Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ?

[24 - March - 2007]

"வெலிக்கடைச் சிறை எமக்கு வெண்ணிலா அறை" அன்று காசி ஆனந்தன் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது பாடிய பாடலாகும். ஆனால், நடைமுறையில் இன்று வெலிக்கடைச் சிறை எம் விடுதலைப் போராளிகளுக்கு வெந்துயர் தருகின்ற வெஞ்சிறையாக விளங்குகின்றது. கவிஞரின் மேற்குறித்த கூற்று அவரின் கற்பனை வளத்திற்கும் உள்ள உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும். எதையும் தாங்கும் இதயத்தோடு தான் எமது போராளிகள் போராட வேண்டும். எத்தகைய விளைவுகளையும் ஏற்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கூற்று எழுந்தது.

ஆனால், அண்மையில் களுத்துறைச் சிறை, வெலிக்கடைச் சிறை, மகசின் சிறை, பெண்கள் பிரிவுச் சிறை போன்ற பகுதிகளை அடிக்கடி பார்வையிட்டதன் விளைவு எமது போராளிகள் தமது கொள்கை கோட்பாட்டிற்காக அரசியல் கைதிகளாக ஆக்கப்பட்ட நிலையில் படுகின்ற பாட்டினை எளிதில் சொற்களில் வர்ணித்தல் கடினமாகும். கவிஞர் காசி ஆனந்தனுடைய மேற்குறித்த வரிகளை விஞ்சுகின்ற முறையில் "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை" என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடலையும் நாம் மறக்கவில்லை.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிறையில் செக்கிழந்து சித்திரவதைக்குள்ளான நிகழ்ச்சி சித்திரிக்கப்படுகின்றபோது எம் சிந்தை தாங்கொணாத் துயரடைகின்றது.வ. உ.சி. யின் நண்பன் சுப்பிரமணிய சிவா சிறையில் அழுகுதொழு நோய்க்கு ஆளாகி அவலமுற்று நொந்து அழிந்த வரலாற்றை நாம் மறப்பதற்கில்லை.

இந்திய விடுதலை வரலாற்றில் அண்ணல் காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர்கள் உயர் வகுப்புச் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர்கள் பட்ட துன்பம் அவர்களால் தாங்கக்கூடியதாக இருந்தது. தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் தனிமைச்சிறையில் வாடி வதங்கிய வரலாறு பதியப்பட்ட நிகழ்ச்சியாகும். அயர்லாந்து விடுதலைப் போராளிகள் சிறையில் உண்ணா நோன்பிலிருந்து உயிர் துறந்த வரலாறு உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியாகும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் ஏற்ற மூன்று மாத சிறை வாழ்வு "டிசம்பர் 31 1979 முடிவடைவதற்கு முன் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுக என்று கூறிய ஜெயவர்தனவின் கொடுங்கோல் ஆட்சியில் மூன்று மாதங்கள் நாம் சொல்லொணாத்துயரங்களுக்கு ஆளாகியதை இன்றும் நினைவு கூருகின்றோம். இரண்டு மாதங்கள் யாழ்ப்பாணக் கச்சேரி இராணுவ முகாமிலும் ஒரு மாதம் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைச் சிறைச்சாலையிலும் சிறையிடப்பட்டு சித்திரவதைக்கு ஆளான நிகழ்ச்சிகளை இன்று நினைவு கொள்ளுகின்ற போது கூட ஏக்க உணர்வுக்கு ஆளாகின்றோம். இரவு 1 மணிக்கு மேல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த எம்மை எழுப்பி பிறந்த மேனியில் (நிர்வாணமாக) எம்மை நிறுத்தி தாங்கொணாத் துயரம் தந்த நிகழ்ச்சியினை நாம் எளிதில் மறப்பதற்கில்லை. எம்மைவிட அகவையில் இளையவர் பலர் கயிற்றில் கட்டி தூக்கப்பட்டு மிளகாய்ப்பொடியை நுகரவைத்து வதைத்த நிகழ்ச்சிகள் எம் கண் முன்னே நிற்கின்றன. மலைப்பாம்பினை வாய்க்குள் திணித்த நிகழ்ச்சியும் சிறையில் உள்ள இளைஞர்களுக்கு உடலில் வெளி, உட் காயங்களை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளை மறக்க நினைத்தாலும் முடியாது. இவை என் கண்முன்னே நடந்த நிகழ்ச்சிகளாகும். சின்னஞ்சிறு அறைகளில் குளிப்பறைகளும் கழிப்பறைகளும் இல்லாத நிலையில் பழைய பாண் துண்டையும் கல்லுச் சோற்றையும் அழுக்குப் படிந்த வட்டில்களில் அருந்திய காட்சியும் எம் நினைவலைகளில் இன்னும் மோதுகின்றன. உப்பு நீரை குடித்ததும் உப்பு நீரில் குளித்ததும் போன்ற கொடூர நிகழ்ச்சிகளை நாம் எப்படி மறக்க முடியும்.

