Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்றயதினம்

Featured Replies

  •  
  • பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!!
 
 

பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!!

யாழ்ப்பாணத்தில் யாருக்குச் சிலைகள் அமைத்தாலும் நாம் பக்கபலமாக இருப்போம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்குச் சிலை அமைத்தாலும் நாம் எதிர்க்க மாட்டோம்.

இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் ஜெகன் தெரிவித்தார். மாநகர சபையின் நேற்றைய முதலாவது அமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்தில் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு நாம் ஆட்சேபிக்க மாட்டோம். நீங்கள் யாருடைய சிலை என்றாலும் நிறுவலாம்.அதற்கு நாம் பக்க பலமாக இருப்போம். நாங்கள் இந்தச் சபையில் ஒரு கூட்டுக் குடும்பமாகச் செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி பற்றிய விசாரணைக்கும் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம் –– என்றார்.

http://newuthayan.com/story/84141.html

 

 

 

  • துவக்­குத் தூக்­கிய எல்­லோ­ருக்­குமே சிலை வைக்க முடியாது- லோக­த­யா­ளன் !!
 
 

துவக்­குத் தூக்­கிய எல்­லோ­ருக்­குமே சிலை வைக்க முடியாது- லோக­த­யா­ளன் !!

தியாகி திலீ­பன், மாந­கர சபை­யில் மட்­டு­மன்றி எமது இனத்­தின் அடை­யா­ளத்­துக்­கும் அப்­பால் மனித குலத்­திற்கே அடை­யா­ள­மா­கத் திகழ்ந்­தார். போராட்ட வடி­வத்­துக்­குத் தாமே சொந்­தக்­கா­ரர் என்று மார்­தட்­டி­யோ­ரைக் கிழித்­தெ­றிந்து ஆகு­தி­யா­கிய ஒரு­வ­னுக்கே இன்று சிலை வைக்­கப்­ப­டு­கின்­றதே அன்றி துவக்­குத் தூக்­கி­ய­வர்­க­ளுக்­கெல்­லாம், அர­சி­யல் பேசி­ய­வர்­க­ளுக்­கெல்­லாம் சிலை வைக்­கும் சபை­யாக மாற்­று­மாறு கோர­வில்லை. புனி­தர்­களை மட்­டுமே கருத்­தில் கொள்­ள­வேண்­டும்.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பி­னர் ந.லோக­த­யா­ளன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் கன்னி அமர்வு சபை மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அங்கு கன்னி உரை­யாற்­று­கை­யில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். தமி­ழர் தம் தேச­வி­டு­த­லைக்­கா­கத் தம்­மு­யிரை உவந்­த­ளித்த வீர­ம­ற­வர்­களை அவர் உரை ஆரம்­பத்­தில் நினை­வு­கூர்ந்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்­தச் சபையை நம்பி யாழ்ப்­பாண மாந­கர சபை எல்­லை­யில், வாழும் பொது­மக்­க­ளும், பல்­லா­யி­ரம் வர்த்­த­கர்­கள், நிறு­வ­னத்­தி­ன­ரும் உள்­ள­னர். அவர்­க­ளின் வரிப்­ப­ணத்­தி­லும், பொது­மக்­க­ளின் மேம்­பாட்­டுக்­காக வழங்­கப்­பட்ட பணத்­தி­லும் இந்­தச் சபை­யின் பெய­ரில் பல கோடி சொத்­துக்­கள் உள்­ளன. அவை மழை­யி­லும் வெய்­யி­லி­லும் பழைய இருப்பா­கக் காணப்­பட்டு சபை பஞ்­சி­கா­வத்தை வியா­பார சந்­தை­போல் காட்­சி­ய­ளிக்­கி­றது.

சபை­யின் கடந்த ஆட்­சி­யில் ஊழல் நடந்­ததா என்று விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டும். அது நல்ல அறி­விப்பு, ஆனால் விசா­ரணை நடத்த இந்தச் சபை­யின் ஆயுள்­கா­லம் போது­மா­னதா என்று நான் அறி­யேன்.

