Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா

Featured Replies

போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா

1asfnjaoi-696x464.jpg
 

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று(23) காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

 

போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்தார்.

போட்டியின் ஆரம்ப சுற்றில் 3.30 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த அனித்தா, 2ஆவது சுற்றில் 3.50 மீற்றர் உயரத்தைக் கடந்து, 2017இல் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிலைநாட்டப்பட்ட(3.48 மீற்றர்) தேசிய சாதனையை முறியடித்தார்.

இதனையடுத்து 3.55 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த அனித்தா, முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். எனினும், இறுதி முயற்சியில் வெற்றி கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் தேசிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.

எனினும், ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தை மனதில் கொண்டு 3.60 மீற்றர் உயரத்தை அடுத்த இலக்காக அனித்தா தெரிவுசெய்தார். ஆனால் அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதன்படி, கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடம் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் மற்றுமொரு தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய சாதனை படைத்த பிறகு ThePapapre.com இணையளத்தளத்துக்கு அனித்தா வழங்கிய பிரத்தியேக செவ்வியில், ”தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் சுபாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இந்நிலையில், 3.60 மீற்றருக்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அனித்தா பதிலளிக்கையில்,

”உண்மையில் 3.55 மீற்றரை உயரத்தை தாவுவதற்கு கிடைத்தமையே மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கடுமையான முயற்சி செய்து வருகிறேன். எனவே, அதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதை கருதுகிறேன்” என்றார்.

 

இதேவேளை, இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கே. பெரேரா, 3.10 மீற்றர் உயரம் தாவி 2ஆவது இடத்தையும், கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜே. சுகிர்தா 3.00 மீற்றர் உயரம் தாவி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இன்று காலை 10 மணியளவில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகள் ஆரம்பமாகின. இதில் 20 மற்றும் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டிகளை ஒரே நேரத்தில் ஆரம்பிக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனையடுத்து வீராங்கனைகளுக்கு பரீட்சார்த்த போட்டிகளில் ஈடுபட 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டன.

அதன்பிறகு போட்டிகள் ஆரம்பமாகியதுடன், மதியம் 12.30 மணியளவில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டி நிறைவடைந்தது. தொடர்ந்து 2.00 மணியளவில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டிகளும் நிறைவுக்கு வந்தன. எனவே பசிக்கும், தாகத்துக்கும் மத்தியில் கடுமையான வெயிலையும் தாங்கிக்கொண்டு இந்த வீராங்கனைகள் வெற்றிகளைப் பதிவுசெய்தனர்.

இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியில் கோலூன்றிப் பாய்தலின் நட்சத்திர வீராங்கனையான அனித்தா ஜெகதீஸ்வரன் ஒரே நாளில் 2 தடவைகள் தேசிய சாதனையை முறியடித்திருந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

எனவே, தேசிய மட்டத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்ற அனித்தாவுக்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

 

அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் தேசிய சாதனை

  • தொடங்கியவர்
  • சாவகச்சேரி இந்துவின்  டக்சிதாவுக்குத் தங்கம்
 
 

சாவகச்சேரி இந்துவின்  டக்சிதாவுக்குத் தங்கம்

இளை­யோ­ருக்­கான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 18 வய­துப் பெண்­கள் பிரி­வில், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித் து­வம் செய்த நே.டக்­சிதா புதிய சாத­னை­யு­டன் தங்­கம் வென்­றார்.

கொழும்பு சுக­ததாஸ மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இந்­தப் போட்­டி­யில், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த நே. டக்­சிதா 3.02 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து புதிய சாத­னை­யைப் பதிவு செய்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

கடந்த வரு­டம் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த ஹெரீனா 3.01 மீற்­றர் பாய்ந்து படைத்­தி­ருந்த சாத­னை­யையே இவர் முறி­ய­டித்­தார்.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஹெரீனா 2.90 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

http://newuthayan.com/story/87328.html

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டக்சிதா.

