Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானின் ஆதி பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

தமிழ்நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலர்கூட இல்லாத நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஓவரா தெரியேல்ல? tw_blush:

அப்படியல்ல.. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் சிலரின் அடித்தளத்தை ஆட்டி வைக்கின்றது. ஆனால் அதை நேரடியாக வெளியில் சொல்லவும் முடியவில்லை. :unsure: ஆகவே வழக்கமான அவதூறுகளை அள்ளி விடுகிறார்கள். குறிப்பாக,

1) தமிழரை சாதி அடிப்படையில் பிரிக்கின்றார் [அதாவது தமிழர் எனும் போர்வைக்குள் குந்தியிருந்து ஆட்சி அதிகாரத்தை சுவைக்கும் வடுகர்களை (தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்) பிரித்து எறிந்துவிட்டார்].

2) ஈழ விதவையை மறுமணம் செய்வதாக சொல்லிவிட்டு அதை செய்யவில்லை.

3) சைமன்

4) இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னார்.

5) வேலை தூக்கிவிட்டார்

6) கிறீஸ்துவர்களை திட்டிவிட்டார்.

7) இந்துக்களை பிரித்துவிட்டார்.

8) நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டார்.

இப்படியான விமர்சனங்கள் மட்டுமே. நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்ன. அவற்றில் உள்ள சரி, தவறு என்ன? கூட்டணி இல்லாமல் பயணிக்க முயல்வது சரியான முயற்சிதானா? இப்படியான தர்க்கங்களை முன்னெடுக்க வைரவன் போன்றவர்கள் தயாராக இல்லை. :unsure:

ஏன் என்றால்
எனக்கு இவை
அவசியமற்றவை
ஈழத் தமிழனுக்கு
அவசியமற்றவை

 தெலுங்கர்களை
கிறிஸ்தவர்களை
400 வருடங்களுக்கும்
மேலாக ஒட்டி
உறவாடும் இனங்களை
பிரித்து தமிழக
தமிழர்களை
தனிமை படுத்தட்டும்

தமிழர்களை  
எதிரிகளாக
பார்க்கும்
பார்ப்பனீயத்துக்கும்  
இந்துத்துவாவுக்கும்
ஹிந்தியத்துக்கும்  
எதிராக
திராவிட அரசியலை
முன் வைக்காமல்
பெரியாரின் கொள்கைகளை
முன் வைக்காமல்
தமிழ் தேசியத்தை
முன் நிறுத்தட்டும்

விஜயலடசுமியை
ஏமாற்றட்டும்
சிங்களத்து பூஜாவை
நாயகி ஆக்கி
தன் படங்களில்
நடிக்க விடட்டும்
என்னவென்றாலும்
செய்யட்டும்

அது தமிழக
மக்களின் பிரச்சனை
அதை
ஏற்பதும்
ஏற்காமல் விடுவதும்
அவர்களின்
சனநாயக உரிமை

ஆனால் சீமான்
தன் அரசியலை
இந்திய
தமிழக அரசியலுடன்
மட்டுப்படுத்திக்
கொள்ளட்டும்

ஈழத்தமிழர்களின்
போராட்டத்தை
விடுதலை புலிகளின்
தியாகத்தை
தலைவர் பிரபாகரனின்
பெயரை
தன் சொந்த அரசியல்
லாபத்துக்காக
பயன்படுத்துவதை


2 டி.எம்.சி
தண்ணீரை கூட
வாங்கி தர வக்கற்ற
அடிமைகள்
எமக்கு,
ஈழத்தமிழர்களுக்கு
விடுதலையை வாங்கி
தருவர் என்ற போலி
பிம்பம் காட்டும்
பம்மாத்து அரசியலை

புலம்பெயர் நாடுகளில்
உள்ள
ஈழத்தமிழர்களை
குறி வைத்து செய்யும்
அரசியலை
போட்டி மாவீரர்
தினம் வைத்து
செய்யும்
பிரித்தாளும் அரசியலை

நான்
மற்றும் ஈழ
அரசியலை உண்மையாக
நேசிக்கும் எவரும்
கண்டிப்பாக எதிர்ப்போம்

சரி உங்களிடம்
நேரிடையாக
ஒரு கேள்வி

நான் இணைத்த
வீடியோவில்
சீமான் கொடுக்கும்
பேட்டி தொடர்பாக
உங்களின் கருத்து
என்ன?
அவர் சொல்வதை
நம்புகின்றீர்களா?
பதில் சொல்லாமல்
பயந்து எஸ்கேப் ஆக
வேண்டாம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

சரி உங்களிடம்
நேரிடையாக
ஒரு கேள்வி

சைமன் ஈழம் வாங்கி தருவதை பிறகு பார்ப்பம்.

