Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்­ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள்

Featured Replies

உள்­ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள்

 

கடந்த பெப்­ர­வரி மாதம் நடை­பெற்று முடிந்த உள்­ளூராட்சி மன்ற தேர்தலைத்­தொ­டர்ந்து சபை­க­ளுக்­கான மேயர்கள் நகர முதல்­வர்கள் மற்றும் தவி­சா­ளர்கள் உப நிலைப்­ப­த­வி­யா­ளர்கள் உத்­தி­யோக பூர்­வ­மாக தெரிவு செய்­யப்­பட்டு உள்­ளூரா­ட­்சி­ச­பைகள் இயங்கு நிலை பெறத்­தொ­டங்­கி­யுள்­ளதை பத்­தி­ரிகை செய்­தி­க­ளிலும் அறிக்­கைகள் விடுக்­கப்­ப­டு­வ­தைக்­கொண்டும் அறிந்து கொண்­டி­ருக்­கிறோம்.

புதிய பத­வி­களை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் ஆர்­வத்­து­ட­னும்­வி­சு­வா­சத்­து­டனும் செயற்­ப­டப்­போ­வ­தா­கவும் தங்கள் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்ட சபை­களை உயர்ந்த தரத்­துக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஆளாக்­கப்­போ­வ­தா­கவும் ஆர்­வத்­துடன் அறிக்­கைகள் விடு­வ­தையும் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கிறோம். சில தலை­வர்கள் ஊழ­லற்ற சேவையை செய்வோம் மக்­க­ளுக்கு அளப்­ப­ரிய சேவை­களை செய்ய காத்­தி­ருக்­கி­றோ­மென ஆர­வா­ர­மாக பேசப்­ப­டு­வ­தும்­செய்­தி­க­ளாக வெளிவ­ரு­கின்­றன.

இந்­நி­லையில் இலங்­கையின் உள்­ளூராட்சி அமைப்­புக்­களின் அதி­கா­ரங்கள் மற்றும் அவற்றின் மூலம் ஆற்­றப்­ப­டக்­கூ­டிய சேவைகள் பொது­மக்கள் இவற்­றி­னூ­டாக எதிர்­பார்க்கும் பணி­கள்­பற்றி சுருக்­க­மாக நோக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது மாத்­தி­ர­மன்றி அறி­யப்­ப­ட­வேண்­டிய விட­யங்­க­ளு­மாகும்.

இலங்­கையில் தற்­பொ­ழுது 341 உள்­ளூ­ராட்சி சபைகள் இருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஏலவே 335 சபைகள் இருந்­த­போதும் மலை­ய­கப்­ப­கு­தியில் ஆறு சபைகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­ட­தன்­ கா­ர­ண­மாக அவை 341 எண்­ணிக்கை கொண்­ட­தாக உயர்ந்­துள்­ளது. இந்த தர­வு­களின் அடிப்ப­டையில்

 மாந­கர சபைகள் 23

 நக­ர­ச­பைகள் 41

பிர­தேச சபைகள் 271

 இதில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட 6 சபைகள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை

 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அனைத்து அதி­கா­ரங்­களும் கட­மை­களும் மாந­க­ர­சபை கட்­ட­ளைச்­சட்டம் நக­ர­சபை கட்டளைச்­சட்டம் பிர­தேச சபை கட்­ட­ளைச்­சட்டம் 1999 ஆண்டு உள்­ளூராட்சி மறு­சீ­ர­மைப்பு பரி­சீ­லனை ஆணைக்­குழு அறிக்கை உள்­ளூ­ராட்சி மறு­சீ­ர­மைப்பு சுற்­ற­றிக்கை தொகுப்பு உள்­ளூரா­ட்­சிக்­கான தேசிய கொள்கை பிர­க­டனம் போன்ற காலத்­துக்கு காலம் வரும் பல்­வேறு அறி­க்­கைகள் சட்­டங்கள் சுற்­ற­றிக்­கைகள் உப­வி­திகள் என்­ப­வற்றின் மூலம் சபை­களின் அதி­கா­ரங்­களும் கட­மை­களும் வரைய­றுத்­துக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இவை மட்­டு­ம­ன்றி இலங்­கையின் பொது­வான சட்­டங்­க­ளையும் உள்­ளூ­ராட்சி சபைகள் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன

அவை­யா­வன.

