Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை

Featured Replies

இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை

 

US-State-Department-300x200.jpgசிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைகளத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், நாடுகளின் மனித உரிமை  நடைமுறைகள் தொடர்பான 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட 200இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமைகள் நிலை பற்றி இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ”சிறிலங்காவில் 2017ஆம் ஆண்டில் மிக முக்கியமான மனித உரிமைகள் விவகாரங்களாக, சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் அத்துமீறல்கள், கண்மூடித்தனமான கைதுகள், நீண்ட தடுத்துவைப்பு, இராணுவம் சொத்துக்களை மீளிக்காதமை, சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும்  தொந்தரவுகளைக் குறிப்பிடலாம்.

தமிழர்கள் சிறிலங்கா படையினரால் துன்புறுத்தப்படுவதும், அரசாங்கத்தின் பாகுபாடுகளும் தொடர்கின்றன.

பொதுமக்களை சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் துன்புறுத்துகின்றனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை.

ஆயுதப் போரின் போதும், அது முடிவுக்கு வந்த பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்கிறது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களையே எட்டியுள்ளது.

போர்க்கால மீறல்களுக்கு தண்டனையில் இருந்து தப்பித்தல் இன்னமும் தொடர்கிறது. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவம், துணை ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தண்டனை விதிக்கப்படாத நிலை இன்னமும் நீடிக்கிறது.

பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கமும், நீதிமன்றங்களும் தயக்கம் காட்டுகின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளக கண்காணிப்பை மேற்கொண்டு, சிவில் சமூகத்தினரை துன்புறுத்தினர் அல்லது அச்சுறுத்தினர்.

கடந்த ஆண்டு மே மாதம், முல்லைத்தீவில் ஆயுதப் போரில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூரும் நடவடிக்கைகளை முன்னெடுத்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டார்.

உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்திருந்த காணிகளை இராணுவ மய நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே இடம்பெறுகின்றன.

சிறிலங்கா இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிககள் பொருளாதார ரீதியாக பெறுமதி வாய்ந்தவை.

ஒரு புத்தர் சிலையை அல்லது அரச மரத்தை வைத்து விட்டு அதற்கு பௌத்த பிக்குகள் உரிமை கொண்டாடுவதால்,அதிகாரபூர்வமாக நிலத்துக்கு உரிமை கோர முடியாதிருப்பதாக, சில சிறுபான்மை மதத்தினர் தெரிவித்துள்ளனர்” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/04/21/news/30515

  • தொடங்கியவர்

அமெ­ரிக்­காவின் அறிக்­கையும் யதார்த்­த­பூர்­வ­மான நிலை­மையும்

 

