்றொரு பகுதி குறைவாகவும் இருக்கும்..? பொதுவாக, ஆட்டத்தின் நடுவில் பழையதாகும்போது, பந்து அதன் ஷைனிங் தன்மையை இழக்கும். எடை குறையும். ஒரு பகுதியின் எடையைக் கூட்டுவதற்காகத்தான் ஃபீல்டிங் அணியினரும், பௌலரும் தொடர்ச்சியாக பந்தில் எச்சிலைத் துப்புவதும் தடவுவதுமாக இருப்பார்கள். அதனால், இரண்டு பகுதிகளுக்கான எடையிலும் வித்யாசம் ஏற்படும். இதுவும் ஒரு கட்டத்தில் பௌலர்களுக்குப் பிரச்னையாகப் பட்டது. இப்படிச் செய்வதற்குப் பந்து மிகவும் பழையதாக வேண்டும். 60 ஓவர் வரையிலாவது பயன்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதற்கு முன்பு..? 20-25 ஓவர்களுக்கு மேல் சாதாரண ஸ்விங் முறைகளும் எடுபடாது. அதனால், ரிவர்ஸ் ஸ்விங் செய்ய அதுவரை கடைபிடித்துவந்த முறைகளையும் ரிவர்ஸாகச் செய்யத் தொடங்கினர்.

எதற்காக, பழையதாகும் வரை காத்திருந்தது, ஒரு பகுதியின் எடையைக் கூட்டவேண்டும்? பேசாமல் கொஞ்சம் புதிதாக இருக்கும்போதே இன்னொரு பகுதியின் எடையைக் குறைத்துவிட்டால்...? இந்தச் சிந்தனை எழுந்த பிறகுதான் Ball tampering என்ற வார்த்தை புழக்கத்துக்கு வந்தது. வீரர்கள், பந்தின் ஒரு பக்கத்தை ஏதேனும் பொருள் கொண்டு தேய்ப்பதன் மூலம், அதன் ஷைனிங் தன்மையை இழக்கச் செய்து, எடையைக் குறைப்பதை வழக்கமாகக்  கொண்டிருந்தனர். ஷூவில் இருக்கும் ஆணி, ஜிப், பாட்டில் மூடிகள், விரல் நகம் என எத்தனையோ பொருள்களைக் கொண்டு இதை நடைமுறைப் படுத்தத் தொடங்கினார்கள். ஆட்டத்தின் எந்த தருணத்திலும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் பேட்ஸ்மேன்களைத் தாக்கின. கொஞ்சமும் எதிர்பாராத பேட்ஸ்மேன்கள் இதனால் திக்குமுக்காடிப் போனார்கள். 90-களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கோலோச்சியதற்கு மிகப்பெரிய காரணம் இதுதான். ஏனெனில், இது 'மேட் இன் பாகிஸ்தான்'. இதை அறிமுகம் செய்து வைத்தவர், பாகிஸ்தான் பௌலரான சர்ஃபராஸ் நவாஸ்.

அந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் அணி மீது தொடர்ச்சியாக ball tampering புகார் வைக்கப்பட்டது. இம்ரான் கான் காலத்தில் தொடங்கி, பின்னர் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் என்று ரிவர்ஸ் ஸ்விங்கில் இவர்கள் மிரட்ட, இவர்களை சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. 'Looking after the cricket ball' என்று அக்ரம் தான் விளையாடிய காலத்தில் சொன்ன ஒரு வாசகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது பந்தின் தன்மையை ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஏற்றதுபோல் பராமரிப்பது. அதில் மொத்த அணிக்கும் பங்கு இருந்ததாகக் கூறினார் அக்ரம். ஆனால், அவர்கள் பந்தை எப்படிக் கையாண்டார்கள் என்பது பற்றியும், அவர்களின் ரிவர்ஸ் ஸ்விங் மந்திரத்தைப் பற்றியும் வெளியே சொல்ல மறுத்துவிட்டார். 

அவருக்கு அடுத்த தலைமுறை வீரரான ஷோயப் அக்தர், தான் அடிக்கடி பந்தை சேதப்படுத்தியதாக 'Controversially yours' என்ற தன் சுயசரிதையில் குறிப்பிட்டார். "எல்லா ஆடுகளுங்களும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும்போது, பௌலர்களான நாங்களும் இங்கு பிழைக்கவேண்டுமே!" என்று அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்த அக்தர், கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தான் பௌலர்களுமே பந்தை சேதிப்படுத்தியதாக எழுதியிருந்தார். அக்தர் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக இரண்டு முறை தண்டிக்கப்பட்டவர். இவ்வளவு ஏன், 1990-ல் பாகிஸ்தான் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக நியூசிலாந்து வீரர்கள் கிறிஸ் பிரிங்கிள், மார்டின் குரோவ் ஆகியோரும் ஒப்புக்கொண்டனர். 