மற்றைய வீராங்கனைகளுக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

தேசிய சாதனை நிகழ்த்தும் இலக்குடன் என். டக்சிதா

 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய இளையோர் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.02 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி என். டக்சிதா

  • தொடங்கியவர்

கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீரர் புவிதரன் புதிய சாதனை

Untitled-42-696x457.jpg
 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் (24) நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் சாதனைகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்படி இன்றைய தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 23, 20 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் முறையே 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை அப்பகுதி மாணவர்கள் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன், 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

போட்டியின் ஆரம்பத்தில் 4.10, 4.20 மற்றும் 4.30 மீற்றர் உயரங்களை படிப்படியாகத் தாவிய புவிதரன், 4.40 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு மேற்கொண்ட கடைசி முயற்சியில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 4.50 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியிலேயே வெற்றிகரமாக தாவிய அவர், 4.62 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியில் வெற்றிகொண்டு 2017இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனால் (3.61 மீற்றர்) நிலைநாட்டிய போட்டி சாதனையை முறியடித்தார்.

 

கடும் வெயிலுக்கு மத்தியில் தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி முன்னோக்கிச் சென்ற புவிதரன், அடுத்த இலக்காக 4.70 உயரத்தை தெரிவு செய்தார். எனினும், இந்த சுற்றின் முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து தனது சொந்த சாதனையை மறுபடியும் புதுப்பித்தார்.

தொடர்ந்து இதே வெற்றிக் களிப்புடன் அடுத்த இலக்காக 4.75 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த போதிலும் அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது.

இறுதியில் முதல் தடவையாக 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்குபற்றி 4.70 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன், போட்டி சாதனையுடன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

முன்னதாக கடந்த இரு வருடங்களாக அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாக்களில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியிருந்த புவிதரன் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  •  
  •  
  •  

இந்நிலையில், போட்டியின் பிறகு எமது இணையத்துக்கு கருத்து வெளியிட்ட புவிதரன், ”உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவி செய்த எனது பயிற்றுவிப்பாளர் கணாதீபன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது பாடசாலைக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து என்று சொல்லலாம். அதுவும் அவரது பயிற்றுவிப்பின் கீழ் சாதனை படைக்க முடிந்தமை புண்ணியம் என கருதுகிறேன். எனது இந்த வெற்றிக்கான அனைத்து கௌரவங்களும் அவரையே சாரும். அதேபோன்று எனது பாடசாலை  விளையாட்டுத்துறை ஆசிரியர் மதனரூபன், பழைய மாணவர் சங்கம், எனது அம்மா மற்றும் உறவினர்களுக்கும், எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. இப்போட்டித் தொடருக்கு வருவதற்கு முன்பே இதைவிடவும் அதிகமான உயரத்தை தாவ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வந்தேன். தொடர்ந்து கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய சாதனையை முறியடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனவும் தெரிவித்தார்.

தனது 11ஆவது வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த புவிதரன், தற்போது கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியது மாத்திரமல்லாது, ஒவ்வொரு போட்டித் தொடருக்காகவும் புவிதரனை உற்சாகப்படுத்தி வெற்றியுடன் வா மகனே என்று சொல்லும் அளவுக்கு புவிதரனின் தாய் அனைவருக்கும் உதாரணமாக இடம்பிடித்துவிட்டார்.

தரம் 11இல் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளுக்காக காலடி எடுத்து வைத்த புவிதரன், 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வந்துள்ளார். எனினும், ஓட்டப் போட்டியில் எதிர்பார்த்தளவு முன்னேற்றத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. எனவே மைதான நிகழ்ச்சிகளில் மிகவும் ஆபத்தான போட்டியாகக் கருதப்படுகின்ற கோலூன்றிப் பாய்தலை அவர் தெரிவுசெய்து தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று படிப்படியாக வெற்றிகளையும் பதிவுசெய்து வந்தார்.