1. அர­சியல் அமைப்பு சட்டம்

2. உள்­ளூ­ராட்சி தேர்தல் சட்டம்

3. பொது நிர்­வாக சட்டம்

4. முகா­மைத்துவ சட்டம்

5. வரிச்­சட்­டங்கள்

6. பொது சுகா­தாரம்

7. பௌதீக திட்­ட­மிடல்

8. பொது நலன் சேவை சட்டம்

போன்­ற­வையும் உள்­ளூ­ராட்சி சபை­களால் பயன் படுத்த முடியும்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அடிப்­படை நோக்­கங்கள் தமது ஆள்­புல எல்­லைக்குள் வசிக்கும் மக்­களின் அடிப்­படை தேவை­களை நிறை­வேற்­ற­லாகும். இந்த தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் பின்­வ­ரு­மாறு அதன் அதி­கா­ரங்­களும் கட­மை­களும் வரை­ய­றுக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக மாந­கர சபை நக­ர­சபை பிர­தேச சபை ஆகிய மூன்று சபை­களும் பொது­வான ஆட்சி நடை­மு­றை­வ­ழிகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டலாம்.

குறிப்­பாக பிர­தேச சபைகள் நாட்டில் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் அதி­க­மாக காணப்­படும் நிலையில் பிர­தேச சபை­களின் நோக்­கங்கள் பின்­வரும் வகையில் வழி­காட்­டப்­ப­டு­கி­றது.

உள்­ளூ­ராட்சி மட்­டத்தில் நிர்­வாக மாற்றம் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் தொடர்­பாக முடி­வு­களை எடுத்தல் நடை­மு­றையில் பய­னுறும் வகையில் மக்கள் சகல விட­யங்­க­ளிலும் பங்­கு­பற்­று­வ­தற்கு வாய்ப்­புக்­களை வழங்கி பிர­தே­சத்தின் ஆள்­புல எல்­லைக்குள் உள்ள மக்­களின் அபி­வி­ருத்தி அடிப்­படை தேவைகள் மற்றும் பிர­தேச மேம்­பா­டுகள் கருதி பின்­வரும் குழுக்­களை துறைசார் வல்­லு­நர்­களின் உத­வி­யுடன் அமைக்­கலாம். கூடி­ய­ளவு பிர­தேச மக்­களின் பங்­க­ளிப்பு ஆலோ­ச­னை­க­ளைப்­பெ­று­வது உத்­த­ம­மான உயர்ந்த பெறு­பே­று­க­ளைத்­த­ர­மு­டியும்.

   1 நிதிக்­கொள்கை உரு­வாக்கல்

   2 வீட­மைப்பு சமூக சேவை­களை உரு­வாக்கல்

   3 தொழில் நுட்ப சேவை­களை உரு­வாக்கல்

   4 சுற்­றாடல் வாழ்க்கை வச­திகள்

   இவை தவிர சபை­களின் தேவை­களை நோக்­க­மாக கொண்டு உப குழுக்­க­ளையும் உரு­வாக்க முடியும்.

 சுயாட்­சியின் முக்­கி­ய­மான ஒரு அல­காக உள்­ளூராட்சி சபைகள் மேலை நாடு­களின் பிர­தான பங்­கைப்­பெற்று நிற்­கி­றது குறிப்­பாக இந்­தி­யாவில் 1992 ஆம் ஆண்டு உண்­டாக்­கப்­பட்ட 73 மற்றும் 74ஆம் பிரிவு அர­சியல் சா­சன திருத்­தங்கள் கணி­ச­மான அதி­கா­ரங்­களை உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளது. அதிலும் கிராம ராஜ்­ஜியம் என்ற இலக்கின் அடிப்­படையில் பஞ்­சா­யத்து அல­கு­க­ளுக்கு கூடிய அதி­கா­ரங்கள் வழங்க ஏற்­பா­டா­கி­யுள்­ளது. ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­வரை இது இன்னும் நலிவு நிலை­யிலேயே காணப்­ப­டு­கி­றது.

