Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா­ணு­வத்­துக்கு எதி­ரான மனுக்­களை நிரா­க­ரித்­தது முல்லைத்தீவு நீதி­மன்­றம்!!

Featured Replies

 
 
 

இரா­ணு­வத்­துக்கு எதி­ரான மனுக்­களை நிரா­க­ரித்­தது முல்லைத்தீவு நீதி­மன்­றம்!!

போரின் இறு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்து காணா­மற்­போ­னோர் தொடர்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட ஆள்­கொ­ணர்வு மனுக்­களை முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றம் நிரா­க­ரித்­துள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் என்ன வகை­யான, என்ன இலக்­க­மு­டைய பேருந்­தில் ஏற்­றிச் செல்­லப்­பட்­டார்­கள் என்று சாட்­சி­யங்­க­ளில் தெளி­வா­கத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­பது உள்­ளிட்ட விட­யங்­க­ளைக் கார­ண­மா­கக் குறிப்­பிட்டு ஆள்­கொ­ணர்வு மனுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் 2012ஆம் ஆண்டு 5 ஆள்­கொ­ணர்வு மனு, காணா­மற் போனோ­ரின் உற­வி­னர்­க­ளால் தாக்­கல் செய்­யப்­பட்
டது. பின்­னர் 7 ஆள்­கொ­ணர்வு மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. 2009 ஆம் ஆண்டு போரின் இறு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கைய­ளித்த – சர­ண­டைந்த தமது உற­வி­னர்­களை மீட்­டுத் தரு­மாறு கோரித் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­னால், சம்­ப­வம் இடம்­பெற்ற பகுதி நீதி­மன்­ற­மா­கிய முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது.

முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்­தில் மனு­தா­ரர்­க­ளின் சாட்­சி­யங்­கள் பதிவு செய்­யப்­பட்ட பின்­னர், பிர­தி­வா­தி­க­ளின் சாட்­சி­யம் பதிவு செய்­யும் நட­வ­டிக்கை 2015ஆம் ஆண்டு டிசெம்­பர் 10 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. முத­லில் தாக்­கல் செய்­யப்­பட்ட மூன்று மனுக்­கள் மீதான விசா­ர­ணையே இடம்­பெற்று – முடி­வுற்று அதன் அறிக்­கை­கள் வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. மனு­தா­ரர்­க­ளான விசு­வ­நா­தன் பாலந்­தினி, கந்­த­சாமி பொன்­னம்மா, ஜெயக்­கு­மாரி ஆகி­யோர் சார்­பில் மூத்த சட்­டத்­த­ரணி ரட்­ண­வேல் முன்­னி­லை­யா­னார். முல்­லைத்­தீவு நீதி­மன்­றி­னால் அனுப்பி வைக்­கப்­பட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்ட சில விட­யங்­கள் மாத்­தி­ரம் மன்­றில் வாசித்­துக் காட்­டப்­பட்­டது.

சாட்­சி­யங்­கள் தெளி­வில்லை என்று குறிப்­பிட்டு மூன்று ஆள்­கொ­ணர்வு மனுக்­க­ளை­யும் நிரா­க­ரிப்­ப­தாக மன்­றில் தெரி­விக்­கப்­பட்­டது.
‘காணா­மல் ஆக்­க­பட்­டோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை நடத்தி அறிக்கை சமர்­பிக்­கு­மாறே வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­னால் கோரப்­பட்­டி­ருந்­தது. தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முல்­லைத்­தீவு நீதி­மன்­றுக்கு அதி­கா­ர­மில்லை. முல்­லைத்­தீவு நீதி­மன்­றின் அறிக்­கை­யின் பிர­தி­யும் வழங்­கப்­ப­ட­வேண்­டும்’ என்று மனு­தா­ரர் தரப்­புச் சட்­டத்­த­ரணி ரட்­ண­வேல் கோரி­னார்.

மன்று அந்­தக் கோரிக்­கையை ஏற்­றது. பிர­தியை வழங்­கு­மாறு உத்­த­ர­விட்­டது. வழக்கு எதிர்­வ­ரும் 22ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

இதே­வேளை, முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் வழக்கு இடம்­பெற்­ற­போது, 58ஆவது படைப் பிரி­வுக்கு போரின் போது பொறுப்­பாக இருந்த சவேந்­திர சில்­வாவை மன்­றில் முற்­ப­டுத்த வேண்­டும் என்று மனு­தா­ரர் தரப்­பி­னால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

58 ஆவது படை­ய­ணி­யின் கட்­ட­ளைத் தள­ப­தி­யாக பின்­னர் இருந்த மேஜர் ஜென­ரல் சாணக்ய குண­வர்­தன, ஆள்­கொ­ணர்வு மனுக்­க­ளில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வர்­கள் எவ­ரும் 58 ஆம் படை­ய­ணி­யி­டம் சர­ண­டைந்­த­தற்­கான பதி­வு­கள் எது­வும் தங்­க­ளி­டம் இல்லை என்று முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத­னை­ய­டுத்து, சர­ண­டைந்­த­வர்­கள் தொடர்­பாக அவர்­க­ளி­ட­முள்ள பதி­வேட்டை மன்­றில் சமர்­பிக்க மனு­தா­ரர் தரப்­புக் கோரி­யி­ருந்­தது. 58ஆம் படை­ய­ணி­யால், மறு­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பெயர்ப் பட்­டி­யலே மன்­றில் சமர்­பிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/87799.html

  • தொடங்கியவர்

 

சரணடைந்த மூவரின் ஆட்கொனர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா நீதித்துறையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு சொறீலங்கா இராணுவம் என்றால்.. தங்கக் கட்டி. அப்புறம் அதுங்களட்டப் போய் எப்படி நீதியை எதிர்பார்ப்பது.

சொறீலங்கா இராணுவம் இன அழிப்புச் செய்யும் போது பாவித்த எல்லாம் நடைமுறைகளுக்கும் அடையாளம் வைச்சிட்டுத்தானே பாவிச்சது என்று நம்பச் சொல்லும் நம்ம வைக்க முனையும்.. உந்த மனித இன விரோதிகள் தான்... சொறீலங்கா நீதித்துறையை அலங்கரிக்கினம்.

அப்படியாப்பட்ட நாட்டில்.. மக்கள் அந்த நாட்டு அரசாலும்.. அதன் கூலிகளான அரச படைகளாலும் நிகழ்ந்தப்பட்ட கொடுமைகளுக்கு நீதியை அந்த நாட்டு நீதிமன்றங்களில் எதிர்பார்க்க முடியாது.

அதனால்.. இவை எல்லாம் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு.. சர்வதேச சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஆராயப்பட்டு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நியாயமான நீதியும்.. பாதிப்பை உண்டு பண்ணியவர்களிடம் இருந்து நிரந்தரப் பாதுகாப்பையும்.. சர்வதேசம் வழங்க முன்வருவதோடு.. பாதிப்பை உண்டு பண்ணியவர்களை கடுமையாக தண்டித்து இப்படியான அரச அடக்குமுறைகள்.. இன அழிப்புக்கள் வேறு எங்கும் நிகழா வண்ணம்.. ஒரு காத்திரமான உதாரணத்துக்காவது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். செய்யுமா சர்வதேசம்....??! அதைச் செய்ய விடுமா சம் சும் மாவை கும்பல்.  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.