இந்­தச் சபை­யில் கடந்த காலத்­தில் இடம்­பெற்ற விதி­மீ­றல் அல்­லது முறை­கேடு தொடர்­பில் பட்­டி­ய­லிட்­டால் 30 நிமி­ட­மும் போதாது. இருப்­பி­னும், சபைக்கு வர­வேண்­டிய வரு­மா­னங்­கள் பல தெரிந்தே இழக்­கப்­பட்­டுள்­ளன.

உதா­ர­ண­மாக யாழ்ப்­பாண நக­ரின் மத்­தி­யில் முத­லாம் மாடி­யில் இல.5 இல் இருந்த கட்­ட­டம் தெரிந்­து­கொண்டே கட்­சி­சார் நிறு­வ­னத்­துக்கு 2014 ஒக்­டோ­ப­ரில் வழங்­கப்­பட்­டது. 32 மாதங்­கள் எந்த வாட­கை­யும் செலுத்­தா­த­போ­தும் அதனை அற­விட எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கவோ, அடுத்த கட்­டத்­துக்­குக் கொண்­டு­செல்­லவோ இல்லை. இத­னால் சபைக்கு 10 இலட்­சத்து 16 ஆயி­ரம் ரூபா வரு­மா­னம் இன்­று­வரை செலுத்­தப்­ப­ட­வில்லை.

அதே­போல் தமது புகழ்ச்­சிக்­காக சபை­யின் சொத்தை தவ­றாக வழங்­கிய சம்­ப­வங்­க­ளும் உள்­ளன. உதா­ர­ண­மாக சபை­யின் வட புறத்தே உள்ள முன்­பள்­ளிக் கட்­ட­டத்­தில் இயங்­கிய ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை வெளி­யில் வாட­கைக்கு வீடு எடுத்து இயக்­கி­ய­போது சபை­யின் கட்­ட­டம் இல­வ­ச­மாக புல­னாய்­வா­ளர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்­டது. அவர்­கள் வெளி­யே­றி­ய­போ­தும் சபைக்கு அதிக செலவை வைத்­து­விட்டே சென்­றுள்­ள­னர்.

நக­ரைச் சீர்­ப­டுத்­த­வேண்­டு­மா­யின் கடந்த காலங்­க­ளில் நடை­பெற்ற தவ­று­கள் களை­யப்­ப­ட­வேண்­டும். தவ­றுக்­குக் கார­ண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். மாகாண அமைச்­சர்­க­ளின் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக் குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மை­யில் ஒரு விசா­ரணை நடத்­தி­யி­ருந்­தார். அந்த அறிக்கை முத­ல­மைச்­ச­ரி­டம் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே புதி­ய­தொரு விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்டு மூன்று மாதங்­க­ளுக்­குள் அறிக்கை சமர்­பிக்­கப்­ப­ட­வேண்­டும். அந்­தப் பரிந்­து­ரை­களை எமது சபை சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் உரிய திணைக்­க­ளங்­கள் ஊடாக விரை­வா­கச் செய்து முடிக்­க­வேண்­டும்.

தவ­றி­னால் மக்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளாக நேரி­டு­வோம். இந்­தச் சபை­யின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் கடந்த கால மோசடி தொடர்­பில் விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட வேண்­டும் என்ற எனது கோரிக்­கைக்கு எதி­ராக இருப்­பார்­கள் என்று எண்­ண­வில்லை. இத­னைச் செய­லு­ருப்­ப­டுத்­த­வேண்­டி­யது இந்­தச் சபை­யின் மேஜர் ஆனோல்ட்­டின் கடமை – என்­றார்.

http://newuthayan.com/story/84143.html

 

 

  • கடந்த ஆட்­சிக்கு முன்­ன­ரான ஊழல்­க­ளை­யும் விசா­ரி­யுங்­கள்- றெமீ­டி­யஸ் !!
 