ஆனால் தற்­போது அர­சியல் சாசன ஏற்­பா­டு­களை உண்­டாக்கும் வகையில் வழிப்­ப­டுத்தல் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையில் மாகாண சபை­களின் கீழ் தொழிற்­படும் அர­சாங்­கத்தின் மூன்­றா­வது மட்­ட­மொன்­றாக உள்ளூர் அதி­கார சபைகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் நிதி­போன்­ற­வற்­றுடன் தொடர்­பு­டைய ஏற்­பா­டுகள் உள்ளூர் அதி­கார சபைகள் தொடர்­பி­லான மாகாண சபை­களின் மேற்­பார்­வைத்­தத்­து­வங்­களை பாதிக்­கா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும் எனவும் விதந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் சபை­களை தர­மு­யர்த்தல் மாகாண சபை­களின் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­ட­தாக இருக்­க­வேண்டும் எனவும் சனத்­தொகை நிலப்­ப­ரப்பு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் எதிர்­கா­லத்தில் இரண்டு வகை­யான உள்­ளூராட்சி சபை­களே இருத்தல் வேண்­டு­மெ­னவும் அதில் விதந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் அதி­கா­ரப்­ப­கிர்வின் படி­மு­றைகள் என்ற வகையில் அ. பாரா­ளு­மன்றம் ஆ. மாகா­ண­ச­பைகள் இ. உள்­ளூரா­ட்சி சபைகள் மற்றும் கிராம அபி­வி­ருத்தி சபைகள் ஆகிய படி முறைகள் முக்­கிய இடம் பெறு­கின்­றன. இவற்றுள் பாரா­ளுமன்ற மாகாண சபைகள் உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான பிர­தி­நி­திகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்­கப்­ப­டு­கி­றார்கள். உதா­ர­ண­மாக பார­ாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் ஐந்து வரு­டத்­துக்­கொ­ரு­முறை தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். அதேபோல் உள்­ளூ­ரா­ட்சி சபை­க­ளுக்­கான உறுப்­பி­னர்கள் 4 வரு­டத்­துக்­கொரு முறை­ தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றார்கள் அதன் அடிப்­ப­டை­யி­லேயே பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்­கப்­பட்ட ஆட்­சி­யா­ளர்கள் தற்­பொ­ழுது ஆட்­சியை ஏற்று நடத்த முற்­பட்டு வரு­கி­றார்கள். இதில் மாந­க­ர­ச­பையின் தலைவர் மேயர் என்றும் உத­வி­மேயர் என்றும் நக­ர­ச­பையின் தலைவர் நக­ர­சபை தலைவர் அல்­லது நக­ர­பி­தா­வென்றும் பிர­தேச சபை­களின் தலை­வர்கள் தவி­சாளர் உதவி தவி­சாளர் என்றும் விளிக்­கப்­ப­டு­கி­றார்கள். தவி­சாளர் என்ற நாமத்தை மாகாண சபையின் சபா­நா­ய­க­ருக்கும் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

பெரிய நக­ரங்­களை மாந­கர சபைக்கும் சிறிய நக­ரங்­களின் ஆளு­கையை கொண்­டவை நகர சபை­க­ளென்றும் கிரா­மப்­புற பகு­தி­களைக் கொண்­டவை பிர­தேச சபை­க­ளென்றும் பொது­வாக வரை­ய­றுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

ஏலவே குறிப்­பிட்­ட­துபோல் அதி­கா­ரத்தின் கீழ் மட்ட அல­காக பார்க்­கப்­ப­டு­வது கிராம அபி­வி­ருத்தி சபை­க­ளாகும். இதில் இச்­ச­பை­களின் அங்­கத்­த­வர்கள் தெரி­வா­னது குறித்த கிரா­ம­சே­வகர் பிரிவில் கிரா­ம­சே­வ­கரால் நடத்­தப்­படும் கூட்­டத்தின் மூலம் தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள்.

