Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Featured Replies

மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

 

Mangala-missing-tent-300x199.jpgகிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார்.

கிளிநொச்சியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, முல்லைத்தீவு செல்லும் போது, வழியில் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்துக்கு மங்கள சமரவீர, சென்றார்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Mangala-missing-tent.jpg

இதன்போது அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்லுமாறும், உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு காணாமல்போனோருக்கான பணியகத்தின் உதவியை நாடுமாறும்  ஆலோசனை கூறினார்.

எனினும், இதற்கு முன்னர் பல தடவைகள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை  என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அந்தக் கோரிக்கையை நிராகரித்தனர். தம்மை வந்து சந்தித்ததற்காக மங்கள சமரவீரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதேவேளை, தமது வடக்கிற்கான பயணத்தின் போது நடந்த சந்திப்புகள் குறித்து உடனுக்குடன் கீச்சகத்தில் பதிவுகளையும் படங்களையும் இட்டு வரும் மங்கள சமரவீர, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தது தொடர்பான எந்தப் படத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 

http://www.puthinappalakai.net/2018/04/01/news/30142

  • தொடங்கியவர்
 
 

அமைச்சர் மங்கள பதிவிடாத படங்கள்!!

 

வடக்கு மாகா­ணத்­துக்கு வருகை தந்­துள்ள நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தனது ஒவ்வொரு பயணங்கள் குறித்து  உடனுக்குடன் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டார். எனினும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்கைளைச் சந்தித்தமை தொடர்பான ஒளிப்படங்களை அவர் பதிவிடவில்லை.

நேற்று முல்லைத்தீவுக்குச் சென்ற அவர் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­விட்டு அங்­கி­ருந்து புறப்­ப­டும்­ போது போராட்­டக்­கா­ரர்­க­ளைக் கண்டு, தானாக அவர்­க­ளி­டம் சென்று கலந்­து­ரை­யா­டி­னார். அவர்­க­ளின் போராட்­டம் தொடர்­பில் கேட்­ட­றிந்­தமை குறிப்பிடத்தக்கது.

DZrSgihU8AE5CIY-300x205.jpgDZrSgigV4AAmx9q-300x219.jpgDZrSgihVQAEKRZ5-300x178.jpg

http://newuthayan.com/story/80531.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.