 

உண்மையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் ஒரு கட்டத்தில் தேசிய சாதனையாக உள்ள 5.00 மீற்றர் உயரத்தையும் புவிதரன் தாவி விடுவார் என அங்கிருந்த போட்டி நடுவர்கள், ஊடகவியலாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். எனினும், பாடசாலை வீரரும் குறைவான அனுபவமும் கொண்ட என்னாலும் இதைவிடவும் அதிகமான உயரத்தை தாவ முடியும் என்ற தன்னம்பிக்கையையும், எச்சரிக்கையையும் புவிதரன் உணர்த்திவிட்டு சென்றார் என்றே சொல்லலாம்.

எனவே கோலூன்றிப் பாய்தலில் வருடா வருடம் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா ஜெகதீஸ்வரனைப் போன்று கோலூன்றிப் பாய்தல் ஆண்கள் பிரிவிலும் சாதனை படைக்கின்ற வீரர்கள் வடக்கிலிருந்து இன்னும் இன்னும் உருவாக வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக இன்று நடைபெற்ற போட்டியில் போட்டி சாதனையுடன் தேசிய சாதனையை நெருங்கிய யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் ஆ. புவிதரனின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் எனவும் எமது இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். கபிலன் (4.20 மீற்றர்) இரண்டாவது இடத்தையும் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஜதுஷன் (4.10 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

http://www.thepapare.com

03-4.jpg

01-6.jpg

02-8.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இரண்டாம் நாள் கனிஷ்ட மெய்வல்லுனரில் மேலும் 9 சாதனைகள் முறியடிப்பு
56th-Junior-Nationals-2018-Day-2.jpg

இரண்டாம் நாள் கனிஷ்ட மெய்வல்லுனரில் மேலும் 9 சாதனைகள் முறியடிப்பு

 
 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான நேற்றைய தினம், மைதான நிகழ்ச்சிகளைப் போன்று சுவட்டு மைதான போட்டிகளிலும் வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ செயற்கை ஓடுபாதையில் போட்டி சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தனர்.

புவிதரனின் புதிய மைல்கல்

puvi-300x200.jpg20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்து கொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன், 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

இதன்படி, 2017 இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனால் (3.61 மீற்றர்) நிலை நாட்டிய போட்டி சாதனையை அவர் முறியடித்தார்.

 

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். கபில்ஷன் (4.20 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஜதூஷன் (4.10 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நெப்தலிக்கு ஏமாற்றம்

nepthali-300x200.jpgஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் தொடர்ச்சியாக 4 வருடங்களாக தங்கப் பதக்கம் வென்று வந்த யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனுக்கு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.61 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து போட்டி சாதனை படைத்திருந்த அவருக்கு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஆரம்ப சுற்றுடன் வெளியேற நேரிட்டது.

தினேஷுக்கு முதல் தங்கம்

23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கே. தினேஷ், 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், அண்மைக்காலமாக 20 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் வெற்றிகளைப் பதிவு செய்து வந்த யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். டிலக்ஷன், 23 வயதுப் பிரிவில் தான் பங்குபற்றிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.15 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்ற அவருக்கு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் சுற்றில் 4.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு முடியாது போனமை குறிப்பிடத்தக்கது.

திஷாந்துக்கு சாதனை வெற்றி

thisnath-pole-300x200.jpgஇம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் தடவையாக பங்குபற்றிய யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த எஸ். திஷாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த காலங்களில் நீளம் பாய்தல் மற்றும் சட்டவேலி ஓட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த திஷாந்த், அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்றுவிப்பாளர் பிரதீபனின் வழிகாட்டலுடன் கடந்த சில மாதங்களாக கோலூன்றிப் பாய்தலில் அவதானம் செலுத்தியிருந்தார்.

