Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவுப் பரப்புரை

Featured Replies

  • தொடங்கியவர்

பகுத்தறிவுப் பரப்புரை

பகுதி -01

மூடநம்பிக்கைகள்

பேய் பிசாசுகள் இருக்கின்றனவா?

பகுத்தறிவென்பது என்ன?

எப்பொருள் யார்வாய்ச் சொற் கேட்பினுமப்

பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

இதுதான் பகுத்தறிதல். சங்கமருவிய காலப்பகுதியிலேயே

வள்ளுவரால் சொல்லப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்

பேயாடுவது என்பது என்ன ?

நமது கிராமங்களில் பல இடங்களில் பேயாடும், பேயோட்டும் நிகழ்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேய் பிடித்தவர்களும் பேயோட்டுபவர்களும் கூட சில வேளை உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருப்பார்கள.; உண்மையில் பேய் பிடிப்பது என்பது என்ன? எப்படி இந்த பேயை விரட்டு கின்றார்கள்? பேய் பிடிப்பது என்பது அதிகமான பயத்தினால் வருகின்ற ஒரு விதமான மன நோயாகும். இதற்கு முதற்காரணம் அதிர்ச்சி. ஒருவர் ஏதோ ஒரு பயங்கரமான சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் போது அவர் ஒருவிதமான பரபரப்புக்கும் பதட்டத்துக்கும் உள்ளாகின்றார். இதையே அவருடன் கூட இருப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் அவருக்குப் பேய் பிடித்து விட்டது பிசாசுபிடித்து விட்டது என்று கூறி அவரை மனநேயாளியாக்கி விடுகின்றார்கள். அந்த நபர் தனக்கு பேய் பிடித்து விட்டது என்ற பயத்தினாலே மனச்சிதைவு நோய்க்கு உள்ளாகி இருட்டை கண்டு பயப்படுவது சத்தத்தை கேட்டு உருவெடுத்து ஆடுவது முதலான செயல்களில் ஈடுபடுகின்றார். ஆவரது ஆள் மனதில் பதியப்பட்டுள்ள பேய் பிசாசு பற்றிய கற்பனைகள் அவர் உருவந்து ஆடும் போது “டேய் உன்னை என்னசெய்கிறேன் பார் இரத்தக்காட்டேரி வந்திருக்கிறேன்டா சுடலைதாடன் வந்திருக்கிறேன்டா” என்றெல்லாம் பிதற்றவைக்கிறது பேயை விரட்டுவதாக சொல்லிக்கொள்ளும் புசாரிகள் பேயோட்டிகள் ஒரு மனோதத்துவ மருத்துவர் செய்யும் வேலையை மந்திர தந்திர மடை கழிப்பு என்ற பெயரில் செய்கின்றார்கள் பேயோட்டும் சடங்குகளைப்பார்த்தால் எல்லாமே இரவில் தான் செய்யப்படும் உடுக்கடி சாம்பிராணிப்புகை படையல் என்று பேய் பிடித்தவரையும் அவருக்கு பேய் பிடித்துவிட்டது என்று சொல்லி கொள்பவர்களையும் பேய் வந்து விட்டது என்ற ஒரு பயங்கர நிலைக்கு பேயோட்டி கொண்டு வருகின்றார்;.பேய் பிடித்த நபரை சவுக்கால் அடித்தோ வேப்பிலையால் அடித்தோ “டேய் போகப்போறியா இல்லையா” என்று மிரட்டுகின்றார் இந்த மிரட்டலில் உச்சக்கட்டத்தில் “நான் போகிறேன் போகிறேன்” என்று பேய் பிடித்தவரை சொல்ல வைக்கிறார். இதில் மெஸ்மரிசம் எனப்படும் தன்வயப்படுத்தும் விளையாட்டும் அடங்கியிருக்கிறது கடைசியில் கோழி அல்லது ஆட்டை பலியிட்டு சந்தியில் கொண்டுபோய் படையல் படைத்து, கழிப்பு கழித்து ஆலமரத்தில் அல்லது புளிய மரத்தில் ஆணிஅடித்து பேய் பிடித்தவரின் கையில் நூல் அல்லது அச்சரக்கூட்டில் வைக்கக்கூடியதாக இயந்திரம் அல்லது தகடு ஒன்றைக்கட்டியவுடன் இந்தப் பேயோட்டும் சடங்கு முடிந்துவிடும். பேய் பிடித்தவர்களுக்கு தன்னை பிடித்த பேய் ஓடிவிட்டது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அவரது உறவினருக்கும் இதே எண்ணம் ஏற்பட பேய் ஓடியே போய்விடுகிறது .இந்த நம்பிக்கைதான் என்பதுதான் அந்த பேய் பிடித்த நபரை குணப்படுத்துகிறது.