இவை போதாது என்ற நிலையில், 1990 இன் இறுதிப் பகுதியில் புலிகளுக்கு மருந்து கொடுக்க முனைந்தோம் என்ற பெயரில் மறுவம்புலம் சச்சிதானந்தம் இன்று அவுஸ்திரேலியாவில் வதியும் மாலினி இராசநாயகம் (மறைந்த யாழ்ப்பாண அரச முகவர் DA ஷ்ரீகாந்தாவின் மகள்), டாக்டர் ஷ்ரீதரன், பாண்டியன் நாமும் சிறையில் மாதக்கணக்கில் வாடிய போது வழக்கை ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போட்டார்கள். எம்மைக் காக்கும் தெய்வம் கலைஞர் ஆட்சியில் தான் நாம் சிறைப்பட்டோம் என்பதை சொல்லி வைப்பது வரலாற்றை வரைவோருக்கு துணை நிற்கும். பின்பு (Fabricated lie)திட்டமிட்ட பொய் வழக்கு என்பதை ஏற்று நாம் குற்றவாளி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோம்.

யாழ்ப்பாணத்துச் சிறையில் மூன்று மாதம் வைக்கப்பட்டோம் பின்பு "you are not Terrorist" (நீ பயங்கரவாதி இல்லை என்று கூறி வெளியே போகலாம்) என்றனர். "நாம் பயங்கரவாதி இல்லை என்பதை அறிய உங்களுக்கு மூன்று மாதம் எடுத்ததா" என்று நாம் கேட்டபோது கிடைத்தது புன்முறுவல் மட்டுமே.

நாம் பட்ட துன்பங்களை விட மிகப்பெரிய துன்பங்களுக்கு இன்று எம் அரசியல் கைதிகள் ஆளாகியுள்ளார்கள். பூசாவில்/ அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் மற்றும் தெரிந்த தெரியாத இடங்களில் அரசியல் கைதிகள் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பலர் அடி உதைக்கு ஆளாகியுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். 65 வயது தொடங்கி 16 வரையான தமிழர்கள் சிறையில் வாடுகின்றார்கள் என்பதற்கு சான்றுகள் நிறைய உண்டு. எனவே தான் எம்மை ஏக்க உணர்வு வாட்டி வதைக்க எம்மை மீறி கண்கள் கலங்குகின்றன.

அண்மையில் வெலிக்கடைச் சிறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அங்கு சென்று பார்வையிட்ட போது கிடைத்த விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன.

மொத்தச் சிறையில் இருக்கும் கைதிகள் 7,000 பேர். அதில் மகசின் சிறையில்மட்டும் 1,645 பேர், பெண்கள் 481 பேர். வெலிக்கடைச் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,200 வெலிக்கடைச் சிறையின் ஒவ்வொரு அறையின் அளவு 8 அடி நீளமும் 6 அடி அகலமும். இந்த அடிப்படையில் ஒரு அறையில் ஒருவர் தான் தங்க வேண்டும். இந்த அடிப்படையில் 250 பேர் தான் அங்கு தங்க முடியும். ஆனால், அங்குள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 1,200. ஒரு அறையில் ஒருவர் அடைக்கப்படுவதற்கு பதில் 5 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். காற்றோட்ட வசதியற்று வேர்த்தொழுகின்ற நிலையில் ஒரு சின்ன யன்னலோடு தான் ஒவ்வொரு அறையும் உள்ளது.ஐவர் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையிலும் கழிப்பறை வாளி ஒன்று மட்டும் தான் இருந்தது. நாம் சிறை அதிகாரிக்கு நிலைமைகளை விளக்கியதன் பொருட்டு 3 வாளிகள் கொடுக்கப்பட்டுள்ளன, படுக்கையறையில் தான் கழிப்பறை வாளிகள் இருக்கின்றன என்றால் வாசகர்கள் ஊகித்து அறிந்து கொள்ளலாம். சிறைக்கூடம் மிக பழையதாக இருப்பதனால் கழிவு நீர் முறையாக வெளியேறாது தேங்கிக்கிடப்பதனால் எங்கும் துர்நாற்றம் வீசுகின்றது. நாம் அடுத்தடுத்து இடித்து சொன்னதன் பின்பு தான் கழிப்பறையும் கான்களும் ஓரளவு துப்புரவு செய்யப்பட்டது. எனினும், நிலைத்த தூய்மையோடு அவை இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய அறையில் அடைக்கப்பட்டோர் தொகை ஐவராகும். எனினும், அந்த ஐவர் கூட அங்கு ஒழுங்காக இருக்க முடியாது. குறிப்பிட்ட நேரம் நல்லிரவு மட்டுமே அவர்கள் அங்கு தூங்க முடியும். அதன் பின் தூங்கியவர் வெளியேற்றப்பட்டு வெளியே காக்க வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளே அனுப்பப்படுவர். அதுவரை வெளியே உள்ளவர்களுக்கு தொலைக்காட்சி மட்டுமே கதி. காற்றோட்டமின்றி, சுகாதார வசதிகளற்ற அறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்கள் அழுகு நோய்க்கு ஆளாகினர். இத்தகைய நோய்க்கு இவர்களும் ஆளாவார்களோ என அஞ்சுகின்றோம். இவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதியை வழங்குமாறு சிறை ஆணையாளரிடம் நாம் விடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆண்டுக் கணக்கில் விசாரணையின்றி வாடி வதங்கும் எம் தமிழர்

