Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்?

Featured Replies

  • வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்?
 
 

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்?

2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் வடக்கு மாகாண சபைக்­கான முத­லா­வது தேர்­தல் நடத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக எவரை நிறுத்­து­வது ? இந்­தக் கேள்வி பல மட்­டங்­க­ளி­லும் தலை­தூக்­கி­யி­ருந்­தது. தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாவட்­டக் கிளை அவ­சர அவ­ச­ர­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­திரா­சாவை முத­ல­மைச் சர் வேட்­பா­ள­ராக அறி­வித்­தது.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனோ, மாவையை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அறி­விக்­க­வில்லை என்று கூறி­னார். மறு­பு­றம், அப்­போது மேடைப்­பேச்­சா­ள­ராக இருந்த ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ ­ரனை நிறுத்­து­வதே தனது திட்­டம் என்­ப­தைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யினருக்கும் விக்­னேஸ்­வ­ர­னில் விருப்­பம் இல்லை. மாவையே வேண்­டும் என்று மல்­லுக் கட்டி நின்­றார்­கள். ‘பபுள்­கம்’ போன்று இந்த விட­யம் ஈய்ந்து – இழு­பட்­டுச் சென்­றது. சம்­பந்­தன், சுமந்­தி­ரன் (பின்னாளில் சுமந்திரன் தானும் விக்கியை முழு மனதோடு ஆதரிக்கவில்லை என்று சொன்னார்) அணி தவிர்ந்த ஏனை­யோர், விக்­கியை எதிர்த்து நின்­ற­னர். ஆனால், இறு­திக் கட்­டத்­தில் மாவை, தான் முத­ல­மைச்­சர் பத­விக்­குப் போட்­டி­யி­ட­வில்லை என்று கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் கூட்­டத்­தில் பகி­ரங்­க­மாக அறி­வித்­தார்.

விக்­னேஸ்­வ­ர­னுக்கு வழி திறந்­தது. சம்­பந்­த­ன் நினைத்­தது நிறை­வே­றி­யது. கதாப்­பி­ர­சங்­கம் செய்து கொண்­டி­ருந்­த­வரை, வலிந்து அர­சி­ய­லுக்கு இழுத்து வந்து விட்­ட­னர்.

அதே ஆரம்­பப் புள்ளி
இப்­போ­தும், பிரச்சினை அதே ஆரம்பப் புள்­ளி­யில், வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக எவரை நிறுத்­து­ வது என்ற கேள்­வி­யு­டன் வந்து நிற்­கின்­றது. மீண்­டும், மாவை., விக்கி போட்­டியே. ஆனால் கடந்த தடவை, மாவையை ஆத­ரித்த கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள், இந்­தத் தடவை அவரை ஆத­ரிக்­கத் தயா­ரில்லை. சுமந்­தி­ரனோ, இப்­போது விக்­கியை விரட்டி அடிப்­பதே தனது குறிக்­கோள் என்ற நிலை­யில் இருக்­கின்­றார்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தனோ அமை­தி­யாக இருக்­கின்­றார். 2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லின்­போ­தும், மாவையா ? விக்­கியா ? என்ற கேள்வி எழுந்து மக்­க­ளைக் குழப்­பிக் கொண்­டி­ருந்த சம­யத்­தி­லும், அவர் அமை­தி­யா­கவே இருந்­தார். இப்­போ­தும் அவர் அமை­தி­யா­கவே இருக்­கின்­றார். தான் எடுத்த முடிவை, நினைத்­ததை நோக்கி ஏனை­யோரை நகர்த்­து­வ­தில் சம்­பந்­தன் வலு கில்­லாடி. அதற்கு அவ­ரது அமைதிகாப்பு பாணி நன்றாகவே கைகொ­டுக்­கும்.

ஆனால், இப்­போது சம்­பந்­த­னால் அவ்­வாறு செய்ய முடி­யுமா என்­பது மிகப் பெரிய கேள்வியே. கட்­சி­யின் கட்­டுப்­பாடு சம்­பந்­தனை விட்­டுக் கைமீ­றி­விட்­டது. சம்­பந்­தன் சொல்­வ­தைச் செய்­யும் அள­வுக்கு கட்சி இல்லை. ஏன் சுமந்­தி­ரனே இல்லை. இப்­போ­தைய சூழ­லில் சம்­பந்­தன் தனி­ம­ர­மா­கவே நிற்­கின்­றார். இதற்கு ஆகப் பிந்­திய உதா­ர­ணம், கூட்­ட­மைப்­பின் ஈ.பி.டி.பியு­ட­னான நெருக்கம்.