http://sivasinnapodi1955.blogspot.com/2007/03/blog-post.html

  • தொடங்கியவர்

பேய் பிசாசுகள் இருக்கின்றனவா?

இரவில் நீங்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுவீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்கின்ற பதில் பேய் பிசாசு என்பதாகும் உண்மையில் பேய் அல்லது பிசாசு இருக்கின்றதா? பேய் அல்லது பிசாசு என்றால் என்ன? இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்!

பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, இப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள், பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.

விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.

ஒரு மனிதன் மரணம் அடைகின்றபோது மூக்கு மற்றும் ஏனைய துவாரங்கள் வாயிலாக அவன் ஏற்கனவே சுவாசித்த காற்று மட்டும்தான் வெளியேறுகிறது, ஆவி என்றோ உயிர் என்றோ, ஆன்மா என்றோ ஒன்றும் வெளியேறுவதில்லை, ஒரு மனிதனின் கடைசி மூச்சாக வெளியேறும் காற்றை எடுத்து பரிசோதித்தால் அதில் காபனீரொட்சைட்டும், ஒட்சிசன், நீராவி, முதலான வாயுக்கள்தான் இருக்கும்.

ஓரு இயந்திரம் , அல்லது தன்னுடைய செயற்பாட்டுத்திறனை இழந்து விட்ட ஒரு துப்பாக்கி தனது கடைசி செயற்பாட்டுடன் செயலற்றுப்போகும் போது என்ன நடக்குமோ ஒரு மனிதன் இறக்கும் போதும் அதுதான் நடக்கிறது. ஓரு பழுதடைந்த செயலற்று போன இயந்திரத்தின் பாகங்கள் பிரித்தெடுத்து வெறோரு இயந்திரத்திற்கு பொருத்துவதை போலவே இறப்புக்குள்ளாகும் மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், முதலான பல உறுப்புக்கள் , இந்த உறுப்புக்களில் பழுதுள்ள வேறோரு மனிதர்களுக்கு பொருத்தப்படுகின்றன.

ஏனவே மனிதனின் மரணத்தின் போது இயமன் எருமைக்கிடாயில் வந்து பாசக்கயிற்றை விசி உயிரை எடுத்துக்செல்கிறான் , என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகும்.

அப்படி என்றால் ஆவி அல்லது பேய் என்று சொல்லப்படுவ தெல்லாம் என்ன?

இது ஒரு மனப்பயம் அல்லது பிரம்மை என்று சொல்லலாம் ஒரு மனிதன், உயிருடன் இருக்கும்போது நடந்துகொண்ட விதம் பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள் இவையல்லாம் மற்றவர்களுடைய மனங்களில் பதிவாகின்றன இந்தப்பதிவுகள் அந்த மனிதன் இறந்தவுடன் நினைவுகளாகின்றன.இறந்த அந்த மனிதனுடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கும் (குடும்பத்தினர்,உறவினர்,நண்ப

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை நன்றாகர்வ இருக்கிறது. அதற்கான வாதங்களும் பகுத்தறிவுடன் விளங்குகின்றது.

மேலும்:- மனிதன் தோன்றி அப்புறம் அவனது அறிவு பலதையும் அலசி ஆராய ஆரம்பித்த

காலத்திலிருந்து இன்றுவரை இதுபோன்ற வாதங்களும் எதிர்வாதங்களும்தொடர்ந்த

வண்ணமேயுள்ளன. என்ன! அன்று நேரில் மோதி பின்பு காகிதத்தில் வரைந்து இன்று

கணணியிணூடாக---------! தொடுவானம் போலும் தண்டவாளம் போலும். இந்த வாத

எதிர்வாதங்கள் ஒன்றையொன்று தொடுவதில்லை.

"கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை" பகுத்தறிவுப் பரப்புரை ஆரோக்

கியமானதே. தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மனம் என்ற ஒன்று இருக்கிறதா ?