நீஙகள் அதுக்காக ஏதாவது போராடினியளோ எண்டத முதல்ல சொல்லுங்க பாப்பம்.

அல்லது சாய்மனை கதிரையில் இருந்து நியாயப் பிளப்பு தானோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

சைமன் ஈழம் வாங்கி தருவதை பிறகு பார்ப்பம்.

நீஙகள் அதுக்காக ஏதாவது போராடினியளோ எண்டத முதல்ல சொல்லுங்க பாப்பம்.

அல்லது சாய்மனை கதிரையில் இருந்து நியாயப் பிளப்பு தானோ?

ஒருவரை பற்றி
எதுவும் தெரியாமல்
பிதற்றுவது
நீங்கள் தான்

போராட்டத்திற்கு
ஏதாவது ஒரு விதத்தில்
பங்காற்றிய எவராலும்
சீமான்
ஈழ போராட்டத்தை
தலைவரை
புலிகளின் பெயரை
தன் சுயலாபத்துக்கு
பயன்படுத்துவதை
ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்

முடிந்தால் யாழ்
இணையத்த்தில்
தாம் முன்னால்
போராளிகள்
என்றதை பகிரங்கமாக
சொல்லும்
நந்தன்
அஞ்சரன்
சாத்திரி
போன்றோரிடம்
சீமான் ஆதரவு
பற்றி கேட்டுப்
பார்க்கவும்

ஒன்று
மட்டும் புரிகின்றது
நீங்கள் சைமனுக்காக
குத்தி முறிவதில் இருந்து
தெரிகின்றது
புலம்பெயர்ந்த பின்  
போராட்டம்
பற்றி அறிந்த
விசிலடிச்க்கான் குஞ்சுகளில்
ஒருவர் என்று

(
இசைக்கலைஞனிடம்
கேட்டதுக்கு
நீங்கள் பதில்
தருகின்றீர்கள்
இருவரும்
ஒரே ஆட்கள்
போலும்)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வைரவன் said:

ஒன்று மட்டும் புரிகின்றது
நீங்கள் ரஜனிக்காக குத்தி முறிவதில் இருந்து
தெரிகின்றது,  விசிலடிச்க்கான் குஞ்சுகளில்....ஒருவர் என்று

தலைவா, வயிரவா

சுத்தி வளைக்காம கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்கோ... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

தலைவா, வயிரவா

சுத்தி வளைக்காம கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்கோ... :rolleyes:

என் கருத்தை
மேற்கோள் காட்டி
எழுதும் போது
அதில் சைமன் என்று
இருந்ததை
ரஜனி என்று
மாற்றி எழுதி
இருப்பதில் இருந்தே
புரிகின்றது


பொய்யன் சீமானின்
பொய் சொல்லும்
பேட்டியை  இணைத்து
விட்டமையால்
எவ்வளவு
மன உளைச்சலில்
இருக்கின்றிர்கள்
என்று

பொய்யனை நம்புகின்ற
நீங்கள்  
நான் எழுதாத
ஒன்றை
நான் எழுதியதாக
எழுதி
நீங்களும் ஒரு
பொய்யன் என்று
காட்டி விட்டீர்கள்

உங்கள் கேள்விக்கு
பதில்

2003 வரைக்கும்
தாயகத்திலும்  
பின் பேச்சு வார்த்தை
காலத்தில்  
குறிப்பிட்ட  
 நாடொன்றில்
தமிழர் புனர்வாழ்வு
கழகத்தில் பொறுப்பு
ஒன்றிலும்
இருந்துள்ளேன்

போதுமா
இல்லை
ஆதாரம் வேண்டும்
என்று
அடம்
பிடிப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வைரவன் said:

ஏன் என்றால்
எனக்கு இவை
அவசியமற்றவை
ஈழத் தமிழனுக்கு
அவசியமற்றவை

ஈழத்தமிழன் சார்பாக பேசவல்ல உரிமையை உங்களுக்குத் தந்த மக்கள் கூட்டம் எது? :)

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வைரவன் said:

2003 வரைக்கும் தாயகத்திலும்  பின் பேச்சு வார்த்தை காலத்தில்  
குறிப்பிட்ட  நாடொன்றில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பொறுப்பு ஒன்றிலும் இருந்துள்ளேன்.