சம்­பந்­தனை மீறிய முடிவு
உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் கார­ண­மாக சபை­க­ளில் தொங்கு நில­மையே ஏற்­பட்­டி­ருந்­தது. ஆட்சி அமைப்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் கொழும்­பில் பெப்­ர­வரி மாதம் மூன்­றாம் வாரத்­தில் நடந்­தது. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைப்­பது பற்றிப் பேசப்பட்டது. உடனே சுமந்­தி­ ரன், அவர்­கள் அயோக்­கி­யர்­கள் என்று சாரப்­பட பதி­ல­ளித்­தி­ருக்­கின்­றார்.

அதற்கு சம்­பந்­தனோ, ஈ.பி.டி.பியி­னர் அதை­விட அயோக்­கி­யர்­கள் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றார். ஈ.பி.டி.பியு­டனோ, பிள்­ளை­யா­னின் கட்­சி­யு­டனோ, கூட்­ட­மைப்பு கூட்டு வைப்­பதை சம்­பந்­தன் விரும்­ப­வில்லை. ஆனால் நடந்­தது என்ன ? சம்­பந்­த­னின் முடிவை எதிர்த்து, ஈ.பி.டி.பியு­டன் பேச்சு நடத்­தி­னார்­கள் மாவை.சேனா­தி­ரா­சா­வும், சுமந்­தி­ர­னும்.

சம்­பந்­த­னின் நிலமை இது­தான். இதை சுமந்­தி­ரன், நாடா­ளு­மன்­றக் கட்ட­டத் தொகு­தி­யில் வைத்து கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வ­ரி­ட­மும் பகிர்ந்­தி­ருக்­கின்­றார்.

‘‘ஐயா (சம்­பந்­தன்) திரும்­ப­வும் விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தவே எண்­ணு­கின்­றார்­போல் இருக்­கின்­றது’’ என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர் சுமந்­தி­ர­னி­டம் கூற, ‘‘இல்லை அப்­ப­டி­யி­ருக்­காது. விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தி­னால் தமிழ் அர­சுக் கட்சி அதனை எதிர்க்­கும்’’ என்று சுமந்­தி­ரன் பதி­ல­ளித்­தி­ருக்­கின்­றார். ‘‘சம்­பந்­தன் தமிழ் அர­சுக் கட்சி இல்­லையா’’ என்று பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர் கேள்வி எழுப்ப, ‘‘அவ­ரைத் தவிர கட்சியி லுள்ள மற்ற எல்­லோ­ரும் அதனை எதிர்ப்­போ’’ என்று கூறி­யி­ருக்­கின்­றார்.

தமிழ் அர­சுக் கட்சி முன்வைத் துள்ள மாவை­யின் தெரிவை சம்­பந்­தன் ஏற்­றுக் கொள்­வாரா என்­பது மறு­பு­றம் எழும் கேள்வி. 2013ஆம் ஆண்டே மாவையை, சம்­பந்­தன் நிரா­க­ரித்­தி­ருந்­தார். வடக்கு முதல்­வர் பத­விக்கு மாவை. தகு­தி­யா­ன­வர் இல்லை என்று அவர் பகி­ரங்­க­மா­கவே கட்­சிக் கூட்­டத்­தில் கூறி­யி­ருந்­தார். 2013ஆம் ஆண்டு சுமந்­தி­ரன் அவ­ரது தெரி­வாக இருந்­தா­லும், அப்­போது அவரை நிறுத்­து­வதை சம்­பந்­தன் அவ்­வ­ள­வாக விரும்­பி­யி­ருக்­க­வில்லை.

விக்­கி­யின் பய­ணம்
இப்­ப­டி­யா­ன­தொரு இக்­கட்டு நிலை­யில், கூட்­ட­மைப்­பின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்­ப­தில் தமிழ் அர­சுக் கட்சி பிள­வுண்டு போகப் போவது என்­பது நிச்சயம்.