இந்த பேய் பிசாசுகள் பற்றி பேசுகின்ற போது மனம் என்ற ஒன்று இருக்கிறது தானே என்று ஒரு கேள்வி உங்களுக்கு எழக்கூடும் அந்த மனம் தான் ஆத்மா என்றெல்வாம் நிங்கள் நினைக்கலாம் உண்மையில் மனம் அல்லது ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா? மனிதனின் உடல் வேறு , ஆத்மா வேறு. உடல் அழியும் ஆத்மா அழியாது மனிதன் இரவில் உறங்கும் போது ஆத்மா உடலை விட்டு வெளியேறி உலகெல்லாம் சுற்றிவரும் என்று மதவாதிகள் பல கதைகள் சொல்வார்கள் ஆரம்ப காலத்தில் இதயம் தான் மனம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். மனதைத்தொட்டுச்சொல்கிறேன் என்றால் இதயத்தை தொட்டுக்காட்டும் வழக்கம் இருந்து வந்தது. காதலுக்கு அடையாளமாக இதயத்தை அம்பு துழைத்துச்செல்லும் படத்தைக் கான்பிப்பது இன்றும் வழக்கம் இருக்கிறது .

பிற்காலத்தில் மனித மூளையில் தான் மனம் இருக்கிறது அது தான் சிந்திக்கிறது செயற்பட வைக்கிறது என்ற கருத்து வலுப்பெற்றது இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கருத்துத்தான் என்றாலும் இந்த மனம் தான் ஆத்மா என்றாலும் இது ஒரு மனிதனின் இறப்புககுப் பின்னும் உயிர் வாமும் என்பதும் மனிதன் உறங்கும் போதும் உடலை விட்டு வெளியேறி தனியாகச் செயற்படும் என்பதும் அப்பட்டமான மூடநம்பிக்கையாகும் மனித மனம் என்று நாங்கள் சொல்வது மனித மூளையின் பகுதிகளையும் செயற்பாட்டுத்திறனையும் மட்டுமே இது ஒரு கணணியின் டேட்டா பேசுக்கு ஒப்பானது. ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாவதிலிருந்து அது வளர்ந்து மூப்படைந்து இறக்கும் வரை அதன் மூளையில் பதிவாகும் அனைத்து விடையங்கள் அனுபவங்கள் செயற்பாட்டுத்திறன்கள் அனைத்தின் தொகுப்பே மனம் என்று வரையறுக்க முடியும். இதை ஒரு மொழிக்கிடங்கு என்றும் இப்போது விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள். குழந்தை பிறந்ததிலிருந்தே அதன் மூளையில் பதியப்படும் மொழி (தற்போது தாயின் வயிற்றில் இருக்கும் போதே குழந்தைகள் தகவல்களை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று விஞ்ஞானிகள் நிருபித்திருக்கிறார்கள்) அல்லது மொழிகள் மூலமே உலகைப் பற்றியும் உலகிலுள்ள பொருட்களைப்பற்றியும் அது அறிந்து கொள்கிறது என்றும் மொழி என்;ற ஒன்று இல்லை என்றால் இந்த அறிதலும் சிந்தனையும் இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள. ஒரு கணணியை முற்றாக அழித்து விட்டால் அதில் பதித்து வைத்துள்ள அனைத்து விடயங்களும் அழிந்து விடுவதைப்போலத்தான் மனித மூளையும் இறந்து விட்டால் அதிலுள்ள அனைத்துப்பதிவுகளும் செயற்பாடுகளும் (அதாவது மனமும் ) இறந்து விடுகிறது. அந்தக் கணணியிலிருந்து பிரதி எடுக்கப்பட்ட சில பல தகவல்கள் அந்தக் கணணியின் அழிப்பின் பின் நினைவு கூரப்படுவதை,பயன்படுத்தப் படுவதைப்போலத்தான் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளும் செயற்பாடுகளும் நினைவுகள் அல்லது வாழ்க்கையின் அனுபவத் தொகுப்பு என்ற வகையில் நிலைத்திருக்கின்றன. மற்றப்படி மனிதன் இறந்த பின்னர் மனம் உயிர்வாழ்ந்து இன்னொரு உடலில் புகுந்து கொள்வதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.