இதனையடுத்து இம்முறை நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் பலத்த எதிர்பார்ப்புடன் கலந்து கொண்ட திஷாந்த், 3.90 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

 

இதேநேரம், குறித்த போட்டியில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்களான ஏ. பவிதரன் (3.80 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், என். பானுஜன் (3.70 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஹார்ட்லி வீரர்கள் அபாரம்

pragash-raj-2-1-300x201.jpg56 ஆவது கனிஷட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான நேற்றைய தினம் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி 2 பதக்கங்களை வென்றனர்.

இதில், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக கலந்து கொண்ட எஸ். பிரகாஷ்ராஜ், வெள்ளிப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இவ்வருடத்துக்கான தனது சிறந்த தூரத்தையும் பதிவு செய்தார்.

Mithunraj-1-200x300.jpgஎனினும், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 40.35 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த எஸ். பிரகாஷ்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ரக்வானை ரத்னாலோக்க மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லஹிரு கேஷான், 43.83 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் சவீன் ருமேஷக, 41.31 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்

இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன் ராஜ், 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

 

எனினும், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்து கொண்ட மிதுன் ராஜுக்கு 4 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

குறித்த போட்டியில் 13.94 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து போகொடகே வெள்ளிப் பதக்கத்தையும், 13.91 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ரக்வானை ரத்னாலோக்க மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிந்து நிமந்த வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

குண்டு எறிதலில் நுஸ்ரத் அபாரம்

nusrath-banu-shotput-300x200.jpgஇம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணத்துக்கு முதலாவது பதக்கத்தை திருகோணமலை மெய்வல்லுனர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட நுஸ்ரத் பாணு, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் கலந்து கொண்ட அவர், 9.09 மீற்றர் தூரத்தை எறிந்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் பளுதூக்கல் போட்டிகளில் மாகாண மட்ட சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள நுஸ்ரத் பாணு, கடந்த இரண்டு வருடங்களாக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான நுஸ்ரத், தரம் 8 இல் இருந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருவதுடன், தனது ஆரம்ப கால பயிற்சிகளை நிஷா ஆசிரியையிடம் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், உமா சுந்தர் ஆசிரியரிடம் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நுஸ்ரத் பாணு, 2016 ஆம் ஆண்டிலிருந்து தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

இதேநேரம், கடந்த 3 வருடங்களாக பளுதூக்கல் போட்டிகளிலும் பங்குபற்றி தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்று வருகின்ற நுஸ்ரத் பாணு, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மகாண அணிக்கும் தெரிவாகியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சபானும், சச்சித்தும் இரட்டை சாதனை

Mohamed-safan-1-300x200.jpg23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்து கொண்ட லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழத்தின் மொஹமட் சபான் மற்றும் கொழும்பு மெய்வல்லுனர் சங்கத்தின் சச்சித் நிலக்ஷ பெரோ ஆகிய வீரர்கள் 21.50 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து ஒரே போட்டியில் போட்டி சாதனைகளை பகிர்ந்து கொண்டனர்.

 

இதேநேரம், குறித்த போட்டியில் அதே வயதுப் பிரிவில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு போட்டியை 21.60 செக்கன்களில் நிறைவு செய்த எஸ்.எல் விக்ரமசிங்க மற்றும் எஸ்.எஸ் பெரேரா ஆகிய வீரர்களினால் நிலைநாட்டப்பட்ட ஒரே போட்டி சாதனையை இவ்விரு வீரர்களும் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரான மொஹமட் சபான், அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்றார்.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.61 செக்கன்களில் நிறைவு செய்து, முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

200 மீற்றரில் மேலும் 3 சாதனைகள்

Aruna-Shelinda-300x200.jpgநேற்றைய தினம் நடைபெற்ற 16, 18, 20 மற்றும் 23 ஆகிய 4 வயதுப் பிரிவுகளுக்குமான 200 மீற்றர் ஓட்டப் போட்டிகள் முக்கிய இடத்தை வகித்தன. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் நாவலை ஜனாதிபதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்க (25.80 செக்.) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஷெலிந்தா ஜனேசன் (24.98 செக்.) ஆகியோர் தத்தமது வயதுப் பிரிவில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

 

அத்துடன், நேற்று முன்தினம் (23) நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் போட்டியில் காவிந்தி நிகழ்த்திய சாதனையை அவரே நேற்று முறியடித்ததுடன்,  18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் 32 வருடங்கள் பழைமை வாய்ந்த சாதனையை ஷெலிந்தா ஜனேசன் முறியடித்தார்.