அதுதானே பார்த்தேன்... பறிக்குள்ள கையை சைமன் போட்டு விட்டார்....உங்கள் பிரச்னை வேறு போல இருக்கிறது.

இங்கே பாருங்கோ தலைவா... நான் புலிக்கும் ஆதரவு இல்லை... சிங்கத்துக்கும் ஆதரவு இல்லை. ஈழப் போரட்டத்தில், சாய்மனைக் கதிரை நியாய பிளப்பு மட்டும் தான்.....

சீமானின் தமிழை, தமிழுணர்வை ரசிப்பது மட்டுமே.... முன்பு வைகோவை ரசித்தேன். அவர் அலம்பத் தொடங்கியபின்னர் சீமான்...

அவர் வந்து மந்திரத்தில, ஈழ மாங்காய் புடுங்கி தருவார் என்று அலம்பரை பண்ணுவதில்லை. அந்தளவுக்கு நினைக்கும் அடி முட்டாளும்  இல்லை.

ஈழ விடுதலை என்று காசு அடித்த கோஸ்ட்டிகள் கதைப்பது வேறு. நடுநிலைமை யாளர்கள் கதைப்பது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வைரவன் said:

 தெலுங்கர்களை
கிறிஸ்தவர்களை
400 வருடங்களுக்கும்
மேலாக ஒட்டி
உறவாடும் இனங்களை
பிரித்து தமிழக
தமிழர்களை
தனிமை படுத்தட்டும்

அவர்களே வீட்டுக்குள் தெலுங்கில்தான் பேசுவார்கள். நீங்க வேற.. எனது இரண்டு கல்லுரி நண்பர்கள் அவ்வாறே.. அதில் ஒருவரது இல்லத் திருமணத்தில் பார்த்துள்ளேன். வெள்ளைக்காரன் 400 வருடங்களாக அமெரிக்காவில் உள்ளான். அதுக்காக பழங்குடி மக்களாக (Native American) ஆகிவிட்டானா? tw_blush:

4 hours ago, வைரவன் said:

தமிழர்களை  
எதிரிகளாக
பார்க்கும்
பார்ப்பனீயத்துக்கும்  
இந்துத்துவாவுக்கும்
ஹிந்தியத்துக்கும்  
எதிராக
திராவிட அரசியலை
முன் வைக்காமல்
பெரியாரின் கொள்கைகளை
முன் வைக்காமல்
தமிழ் தேசியத்தை
முன் நிறுத்தட்டும்

பெரியாரின் கொள்கைகள்தான் ஆரிய இந்த்துத்துவம் தமிழகத்தில் இவ்வளவு தூரம் உள்நுழைந்ததுக்கு காரணம். எமது மக்கள் லட்சக்கணக்கில் அழிந்துபோக காரணம் திராவிடம் எனும் ஏமாற்று அரசியல். இந்தி எதிர்ப்பில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டவன் தமிழன். அதில் குளிர் காய்ந்தது திராவிட தெலுங்கர்கள்.

சரி.. ஒரே ஒரு கேள்வி. ஈழக்தில் இறுதிப்போர் நடந்தபோது முத்துக்குமார் உட்பட பச்சைட் தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களே.. ஒரு திராவிடர் செய்த தியாகத்தை சொல்லுங்க. திராவிடம் என்பது தமிழர்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை சுவைக்க உருவாக்கப்பட்ட கொள்கை.

