Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா?

Featured Replies

கூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா?


 

 

google-showcases-ai-advances-at-its-big-conference

 

இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற தொழில்நுட்பப் பயன்பாடுகளும் மேம்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் புதுப்புது செயலிகள் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், முன்னணி தேடுபொறியான கூகுள் நிறுவனம், 'கூகுள் அசிஸ்டென்ட்' என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கிவுள்ளது.  இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நபருக்கு ஃபோன் அழைப்பு செய்தல், இ-மெயில் தேடுதல், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது. 

அதேபோல் உணவு விடுதிகளில் தாங்கள் ஆசைப்படும் உணவுக்கு ஆர்டர் கொடுத்தல், முடித்திருத்தகங்களில் முடிவெட்டுவதற்கு நேரம் பெற்றுத்தருதல் போன்ற காரியங்களை இந்த செயலியே போனில் பேசி முடித்து விடுகிறது. இதற்கான உத்தரவை மட்டும் நாம் பிறப்பித்தால் போதும். 

இந்த புதிய வசதிக்கான செயல்விளக்கத்தை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்து காட்டினார். அவர் கட்டளைகளைப் பிறப்பிக்க அதற்கேற்ப கூகுள் அசிஸ்டென்ட் செயலி வேலைகளைச் செய்து முடிக்க அரங்கமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.

http://www.kamadenu.in/news/world/2521-google-showcases-ai-advances-at-its-big-conference.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

 

  • தொடங்கியவர்

``ஹலோ யாரு? நான் கூகுள் பேசுறேன்!" - கலக்க வரும் கூகுளின் புதிய வசதிகள்

 
 

உலகம் முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் டேட்டாவை கையில் வைத்திருக்கும் கூகுளுக்கு எதிர்காலத்தில் அவர்களுக்கு எது தேவைப்படும் என்பதைக் கணிப்பது மிகச் சுலபமான வேலைதான். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் AI தான் இனிமேல் எதிர்காலம் என்று முடிவெடுத்துவிட்டது கூகுள். அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது கூகுளின் இந்த வருட  I/O டெவெலப்பர் மாநாடு. இதில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டதுதான். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மாநாடு இன்றோடு முடிவடையப்போகிறது.

கூகுள் I/O

 

மூன்று நாள்கள் இந்த நிகழ்வு நடந்தாலும் முதல் நாள் என்பது கொஞ்சம் ஸ்பெஷல்தான். மற்ற இரண்டு தினங்களில் டெவெலப்பர்களுக்கான விஷயங்கள் மட்டுமே அதிகம் இருக்கும். ஆனால், முதல் நாளில் அப்படி கிடையாது. அன்றைக்கு நிகழ்வில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய தயாரிப்புகளில் முக்கியமானவை இவை.

கூகுள் அசிஸ்டென்ட்

கூகுள் அசிஸ்டென்ட்

இந்த மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மேம்படுத்தப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட். இதுதான் ஏற்கெனவே இருக்கிறதே என சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தும்போது நினைத்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது இருக்கும் மற்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்களை விடவும் பல வகைகளில் மேம்பட்டதாக இதை வடிவமைத்திருக்கிறது கூகுள். சக மனிதரைப் போலவே நம்முடன் உரையாடும் திறன் இதற்கு இருக்கிறது. தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்டை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் "ஓகே கூகுள் " என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால்,  இனி அதற்கு அவசியமிருக்காது ஒரு முறை அழைத்தாலே நம்முடன் உரையாடலைத் தொடங்கிவிடும். மனிதர்கள் பேசிக்கொள்ளும்போது பயன்படுத்தும் நுணுக்கங்களையும்கூட இது பயன்படுத்துகிறது. இது எப்படிச்  செயல்படும் என்பதை டெமோ காட்டினார் சுந்தர் பிச்சை. முடி வெட்டுவதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும் எனக் கூகுள் அசிஸ்டென்ட்டிடம் கூறவும் கடைக்கு கால் செய்தது. அப்படியே நிஜ மனிதரைப் போலவே உரையாடலை ஆரம்பித்தது. இடையே கடையில் இருந்தவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் "mm-hmm” என்றெல்லாம் கூறி முடி வெட்டுவதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கியதைப் பார்த்து அசந்துபோனார்கள் அங்கிருந்தவர்கள். கூகுள் ட்யூப்ளெக்ஸ் எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் AI-யோடு இணைந்து செயல்படும். இதற்காக deep learning, natural language processing மற்றும் text-to-speech ஆகிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்திருக்கிறது கூகுள்.

கூகுள்  போட்டோஸ்

கூகுள்  போட்டோஸ்

ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் போட்டோக்களை AI-மூலமாக மேம்படுத்தும் வசதியை ஏற்கெனவே கூகுள் கொடுத்திருந்தது. அதை இன்னும் சற்று மேம்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக ஒரு போட்டோவை AI ஆராய்ந்து பார்க்கும், பின்னர் அதில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் தெரிவிக்கும். இதன் மூலமாக ஒரே கிளிக்கில் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு விடும். அது எப்படிச்  செயல்படுகிறது என்பதைக் காண்பிக்க சுந்தர் பிச்சை காட்டியது ஒரு கறுப்பு வெள்ளை போட்டோ. அதை மொபைல் கேமராவில் எடுத்து கலராக மாற்ற வேண்டும் என்றால் அது கடினமான காரியம். ஆனால்  AI-க்கு மிகவும் அது எளிதான விஷயம். போட்டோவை ஒரே நொடியில் கலராக மாற்றிக் காண்பிக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு வசதி AI அதில் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு இந்த போட்டோவை ஷேர் செய்யலாம் என்று பரிந்துரை செய்யும். ஷேர் செய்ய விரும்பினால் ஒரே கிளிக்கில் ஷேர் செய்ய முடியும் .