இதனையடுத்து 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன (21.38 செக்.) மற்றுமொரு போட்டி சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • ஹாட்லியின்  மிதுன்ராஜ்  வென்றார் வெள்ளி 
 
 

ஹாட்லியின்  மிதுன்ராஜ்  வென்றார் வெள்ளி 

இள­நிலை பிரி­வி­ன­ருக் கான தேசி­ய­மட்ட தட­க­ளத் தொட­ரில் 16 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறி­த­லில் பருத்தித்­துறை ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த எஸ்.மிதுன்­ராஜ் வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

கொழும்பு சுக­ததாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்டி நடை­பெற்­றது. பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம்
செய்த எஸ்.மிதுன்­ராஜ் 54.33 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

http://newuthayan.com/story/87957.html

  • தொடங்கியவர்

யாழ். ஹார்ட்லி மாணவன் பிரகாஷ்ராஜ் சம்மெட்டி எறிதலில் புதிய சாதனை

prakashraj-hammer-696x464.jpg
 

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான இன்று (26) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் சிவகுமார் பிரகாஷ்ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார்.  

இதேநேரம், குறித்த போட்டியில் கலந்துகொண்ட அதே கல்லூரியின் மாணவர்கள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 

 

 

இன்று காலை நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்ப சுற்றுக்களில் ஹார்ட்லி வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்படி, 39.73 மீற்றர் தூரத்தை எறிந்து சிவகுமார் பிகாஷ்ராஜ் போட்டிக்கான புதிய சாதனை நிலைநாட்டினார்.

அநுராதபுரம் மெய்வல்லுனர் சங்கத்தைச் சேர்ந்த டபிள்யு. எம் நியோமல் 2016இல் 34.10 மீற்றர் தூரம் எறிந்து முன்னைய சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இந்த சாதனையை பிரகாஷ்ராஜ் இன்று மேலதிக 5 மீற்றரால் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்குபற்றி வருகின்ற பிரகாஷ்ராஜ், குறித்த வருடத்தில் தட்டெறிதலில் 7ஆவது இடத்துடன் வர்ண சாதனையும், 2016இல் நடைபெற்ற சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் 3ஆவது இடத்தையும் வென்றார். அத்துடன் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 6ஆவது இடத்தைப் பெற்று வர்ண சாதனையும் படைத்தார்.

இதனையடுத்து கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் சம்மெட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

அத்துடன் சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், அதனைத்தொடர்ந்து அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இறுதியாக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், குறித்த போட்டியில் 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்திருந்தார்.  

 

yadarthan.jpg

  • abishanth-hammer.jpg
  •  
 

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு தகுதிபெற்ற முதல் வட மாகாண வீரராகம் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதேநேரம், பிரகாஷ்ராஜ் பங்குபற்றிய போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி வீரர்களான வி. யதார்த்தன், முன்னைய போட்டி சாதனையை (34.10 மீற்றர்) சமப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்ட தட்டெறிதலில் பங்குபற்றி, இம்முறை 20 வயதுக்குட்பட்ட சம்மெட்டி எறிதலில் முதற்தடவையாகக் கலந்துகொண்ட டி. அபிஷாந்த், 31.56 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்நிலையில், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஹார்ட்லி கல்லூரி, ஓரு போட்டி சாதனையுடன், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று எறிதல் போட்டிகளில் தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மெய்வல்லுனர் துறை வரலாற்றில் முதற்தடவையாக யாழ். ஹார்ட்லி கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டியொன்றில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் அக் கல்லூரி மாணவன் சிவகுமார் பிரகாஷ்ராஜ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே அவருடைய வெற்றிப்பயணம் தொடருவதற்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிந்துஷனுக்கு இரட்டைத் தங்கம்: வேகநடையில் வட பகுதி வீரர்கள் அசத்தல்