"திராவிட்" என்பது தென்னக பிராமணர்களை குறிக்கும் சொல். அதைக் கொண்டுதான் இந்துத்துவாவை அழிப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வைரவன் said:

ஈழத்தமிழர்களின்
போராட்டத்தை
விடுதலை புலிகளின்
தியாகத்தை
தலைவர் பிரபாகரனின்
பெயரை
தன் சொந்த அரசியல்
லாபத்துக்காக
பயன்படுத்துவதை


2 டி.எம்.சி
தண்ணீரை கூட
வாங்கி தர வக்கற்ற
அடிமைகள்
எமக்கு,
ஈழத்தமிழர்களுக்கு
விடுதலையை வாங்கி
தருவர் என்ற போலி
பிம்பம் காட்டும்
பம்மாத்து அரசியலை

புலம்பெயர் நாடுகளில்
உள்ள
ஈழத்தமிழர்களை
குறி வைத்து செய்யும்
அரசியலை
போட்டி மாவீரர்
தினம் வைத்து
செய்யும்
பிரித்தாளும் அரசியலை

நான்
மற்றும் ஈழ
அரசியலை உண்மையாக
நேசிக்கும் எவரும்
கண்டிப்பாக எதிர்ப்போம்

ங்கே .....
விடுதலை புலிகளின் தியாகத்தை சொந்த இலாப நோக்கத்திற்காக சீமான் பாவிப்பதை பார்த்து பதறும் நீங்கள் ....கூத்தமைப்பு பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பம்பலடித்துவிட்டு  தலைவர் கைகாட்டிய கட்சி,கம்பிநீட்டிய கட்சி  என்று தேர்தல் நேரத்தில் எடுத்து விடும் ஜல்சாக்களையும் கில்மாக்களையும் கண்டு கொதித்தெளாமல் கண்டும் காணாமல் விடுவதன் காரணமென்னவோ ...? 

உங்களது கருத்தை பார்த்தால் புலம் பெயர் தமிழர்கள் எல்லாம் விரல் சூப்பும் பாப்பாக்கள் ,அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் என்று நினைக்கிறீர்கள் போலையே ... சீமான் இல்லை எந்த கோமான் வந்தாலும் தமிழ் ஈழம் வாங்கித்தர முடியாது என்று எல்லோருக்கும் தெரியும் , ஹிந்தியத்திலிருந்து தமிழ்நாடு வெளியேறும்வரை அது சாத்தியமே இல்லை 
இருந்தும் நாங்கள் எல்லோரும் அவரை ஆதரிக்க காரணம் அவர் முன்னெடுக்கும் அனைத்து போராட்டத்திலும் தலைவரை முன்னிறுத்துகிறார்,
ஒரு காலத்தில் தீவிரவாதியாக இருந்த தேசிய தலைவரை இப்போது ஒரு இனத்தின் தலைவனாக தமிழக இளவட்டங்கள் மனதில் கொண்டு சேர்த்தவன் சீமான் மட்டுமே, அதுகூட ஒருவகையில் புலிகளின் தியாகத்தை பெருமைப்படுத்தும் செயல்தான் ,  இங்கே படம் வைத்திருந்தாலே கைது செய்யப்படும் நிலையில் அங்கே தலைவரின் படத்தை பேனர் அடித்து சட்டையில் பதித்து அணியுமளவுக்கு மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவன் சீமான் மட்டுமே அவனுக்கில்லாத அருகதை வேறு எந்த மொள்ளமாரிக்கும் இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இசைக்கலைஞன் said:

ஈழத்தமிழன் சார்பாக பேசவல்ல உரிமையை உங்களுக்குத் தந்த மக்கள் கூட்டம் எது? :)

என்
பெயரை குறிப்பிட்டு
இன்று
நீங்கள்
கேட்ட கேள்விக்கு
நான் பதில்
எழுதியுள்ளேன்

நான் கேட்ட
கேள்விக்கு பதில்
என்ன

4 hours ago, வைரவன் said:

சரி உங்களிடம்
நேரிடையாக
ஒரு கேள்வி

நான் இணைத்த
வீடியோவில்
சீமான் கொடுக்கும்
பேட்டி தொடர்பாக
உங்களின் கருத்து
என்ன?
அவர் சொல்வதை
நம்புகின்றீர்களா?
பதில் சொல்லாமல்
பயந்து எஸ்கேப் ஆக
வேண்டாம்

 

 

 

17 minutes ago, Nathamuni said:

அதுதானே பார்த்தேன்... பறிக்குள்ள கையை சைமன் போட்டு விட்டார்....உங்கள் பிரச்னை வேறு போல இருக்கிறது.

