Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு மாகாண தேர்தலும் சவால்களும்

Featured Replies

வடக்கு கிழக்கு மாகாண தேர்தலும் சவால்களும்

 

மாகாண சபைத் தேர்தலுக்­கான வாடை வீசத்­தொ­டங்­கி­யுள்­ளது. உள்­ளூராட்சி தேர்தலை வெற்­றி­க­ர­மாக நடத்தி முடித்த பெரு­மையில் மீண்டும் மாகாண சபைக்­கான தேர்தல் சங்கை ஊதத்­தொ­டங்­கி­யுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவரது இந்த அறி­வித்­த­லா­னது வட­கி­ழக்கில் ஒரு பர­ப­ரப்­பையும் தேசிய அர­சி­யலில் சல­னத்­துக்­கான எச்­ச­ரிக்­கை­யையும் வழங்­கி­யி­ருக்­கின்­றது.

உள்­ளூராட்சி தேர்தலில் எதிர்­பா­ராத தோல்­வி­யைக்­கண்ட சுதந்­திரக்­கட்சியும் ஐ.தே.க.வும் மாகாண சபை­க­ளுக்­கான ேதர்தலை இப்­ேபா­தைக்கு நடத்தப்­போ­வ­தில்லை. அதாவது "பொல்­லைக்­கொ­டுத்து அடி­வாங்க" அவர்கள் தயா­ரா­க­வில்­லை­யென்ற வதந்­தி­க­ளுக்கு மத்­தியில் ேதர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­த­லொன்றை விடுத்­துள்ளார். தடை­களை நீக்­கினால் டிசம்பர் மாத முதல் பகு­தியில் வடக்கு–கிழக்கு உட்­பட்ட ஆறு மாகாண சபை­க­ளுக்கும் தேர்தலை நடத்­த­லா­மென்று அறி­வித்­துள்ளார். இவ்­வ­றி­வித்­த­லா­னது தென்­னி­லங்­கை­யைப் ­பொ­றுத்­த­வரை தென்­னி­லங்­கை­யர்களு­க்கு தேசிய மாற்­றத்­துக்­கான ஒரு அபிப்­பி­ரா­யத்தை உரு­வாக்­கப்­போகும் தேர்தலாக இருக்­க­லா­மென கணக்­குப் போட்­டாலும் வடக்கு–கிழக்கு மாகாண சபை­களைப் பொறுத்­த­வரை பல்­வேறு வித­மான குழப்பநிலை­களை உரு­வாக்­கப்­போகும் தேர்தலாக இருக்­கப்­போ­கி­ன்றது ­என்­பதே கணக்­கிட்­டுப் ­பார்க்­க­வேண்­டிய விடயமாகும்.

நடைபெற்று முடிந்த உள்­ளூராட்சி தேர்தலானது தெரிந்தோ தெரி­யா­மலோ அல்­லது விரும்­பியோ விரும்­பா­மலோ மஹிந்த அணி­யி­னரின் செல்­வாக்கு உயர்ந்­துள்­ளது என்­பதை ெதளிவாகக் கணக்­கிட்டுக் காட்­டி­யுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்நிலை­யில்தான் உள்­ளூ­ராட்சி தேர்தலை சாட்­டாக வைத்­துக்­கொண்டு மக்கள் ஆட்சி மாற்­றத்தை விரும்­பு­கி­றார்கள். எனவே பொதுத் தேர்தலை நடத்­துங்கள் என்று மஹிந்த அணி­யினர் கோஷ­மிட்டு வரு­கின்­றார்கள். இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் மாகாண சபைத் தேர்தலை தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் நடத்­தாது. அவ்வாறு நடத்­தினால் உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­கள்­போ­லவே மாகாண சபை முடி­வு­களும் ஆகி­விடும். அவ்வாறு ஆகிவிடும் பட்சத்தில் 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள பொதுத்ே­தர்தல் மற்றும் ஜனா­தி­பதித் தேர்தல் ஆகிய இரண்­டுமே சுதந்­தி­ரக்­க­ட்­சிக்கும் ஐக்­கிய தேசி­யக்­க­ட்­சிக்கும் சவா­லா­கி­வி­டு­மென்ற பயத்தின் கார­ண­மா­கவே மாகாண சபைத தேர்தலை நடத்­தாமல் அர­சாங்கம் காலம் கடத்த முயற்­சிக்கும் என்ற ஆருடம் சிலரால் கூறப்­ப­டு­கி­றது.

