Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட­சாலை வர­லாற்றுப் பாட நூல்­களில் மறைக்­கப்­பட்ட தமிழர் வர­லாறு

Featured Replies

பாட­சாலை வர­லாற்றுப் பாட நூல்­களில் மறைக்­கப்­பட்ட தமிழர் வர­லாறு

 

பாட­சாலை மாணவ, மாண­வி­ய­ருக்­கான வர­லாற்றுப் பாடம் முழு­மை­யற்­ற­தாக, நாட்டின் பண்­டைய உண்மை வர­லா­றுகள் மறைக்­கப்­பட்­ட­தாக, திரி­வு­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாகப் பல­முறை சுட்­டிக்­காட்­டி­யதன் விளை­வாக பாரா­ளு­மன்­றத்தில் யாழ்ப்­பாண மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா கல்­வி­ய­மைச்­ச­ரிடம் இது தொடர்பில் வினா எழுப்­பி­யி­ருந்தார். அதைத் தொடர்ந்து கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் தலை­மையில் பல கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. அவற்றில் கல்வி அமைச்சு அதி­கா­ரிகள், தேசிய கல்வி நிறு­வக உயர் அதி­கா­ரிகள், கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள அதி­கா­ரிகள், பல்­க­லைக்­க­ழக வர­லாற்றுத் துறை­யினர் உட்­பட நாமும் கலந்­து­ கொண்டோம். இறு­தி­யான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்று ஆறு மாதங்­க­ளுக்கும் மேலா­கி­விட்­டது.

ஆனால், இது­வரை குறை­பா­டுகள் திருத்­தப்­ப­ட­வில்லை. பழைய குறை­பா­டு­க­ளு­ட­னேயே பாட­சா­லை­களில் வர­லாற்றுப் பாடம் கற்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றது. குறை­பா­டுகள் திருத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று வழங்­கப்­பட்ட உறு­தி­மொழி கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது என்­பதே உண்மை நிலை­யா­யுள்­ளது. வர­லாற்றுப் பாடத்தில் காணப்­படும் குறைகள் எவை? இந்­நாட்டின் இன­வு­ற­வுக்கு எவ்­வ­கை­யான, எந்த அள­வான பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதை உணர முடி­யா­த­வர்­க­ளாக, பொறுப்­பற்­ற­வர்­க­ளாகக் கல்­வித்­து­றை­யினர் உள்­ளனர் என்றே கருத வேண்­டி­யுள்­ளது. இக்­கு­றை­பாட்டைத் தட்­டிக்­கேட்கும் அறிவோ, ஆற்­றலோ அற்­ற­வர்­க­ளாக நமது தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­களில் மிகப் பெரும்­பான்­மை­யினர் உள்­ளதும் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தா­யுள்­ளது.

நமது நாட்டின் கல்விக் கொள்­கைக்­க­மைய கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர வகுப்பு வரை­யான பாடங்­களில் ஒரு கட்­டாய பாட­மா­கவும் அதேபோல் குறித்த பரீட்­சைக்­கு­ரிய கட்­டாய பாட­மா­கவும் உள்­ளது. ஆனால், அதில் இலங்­கையில் தமிழர் வர­லாறு, யாழ்ப்­பாணத் தமி­ழ­ரசு வர­லாறு, வன்னி தமிழ் சிற்­ற­ரசு வர­லாறு, மண்­முனை தமி­ழ­ரசு வர­லாறு, அவற்றில் ஆட்சி செய்த அர­சர்கள், குறித்த அர­சு­களில் வாழ்ந்த மக்கள் பற்­றிய விப­ரங்கள், ஆட்சி முறைமை பற்­றிய பெறு­ம­தி­யான, போது­மான எது­வித விவ­ரங்­களும் இல்லை. வன்னி மற்றும் மண்­முனை அரசு பற்­றிய எது­வித குறிப்­பு­மில்லை.