 

கடந்த ஆட்­சிக்கு முன்­ன­ரான ஊழல்­க­ளை­யும் விசா­ரி­யுங்­கள்- றெமீ­டி­யஸ் !!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த ஆட்­சி­யில் மட்­டு­மன்றி அதற்கு முன்­னைய காலத்து ஆட்­சி­யில் இடம்­பெற்ற ஊழல்­கள் தொடர்­பி­லும் முழு­மை­யான விசா­ரணை நடத்­த­வேண்­டும்.

இவ்­வாறு மாந­கர சபை உறுப்­பி­ன­ரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான மு.றெமீ­டி­யஸ் சபை­யில் கோரி­னார்.யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் நேற்­றைய கன்னி அமர்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் கடந்த ஆட்­சிக் காலத்­திற்கு முன்­ன­ரும் பல ஊழல் மோச­டி­கள் இடம்­பெற்­றுள்­ளன. பல கட்­ட­டங்­கள் எவ்­வித கேள்­விப் பத்­தி­ரங்­க­ளும் கோரா­மல் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவை தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும்.

யாழ்ப்­பா­ணத்­தில் எமது எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் உள்ள சிலை­கள் சீர­மைப்­புச் செய்­யப்­பட வேண்­டும்.எதிர்­வ­ரும் சித்­தி­ரைப் புத்­தாண்டை நாமும் கொண்­டாட வேண்­டும்.நாங்­கள் இந்­தச் சபை­யில் எதி­ரிக் கட்­சி­யாக இருக்க விரும்­ப­வில்லை.மாறாக எதிர்க் கட்­சி­யா­கவே இருக்க விரும்­பு­கின்­றோம்.நாம் சபைக்கு முழு­மை­யான பக்­க­ப­ல­மாக இருப்­போம்.என்­றார்.

http://newuthayan.com/story/84147.html

 
 
 
 
 
 

கடந்த மாநகர ஆட்சியில் ஊழலா? விசாரணை நடத்துங்கள்- முன்னாள் மேயர்!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்­த­கா­லங்­க­ளில் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக அர­சி­யல் உள்­நோக்­கத்­துக்­கா­கவே கூறப்­ப­டு­கின்­றது. எந்த விசா­ர­ணைக்­கும் நான் தயா­ரா­கவே இருக்­கி­றேன்.

இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் மேய­ரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா தெரி­வித்­தார்.சபை­யின் முத­லா­வது அமர்வு நேற்று இடம்­பெற்­ற­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளைப் பார்த்­துப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்­கள் என்­மீது ஊழல் குற்­றச்­சாட்டை முன்­வைக்­கின்­ற­னர்.

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் அனைத்­துமே அர­சி­யல் உள்­நோக்­கம் கொண்­டவை. இவை பற்­றிய எந்த விசா­ர­ணைக்­கும் நான் தயா­ரா­கவே இருக்­கி­றேன். முழு ஒத்­து­ழைப்­பும் வழங்­கு­வேன்.

வடக்கு மாகாண சபை­யில் அங்­கம் வகித்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. அந்த விசா­ர­ணை­யின் பின்­னர் அவர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளர்.எனவே யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஊழல் தொடர்­பாக விசா­ரணை செய்ய குழு ஒன்றை நிய­மிக்க வேண்­டும்.அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வேன் – என்­றார்.

http://newuthayan.com/story/84145.html

 
 
 
 
 
 

அரசுடன் இயங்கியவர்களுக்கு சிலைகள் அமைக்க வேண்டாம்!!

எமது தேசத்­தின் விடு­த­லைக்­கா­கப் போரா­டி­ய­வர்­க­ளின் சிலை­களே அமைக்­கப்­பட வேண்­டும்.மாறாக இலங்கை அர­சு­டன் இணைந்து செயற்­பட்­ட­வர்­க­ளுக்­குச் சிலை அமைப்­பதை எம்­மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.இவ்­வாறு சட்­டத்­த­ர­ணி­யும் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­னி­யின் மாந­கர சபை உறுப்­பி­ன­ரும் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­தார்.