உள்­ளூ­ரா­ட்சி சபை­யொன்றின் பத­விக்­காலம் சபை உறுப்­பி­னர்கள் பத­வி­யேற்ற நாளி­லி­ருந்து 4 வரு­டங்­க­ளைக்­கொண்­டது இதை கூட்­டவோ குறைக்­கவோ மத்­திய அமைச்­ச­ருக்கு அதி­கா­ர­முண்டு.

பிர­தேச சபை­களின் அதி­கா­ரங்கள் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிர­தேச சபைகள் சட்­டத்தின் மூலம் பின்­வ­ரு­மாறு வகுத்­துக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ரங்கள்.

 அதி­கா­ரங்கள் என்ற வகையில்

1. சொத்­துக்­களை பரா­தீ­னப்­ப­டுத்­து­வ­தற்கும் தன்­னு­ரிமை ஆக்­கு­வ­தற்கும் விற்­ப­தற்கும் அதி­காரம் கொண்­டவை

2. ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­ளவும் வரி­ களை அற­விடும் அதி­காரம் கொண்­ட­து.

4 செல­வு­களை கணிப்­பிடும் அதி­காரம்

5 உரி­மைப்­பத்­தி­ரங்­களை வழங்கும் அதி­காரம்

6 உப­வி­தி­களை உரு­வாக்கும் அதி­காரம்.

 இவ்­வ­தி­கார எல்லை தொடர்­பாக உள்­ளூ­ரா­ட்சி அதி­கார சட்­டங்­க­ளிலும் விதி­க­ளிலும் தெளிவாக கூறப்­பட்­டுள்­ளன.

இவற்றின் பரப்­ப­ளவு பெரி­தாக இருக்­கிற போதும் சுருக்­க­வ­டிவில் பார்ப்பின் பின்­வரும் அதி­கார தத்­து­வங்­களை பிர­தேச சபைகள் கொண்­டி­ருக்­கின்றன. 1974 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்­ளூராட்சி சேவை சட்­டத்­தி­னதும் ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வா­கவும் பின்­வரும் தத்­து­வங்­களை கொண்­ட­தாக விளங்­கு­கி­றது.

1.பிர­தேச சபைகள் தமக்கு தேவை­யான பத­வி­களை உரு­வாக்­குதல்.

2.பொருத்­த­மான நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கும்

சேவையை இடை நிறுத்­து­வ­தற்கும் அதி­காரம் கொண்­டவை.

3 ஓய்­வூதியம் வழங்கல் (தமது பணி­யா­ளர்க­ளுக்கு)

 4 ஏனைய சபை­க­ளுடன் ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்ளல்

 5 அசையும் அசையா ஆத­னங்­க­ளை­யும்­சொத்­துக்­களை அமைச்சின் அனு­ம­தி­யுடன் உரி­தாக்­குதல்.

6 காணி மற்றும் கட்­டி­டங்கள் ஆகி­ய­வற்றை

கொள்­வ­னவு செய்தல் குத்­த­கைக்கு விடல்.

7 வேலை வாய்ப்­பு­திட்­டங்­களை உரு­வாக்­குதல்

8 பாட­சா­லை­களை திருத்­துதல் பெயர்­சூட்டல் தரம் உயர்த்­துதல்.

9 மகளிர் சிறுவர் நல­னோ­ன்பு சேவை­க­ளுக்கு நிதி ஒதுக்­குதல்.

10 நிதி­யத்தின் ஒரு­ப­கு­தியை அபி­வி­ருத்­திக்கு ஒதுக்குதல்.

11. சமய கலா­சார மற்றும் இலக்­கிய விழாக்­களை நடத்­துதல்.

12 மகளிர் அபி­வி­ருத்தி.

13 வறுமை நிவா­ரணம்

14 விவ­சாயம் வீட்டு விலங்­கு­களை வளர்ப்­ப­திலும்

ஆராச்­சி­களை நடத்­து­வ­தற்கும் பரீட்­சார்த்த பண்புகளை பேணு­வ­தற்கும் மற்­றும் ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்கும் உரிமை கொண்­டவை.