‘‘கூட்­ட­மைப்பே இல்லை. பின்­னர் அங்­கி­ருந்து எனக்கு போட்­டி­யிட எப்­படி எனக்கு அழைப்­பு­வ­ரும்’’ என்ற விக்­னேஸ்­வ­ ர­னின் ஊடக அறிக்கைக் கேள்வி, அவர் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டப் போவ­தில்லை என்­பதை எடுத்­தி­யம்­பி­யுள்­ளது. ஆனால், மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­வ­தற்கு விக்­னேஸ்­வ­ரன் விரும்­பு­ கின்­றார். மக்­க­ள­தும், கட­வு­ளினதும் பெய­ரா­லும் அதைக் கோடிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.

முத­ல­மைச்­சர் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிடாவிட்­டால், எந்த அணி­யில் இறங்­கு­வார். அவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில், தமிழ் அர­சுக் கட்­சியை கழற்­றி­விட்டு, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், கூட்­டணி, காங்­கி­ரஸ் என்று புதிய கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டு­வ­தற்கே விரும்­புகின் றார்.
முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக வடக்­கில் போட்­டி­யி­டு­வ­தற்கு இந்­தி­யா­வின் ஆசிர்­வா­த­மும், அனு­ச­ர­ணை­யும் தேவை என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரி­யும். அதற்­கான காய் நகர்த்­த­லுக்­கா­கவே இப்­போது இந்­தி­யா­வுக்­கும் சென்­றி­ருக்­கின்­றார்.

முத­ல­மைச்­ச­ரின் குரு, பிரே­மா­னந்த சுவா­மி­கள். விராலி மடத்­தி­லுள்ள அவ­ரது ஆச்­சி­ர­மத்­துக்கு அவ்வப்போது சென்று வரு­ப­வர் விக்­னேஸ்­வ­ரன். இம்­முறை ஆன்­மி­கப் பய­ணம் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்துவிட்டு இந்­தி­யா­வுக்­குச் செல்­கின்­றார் என்­றால், நிச்­ச­யம் அவ­ரது பய­ணம் ஆன்­மி­கத்­துக்­கா­னது அல்ல. அர­சி­ய­லுக்­கா­னது. முத­ல­மைச்­ச­ராக மீண்­டும் தான் வரு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அவர் இந்­தி­யா­வுக்­குச் சென்­றி­ருக்­கின்­றார்.

காங்­கி­ரஸ் கொள்கை தவ­றுமா ?
இந்­தி­யா­வின் எடு­பி­டி­யாக விக்­னேஸ்­வ­ ரன் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­னால், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் அவரை ஏற்­றுக் கொள்­ளுமா? இதற்கு இல்லை என்றே பதில் கூற­லாம். ஒரு­வேளை, மாகாண சபைத் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­ட­மாட்­டோம் என்ற கொள்­கை­யில் நின்­றி­ருந்த காங்­கி­ரஸ், கொள்கை தவறி, – வழுவி, மாகா­ண­ ச­பைத் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­வெ­டுத்­த­ தைப் போன்று, இந்­திய எதிர்ப்பு நிலைப்­பாட்­டி­லி­ருந்து தன்னை மாற்­றிக் கொண்­டால், விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக காங்­கி­ரஸ் ஏற்­றுக் கொள்­ளும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்­த­லின்­போது விக்­னேஸ்­வ­ரன் ஒரு லட்­சத்து 32 ஆயி­ரத்து சொச்ச வாக்­கு­க­ளைப் பெற்­ற­வர். இப்­போது அவர் மீண்­டும் போட்­டி­யிட்­டால், அந்த வாக்கு எண்­ணிக்­கை­யைத் தாண்ட வேண்­டிய நிர்­பந்­தம் இருக்­கின்­றது. மக்­கள் செல்­வாக்­கா­னது, தனக்கு அப­ரி­மி­த­மாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது என்று விக்­னேஸ்­வ­ரன் நம்­பு­கின்­றார். அவர் நம்ப வைக்­கப்­ப­டு­கின்­றார். அதை ஏற்­றுக் கொண்டு அறிக்­கை­யும் விடு­கின்­றார்.

தனது வாக்­கு­வங்­கி­யில் சரிவு ஏற்­ப­டாது என்று உறு­தி­யாக விக்­னேஸ்­வ­ரன் நம்­பி­னால்­தான், அடுத்த தேர்­தல் களத்­தைச் சந்­திப்­பார்.
இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, வடக்கு மாகாண சபைத் தேர்­தல் நடக்­கும் வரை­யில், விக்­னேஸ்­வ­ரன் வடக்­கில் தாக்­குப் பிடிப்­பாரா என்ற மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான கேள்வி முக்­கி­ய­மா­ னது. வடக்கு மாகா­ண­சபை எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­தி­யு­டன் செய­லி­ழந்து விடும்.