எதிர்வரும் ஒக்­டோ­பர் மாதம் கலையும் வடக்கு, மத்­திய, வடமேல் மாகாண சபை­க­ளுக்­கான மற்றும் ஏற்கனவே கலைக்­கப்­பட்­ட ­கி­ழக்கு, சப்­ர­க­முவ மற்றும் வட­மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை இந்த ஆண்டு இறு­திக்குள் நடத்த முடி­யு­மெ­னவும் தேர்தலை நடத்­து­வ­தற்கு நான்கு வழி­மு­றைகள் இருக்­கி­ன்றன என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறி­யுள்ளார். இந்த நான்கு வழி­மு­றை­களில் ஒன்றைத் தெரிவு செய்து பாரா­ளு­மன்றம் அங்­கீ­க­ரிக்­கு­மா­னால் ஆறு மாகாண சபை­களின் தேர்தல்­க­ளையும் எதிர்­வரும் டிசம்பர் மாதத்­துக்­கு முன் நடத்­த­மு­டி­யு­மென தலைவர் கூறி­யுள்ளார்.

இதன்­பி­ர­காரம் 1. மாகாண சபைகள் குறி த்த எல்லை நிர்­ண­யத்தை பார­ாளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுதல், 2. பிர­த­மரால் நிய­மிக்­கப்­படும் குழு­வினால் எல்லை நிர்­ண­யத்தை மீளாய்வு செய்து கொள்ளல். 3. ஐம்­ப­துக்கு ஐம்­பது என்ற தேர்தல் முறையை மாற்றி விரைவில் எல்லை நிர்­ண­யத்தை மேற்­கொள்ளல். 4. புதிய தேர்தல் முறைக்கு பதி­லாக பழைய தேர்தல் முறைக்கு செல்­லுதல். இவற்

றில் ஏதா­வ­தொன்றை ேதர்ந்­தெ­டுத்து சட்­டத்தை நிறை­வேற்­று­வதன் மூலம் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் நடத்­த­மு­டி­யு­மென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரி­வித்­துள்ளார். புதிய தேர்தல் முறை­ தொ­டர்பில் கட்­சிகள் பார­தூ­ர­மான ஆட்­சே­ப­ங்­க­ளையும் அதி­ருப்­தி­க­ளையும் தெரி­வித்து வரு­வதை கேட்­டுக்­கொண்­டி­ருக்­கிறோம். நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சித் தேர்தலில் வட­கி­ழக்­கி­லும் ­சரி ெவளி மாவட்­டங்­க­ளிலும் சரி அறு­திப்­பெ­ரும்­பான்­மையை பெற­மு­டி­யாமல் கட்­சிகள் பட்ட கஷ்­டங்­கள் பல இடங்­களில் அவ­தா­னிக்

­கப்­பட்ட விட­யங்­க­ளாகும். இதனால் பழைய விகி­தா­சார முறை­யி­லேயே மாகாண சபை தேர்தல்கள் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்­கை­களை பல கட்­சிகள் விடுத்­து­வ­ரு­வதை காண்­கிறோம். இதற்கு அப்பால் மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ண­ய­மென்­பது அவ­ச­ரம் அவ­ச­ர­மாக செய்­யக்­கூ­டி­ய­தல்ல. இது­பற்­றிய முடி­வு­களை உடன் எடுக்