நாம் பார்வையிட்ட ஆண், பெண் தமிழ் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் ஆண்டுக்கணக்கில் முறையான ஒழுங்கான விசாரணையின்றி சிறையில் அல்லலுறுகின்றனர். அவர்களினது வழக்குகள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் நீதித்துறை அமைச்சரை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று விரைவில் முடிவுகாண முயற்சிக்கின்றோம். நாட்டிலே அநீதி நிலவுகின்ற போது சிறையில் எம் தமிழ் கைதிகளுக்கு நீதி கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. சாகும் வரை உண்ணா நோன்பிருந்த தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்ற எம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. ஆனால், முயலவில்லை எனும் பலி எம்மீது சூழாதிருக்க நாம் தொடர்ந்து முயல்கின்றோம். காலம் பதில் சொல்லும்.

`"Delay in justice is denial of justice" இது நீதித்துறையில் கையாளப்படும் சொற்தொடர். இது பொருள் பொதிந்த சொற்றொடராகும். என்று தான் தமிழனுக்கு விடிவு வருமோ நாம் அறியோம்.

தினக்குரல்.கொம்

என்றுதான் தமிழனுக்கு விடிவு வருமோ?

`"Delay in justice is denial of justice" இது நீதித்துறையில் கையாளப்படும் சொற்தொடர். இது பொருள் பொதிந்த சொற்றொடராகும். என்று தான் தமிழனுக்கு விடிவு வருமோ நாம் அறியோம்.

அன்புடன் கறுப்பி அக்காவுக்கு விடுதலை என்றால் எல்லாம் இருக்கும் ஆயினும் விடியும் விடியும் தமிழன் வாழ்வு விடியும் இன்றோ நாளையோ விடியும் என்பது உண்மை இந்த உறுதியில் இருந்து விடுபட்டாள் நாம் தான் உண்மையில் இருந்து விடுபட்டு விடுவோம் எனவே விடுதலை எமக்கு உண்டு என்பதில் திடமாய் இருப்போம்!!!!!!!!!!!!!!!!!!!!

கார் முகில் நீங்கும்!

கரி வானம் திறக்கும்!

மழை மூடம் இறங்கும்!

மலை கூட்டங்கள் தகரும்!

சிறை வாழ்க்கை விடியும்!

சிறை விளங்குகள் திறக்கும்!

மனிதனாய் நான் வாழ!

மந்திகள் தானாய் நகரும்!

தமிழா நீ தமிழனாய் வாழ!

தமிழீழம் அழைக்கின்றது இன்று!

நன்றியுடன்

நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறவுகள்

விடிவு என்பது வெகுதூரமில்லை இருந்தாலும் இந்த சிறையில் வாடும் உடன்பிறப்புக்களின் விடிவுக்கு யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது. அதாவது எமது சுதந்திரம் போராட்டம் மூலம் கிடைக்குமானால் அவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? ஆகவே நான் சொல்ல வருவது என்னவென்றால் யுத்தம் தீவிரமடைய முன்பு அவர்களின் விடுதலைக்கு ஏதாவது வழியுள்ளதா என்று சிந்தியுங்கள்.

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு சூரிய நமஸ்காரத்துக்கு முன் அறிவு கண் மூடிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.