ball tampering

Infography: Mahesh

"நான் பேட்டிங் செய்தபோது, எதேச்சையாக பந்தை கையில் எடுத்துப் பார்த்தேன். அப்போது பந்தின் ஒரு பகுதி மிகவும் கடுமையாக அடி வாங்கியிருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. அதனால், அந்த தொடரின் 3-வது போட்டியில் நாங்களும் அதைப் பயன்படுத்தினோம்" என்று 2006-ம் ஆண்டு ஒரு பேட்டியில் கூறினார் மார்டின் குரோவ். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அக்ரம் கூறிய 'Looking after the cricket ball' என்பது ball tampering தான் என்று ஒருவகையில் தெளிவாகிறது. 

அக்ரம் சொல்லியதன்மூலம், இந்த ball tampering அனைத்து வீரர்களுக்குமே வேலையாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதும் புரிகிறது. பௌலர் மட்டுமே செய்தால், அதன் தன்மையை மாற்ற தாமதமாகும். அனைவரும் அதில் ஈடுபட்டால், பந்து சீக்கிரம் பழசாகும். அதனால், அந்தப் பொறுப்பு ஃபீல்டர்களின் தலையிலும் விழுகிறது. மார்கஸ் டிரஸ்கோதிக், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி முதல் இப்போது பேங்க்ராஃப்ட் வரை அதன் பலிகடாதான். இப்போது பேங்க்ராஃப்ட் பந்தைச் சேதப்படுத்தியதன் நோக்கம் புரிகிறதா..?

ஸ்விங் ஆஸ்திரேலியா

ஆனால், ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவைக் கையில் எடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பந்துவீச்சாளர்களின் ஸ்விங் மூவ்மென்ட்களை தொடர்ந்து கண்கானித்த ஒரு புள்ளிவிவரம், கடந்த 2 ஆண்டுகளில், (25-வது ஓவர் முதல் 80-வது ஓவர் வரை) ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பௌலர்கள் சராசரியாக 0.82 டிகிரி அளவுக்குத்தான் ஸ்விங் மூவ்மென்ட் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்கிறது. மற்ற அணிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது மிகவும் குறைவு. சொல்லப்போனால், ஜிம்பாப்வேவைத் தவிர அனைத்து அணியின் பௌலர்களுமே ஆஸ்திரேலியாவைவிட நல்ல ஸ்விங் மூவ்மென்ட் ஏற்படுத்தியுள்ளனர். இத்தனைக்கும் இன்றைய தேதிக்கு ரிவர்ஸ் ஸ்விங் மன்னனாகக் கருதப்படும் மிட்சல் ஸ்டார்க் இருந்தும் இந்த நிலமை!

சரி, எத்தனையோ அணிகள், எத்தனையோ முன்னணி வீரர்கள் அதைத் தொடர்ந்து செய்திருக்கின்றன. ஆனால், இப்போது ஆஸ்திரேலிய அணி மீதுமட்டும் ஏன் இவ்வளவு உக்கிரம் காட்டவேண்டும்..? பாகிஸ்தானியர்கள் அதைப் பயன்படுத்தியதிலும், ஆஸ்திரேலியர்கள் அதைப் பயன்படுத்தியதிலும் ஒரு வித்யாசம் இருக்கிறது... நோக்கம்! அக்தர் தன் சுயசரிதையில் சொல்லியிருப்பது - "Every pitch is favouring the batsmen and this is the only way to SURVIVE". அக்தர் செய்ததற்கோ, அக்ரம் செய்ததற்கோ, இம்ரான் கான் செய்ததற்கோ காரணம் அதுதான். கொஞ்சம் கூட பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத ஆடுகளங்களில் 'சர்வைவ்' ஆகவேண்டும். அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட போட்டியையும் டார்கெட் செய்து, அந்த ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. 

 

ஆனால், ஆஸ்திரேலியா செய்ததன் நோக்கம், 'தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும். இந்தத் தொடரை வெல்லவேண்டும்' என்பது மட்டுமே. இப்படிப் பட்டவர்கள் வெற்றிக்காக அடுத்து எந்த அளவுக்கும் செல்வார்கள். அதற்காக பாகிஸ்தானியர்கள் செய்ததை நியாயப்படுத்தவில்லை. அதுவும் தவறுதான். ஆனால், ஆஸ்திரேலியர்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத தவறு. ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு கலை. அக்ரம் சொன்னதுபோல் அது அறிவியல். அறிவியலில் புகுத்தப்படும் திருட்டுத்தனங்கள் மோசமான பின்விளைவை மட்டுமே கொடுக்கும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். 

https://www.vikatan.com/news/sports/120324-the-science-behind-reverse-swing-and-how-bowlers-altered-it.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.