கும் அள­வுக்கு எல்லை நிர்ணயம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் மக்­களின் அபிப்­பி­ரா­யங்கள் பெறப்­ப­ட­வில்லை. ஏற்­க­னவே உள்­ளூராட்சி வட்­டா­ரப்­பி­ரிப்பில் பல குள­று­ப­டிகள் காணப்­ப­டு­கி­றன என்ற கருத்துடன் ஆட்­சே­பங்கள் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ண­ய­மென்­பது இல­கு­பட்ட காரி­ய­மாக இருக்க முடி­யாது என்ற கருத்து இருக்­கத்தான் செய்­கி­றது. குறிப்­பாக வட­கி­ழக்கிலுள்ள எட்டு மாவட்­டங்­களில் சில மாவட்­டங்­களில் மூவின மக்­களும் சமத்­த­ன்மை கொண்ட குடிப்­ப­ரம்பல் கொண்­ட­வர்­க­ளாக தேர்தல் வாழும் நிலையில் எல்லை நிர்­ண­ய­மென்­பது இல­கு­வான காரி­ய­மாக இருந்­து­வி­ட­மு­டி­யாது. கலப்பு முறை தேர்தல் மூலம் கட்­சி­களும் அத் தலை­வர்­களும் பட்ட அவஸ்தைகள் விவ­ரிக்க முடி­யாத விட­யங்களாகும்.

மாகாண சபைத் தேர்தல் வட­கி­ழக்கில் எத்­த­கைய போட்­டித்­தன்­மை­க­ளையும் சவால்­க­ளையும் உரு­வாக்­கப்போ­கி­ன்ற­தென்­பதை கடந்­த­கால அனு­ப­வங்­க­ளைக்­கொண்டே உரைத்­துப் ­பார்க்­க­மு­டியும். அந்த வகையில் வட­மா­காண சபைத் தேர்தல் எதிர்கொள்­ள ­போ­கிற சவால்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை முரண்­பட்­டுப்­போ­கக்­கூ­டிய பல பிரச்­சினை­க­ளையும் சவால்­க­ளையும் இங்கு ஆராய்ந்து பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. முதலில் வட­மா­காண சபை எதிர்­கொள்­ளக்­கூ­டிய விவ­கா­ரங்கள் உள்­ளும்­பு­றமும் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­ன்றன. நீண்­ட­கா­ல­மாக தேர்தல் நடத்­தப்­ப­டாமல் கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்ட தேர்தலை முன்­னைய அர­சாங்கம் உள்­நாட்டு ெவளிநாட்டு அழுத்தம் கார­ண­மாக 2013 ஆம் ஆண்டு நடத்­தி­யது. அவ்­வாறு நடத்­தப்­பட்ட காலத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஆட்­சி­யைப்­பி­டிப்­ப­தற்கு நேரொத்த அதிக சவால்கள் காணப்­ப­ட­வில்லை. பிர­தேச கட்­சி­க­ளாக இருக்­கலாம். தேசி­யக்­கட்­சி­க­ளாக இருக்­கலாம். பலம் கொண்­ட­வை­யாகவும் இருக்­க­வில்லை. வாக்­கு ­ப­லத்தை பெற்­றி­ருக்­க­வு­மில்லை. தலைவர் பிர­பா­க­ரனால் ஆசீர்­வ­திக்­கப்பட்ட கட்­சி­யாக அதிகம் பேசப்­பட்டு வந்த நிலை

யில் வட­மா­காண ஆட்­சியை கைப்­பற்­று­வது பெரிய சவா­லாக அமை­ய­வில்லை. இன்று நிைல­மைகள் மாற்­றுத்­தன்மை பெற்­றுள்­ளன.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யில்தான் வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் வேட­்பா­ள­ராக சி.வி.விக்­கி­னேஸ்­வன் தமி­ழ­ர­சுக்­க­ட்­சியால் இறக்­கு­மதி செய்­யப்­பட்டார். அவர்­பற்­றிய நம்­பிக்­கைகளும் எதிர்­பார்ப்­புக்களும் அதி­க­மா­கவே காணப்­பட்­டன. வட­மா­கா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக மாவை. சேனா­தி­ரா­ஜாவை கொண்­டு­வ­ர­ வேண்­டு­மென்ற கருத்தும் எதிர்­பார்ப்பும் அதி­க­மாக இருந்த போதிலும் கட்­சியின் முடி­வுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு விக்­கி­னேஸ்­வரன் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்டு பாரிய வெற்­றி­யையும் பெற்­றுக்­கொ­டுத்தார். காலப்போக்கில் ஏற்­