இவற்றில் இன்று முக்­கி­ய­மாக கொள்­ளப்­ப­டு­வது கிரா­மங்­களின் வீதி தொடர்­பான அபி­வி­ருத்­தி­களும் அதி­கா­ரங்­க­ளு­மாகும்.

15. பொது வீதிகள்

இன்­றைய மக்­களின் அவ­சி­யப்­பா­டு­களில் வீதிகள் போக்­கு­வ­ரத்­துக்கள் என்­பன அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்த சேவை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. இ­லங்­கை­யி­லுள்ள 70 வீதத்­துக்கு மேற்­பட்­ட ­கி­ரா­மங்கள் வீதிப்­போக்குவரத்­துக்கள் சீர­மைப்­பற்ற கி­ரா­மங்­க­ளா­கவே காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இதன்­கா­ர­ண­மாக பொது­மக்கள் பல்­வேறு அசௌகரி­யங்­களை அனு­ப­வித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பாடல் சமூ­க­வ­ளர்ச்சி ஆகி­ய­வற்றில் அதிக பாதிப்பை செலுத்­து­கின்­றது என்ற விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கிற நிலையில் இவற்றின் மீது அதிக கவனம் செலுத்­த­வேண்­டிய பொறுப்பு உள்ளூர் அதி­கார சபை­கள் சார்ந்­த­து­வென சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இலங்­கையின் வீதி வழி­களை பொது வாக மூன்­றாக வகுத்­துக்­காட்­டப்­ப­டு­கி­றது.

1. வீதி அதி­கார சபை­க­ளுக்கு உரித்­து­டை­யவை

2. மாகாண சபை வீதி அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மா­னவை

3. உள்­ளூ­ராட்சி சபை­களின் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­டவை.

இவற்றில் உள்­ளூ­ரா­ட்சி சபை­க­ளுக்கு உரித்­து­டைய வீதி அபி­வி­ருத்தி தொடர்பில் பின்­வரும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

 பிரிவு 27. அ. புதிய வீதி­க­ளையும் தெருக்­க­ளையும் பாலங்­­க­ளையும் சுரங்­கங்­க­ளையும் அல்­லது வேறு பொது வழி­க­ளையும் வகுத்து நிரு­வ­கிக்­கும் அதி­காரம்.

பயன்படுத்­தப்­ப­டாத இடை நிறுத்­தப்பட்ட தெருக்­களை கைய­கப்­ப­டுத்­தலாம்.

வீதி புன­ர­மைப்பு திருத்தம் அபி­வி­ருத்தி என்­ப­வற்றில் அதிக கவனம் காட்­டுதல் என பலத்­து­வ­மான அதி­கா­ரங்கள் கொண்­ட­வை­யாக உள்­ளூராட்சி சபைகள் காணப்­ப­டு­கின்­றன.

 இது­போ­லவே மின்­சாரம் நீர்­வி­நி­யோகம் வரி மதிப்­பிடல் அற­விடல் என்­பவை மன்­றங்­களின் அதி­கா­ரத்­துக்­குட்­பட்­டவை துர­திர்ஸ்ட வச­மாக நீர்­வி­நி­யோகம் பெறல் மின்­சா­ரம் பெறல் வீட்டு நிர்­மாண அனு­ம­தி­க­ளுக்கு உள்­ளூ­ரா­ட்சி சபைகள் சான்­றிதழ் வழங்கும் சபை­க­ளாக இன்று செயற் படு­கி­றதே தவி­ர­போ­திய அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­து­வ­தில்லை. ஐரோப்­பிய மற்றும் வளர்ச்­சி­யு­டைய ஆசிய நாடு­களில் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அதி­கார செறிவு கொண்­ட­வை­யாக இருப்­பதே அந்­நாட்டின் அதி­கார பகிர்வு தத்­து­வத்­துக்கு எடுத்­துக்­காட்டாக இருக்­கி­றது.