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல், பெரும்­பா­லும் அடுத்த ஆண்­டின் நடுப் பகு­தி­யில் அல்­லது மார்ச் மாத இறு­திப் பகு­தி­யில் நடப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­க­முண்டு. மாகா­ண­ ச­பை­கள் திருத்­தச் சட்­டம் நாடா­ளு­மன்­றுக்கு கொண்டு வரப்­பட்டு அது நிறை­வேற்­றப்­பட்டு, ஒன்­பது மாகா­ண­ச­பை­க­ளுக்­கும் ஒரே நாளில், விகி­தா­சார முறை­யில் தேர்­தல் நடத்­தப்­ப­டும்.

தாக்­குப் பிடிப்­பாரா விக்கி ?
முத­ல­மைச்­சர் பதவி இல்­லா­மல், வடக்கு மாகா­ணத்­தில் விக்­னேஸ்­வ­ரன் தாக்­குப் பிடித்து நிற்­பாரா ? விக்­னேஸ்­வ­ரன் பிறப்­பி­லி­ருந்து அர­சி­யல்­வாதி அல்லர். அவர் அர­சி­யல் வெற்­றிக்­காக அதி­கம் உழைப்­ப­வ­ரும் அல்லர். விக்­னேஸ்­வ­ரன் என்ற விம்­பத்தை வைத்து ஏனை­யோர் உழைத்­துக் கொடுக்க, அந்த வெற்­றியை மட்­டுமே ருசிப்­ப­வர் அவர். பதவி இழந்த பின்­னர் ஏனைய அர­சி­யல்­வா­தி­கள் போன்று விக்­னேஸ்­வ­ரன் இருப்­பாரா? இல்லை, தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வர் என்ற பத­வியை வைத்­துக் கொண்டு, அடுத்த மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடக்­கும்­வரை இழுத்­துப்­பி­டிப்­பாரா ? இந்­தக் கேள்­விக்கு காலம்­தான் விடை சொல்­லும்.

விக்கி சாதித்­தது என்ன ?
விக்­னேஸ்­வ­ரன் வடக்­கின் முத­ல­மைச்­ச­ராக மீண்­டும் ஏன் தெரிவு செய்­யப்­பட வேண்­டும் ? முத­லா­வது பத­விக் காலத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஊடாக அவர் செய்­தது என்ன ? இந்­தக் கேள்­வி­க­ளுக்கு விடை காணப்­ப­ட­ வேண்­டும். வெறு­மனே, விக்­னேஸ்­வ ­ரன் என்ற விம்­பத்­தைத் தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­வ­தால் பயன் எது­வும் கிடைக்­கப் போவ­தில்லை.

வடக்கு மாகாண சபை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் வடக்கு மக்­கள் திருப்­தி­ய­டைந்­தி­ருக் கின்­றார்­களா? இந்­தக் கேள்­விக்­கான பதில், விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முதல்­வ­ராக்க வேண்­டுமா இல்­லையா? என்ற கேள்­விக்­கான விடை­யாக அமை­யும்.

மகிந்த ஆட்­சி­யின் கீழ், இரா­ணுவ அதி­கா­ரியை ஆளு­ந­ரா­கக் கொண்டே வடக்கு அரசு இயங்க ஆரம்­பித்­தது. பெரும் அடக்கு முறைக்கு மத்­தி­யி­லும், எரி­ம­லை­யாக வெடித்த மக்­கள், விக்­னேஸ்­வ­ரன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு அணிக்கு வெற்­றியை அள்­ளிக் கொடுத்­த­னர்.

மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைத்­தால், வடக்கு ஆளு­நரை மாற்­று­வோம், இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வோம் என்று அந்த வேளை­யில் வாய்­கூ­சா­மல் வாக்­கு­றுதி வழங்­கி­னர். ஆட்­சிக் காலம் முடி­கின்ற இந்­தத் தறு­வா­யி­லும், வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வம் வெளி­யேற்­றப்­பட வேண்­டும் என்று விக்­னேஸ்­வ­ரன் அறிக்கை விட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்.