Untitled-1235-696x464.jpg
DFCCRugby2018.gif

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம்(26), 7 போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இதில், மைதான நிகழ்ச்சிகளைப் போல வேகநடைப் போட்டிகளிலும் வட பகுதி வீர வீராங்கனைர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

 

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ். கிந்துஷன், 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

இதன்படி, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் வரலாற்றில் முதற்தடவையாக சுவட்டு மைதான நிகழ்ச்சிகளான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வவுனியா மாவட்டத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீரராக கிந்துஷன் வரலாற்றில் இடம்பிடித்தார்.

முன்னதாக கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியில் கலந்துகொண்ட கிந்துஷன், குறித்த போட்டியை 33 நிமிடங்களும் 56.87 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

kindusan-2.jpgஇந்நிலையில், போட்டிகளின் கடைசி நாளான நேற்று மாலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் போட்டியிலும் பங்கேற்றிருந்த கிந்துஷன், குறித்த போட்டிப் பிரிவில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வளல ரத்னாயக்க கல்லூரி வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து 15 நிமிடங்களும் 56.10 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன், இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான வாய்ப்பினையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

 

கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த மற்றுமொரு முன்னாள் வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேக நடையில் வடக்கு வீரர்கள் அபாரம்

done-2.jpg ஹெளசியா,தனூஷன், சோபனா

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இரு பாலாருக்குமான வேகநடை போட்டியில் வவுனியா மெய்வல்லுனர் சங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் தமது அறிமுகப் போட்டியிலேயே வெற்றிகளைப் பதிவு செய்திருந்தனர்.  

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆனந்த ராஜா தனூஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்ட அவர் குறித்த போட்டியை 57 நிமிடங்களும், 24.98 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இதேநேரம், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் யாழ். சாவகச்சேரி ரிபர் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஜெயராஜ் சோபனா, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் முதற்டவையாக பங்குபற்றிய அவர், குறித்த போட்டியை ஒரு மணித்தியாலமும் 12.49.96 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

 

இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 3,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் கலந்துகொண்ட ரவிக்குமார் ஹெளசியா, போட்டியை 19 நிமிடங்களும், 42.81 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலுகின்ற அவர், கடந்த 3 மாதங்களாக இப்போட்டிக்கு தயாராகி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவ்விரு மாணவிகளும், யாழ். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் கதிர்வேல் விஜிதரனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகிள்றனர்.

சம்மெட்டி எறிதலில் ஜெனோஜன் அபாரம்

jenojan.jpgஅண்மைக்காலமாக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சம்மெட்டி எறிதலில் வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற . ஜெனோஜன். நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் கலந்துகொண்ட அவர், 32.82 மீற்றர் தூரத்தை எறிந்து தொடர்ச்சியாக 3ஆவது தடவையாகவும் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த 4 வருடங்களாக சம்மெட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ஜெனோஜன், இவ்வருடம் இரத்தினபுரியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவில் சம்மெட்டி எறிதலில் பதக்கமொன்றை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளார்.

பாஷையூர் மாணவிகளுக்கு இரு பதக்கங்கள்

mery-lakshika-145x300.jpg மேரி லக்ஷிகா

கடந்த காலங்களில் தேசிய மட்ட கனிஷ்ட பளுதூக்கல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். பாஷையூர் புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலய மாணவிகளான ஜே. சுகன்யா மற்றும் மேரி லக்ஷிகா ஆகிய வீராங்கனைகள் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் கலந்துகொண்ட ஜே. சுகன்யா, 24.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், 22.74 மீற்றர் தூரத்தை எறிந்த மேரி லக்ஷிகா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

 

அனித்தாவுக்கு அசாதாரணம்

anitha-1.jpgஇலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் கோலூன்றிப் பாய்தலின் இளவரசியாக வர்ணிக்கப்படும் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

 

தெல்லிப்பலை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவியான அனித்தா, இம்முறை போட்டித் தொடரில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார்.