இங்கே பாருங்கோ தலைவா... நான் புலிக்கும் ஆதரவு இல்லை... சிங்கத்துக்கும் ஆதரவு இல்லை. ஈழப் போரட்டத்தில், சாய்மனைக் கதிரை நியாய பிளப்பு மட்டும் தான்.....

சீமானின் தமிழை, தமிழுணர்வை ரசிப்பது மட்டுமே.... முன்பு வைகோவை ரசித்தேன். அவர் அலம்பத் தொடங்கியபின்னர் சீமான்...

அவர் வந்து மந்திரத்தில, ஈழ மாங்காய் புடுங்கி தருவார் என்று அலம்பரை பண்ணுவதில்லை. அந்தளவுக்கு நினைக்கும் அடி முட்டாளும்  இல்லை.

ஈழ விடுதலை என்று காசு அடித்த கோஸ்ட்டிகள் கதைப்பது வேறு. நடுநிலைமை யாளர்கள் கதைப்பது வேறு.

நான் எழுதிய
கருத்தை மாற்றி
எழுதி
அதை மேற்கோள்
காட்டி எழுதிய
பொய்யர் தானே
நீங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வைரவன் said:

நான் எழுதிய கருத்தை மாற்றி எழுதி அதை மேற்கோள் காட்டி எழுதிய பொய்யர் தானே நீங்கள்??

நீங்கள் ரஜனி ரசிகர் என்று சொல்வது பொய்மையோ?

தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பொறுப்பு ஒன்றிலும் இருந்துள்ளேன் என்று நீங்கள் ஓத்துக் கொண்ட பின்னர்.....உங்களுடன் இனியும் விவாதிப்பது காலவிரயம்....:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நீங்கள் ரஜனி ரசிகர் என்று சொல்வது பொய்மையோ?

தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பொறுப்பு ஒன்றிலும் இருந்துள்ளேன் என்று நீங்கள் ஓத்துக் கொண்ட பின்னர்.....உங்களுடன் இனியும் விவாதிப்பது காலவிரயம்....:rolleyes:

ஹாஹாஹா
நான் ரஜனி ரசிகன்
என்று எங்கு
சொல்லியுள்ளேன்
பாவம்
நீங்கள்
முதலில்
வைகோ ஆதரவாளரா
என கேட்டீர்கள்
பிறகு
என் கருத்தை
மாற்றி எழுதி
ரஜனி ரசிகரா என்று
கேக்கின்றீர்கள்

உங்கள் சைமன்
கமலகாசனை
நம்புவது போன்று
கூத்தாடிகளை
நம்பும்
ஆள் நான் இல்லை

மற்றது,
த.பு.க
போராட்டத்துக்கு
செய்த மாபெரும்
பங்களிப்புகள்
மற்றும் சுனாமி
காலத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக செய்த
பணிகள்
எல்லாவற்றையும்
புறம் தள்ளி விட்டு
ஈற்றில் காசை அடிச்ச
ஆட்களை மட்டும்
மனதில் வைத்து
கேவலப்படுத்தும்
உங்களை போன்றவர்களுடன்
விவாதித்தும் பயனில்லை
தான்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வைரவன் said:

த.பு.க போராட்டத்துக்கு செய்த மாபெரும் பங்களிப்புகள் மற்றும் சுனாமி காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்த பணிகள் எல்லாவற்றையும் புறம் தள்ளி விட்டு ஈற்றில் காசை அடிச்ச ஆட்களை மட்டும் மனதில் வைத்து கேவலப்படுத்தும்......

உங்கட பம்மாத்துகளை வேற எங்காவது போய் சொல்லுங்க... அங்கிருந்தவர்கள் செய்தார்கள் தான், இங்கிருந்த உங்களை போன்றவர்களால், அடித்த, அடியில் அங்கே போனது கொசுறு.

அதன் தவறான நடவடிக்கையினால் அது தடை பண்ணப் பட்டதா இல்லையா? இதனை தான் சொல்வது கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவது என்று...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

உங்கட பம்மாத்துகளை வேற எங்காவது போய் சொல்லுங்க... அங்கிருந்தவர்கள் செய்தார்கள் தான், இங்கிருந்த உங்களை போன்றவர்களால், அடித்த, அடியில் அங்கே போனது கொசுறு.