போர்த்­து­க்கேயர் இலங்கைத் தீவில் அடி­யெ­டுத்து வைத்த கி.பி.1505 இல் இத்­தீவில் மூன்று பிர­தான அர­சுகள் இருந்­த­தாக வர­லாற்றுப் பதி­வுள்­ள­போதும் பாட­சாலைப் பிள்­ளை­க­ளுக்­கான வர­லாற்றுப் பாட­நூலில் யாழ்ப்­பாணத் தமிழ் அரசு மறைக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் எந்­த­வொரு பிள்­ளைக்கும் யாழ்ப்­பாணத் தமி­ழ­ரசு என்றோர் அரசு இருந்­தது என்றோ, இலங்­கையின் வட­பு­லத்தில் பண்­டு­தொட்டு தமி­ழர்கள், இந்­துக்கள் வாழ்ந்­தார்கள், ஆண்­டார்கள் என்ற உண்மை தெரிந்­து­வி­டக்­கூ­டாது என்ற தரந்­தாழ்ந்த நோக்­கி­லான, பக்­கச்­சார்­பான மறைக்­கப்­பட்ட வர­லாற்றுக் கல்­வியே கற்­பிக்­கப்­பட திட்­ட­மிட்ட முறையில் செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளி­யேயும் ஆதி முதல் தமி­ழர்­களின் ஆளுமை இருந்­த­மைக்­கான பல ஆதா­ரங்­க­ளுள்ள போதிலும் அவையும் மறைக்­கப்­பட்­ட­வை­யா­க­வே­யுள்­ளன. முழு­மை­யான, உண்­மை­யான, திரி­வு­ப­டுத்­தப்­ப­டாத வர­லாற்றை இந்­நாட்டுப் பிள்­ளைகள் கற்­க­மு­டி­யாது தடுக்­கப்­ப­டு­வதும், மறைக்­கப்­ப­டு­வதும் பெறு­ம­தி­யான கல்­வி­யென்று கணிப்­பிட முடி­யுமா?

இது பற்றி அதா­வது நமது நாட்டின் குறை­பா­டு­டைய கல்வி நிலை, தரம் பற்றி கவ­ன­மெ­டுத்து திருத்தம் செய்யும் பொறுப்பு யாரிடம் உள்­ளது? கல்­வி­ய­மைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் தமிழர் வர­லாறு புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணிகள் மூன்றை வெளிப்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. எனது இக்­க­ருத்து தொடர்பில் யாவரும் மௌன­மா­யி­ருந்து அவ­தா­னித்த பின் திருத்தம் செய்ய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தனர். வெறும் உறு­தி­மொழி மட்­டுமே கிட்­டி­யது.

தமி­ழ­ரசுகள் வர­லாறு மறைக்­கப்­ப­டு­வ­தற்­கான முதல் கார­ணி­யாக கொள்­ளத்­தக்­கது, அநு­ரா­த­பு­ரத்­திற்கு வடக்கில் இலங்கை என்ற நாட்டின் பண்­டைய பகு­திகள் அடங்­க­வில்லை என்­பதும், தமி­ழர்கள் வாழ்ந்த பகு­திகள் பண்­டைய இலங்­கையின் எல்­லைக்குள் அடங்­க­வில்லை என்­பதும் நமது நாட்டின் வர­லாற்­றா­சி­ரி­யர்­களின் கணிப்­பாக இருந்­தி­ருக்­கலாம்.

இரண்­டா­வ­தாக இன­வாதம். இலங்­கையில் தமிழர் ஆண்­டார்கள், தமி­ழ­ர­சுகள் இருந்­தன. இலங்­கையின் பாரம்­ப­ரி­ய­மிக்க ஆதிக்­கு­டிகள் தமி­ழர்கள் என்ற வர­லாற்று உண்­மையை மூடி மறைக்கும் இன­வாதச் சிந்­த­னையே தமிழர் வர­லாற்றை மூடி மறைக்கக் கார­ண­மா­யி­ருக்­கலாம்.