பட்ட நிைலமை மாற்றம் அவர் பரம எதி­ரி­யாகப் பார்க்­கப்­ப­டு­ம­ள­வுக்கு நிைல­மை­களில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. உள்ளும் புறமும் அவர் மீதான நம்­பிக்கைகள் திரி­ப­டைந்­துள் ளன. அண்­மையில் எதிர்­வரும் மாகாண சபைத் தேர்தலில் தாங்கள் எக்­க­ட்­சியின் சார்பில் போட்­டி­யி­டு­வீர்கள் என வின­வி­ய­தற்கு முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் அளித்த பதில் அதிர்ச்­சியைத் தந்­த­தாகக் கூறப்­பட்­டது. அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக மாவை சேனா­தி­ரா­ஜாவே நிறுத்­தப்­ப­டுவார் என பார­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தெரி­வித்த கருத்­தா­னது பல்வேறு கருத்­தா­டல்­க­ளுக்கு கார­ண­மா­கி­யது. சுமந்­தி­ரனின் கருத்­துக்கு பதி­ல­ளித்த முத­ல­மைச்சர் நான் அடுத்த மாகா­ண­ச­பைத்­ தேர்தலில் போட்­டி­யி­டவேண்டுமென பெரு­வா­ரி­யான மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். எனது பயணம் தொட­ர­வேண்­டு­மென்­பது இறைவன் சித்தம்.

தமிழர­சுக்­கட்­சி­யி­ட­மி­ருந்து எனக்கு அழைப்பு வரக்­கூ­டிய சாத்­தி­ய­மில்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதி­யாக எம்­முடன் உடன்­படும் வேறு ஒரு கட்­சியினூ­டாக தேர்தலில் நிற்­கலாம். ஆனால் கடந்த கால அனு­ப­வங்­களின் அடிப்­ப­டை­யிலும் மூலோ­பாய ரீதி­யா­கவும் நடைமுறை அடிப்­ப­டை­யிலும் அவ்­வாறு நிற்­பதால் பல பிரச்­சி­னைகளும் இடை­யூ­றுகளும் ஏற்­பட வாய்ப்­புக்கள் உள்­ளன என்­பதால் புதிய கட்­சி­யொன்றை தொடங்­கு­மாறு பலரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றனர். ஆனால் அதற்­கு­ரிய காலம் கனிந்­து­விட்­டதா என்­பதை நானறியேன் என முத­ல­மைச்சர் கூறிய கருத்­துக்­கள் ­வ­டக்­கிலும் கிழக்­கிலும் பாரி­ய­ விமர்­ச­னங்­களை உண்­டாக்­கி­யி­ருந்­தது.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னு­டைய கருத்­துக்களை சாதா­ர­ண­மாக எடை­போ­டு­வ­தாக இருந்­தாலும் அது கணி­ச­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என்­பதை கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். புதிய கட்­சியை ஆர­ம­்பித்­தாலும் சரி அல்­லது பொருத்­த­மான கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்­டா­லும்­சரி அது தேர்தலில் கணி­ச­மான சவால்­களை கூட்­ட­மைப்­புக்கு உரு­வாக்­கக்­கூடும் என்­ப­தற்கு மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. இந்த மாற்­றுக்­க­ட்சி உரு­வாக்கம் தொடர்பில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் கருத்து தெரி­வித்­த­போது முத­ல­மைச்சர் தமிழ் மக்­க­ளு­டைய அபி­லா­ஷை­க­ளையும் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் பிரதிபலிக்கும் வகையில் கட­்சி­யொன்றை ஆரம்­பிப்­பா­ரா­க­வி­ருந்தால் அக்­கட்­சிக்கு ஆத­ரவு வழங்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் எனத் தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு வட­மா­காண நிைல­மைகள் எவ்­வாறு அனு­கூ­ல­மாக இருக்­கப்­போ­கி­றன எ­ன்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்­க­வேண்டும். சுமந்­தி­ரனின் கருத்­துக்கு பதிலளிக்கும் முக­மாக முத­ல­மைச்­சரால் இக்­க­ருத்து தெரி­விக்­கப்­பட்­டாலும் இது பற்றி கருத்து தெரி­வித்த தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வட மாகாண முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக யாரை கூட்­ட­மைப்பு நிறுத்­து­மென்­பதை பொருத்­த­மான நேரத்தில் அறி­விப்போமெனத் ­தெ­ரி­வித்­தி­ரு ந்­தாரே தவிர முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை நிறுத்­த­மாட்டோம் அல்லது இவரை நிறுத்­து­வோ­மென அவர் கருத்து தெரி­விக்­க­வில்லை.

