Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அரசியல்வாதிகளை சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை..

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அரசியல்வாதிகளை சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை..

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா-  குளோபல் தமிழ்ச் செய்தியாளர் –  மன்னார்:-

Mannar-udayachandra-2.jpg?resize=800%2C4

 

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே 18 அன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். எனவே தமது அஞ்சலி நிகழ்வு அரசியல் கலப்படம் இன்றி இடம் பெற உரிய பங்களிப்பை வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா கோரியுள்ளார்.

அவர் இன்று (6) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுக்காக நாங்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து பொது அமைப்புக்களினூடாக காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றினைந்து முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளோம்.

எங்களது இனத்தை கொத்துக்கொத்தாக அழித்ததினையும்,எமது இனம் பட்ட துன்பங்களையும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக நாங்கள் கலந்து கொண்டு நினைவு கூறவுள்ளோம். நாங்கள் அன்றைய தினம் எமது நினைவு கூறல் நிகழ்வில் அரசியல்வாதிகளை எதிர் பார்க்கவில்லை.

காணாமல் போனவர்களின் உறவுகள்,யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கின்ற பொது நிலையினர் அனைவரையும் கலந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம். எனவே அரசியல் வாதிகளை குறித்த நிகழ்வில் சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/77965/

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வானது கடவுளை வணங்குவதற்கு நிகரானது. கடவுளை வணங்க வருபவரைத் தடைசெய்வதும் அநீதியானது. இன்று அரசியல் தாக்கமில்லாத வாழ்வு உலகில் இல்லையென்றே சொல்லலாம். 
அரசியல்வாதிகள் மக்களை உருவாக்குவதில்லை. மக்களே அரசியல்வாதிகளை உருவாக்குகிறார்கள், அவர்கள் வாக்குப்பிச்சை கேட்டு வரும்போது பாத்திரம் அறிந்து பிச்சை போட்டிருந்தால், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வும், கடவுளின் சந்நிதானம்போல் புனிதமாகி இருக்கும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.