வடக்கு மாகாண சபை அமைக்­கப்­ப­டும்­போது தமிழ் மக்­க­ளுக்கு இரண்டு கன­வு­கள் இருந்­தன. நிர்­வாக ரீதி­யா­க­வும், அர­சி­யல் ரீதி­யா­க­வும் நாங்­கள் கொடி­கட்­டிப் பறக்­க­வேண்­டும். இங்கே அர­சி­யல் ரீதி­யாக விக்­னேஸ்­வ­ரன் சாதித்­தி­ருக்­கின்­றார். இனப்­ப­டு­கொலைத் தீர்­மா­னம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளில் அர­சி­யல் ரீதி­யாக விக்­னேஸ்­வ­ர­னும் சரி, வடக்கு மாகா­ண­ச­பை­யி­ன­ரும் சரி சாதித்­தி­ருக்­கின்­றார்­கள்.

இங்கே சாதித்­தி­ருக்­கின்­றார்­கள் என்று விளிப்­ப­தன்­மூ­லம் அதில் அவர்­கள் வெற்­றி­ய­டைந்­தார்­கள் என்­பது பொரு­ள­லல்ல. தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை உரிய வகை­யில் எடுத்­தி­யம்­பி­யி­ருக்­கின்­றார்­கள். அந்த வேண­வாக்­களை திரும்­பத் திரும்ப அழுத்­தம் திருத்­த­மாக எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்­றார்­கள். அந்த வேண­வாக்­க­ளி­லி­ருந்து தாம் ஒரு­போ­தும் தளம்­ப­வில்லை என்­பதை உணர்த்­தி­யி­ருக்­கின்­றார்­கள்.

நிர்­வா­கத் தோல்வி
மறு­பு­றம், நிர்­வாக ரீதி­யாக அவர்­கள் எதை­யும் செய்­ய­வில்லை. நிர்­வாக ரீதி­யான செயற்­பாட்­டுத் தோல்­விக்கு அர­சி­யல் மீது பழி­போட்டு விட்­டுத் தப்­பிக்­கும் உத்தி­யையே, வடக்கு அரசு கையாண்­டி­ருக்­கின்­றது. நிர்­வா­கத் தோல்­விக்கு பொறுப்­புக் கூறு­வ­தற்கு, வடக்கு முதல்­வரோ, அவர் தலை­மை­யி­லான அரசோ தயா­ரில்லை.

வடக்கு ஆளு­நர் ஒத்­து­ழைக்­க­வில்லை, வடக்கு தலை­மைச் செய­லர் ஒத்­து­ழைக்­க­வில்லை, வடக்கு அமைச்­சின் செய­லர்­கள் ஒத்­து­ழைக்­க­வில்லை என்று குரல் எழுப்­பி­னார்­கள். ஆட்சி மாற்­றத்­து­டன், வடக்கு அர­சு­டன் ஒத்­தோ­டக் கூடி­ய­வர்­கள் மேற்­படி பத­வி­க­ளுக்கு நிய­ மிக்­கப்­ப ட்­டார்­கள். அதன் பின்­ன­ரா­வது வடக்கு அர­சின் நிர்­வா­கம் திறம்­பட இயங்­கி­யதா ? எதை­யா­வது குறை­சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்­றார்­களே தவிர, எதை­யும் செய்­ய­வில்லை.

இதற்­கு­மே­லாக, தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கக் கூடிய முத­லீட்­டுத் திட்­டங்­க­ளைப் புறம்­தள்ளி விட்­ட­து­தான், நிர்­வாக ரீதி­யாக வடக்கு அரசு சாதித்த விட­யம்.

எவரி­டம் ஒப்­ப­டைக்­கப்­போ­கின்­றோம்?
வடக்கு மாகாண அரசு இல்­லா­மல், ஆளு­நர் நிர்­வா­கத்­தின் கீழ் இருந்­தி­ருந்­தால், என்­ன­வெல்­லாம் நடக்­குமோ, அது­வே­தான் வடக்கு மாகாண அரசு இருந்­த­போ­தும் நடந்­தது. வடக்­கு­மா­காண அரசு என்ற ஒன்று, தனது புத்­தாக்க திட்­டங்­கள் எத­னை­யும் செய­லு­ருப்­ப­டுத்­த­வில்லை.