இந்த நிலையில் விக்­கி­னேஸ்­வரன் என்ன முடி­வெ­டுப்பார் கூட்­ட­மைப்பு என்ன முடி­வுடன் இருக்­கி­றது என்­பது பற்றி சோதிடம் கூறு­வது கடினம். வட­மா­காண சபை தேர்தலைப்­பொ­றுத்­த­வரை பல­பக்கக் குறிகள் அல்­லது வியூ­கங்கள் வகுக்­கப்­ப­டலாம். குறிப்­பாக கடு­மை­யான களப்­போட்­டிகள் நில­வு­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­பங்கள் உரு­வா­கி­வ­ரு­கின்­றன என்­ப­தற்­கு­ரிய அறி­கு­றியே தென்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக தமிழ் காங்­கிரஸ் வர­தர்­அணி, ஆனந்­த­சங்­க­ரியின் தலை­மை­யி­லான தமி­ழர்­வி­டு­த­லைக்­கூட்­டணி, இவை தவிர சுயேச்­சைக்­கு­ழுக்­களின் அவ­த­ரிப்­புகள், ஏற்கனவே பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­பட்டு வந்­தி­ருந்த டக்­ளஸ்­தே­வா­னந்­தாவின் ஈ.பி­.டி.பி. என்­ப­வற்றின் கள இறக்கம் எப்­ப­டி­யி­ருக்­கப்­போ­கி­ற­தென இப்­போ­தைக்கு கணக்­கி­ட­மு­டி­யாது. இவற்­றுக்கு மறு­பு­றத்தில் வட­மா­க­ாணத்தை தம்­வ­சப்­ப­டுத்­த­வேண்­டு­மென்ற நப்­பா­சை­யுடன் உலா­வரும் தேசி­யக்­க­ட­்சி­களின் பாதிப்­புக்கள் எனப்­ப­ார்க்­கி­ற­போது 2013 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் கூட்­ட­மைப்பு எதிர்கொண்ட சவால்­க­ளை­விட வேக­மான கடு­மை­யான எதிர்நிலை­களை சந்­திக்­க­வேண்­டி­வரும் என்­பதை கூட்­ட­மைப்பு உண­ரா­ம­லில்லை.

கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்தலில் தமிழ் மக்­களின் ஆர்வக்­கு­றைவு கார­ண­மா­கவும் அதி­ருப்­திகள் கார­ண­மா­கவும் கூட்­ட­மைப்பின் வாக்கு வங்­கியில் பெரும் வீழ்ச்சி கண்­டி­ருந்­ததை அனு­பவ பூர்வ­மாக அவர்கள் உணர்ந்­ததன் கார­ண­மா­கவே அந்த நிைல­மை­களை ஆராய கூட்­ட­மைப்பு குழு­வொன்றை நிய­மித்­துள்­ளதை கேள்­வி­யு­று­கிறோம்.