அதன் தவறான நடவடிக்கையினால் அது தடை பண்ணப் பட்டதா இல்லையா? இதனை தான் சொல்வது கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவது என்று...

உங்கள் மொக்குத்தனத்துக்கு
அளவு இல்லையா?

புலிகளுடன் தொடர்பு
கொண்டதால் தான்
அது தடை செய்யப்பட்டது
என்பதற்கு கூட
தெரியாமல்
அரசியல் எழுத
வந்து விட்டீர்கள்
அத்துடன் புலம்பெயர்
நாடுகளில் இருந்து
கிடைக்கப்பெற்ற
பணத்தால் தான்
அங்கு பல மகத்தான
விடயங்களை
செய்ய முடிந்தது
என்பதையும்
உங்கள் புத்தி
சிந்திக்க தவறி விட்து

யாழ் இணையத்தின்
பவர் ஸ்ரார் நீங்கள்


ஒரு வேலை
செய்யுங்கள்
த.பு.க தொடர்பாக
ஒரு திரி திறவுங்கள்
அதில் கதைப்பம்
இது பொய்யன்
சைமன் பற்றிய
திரி
அவரின் பொய்யுரைக்கும்
பேட்டி பற்றிய
திரி

என் வரலாறு கேட்டீர்கள்
பதில் சொன்னேன்
இப்ப திரியை
திசை திருப்புகிண்றீர்கள்

மற்றவரின் கருத்தை
திரித்து எழுதும்
ஒரு பொய்யர்
உங்களிடம்
வேறு
எதை எதிர்பார்க்க
முடியும்

பொய்யர்
உங்களிற்கு
இந்த திரியில்
நான் வைக்கும்
இறுதி கருத்து
இது

வந்து மிச்சத்தை
ஊளையிடுங்கள்  

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வைரவன் said:

 

புலிகளுடன் தொடர்பு கொண்டதால் தான் அது தடை செய்யப்பட்டது

 

நீங்க வேற...

புலிகளுடன் அல்ல... வைரவா...தடை செய்யப்பட்டது....காரணம்... அடி... பேயடி....

தர்மத்தாபன ஆணைக்குழு விசாரணை நடந்ததா இல்லையா... பதில் கொடுக்க முடியாத நிலையில்... புலி கதை விடப்பட்டதா இல்லையா...

அதில இருந்த ஒருத்தர்...உங்க ... 1.7 மில்லியனுக்கு ஒரு பெட்ரோல் நிலையத்தினை ரெடி காஷ் கொடுத்து வாங்கினதும் இல்லாமல்.... லேண்ட் ரோவர் புது பிராண்ட் ஓடித்திரியிறார்..

இங்க அடிச்ச காசை வெளிய அனுப்பி, வங்கி மூலமா எடுப்பிச்சு வெள்ளை ஆக்கி.... கேட்டால்... தம்மை மாதிரி நாட்டுக்கு... கிழிச்சவார்கள் யார் என்று அடுத்தவன் மடையன் என்று கதை விடுறார்... 


 

 

3 hours ago, இசைக்கலைஞன் said:

பெரியாரின் கொள்கைகள்தான் ஆரிய இந்த்துத்துவம் தமிழகத்தில் இவ்வளவு தூரம் உள்நுழைந்ததுக்கு காரணம். எமது மக்கள் லட்சக்கணக்கில் அழிந்துபோக காரணம் திராவிடம் எனும் ஏமாற்று அரசியல். இந்தி எதிர்ப்பில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டவன் தமிழன். அதில் குளிர் காய்ந்தது திராவிட தெலுங்கர்கள்.

"திராவிட்" என்பது தென்னக பிராமணர்களை குறிக்கும் சொல். அதைக் கொண்டுதான் இந்துத்துவாவை அழிப்பீர்களா?

அட இப்படியும் ஒரு விசயம் உள்ளதோ? திராவிடர் என்றால் பிராமணர் எல்லாம் புதுசாய் இருக்கு எனக்கு. அப்ப நானும் ஒரு ஐயரோ :35_thinking:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.