இலங்­கையில் இரா­ணுவ மய­மாக்கல் மற்றும் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பிக்கும் நிலைமை தொடர்­வது குறித்து கடும் அதி­ருப்தி தெரி­வித்­துள்ள அமெ­ரிக்கா நீதிப்­பொ­றி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் காணப்­படும் மந்த நிலை தொடர்­பா­கவும் விசனம் வெளி­யிட்­டுள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் ஆண்­டு­தோறும் வெளி­யி­டப்­பட்டு வரும் நாடு­களின் மனித உரிமை நடை­மு­றைகள் தொடர்­பான 2017 ஆம் ஆண்­டுக்­கான அறிக்கை கடந்த வெள்­ளிக்­கி­ழமை வாஷிங்­டனில் வெளி­யி­டப்­பட்­டது. இலங்கை உள்­ளிட்ட 200க்கும் மேற்­பட்ட நாடுகள் மற்றும் பிராந்­தி­யங்­களில் மனித உரி­மைகள் நிலை தொடர்பில் இந்த அறிக்­கையில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் நிலை­வரம் தொடர்பில் இந்த அறிக்­கையில் விசே­ட­மாக கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் 2017ஆம் ஆண்டில் மிக முக்­கி­ய­மான மனித உரி­மைகள் விவ­கா­ரங்­க­ளாக சட்­ட­வி­ரோத கொலைகள், சித்­தி­ர­வ­தைகள், பாலியல் அத்­து­மீ­றல்கள், கண்­மூ­டித்­த­ன­மான கைதுகள், நீண்ட தடுத்து வைப்பு, இரா­ணுவம் சொத்­துக்­களை மீள­ளிக்­காமை, சிவில் சமூ­கத்­தினர் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான கண்­கா­ணிப்பு, தொந்­த­ர­வு­களை குறிப்­பி­டலாம் என்று இந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பொது­மக்­களை படை­யி­னரும் காவல் துறை­யினரும் துன்­பு­றுத்­து­கின்­றனர். அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆயு­தப்­போ­ரின்­போதும் அது முடி­வுக்கு வந்த பின்­னரும் குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பிக்கும் நிலைமை தொடர்­கி­றது. மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்ட சில அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­யகம் சட்­ட­பூர்­வ­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் ஏனைய நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் இலங்கை அர­சாங்கம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட முன்­னேற்­றங்­க­ளையே எட்­டி­யுள்­ளது என்றும் இந்த அறிக்­கையில் விசனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட போர்க்­கால மீறல்­க­ளுக்கு தண்­ட­னையில் இருந்து தப்­பித்தல் இன்­னமும் தொடர்­கி­றது. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இலக்­கு­வைத்து கொல்­லப்­பட்­டமை, கடத்­தப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் பொது­மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று குற்­றம்­சாட்­டப்­பட்ட இரா­ணுவம், துணை ஆயு­தப்­ப­டைகள், காவல்­துறை மற்றும் ஏனைய பாது­காப்புத் துறை அதி­கா­ரி­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டாத நிலைமை இன்­னமும் நீடிக்­கின்­றது.

பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க இலங்கை அர­சாங்­கமும் நீதி­மன்­றங்­களும் தயக்கம் காட்­டு­கின்­றன. இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வினர் உள்­ளக கண்­கா­ணிப்பை மேற்­கொண்டு சிவில் சமூ­கத்­தி­னரை துன்­பு­றுத்­து­கின்­றனர். அல்­லது அச்­சு­றுத்­து­கின்­றனர் என்றும் அறிக்­கையில் வி­மர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. உயர்­பா­து­காப்பு வலயங்­க­ளுக்குள் அமைந்­தி­ருந்த காணி­களை இரா­ணுவ மய நீக்கம் செய்யும் நட­வ­டிக்­கைகள் மிக மெது­வா­கவே இடம்­பெ­று­கின்­றன எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் விடு­க்­கப்­பட்­டுள்ள இந்த அறிக்­கை­யா­னது இலங்­கையில் குறிப்­பாக வடக்கு, கிழக்கில் இடம்­பெறும் இரா­ணுவ ஆதிக்க நிலைப்­பாட்­டையும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காண்­பிக்­க­வில்லை என்­ப­தையும் பறை­சாற்­று­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­ய­ம­டைந்­தனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் அங்­க­வீ­னர்­க­ளா­யினர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டனர். யுத்­தத்­தின்­போது உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்த தமிழ் மக்கள் சொல்­லொணாத் துன்­பங்­களை சுமந்­த­வண்ணம் வாழ்ந்து வரு­கின்­றனர்.

இந்த மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னைக்கும் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்றும் யுத்­தத்­தின்­போது இழைக்­கப்­பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. சர்­வ­தேச சமூகம் இந்­த­வி­ட­யத்தில் பல்­வேறு வகை­களில் அழுத்­தங்­களை கொடுத்து வந்­தது.

2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அமெ­ரிக்­காவின் ஏற்­பாட்­டி­லேயே இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து 2013, 2014ஆம் ஆண்­டு­க­ளிலும் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால், அன்று ஆட்­சி­யி­லி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது அதற்கு இணங்­க­வில்லை. ஐ.நா. மனித உரிமை தீர்­மா­னத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்­டையே அந்த அர­சாங்கம் கொண்­டி­ருந்­தது.