கிழக்கு மாகா­ணத்தின் போட்­டி­நி­லை­களை கூட்­ட­மைப்பு எவ்­வாறு எதிர்கொள்­ளப்­போ­ கின்­ற­தென்­பது விமர்­சன பூர்­வ­மாக பார்­க்கப்­ப­ட­வேண்­டிய விடயம். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்­தப்­பட்­ட­போது கூட்­ட­மைப்பு தேர்தலில் ஆர்வம் காட்­ட­வில்லை. மாவி­லாறு யுத்தம், கிழக்­கு­ வி­டு­விப்பு, வட­கி­ழக்கு பிரிப்பு, விடு­த­லைப்­பு­லி­களின் வன்­னிப்போர் இவை­யெல்­லா­வற்­றுக்கும் அப்பால் பிள்­ளையான், கருணா அம்­மானின் செயற்பாடுகள் என்பதை கூட்­ட­மைப்­புக்கு சாத­க­மா­க­வி­ருக்­க­வில்லை. அது மட்­டு­மன்றி திட்­ட­மிட்ட முறையில் வட­கி­ழக்கு பிரிக்­கப்­பட்­டதை ஏற்­றுக்­கொள்­ளாத கூட்­ட­மைப்­பினர் 2008 ஆண்டு தேர்தலில் பங்­கெ­டுக்­க­வி­ரும்­ப­வில்லை. மஹிந்த ஆட்­சிக்­கா­லத்தில் இந்­தி­யாவின் ஆசிர்­வா­தத்­துடன் பிள்­ளையான் முத­ல­மைச்­ச­ராக்­கப்­பட்டார். இந்த தேர்தலில் இரு­மு­னைப்­போட்­டி­மட்­டு­மே­யி­ருந்­தது. முத­ல­மைச்­ச­ராக ஒரு முஸ்லிம் கொண்டு வரப்­ப­ட­வேண்­டு­மென்ற கடு­மை­யான கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­ட­போதும் இலங்கை அர­சாங்கம் அதை மறை­மு­க­மாக ஏற்­றுக்­கொள்­ளாமல் பிள்­ளை­யானை முத­ல­மைச்­ச­ராக்­கி­யது. இதற்கு பின்­ன­ணி­யாக பல கார­ணங்கள் இருந்­தன என்­பது தவிர்க்­கப்­ப­ட­மு­டி­யா­தவை.

2012 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்தலில் போட்­டி­யிட்ட கூட்­ட­மைப்பு கிழக்கில் 11 ஆச­னங்­க­ளைப் ­பெற்­றி­ருந்­த­போதி­லும் 37 ஆச­னங்­களை கொண்ட கிழக்கு மாகா­ண­ச­பையில் சுதந்­தி­ரக்­க­ட­்சியின் முத­ல­மைச்­ச­ராக கிண்­ணி­யா­வைச சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டார். இவ்­வாட்­சிக்கு முஸ்லிம் காங்­கிரஸ், தேசி­ய ­காங்­கிரஸ் ஆகி­

யன பூரண ஆத­ரவை நல்­கி­யி­ருந்­தன. கூட்டமைப்பு எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அமர்ந்து கொண்­டது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தைத் தொடர்ந்து கூட்­ட­மைப்­புக்கு உயர்ந்த சந்­தர்ப்­ப­மொன்று வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த வாய்ப்பை கூட்­ட­மைப்பு சரி­யாக பயன்படுத்­த­வில்­லை­யென்ற கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 11 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கூட்­ட­மைப்பு 7 ஆச­னங்­களை மாத்­திரம் கொண்ட முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு முத­ல­மைச்சர் பத­வியைத் தாரை­வார்த்து கொடுத்து விட்­டது. இரண்டு அமைச்சர் பத­வி­களை பெற்­றி­ருந்தும் அதை உயர்ந்­த­ளவில் பயன்­ப­டுத்த தவ­றி­யது மாத்­தி­மல்ல, வேலை வாய்ப்பு மற்றும் அபி­வி­ருத்­திப்­ப­ணி­களை முறை­யாக முன்­னெ­டுக்­காத நிலையில் தமிழ் கிரா­மங்­களும் பிர­தே­சங்­களும் பாழ்­பட்­டு­போய்­க் கி­டக்­கின்றன்.