மாந­கர சபை­யின் நேற்­றைய கன்னி அமர்­வில் உரை­யாற்­று­கை­யில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: யாழ்ப்­ப­ணத்­தில் சிலை­கள் வைக்­கப்­பட வேண்­டும் என்று கோரப்­ப­டு­கின்­றது.அதில் எமது தேசத்­தின் விடு­த­லைக்­காக போரா­டி­ய­வர்­க­ளுக்­குத்­தான் சிலை­கள் அமைக்­கப்­பட வேண்­டும். அத­னை­வி­டுத்து இலங்கை அர­சு­டன் இணைந்து தேசி­யத்­துக்கு எதி­ரா­கச் செயற்­பட்­ட­வர்­களை இதற்­குள் இணைப்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கடந்த காலங்­க­ளில் பெரும் ஊழல் மோச­டி­கள் இடம்­பெற்­றன என்று வடக்கு மாகாண சபை விசா­ர­ணைக் குழு ஒன்றை அமைத்து அறிக்­கை­யும் பெறப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையை மாகாண சபை­யி­டம் இருந்து உட­ன­டி­யா­கப் பெற்று சபை முதல்­வர் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.- என்­றார்.

http://newuthayan.com/story/84123.html

 
 
 
 
 
 

சபையில் எழுந்து நிற்காது உரையாற்றினார் யோகேஸ்­வரி !!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் முதல்­வரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி ப.யோகேஸ்­வரி, நேற்­றுக் கன்னி உரை­யாற்­றும்­போது இருக்­கை­யில் அமர்ந்து உரை­யாற்­றி­னார். இதனை அவ­தா­னித்த முதல்­வர் சபை­யின் கௌர­வத்­தைக் கருத்­திற்­கொண்டு உறுப்­பி­னர்­கள் எழுந்து நின்றே உரை­யாற்­று­வார்­கள்.

ஆனால் நீங்­கள் இருந்­த­வாறு உரை­யாற்­றி­யுள்­ளீர்­கள். சபையை அவ­ம­திக்­கும் வகை­யில் இவ்­வா­றான செயல்­களை இனி­வ­ரும் காலங்­க­ளில் செய்­யா­தீர்­கள். எழுந்து நின்று உரை­யாற்­றும் முறையை முழு உறுப்­பி­னர்­க­ளும் பின்­பற்ற வேண்­டும் என்று முதல்வர் அறி­வு­றுத்­தி­னார்.

பிரதி முதல்வரின் கன்னி உரை நிறை­வ­டைந்த பின்­னர் ஒவ்­வொரு உறுப்­பி­ன­ருக்­கும் கன்­னி­யுரை ஆற்ற நேரம் ஒதுக்­கப்­பட்­டது. பின்­னர் சபை ஒத்­தி­வைக்­கப்­ப­டும்­போது உறுப்­பி­னர் யோகேஸ்­வரி, ”எனக்­குக் காலில் சத்­தி­ர­ சி­கிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது. என்­னால் நின்று உரை­யாற்ற முடி­யாது. எனவே இனி­வ­ரும் காலங்­க­ளி­லும் இருந்­த­வாறு உரை­யாற்ற அனு­மதி தர­வேண்­டும்” என்று சபை முதல்­வ­ரி­டம் கோரி­னார்.

அதனை முதல்­வர் ஏற்­றுக்­கொண்­டார்.இதே­வேளை, சபைக்கு வரும்­போ­தும் சபை­யை­விட்டு வெளி­யே­றும் போதும் உறுப்­பி­னர் யோகேஸ்­வரி சக­ஜ­மா­கவே நடந்து சென்­றதை அவ­தா­னிக்க முடிந்­தது.

http://newuthayan.com/story/84117.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.