அவர்­கள் செய­லு­ருப்­ப­டுத்­த­வில்லை என்­ப­தை­விட புத்­தாக்க, திட்­டங்­கள் எது­வு­மின்றி, இயங்­கு­கின்ற அரச இயந்­தி­ரந்­து­டன் சேர்ந்து இயங்­கி­னார்­களே தவிர, ஓர் அர­சாக கொள்கை ரீதி­யாக எதை­யும் செயற்­ப­டுத்­த­வில்லை. விதி­வி­லக்­காக, முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கான உத­வி­களை மாத்­தி­ரம் குறிப்­பிட முடி­யும்.

இந்­தச் சீத்­து­வக்­கேட்­டில், வடக்கு அர­சின் சுக்­கா­னைப் பிடித்­தி­ருந்த விக்­னேஸ்­வ­ர­ னி­டம் மீண்­டும் அதனை ஒப்­ப­டைப்­பது பொருத்­தமா? இங்கே விக்­னேஸ்­வ­ரன் சரி­வ­ரச் செயற்­ப­ட­வில்லை என்­பது ஒரு­பு­றம். அவ­ருக்கு வடக்கு அர­சின் உறுப்­பி­னர்­கள் ஒத்­து­ழைக்­க­வில்லை என்­பது மறு­பு­றம். ஆனால், வடக்­கின் அர­சின் உறுப்­பி­னர்­கள் ஒத்­து­ழைத்த காலத்­தி­லும் அவர் எத­னை­யும் செய்­தி­ருக்­க­வில்லை.

நிர்­வாக ரீதி­யி­லும், அர­சி­யல் ரீதி­யி­லும் ஆளு­மை­யான ஒரு­வ­ரி­டமே வடக்கு அர­சின் சுக்­கானை ஒப்­ப­டைப்­பது பொருத்­த­மாக இருக்­கும். இல்­லா­வி­டின், வடக்கு அர­சின் மீதான மக்­க­ளின் வெறுப்பு, தொடர்ந்து அதி­க­ரித்­துக் கொண்டே செல்­லும்.

http://newuthayan.com/story/85261.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வடக்கின் அடுத்த முதல்வர் யார்?

 

வடக்கின் அடுத்த முதல்வர் யார்?

தாயகன்
எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் களமிறக்கப்பட மாட்டாரென அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுமந்திரன் பகிரங்கமாகக் கூறியுள்ளமை தமிழர் அரசியல் வட்டாரங்களில் ஒரு கொதி நிலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த வார இறுதியில் யாழிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சராக 2 வருடங்கள் மட்டுமே பதவி வகிப்பேன், மிகுதி ஆட்சிக்காலத்தில் தம்பி மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்க வேண்டுமென முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அரசியலுக்கு நாம் அழைத்து வந்தபோது அவர் எமக்கு கூறியிருக்கிறார். அவ்வாறு 2 வருடங்கள் எனக் கூறியவர் 5 வருடங்கள் முதலமைச்சராக இருந்துவிட்டார். திரும்பவும் அவரை முதலமைச்சராக்கி கஷ்டபடுத்த நாம் விரும்பவில்லை. ஆகவே, அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டாரென சுமந்திரன் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 
அதுமட்டுமன்றி இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நான் முதலமைச்சராக இருப்பேன். அதற்குப் பிறகு தம்பி மாவை இதனைப் பொறுப்பேற்க வேண்டும். மாவையும் என்னுடன் சேர்ந்து தேர்தலில் நிற்க வேண்டும். இதற்கமைய நான் இரண்டு வருடங்கள் பதவி வகித்த பின்னர் அந்தப் பொறுப்பை அவரிடம் கொடுப்பேன் என்று விக்னேஸ்வரன் கூறியபோது நாம் எவரும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனினும், அன்றைய பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில், நாங்கள் ஒரு தேர்தலுக்குப் போகின்றோம் என்பதால் 2 வருடங்களுக்கு என்று கூறிக்கொண்டு மக்கள் முன் செல்வது அழகல்ல என எமது கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டதுடன், இந்த 2 வருட கதையை இப்போதைக்கு சொல்லத் தேவையில்லையென்றும் கூறியிருந்தார். விக்னேஸ்வரனின் இந்த இரண்டு வருட கதைக்கு நான் மட்டுமல்ல குறைந்தது இன்னும் ஆறு, ஏழு பேர் சாட்சிகளாக இருக்கிறார்கள் என்றும் சுமந்திரன் தனது கருத்திற்கு வலுச்சேர்த்துள்ளார்.
 