முன்­னாள் ­போ­ரா­ளிகள், யுத்த வித­வைகள் தொடர்பில் எவ்­வித கரி­ச­னையும் காட்­டப்­ப­ட­வில்லை. அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் மக்கள் அர­சியல் ரீதி­யா­கவும் அபி­வி­ருத்தி ரீதி­யா­கவும் பெரு­ம­ளவு பாதிக்­கப்­ப­ட­டி­ருந்­தும்­கூட கண்­டு­கொள்­ளப்­ப­டாமல் இருக்­கி­றார்கள். காணி­ சம்­பந்­த­மான பிணக்­குகள் நாளந்தம் திட்­ட­மிட்ட முறையில் உரு­வாக்­கப்­பட்­டுக் ­கொண்­டி­ருக்­கும் நிலையில் அதை கண்­டு­கொள்­ளாமல் இருக்­கி­றார்கள். குறிப்­பாக வேலை­வாய்ப்பு தொடர்பில் தமிழ் இளை­ஞர்கள் பாரிய நஷ்­டங்­களை அனு­பவித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென்ற குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்றன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் அடுத்த மாகாண சபைத் தேர்தல்­ மூலம் தமிழ் மகன் ஒருவர் மாகா­ண­ முத­ல­மைச்­ச­ரா­க­கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டும்.­எந்­த­வொ­ரு­ கா­ர­ணத்­துக்­கா­க­வும்­ விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்ற உறுதி கொண்­ட­வர்­க­ளாக கிழக்கு தமிழ் மக்கள் காணப்­ப­டு­கி­றார்­க­ளென்­பதே யதார்த்தம்.

இவ்­வா­றான எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் நடை­பெ­றப்­போ­கின்ற மாகா­ண­சபை தேர்தலை எவ்­வாறு கூட்­ட­மைப்பு எதிர் கொள்ளப் போகி­ற­தென்­பது கேள்­வி­யாக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தலில் கூட்­ட­மைப்பு எதிர்­பார்த்த அள­வுக்கு மக்­களின் ஆத­ரவு கிடைக்­க­வில்­லை­யென்ற கார­ணத்­தினால் பல சபை­களில் கட்­சி­களின் ஆத­ர­வைப்­பெ­ற­வேண்­டிய அவலநிலை ஏற்­பட்­டது. ஏற்கனவே முரண்­பட்டு கூட்­ட­மைப்பை கொச்­சைப்­ப­டுத்­திய கட்­சி­க­ளுடன் கூட்டு சேர வேண்­டிய நிலையும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது என்­பதை மனம் கொள்­ள­வேண்டும்.

அடுத்த மாகாண சபைத் தேர்தல் என்­பது தனித்­த­னி­யாக நின்று மாகா­ண­ச­பையை கைப்­பற்­றக்­கூ­டிய முறையில் தேர்தல் முறை வகுக்­கப்­ப­டுமா என்­பது பற்றி யாருக்­குமே தெளிவில்லை. மாகாண சபைத் தேர்தலை­ பு­திய முறை­யி­லையே நடத்­துவோம்.

எக்­கா­ர­ணம் ­கொண்டும் பழைய முறையில் நடத்­தப்­போ­வ­தில்லை மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கையை பாரா­ளு­ம­ன்றில் சமர்ப்­பித்­துள்ளேன். விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­டு­மென அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார். மாகா­ண­சபை தேர்தல்­களை உட­ன­டி­யாக நடத்­து­வதில் தேர்தல்கள் செயலகத்துக்கு சிக்­கல்கள் தோன்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

காரணம் மாகாண சபைத் தேர்தல் ­களை 50 வீதம் தொகுதி முறை­யிலும் 50 வீதம் விகி­தா­சார முறை­யிலும் நடத்­த­வேண்டும் என்ற சட்டம் பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எனவே தேர்தலை புதிய முறையில் நடத்­து­வ­தற்­கான நோக்கில் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்டு அந்த அறிக்கை பாராளுமன் றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்கை நிறை­வேற்­றப்­பட்டால் ேதர்தலை குறித்த காலத்தில் நடத்த தேர்தல்கள் செயலகம் தயா­ரா­க­வுள்­ளது. ஆனால் தேர்தலை நடத்தும் முறை­யை தீர்­மா­னிக்­க­வேண்­டிய அதி­காரம் பாரா­ளு­மன்­றுக்கு மட்­டு­மே­யுண்டு.