இவை­யி­ரண்டும் இல்­லா­து­விட்டால் தாழ்வு மனப்­பான்மை ஒரு கார­ணி­யா­யி­ருக்­கலாம். கோட்டை இராச்­சியம் சிங்­கள அரச பரம்­ப­ரையால் அந்­நி­ய­ரான போர்த்­துக்­கே­ய­ருக்குத் தான­மாக வழங்­கப்­பட்­டது போன்றும் கண்டி இராச்­சியம் சிங்­களப் பிர­தா­னி­களால் ஆங்­கி­லே­ய­ருக்குக் காட்டிக் கொடுக்­கப்­பட்டு அந்­நியர் வச­மாக்­கப்­பட்­டது போலன்றி யாழ்ப்­பாண தமி­ழ­ரசு இறு­தி­வரை போர்த்­துக்­கே­ய­ரிடம் சர­ண­டை­யாது போரிட்­டது போன்று வன்னித் தமி­ழ­ரசும் ஆங்­கி­லே­ய­ரிடம் சர­ண­டை­யாது இறு­தி­வரை போரிட்­டது என்ற தமி­ழர்­க­ளது வீர­மிகு செயற்­பா­டுகள் வர­லாற்றில் உய­ரிடம் பெற்­று­விடும். தமி­ழர்­களின் நாட்­டுப்­பற்று, சுதந்­திர உணர்வு வெளிப்­பட்­டு­விடும் என்ற தாழ்ந்த, தரங்­கெட்ட தாழ்வு மனப்­பான்­மையால் வர­லாற்றுப் பாடத்தில் தமிழர் வர­லாறு மறைக்­கப்­ப­டு­கின்­றதா? என்ற நியா­ய­மான கேள்­வியை கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்ற சிங்­கள அதி­கா­ரி­க­ளிடம் அவர்­க­ளுக்குத் தெளி­வாகப் புரியும் சிங்­கள மொழி­யி­லேயே கேட்டேன். 

தமிழ் வர­லாற்­றா­சி­ரி­யர்கள் வர­லாற்றுப் பாடநூல் ஆக்­கத்­திற்கு உரிய ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்லை. அத­னா­லேயே இந்­நிலை ஏற்­ப­டு­கின்­றது என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. இதில் உண்­மை­யு­மி­ருக்­கலாம். எது எப்­ப­டி­யி­ருப்­பினும் தமிழர் வர­லாறு தமி­ழரால் தான் எழு­தப்­ப­ட­வேண்டும் என்ற கூற்று ஏற்­பு­டை­ய­தல்ல. தர­மான வர­லாற்­றா­சி­ரி­யர்கள் என்றால், ஆராயும் ஆற்றல் கொண்­ட­வர்கள் என்றால் அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படாது.  

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு என்பது போல் தமிழ் வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்களது ஒத்துழைப்பு இல்லையென்று கூறப்படுவது உள்ளது. தற்போது பாடசாலை மட்டத்தில் வரலாற்றுப் பாட நூல்களூடாக வழங்கப்பட்ட கல்வி திட்டமிட்ட தவறான வரலாற்றுத் திணிப்பு என்றே கூறவேண்டும். தமிழ் கல்வித் துறையினரும் தமிழ் அரசியல்வாதிகளும் சமூக நல நோக்குள்ளோரும் இது விடயத்தில் கவனம் செலுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள் என்றால் அது சமுதாயத் துரோகம் என்று துணிந்து கூறலாம். அதனால் ஏற்றவை ஆற்ற அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்.

த.மனோகரன்

[துணைத்தலைவரும் கல்விக்குழு செயலாளரும்,

அகில இலங்கை இந்து மாமன்றம்.]

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-09#page-4

எங்கேயப்பா இவர்கள் சுமந்திரன், சம்பந்தர், மாவை, விக்கி அய்யா ஆட்கள்.

ஓ... மறந்துபோனேன் அவர்கள் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் யார் சுடறேற்றுவது என்பதில் மிகு வேலையாக (Busy) இருக்கிறார்கள். 

வரலாறு காணாமல் போனாலும் பரவாயில்லை அடுத்த ஆட்சியை நாங்கள் தான் பிடிக்கவேணும் கண்டியளோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.