இதனால், இழு­பறி நிலைமை தொடர்ந்து வந்­தது. தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கோ அடிப்­படை பிரச்­சி­னைக்கோ உரிய தீர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையின் கீழ் பொறுப்­புக்­கூறும் விட­யமும் கிடப்பில் போடப்­பட்­டது. வடக்கு, கிழக்கில் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு தொடர்ந்து வந்­தது. இந்த நிலை­யில்தான் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது.

நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காணும் என்றும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் தமக்கு நீதி வழங்கும் என்றும் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தனர். சர்­வ­தேச சமூ­கமும் இந்த விட­யத்தில் பெரும் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது. இதன் கார­ண­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு ஆறு­மா­த­கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டது. 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­டது. ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்­கமும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இழுத்­த­டிப்புப் போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. தற்­போ­தைய நிலையில் இந்த விட­யத்தில் அலட்­சி­யப்­போக்­கோடு அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது.

 ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அல் ஹுசைன் தனது அறிக்­கையில்இ இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பாட்டை கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். மாற்றுப் பொறி­மு­றையை கையா­ள­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து அவர் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார். இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் சர்­வ­தேச சமூகம் நம்­பிக்கை இழக்கும் நிலை­மையை உணர்த்­து­வ­தா­கவே அவ­ரது அறிக்கை அமைந்­தி­ருக்­கின்­றது.

தற்­போது, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்­கையும் இதனை பறை­சாற்­று­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் இவ்­வாறு செயற்­படும் நிலையில், தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காணும் விட­யத்­திலும் முழு­மை­யான அக்­கறை செலுத்­தப்­ப­ட­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் அக்­கறை காண்­பிக்­கப்­பட்­டது. வலி­காமம் வடக்கு, கிழக்கில் சம்பூர் பகு­தி­களில் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. ஆனால், இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களை முழு­மை­யாக விடு­விப்­ப­தற்கு இன்­னமும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்­திற்கும் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வில்லை. மீள் குடி­யேற்ற விட­யத்­திலும் முழு­மை­யான அக்­கறை காண்­பிக்­கப்­ப­ட­வில்லை. இவ்வாறான நிலையில் பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள் பொறுமையிழந்த நிலையில் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. தற்போதும் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான செயலகம் ஒன்றினை அரசாங்கம் அமைத்துள்ளபோதிலும் அதன் பணிகளும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இவ்வாறாக நிலைமாறுகால நீதி பொறிமுறைக்கான செயற்பாடுகளும் இடம்பெறாத நிலையில் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்திலும் இழுத்தடிப்புப்போக்குக்கள் காண்பிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைமையினை கண்டிக்கும் வகையிலேயே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை அமைந்திருக்கின்றது.

எனவே, நல்லாட்சி அரசாங்கமானது இனியாவது சர்வதேசத்தின் எதிர்ப்புக்களை முறியடிக்கும் வகையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். பொறுப்புக்கூறும் விடயத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விவகாரத்திலும் தீவிர அக்கறை காண்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-23#page-4

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொல்லுவினம்.. அப்புறம்.. சொறீலங்கா இராணுவத்திற்கு பயிற்சியும்.. ஆயுதமும்.. கூட்டு ஒத்திகையும் நடத்துவினம்.

அமெரிக்காவின் உந்த இரட்டைக்கூத்து இப்ப உலகத்துக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு. எனியும் ஏமாத்திக்கிட்டு இருக்க முடியாது. ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க.. ரெம்ப தமிழர்களில் அக்கறையுள்ளது போல நடிச்சது காணும். 

இவ்வளவு சொல்லிக்கிட்டு... அங்கால வரிச்சலுகைகள் சும்மா அள்ளிக் கொடுக்கவும் படுகுது. இதில.. சொறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கினமாமில்ல. tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.