Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுடன் இணைந்து பயணிக்கப்போகிராராம் கருணா

Featured Replies

மகிந்தவுடன் இணைந்து பயணிக்கப்போகிராராம் கருணா

 

 
 

தமது கட்சி எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்த பயணத்தில் எதிர்காலத்தில் ஏராளமான இளைஞர்களையும் இணைத்து பயணிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (05.05.2018) சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.,

எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் வந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் எமது கட்சி ஏழு உறுப்பினர்களைப்பெற்றுக் கொண்டது. தமிழர்களை ஐக்கியப்படுத்தவேண்டும் என்ற பிரதான நிலைப்பாட்டில் மட்டக்களப்பு தெற்கு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கான ஆதரவினை வழங்கியிருந்தோம். மட்டக்களப்பு வடக்கு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு எங்களது ஆதரவினை வழங்கியிருந்தோம்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கான தேர்தல் தொகுதிகள் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து தமிழர்களையும் ஒரு இஸ்லாமியரையும் உறுப்பினராக கொள்ளும் வகையிலும், எல்லை நிர்ணயகுழுவில் எங்களது சிபாரிசுகளை வழங்கியிருந்தோம்.

ஆனால் வெளியிடப்பட்டுள்ள தொகுதி முறையானை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகவே அமையும் வகையில் அமைந்துள்ளது. 75 வீதமான தமிழர்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்களும் 25 வீதம் கொண்ட முஸ்லிம்களுக்கு இரண்டு பிரதிநிதிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் தொகுதி பிரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு அபாய எச்சரிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தேசிய அரசியலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிப்பதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளோம். இதன்போது வெற்றிகரமான உடன்படிக்கை ஒன்றினையும் செய்துள்ளோம்.

இதன்கீழ் ஏராளமான இளைஞர்களை எமது கட்சியுடன் இணைந்து அரசியல் பாசறைகளை நடாத்தி கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுத்தவுள்ளோம்.

சிங்கள கட்சிகளை வெறுத்து நாங்கள் தேசிய அரசியல் செய்யமுற்படும்போது, எமது இளைஞர்கள் தமது எதிர்காலத்தினை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

தமிழ் இளைஞர்களை அரசியல் ரீதியாக அறிவூட்டி சிங்கள தேசிய கட்சிகளுடன் ஒருங்கிணைத்து பயணிக்க செய்வதன் மூலமே தமிழர்களின் தேசிய நலன்களை, வாழ்வியல் நலன்களை அதிகரிக்கமுடியும்.

http://www.ibctamil.com/politics/80/100149?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராசபக்சவுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே தனக்கு இணைகள் தடையின்றிக் கிடைக்கும் என்பது கருணாவிற்கு ஐயமின்றித் தெரியும்.
 

Bildergebnis für கருணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.