எனினும், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் ஒரே ஒரு தேசிய சாதனையை நிலைநாட்டிய அனித்தா, கனிஷ்ட பிரிவுக்குட்படாததால் அவருக்கு அதி சிறந்த மெய்வல்லுனர் விருது வழங்கப்படவில்லை. ஆனாலும் அவருடைய திறமையைப் பாராட்டி முன்னேறிவரும் வீராங்கனைக்கான விருதொன்றையாவது வழங்கியிருக்கலாம் என பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

சிறந்த மெய்வல்லுனராக திவங்க தெரிவு

ushan-best-palyer.jpgஇலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்திருந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் சிறந்த வீரராக கம்பஹா மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட உஷான் திவங்க தெரிவானார்.

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.20 மீற்றர் உயரத்தை தாவிய நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான உஷான் திவங்க இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் புதிய போட்டி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உஷானின் இந்த சாதனையானது தேசிய மட்டத்தில் 3ஆவது சிறந்த பதிவாக அமைந்துள்ளது. முன்னதாக உயரம் பாய்தல் தேசிய வீரர் மஞ்சுள குமார, 14 வருடங்களுக்கு முன் 2.27 மீற்றர் உயரத்தையும், முன்னாள் வீரரான நளின் பிரியன்த 2.21 மீற்றர் உயரத்தையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 போட்டி சாதனைகள் முறியடிப்பு

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 2,600 வீர வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், 16, 18, 20 மற்றும் 23 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் ஒரு தேசிய சாதனையுடன், 27 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 14 சாதனைகளும், பெண்கள் பிரிவில் 13 சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

 

இதேநேரம், நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கில் முதலாவதாக இடம்பெற்ற இப்போட்டித் தொடரில் கனிஷ்ட வீரர்கள் இவ்வாறு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தெற்காசிய போட்டிகளுக்கான வாய்ப்பு

south-asian-junior-athletics-championshiஇம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொள்ளும் வீரர்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் அடைவு மட்டத்தை பூர்த்தி செய்கின்ற வீரர்களுக்கும் எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இப்போட்டித் தொடருக்கான இறுதிக் குழாம் இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும், வட மாகாணத்தில் இருந்து 2 வீரர்களுக்கு தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் சிவகுமார் பிகாஷ்ராஜ் மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ். கிந்துஷன் ஆகியோருக்கு தெற்காசிய கனிஷ்ட குழாமில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டவுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வேகநடைப் போட்டியில் ஜொலித்த இளம் நடசத்திரம் கௌஷியா

 

56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 3,000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் ரவிக்குமார் கௌசியா, போட்டியை 19 நிமிடங்களும் 42.81 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர்  வழங்கிய செவ்வி. 

 

முதலாவது வருடத்திலேயே முதல் பதக்கத்தை வென்ற சோபனா

 

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் ஒரு மணித்தியாலமும் 12 நிமிடங்கள் 49.96 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த யாழ். சாவகச்சேரி ரிபர் கல்லூரி வீராங்கனை ஜெயராஜ் சோபனா 

 

  • தொடங்கியவர்

வவுனியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கிந்துஷன்

 

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ். கிந்துஷன், 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இது வவுனியா மாவட்டத்திற்கான வரலாற்று வெற்றியாகும்.

 

  • தொடங்கியவர்

 

தேசிய மட்டத்தில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள்

நடைபெற்று முடிந்த 56ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தேசிய சாதனைகள், போட்டி சாதனைகள் மற்றும் பதக்கங்களை வென்ற தமிழ் பேசும் வீர வீராங்கனைகள் குறித்த பார்வை ஒரே காணொளியில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.