சுமந்திரன் எம்.பி.யின் இந்தக் கருத்து தற்போது பலவிதமான விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடனடியாகவே சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளதன் மூலமும் தனது பதிலடியில் அவர் தெரிவித்திருக்கும் சூசகமான கருத்துகள் மூலமும் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது விக்னேஸ்வரன் தரப்புக்கோ இலகுவானதாக இருக்கப் போவதில்லையென்பது தெளிவாகின்றது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியொன்றும் எதிரும் புதிருமாக களமிறங்கவுள்ளமையும் வெளிச்சமாகியுள்ளது.
 
விக்னேஸ்வரன் தனது பதிலில் சுமந்திரனின்  கருத்துக்கு “என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோநிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார்’ என்று கிண்டலாகவே சுமந்திரனை சாடியுள்ளார். அதுமட்டுமன்றி நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்களிடமிருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடர வேண்டுமென்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துகளுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துகளைக் கொண்டோரின் கருத்துகளைக் கேட்டு கலவரம் கொள்ளத் தேவையில்லையென்றும் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது எதற்காக, யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்க பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. வடக்கு, கிழக்கு தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைக்க உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதே கொள்கையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபகக் கட்சிகள் உள்ளன? அப்படியொரு அமைப்பே இல்லாதவிடத்து அக்கூட்டமைப்பிடமிருந்து எங்கிருந்து அழைப்பு வருமெனவும் கேட்டு உங்கள் கட்சியில் போட்டியிட நான் தயாரில்லை என்பதையும் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடமிருந்து எனக்கு அழைப்புவரக் கூடிய சாத்தியமில்லை. எனவே மக்கள் நலன் கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறொரு கட்சியூடாக தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள், இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. புதிய கட்சியொன்றை தொடங்குமாறு பலரும் ஆலோனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்துவிட்டதோ என்பதை நான் அறியேன் என்றும் கூறியுள்ள  விக்னேஸ்வரன், நிறுவன மயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு, எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், சமூகவியலாளர், புத்தி ஜீவிகள் , ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது அறிக்கை மூலம் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தனி அணியுடன் களமிறங்குவது தொடர்பில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதுடன் மட்டுமல்லாது, தான் முதலமைச்சராக பதவி வகித்த இந்த 5 வருட காலத்திலும் தமிழரசுக் கட்சியின் தலைமையினாலும் அதிலுள்ள மண்டைக்கனம் பிடித்தவர்களினாலும் தானும் வடக்கு மாகாண சபையும் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையை ஆட்சி செய்துகொண்டிருக்கும் நிலையில், அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியிலும் உள்ள போதும் வடக்கு மாகாண சபை எடுத்த தீர்மானங்களை, திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவோ அல்லது வடக்கு மாகாண சபைக்கு சிறிதளவேனும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவோ கடுகளவேனும்  அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கவில்லையென்றும் குழிபறிக்கும் வேலைகளிலேயே அவர்கள் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போல், புதிய அணியொன்றை உருவாக்கி வடக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதி என்ன? என்பதே இன்றுள்ள பிரதான கேள்வி. ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் மரண அடி வாங்கியதால் தான் தங்களாலேயே துரோகிகள் ,  இராணுவ ஒட்டுக் குழுக்கள், காட்டிக் கொடுப்போர், கொலையாளிகள், கப்பக் காரர்கள் , ஆள் கடத்தல் காரர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள், பேரினவாதக் கட்சிகள், தமிழின படுகொலையாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் எல்லாம் கூட்டு வைத்துக் கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க வேண்டிய கேவலமான நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில், விக்னேஸ்வரனையும் ஒதுக்கிவிட்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தை எதிர்கொள்வது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுத் தற்கொலைக்கு ஒப்பானதாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களுடைய ஆதரவு சரிந்திருக்கின்றது என்பதை அதன் பேச்சாளர் சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். 