எல்­லைப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­களை கொண்­டி­ருப்­பதன் கார­ண­மாக தமது பிர­தேச எல்­லைக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு பல்­வேறு சேவை­களை ஆற்ற வேண்­டிய பணி இத­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

1. கழி­வ­கற்றல்

2. அழ­கு­ப­டுத்தல்

3. மயா­னங்கள் புன­ர­மைப்பு

4. முன்­பள்­ளி­கள் நடத்­துதல்

5. பிர­தேச நூல­கங்­களை அமைத்தல்

6. தொற்று நோய் தடுப்பு நட­வ­டிக்கை

7. கட்­டாக்­கா­லி­களை அகற்­றுதல்

8. கட்­டிட அனு­மதி வழங்கல்

9. சன­ச­மூக நிலை­யங்­க­ளுக்கு உத­வுதல்

10. விளை­யாட்டு மைதா­னங்­களை உரு­வாக்­குதல்

11. பொழுது போக்கு வச­தி­களை உரு­வாக்கல்

12. சிறுவர் பூங்கா அமைத்தல்

13. சந்தை வச­தி­களை ஏற்­ப­டுத்தல்

14. குடி நீர்­வ­ச­தி­களை உரு­வாக்­குதல்

என தமது பிர­தேச எல்­லைக்கு உட்­பட்ட மக்­க­ளுக்கு நானா­வி­த­மான சேவை­களை ஆற்­ற­வேண்­டிய கடமை பொறுப்பு இதன்பால் சட்­ட­ரீ­தி­யா­கவும் அதி­கார பூர்வ­மா­கவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புக்களைப் பொறுத்தவரை கடந்த கால அனுபவத்தின்பால் கூறப்படும் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் இவைபற்றிய அதிருப்திகளையும் விசனங்களையுமே உண்டு பண்ணி வந்துள்ளது. காரணம் ஆட்சியாளர்களின் ஆளுகைத்திறமை, அரசாங்கம் மற்றும் கட்சி சார்ந்த செல்வாக்கின் ஊடுருவல்,

மக்களின் நேரடி பங்களிப்பின்மை மற்றும் பங்களிப்பு பெறப்படாமை,

நிதிக்கட்டுப்பாடு திட்டமிடும் ஆற்றல் வளசாதனங்களை முறையாக பயன்படுத்த முடியாமை, பிரதேச வளங்களை அடையாளம் காணத் தெரியாமை. வரிவிதிப்பு அறவிடுகை,

வரிமதிப்பீடு போன்றவற்றில் ஆர்வமின்மை, ஊழல் மோசடிகள் என்பவை நேரடியாகவே தாக்குகின்றமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் உள்ளூராட்சி அமைப்புக்கள் வெற்றிகரமாக இயங்க முடியா நிலையே கடந்த காலங்களில் காணப்பட்டுள்ளது.

இவையெல்லாவற்றையும் விட நவீன வாழ்வியல் மற்றும் அபரீதமான உலகமயமாக்கல் கொள்கைகள் காரணமாக மக்களின் தேவைகள் அவசியங்கள் அடிப் படைத் தேவைகள் போட்டிபோட்டு வளர்ந்து கொண்டுவரும் அளவுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் நிதி நிலைமைகள் மத்திய அரசினால் வழங்கப்படும் நிதிசார் மற்றும் உதவிகள் ஒப்பீட்டளவில் போது மானதாக காணப்படவில்லை. இதன் காரணமாக மக்களின் எதிர் பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத காரணங்களினால். உள்ளூராட்சி சபைகள் தோல்விகளை அடைந்துள்ளது என்ற கருத்து காணப்படுகிறது.

இலங்கையின் ஆட்சிமுறையிலும் அரசியல் அதிகாரப்பகிர்வில் குட்டிப்பாராளுமன்றம் என்று வர்ணிக்கப்படுவதுடன் அரசியல் நுழைவின் ஆரம்ப நுழைவாசல் என்று கூறப்படும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர் காலத்தில் அதிகாரப்பகிர்வின் முதலாம் படியாக இருக்கவேண்டுமென்பது எதிர்பார்க் கப்படுகிற விடயமாகும்.

திரு­ம­லை­நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-21#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.