இதற்­கி­டையில் தேர்தலை விரைவில் நடத்­தும்­படி கூட்டு எதிர்க்­கட்சி அதி­க­மான அழுத்­தங்­களை வழங்­கி­வ­ரு­கி­றது. விரைவில் நடத்தவேண்டிய தேவை அரசுக்குண்டு.

மாகாண சபைகளின் தேர்தலை நடத்து வதால் தேசிய அரசாங்கத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமென்ற பயம் ஏதோவொரு வகையில் அரசாங்கத்துக்கு உண்டு என்பதை யாரும் மறுதலிக்கமுடியாது. அரசாங்கத்தின் முதிர்நிலைக்காலம் முடிவதற்குமுன் குலைந்துவிடக்கூடாது என்ற விடயத்தில் ஆளும் தரப்பினர் கவனமாக இருந்தாலும் தேசிய அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைகள் கவலைதரும் விடயங்களாகவே காணப்படுகின்றன. இதன் நடுவில் எதிர்க்கட்சித்தலைவர் பதவி பறிக்கப்படவேண்டும். 20 ஆவது சீர்திருத்தம்கொண்டுவரப்படவேண்டும் என்ற அரசியல் முஸ்தீபுகள் இலங்கை அரசியலின் ஒரு ஆரோக்கிய நிலையை தெரிவிக்கவில்லை.

மாகாணசபைகள் தமிழ் மக்க ளின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அளவுக்கு அதிகாரம் கொண்டவை யல்ல. அதன் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் நீண்டகால மாகவே கோரப்பட்டு வந்துள்ளபோதும் அவற்றின்மீது அரசாங்கத்தால் எந்தவித மான கவனமும் காட்டப்படவில்லை. புதியஅரசியல் சாசனத்தின்மூலம் மாகாணசபை களுக்குரிய அதிகாரங்கள் அதிகரிக்கப்படு மென்ற நம்பிக்கையூட்டல்கள் இருந்து வந்தபோது அரசியல் சாசனத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மந்த நிலையிலையே காணப்படுகிறது என்பதை தமிழ்த் தரப்பினர் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த அவ நம்பிக்கைகளால் தான் மாகாண சபை தேர்தலுக்கான அறிவித்தலின் பிரகாரம் வடகிழக்கில் தம்மை ஆயத்தப்படவேண்டிய தேவை தமிழ் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அண் மையில் வடகிழக்கிலுள்ள மறைமாவட்ட ஆயர்கள் சிலர் வடகிழக்கிலுள்ள தமிழ் தலைைமகள் தமிழ் மக்களின் நன்மை கருதி ஒன்றுபட வேண்டும்.   

அதற்கான ஒருவழியாக உள்ளூராட்சி தேர்தல்களில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு ஆட்சியை அமைத் ததுபோல் ஒன்றுபடவேண்டும். புதிய கட்சி களை அமைக்கவேண்டுமென்றோ மாற்று தலைமைகளை உருவாக்கவேண்டுமென்ற எண்ணங்களையும் கொள்கைகளையும் மறந்து அனைவரும் ஒன்று படவேண்டும். ஒன்றுபடவேண்டிய காலத்தின் கட்டாயத் துக்கு தமிழ் தலைைமகள் ஆளாக்கப்பட் டிருக்கிறார்கள் என்ற கருத்தைக் கூறியிருந் தார்கள். அவர்களுடைய கருத்திலுள்ள உண்மை நிலையையும் அனைத்து தரப்பி னரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திருமலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-28#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.