75 80 சதவீதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள், இந்தத் தடவை  35 வீதமே வாக்களித்துள்ளனர். அப்படியானால் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியெழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதரவுச் சரிவினால் தேசிய அளவிலே தாங்கள் அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற சக்தி குறைகின்றதா என்ற கேள்வியும் எழுவதாகவும் ஏனெனில், இதுவரைக்கும் அரசாங்கத்துடன் கம்பீரமாகப் பேசுகின்ற போது மக்களின் ஜனநாயக விடயத்தில் எந்தவித மாற்றமும் கிடையாது. 1956 இலிருந்து மக்கள் ஒரே செய்தியையே சொல்லிவருகிறார்கள். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது எனச் சொல்லி வந்துள்ளோம். அதை இந்த முறை தேர்தலிலே எங்களால் சொல்ல முடியவில்லை எனவும் சுமந்திரன் கவலைப்பட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு பரிதாப நிலையில்தான் சாகிறேன் பந்தயம் பிடி என்பது போல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை களமிறக்க மாட்டோமென சுமந்திரன் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான புதைகுழியை தோண்டத் தொடங்கியுள்ளார். வடக்கு மாகாண சபை ஆட்சி பீடமேறிய சிறிது காலத்திற்குள்ளேயே விக்னேஸ்வரனுக்கு எதிரான காய்நகர்த்தல்களை தனது கைக்கூலிகள் மூலமும் கூஜா தூக்கிகள் மூலமும் சுமந்திரன் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அதில் அவரினால் அரங்கேற்றப்பட்ட முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நாடகம் மரண அடியை வாங்கியிருந்தது. எனினும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விக்னேஸ்வரனை உரசிப் பார்ப்பதிலேயே சுமந்திரன் அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வந்தார். கட்சித் தலைமையின் தீர்மானத்தைக் கேட்காமலேயே தானொன்றை அறிவிப்பது சுமந்திரனின் வழக்கம். பின்னர் அது தொடர்பில் ஏற்படும் சர்ச்சைகள், விமர்சனங்களினால் பின்னர் அந்த அறிவிப்புகளிலிருந்து பின்வாங்குவதும் அவரின் வழமை. தற்போது கூட விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படமாட்டாரென பகிரங்கமாகவும் அவருக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படுவாரென சூசகமாகவும் சுமந்திரன் எம்.பி.தெரிவித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனோ வடக்கு மாகாண முதலமைச்சருக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த வேட்பாளர் யாரென இதுவரை தீர்மானிக்கவில்லை. தீர்க்கமான நேரத்தில் அதனை நாம் அறிவிப்போம் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு சென்று கொண்டிருக்கின்றது. அதனை கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன. அதுமட்டுமன்றி கிழக்கு மாகாண சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள்ளது. வடக்கு மாகாணமொன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிமிர்ந்து நிற்கக்கூடிய முதுகெலும்பாகவும் தனித்து ஆட்சியமைத்து பலம் வழங்கக்கூடிய களமாகவும் உள்ளது. அதனையும் கெடுத்து கிழக்கிலும் ஆட்சியில்லை, வடக்கிலும் ஆட்சியில்லை, தமிழ் மக்கள் மனதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லையென்பதை முழு நாட்டுக்கும் மட்டுமன்றி சர்வதேசத்துக்கும் வெளிக்காட்டும் வேலையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்று சொல்லப்படுகின்ற மண்டை வீங்கியவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் தனித்தனியாக களமிறங்கினால் தமிழ் மக்களின் வாக்குகள் உடையப்போவது உறுதி. இதில், சில வேளைகளில் இரு தரப்புமே ஆட்சியமைக்க முடியாத நிலையேற்பட்டால், தற்போது போன்றே தன்மானம் இழந்து, கௌரவம் இழந்து கேவலமான ஒரு கூட்டை உருவாக்க வேண்டிய சூழ்நிலைதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மாகாண சபையிலும் ஏற்படும். ஏனெனில் அவ்வாறானதொரு கேவலமான கூட்டுக்கு விக்னேஸ்வரன் தலைமையிலான அணி செல்லாது என்பதை உறுதிப்படுத்த முடியும். ஆகவே, வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்களின் பலத்தை உடைப்பதற்கான ஒரு தேர்தலாகவே இடம்பெறப் போகின்றது என்பதை சுமந்திரனதும் விக்னேஸ்வரனினதும் பகிரங்க அறிவிப்புகள் பிரகாசமாகவே வெளிப்படுத்தியுள்ளன.

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கின்-அடுத்த-முதல்வர்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.