Healthcare

மருத்துவத் துறையில் AI மிகப்பெரிய மாற்றத்தைக்  கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சுந்தர் பிச்சை . இதுதொடர்பாக இந்தியாவில் இரண்டு தனியார் கண் மருத்துவமனைகளுடன் இணைத்திருக்கிறது கூகுள். ரெட்டினாவை AI ஆராய்வதன் மூலமாக எதிர்காலத்தில் வரக்கூடிய குறைபாடுகளை அது கணித்துவிடும் என்கிறார். அதே ரெட்டினாவை ஆராய்வதன் மூலமாக எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும் கணித்துவிட முடியுமாம். ஒருவரின் உடலில் இருந்து பெறப்படும் டேட்டாவை வைத்து மருத்துவர்கள் ஆராயும் வேகத்தை விடவும் பல மடங்கு வேகத்தில் அவற்றை ஆராய முடிவதால்   AI-யால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

ஜிமெயில்

ஜிமெயில்

கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் ஜிமெயிலுக்குப் புதிய தோற்றத்தையும்,புதிய வசதிகளையும் கொண்டு வந்திருந்து கூகுள். மீண்டும் ஒரு புதிய வசதி கூடிய விரைவில் இடம்பெறப்போகிறது. இனிமேல் ஜிமெயிலிலும்கூட AI கலக்க போகிறது. Smart Compose என்ற செயற்கை நுண்ணறிவோடு இணைந்து செயல்படும் வசதியை அறிமுகப்படுத்தினார் சுந்தர் பிச்சை. ஒருவருக்கு மெயில் அனுப்ப டைப் செய்யும்போது முதல் வார்த்தையை டைப் செய்யும்போதே அந்த வாக்கியத்தை முழுமையாக்க இது பரிந்துரைகள் செய்யும். இதன் மூலமாக முன்பைவிட ஒரு மெயிலை விரைவாக டைப் செய்துவிட முடியும்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்பை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு அது வழிகாட்டும் திசையைப் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கும். ஓர் இடத்துக்கு மேப் காட்டும் வழியில் செல்லும்போது எந்தப் பக்கமாக திரும்ப வேண்டும் என்று தெரியாமல் குழம்பி நிற்பார்கள். ஆனால், இனி அதற்கு அவசியம் இருக்காது. கேமராவை தெருவுக்கு நேராகக் காட்டினால் போதும் ஆக்மென்ட் ரியாலிட்டி முறையில் வழிகளைக் காட்டும். இது தவிர 'For You' என்ற வசதி மூலமாக அந்த இடத்தில் அருகே இருக்கும் சிறந்த உணவகங்களை மேப் காட்டும் , ' Your Match' என்ற வசதி மூலமாக ஒருவரின் ரசனைக்கு ஏற்ற உணவகங்களைப் பார்க்க முடியும். 

தானியங்கி கார்

தானியங்கி கார்

கூகுளின் தானியங்கி கார் பிரிவுதான் Waymo. இது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஆனால், தற்பொழுது மேடையில் இதைப் பற்றி பேசுவதற்கும் காரணம் இருக்கிறது. 2030-ம் ஆண்டில் உலகில் இருக்கக்கூடிய தானியங்கி கார்களில்  Waymo-வின் பங்கு  60 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். சமீப காலமாக தானியங்கி கார்கள் ஏற்படுத்திய விபத்துகளால் அதன் பாதுகாப்பு பற்றிய விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தான் AI-யின் சிறப்புகள் பற்றியும் அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கியிருக்கிறது கூகுள்.

ஆண்ட்ராய்டு  P

ஆண்ட்ராய்டு  P

ஆண்ட்ராய்ட்  P தரும் சிறப்பு வசதிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் .

 

ஆண்ட்ராய்டு   P-யின் பீட்டா வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். கடந்த பத்து வருடங்களில் மக்களுக்குக்  கணினிகள் பக்கம் இருந்த பார்வையை ஸ்மார்ட்போன் பக்கம் திருப்பியதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூகுள் தெரிவித்திருக்கிறது. AI-யோடு இணைந்து செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிக்கிறது. ஆண்ட்ராய்டு P-யில் முன் எப்பொழுதையும்விட UI-ல் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமான மாற்றமாக ஹோம் பட்டன் மாற்றியமைக்கப்பட்டிக்கிறது. மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்காக இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன இதன் மூலம் ஒருவர் மொபலை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்று அறிந்துகொள்ள முடியும். 

https://www.vikatan.com/news/miscellaneous/124725-most-important-products-google-introduced-in-developer-conference.html

  • தொடங்கியவர்

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி?

 

 
 

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய குரல்களை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

 
 
 
 
கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி?
 
புதுடெல்லி:
 
அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். 
 
அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஜான் லெஜன்ட் குரல் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் மற்றவர்களின் குரல்களும் சேர்க்கப்பட இருக்கிறது. 
 
இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் இயங்கும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வழக்கமான இயந்திர குரலை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம். 
 
201805161441104966_1_Google-Assistant-Scrn._L_styvpf.jpg
 
கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும். 
 
இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரிஃபரன்சஸ் -- அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். 
 
இங்கு காணப்படும் ஆறு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இத்துடன் குரல்களை செட் செய்யும் முன் ஒவ்வொரு குரலையும் பிரீவியூ ஆப்ஷன் மூலம் கேட்க முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
 
இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு குரல்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் வெவ்வேறு குரல்களை ஒலிக்க செய்யலாம். 
 
புதிய அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதுவரை இந்த அப்டேட் பெறாதவர்கள் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்து பின் முயற்சிக்கலாம். 
 
லெஜன்ட் குரல் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதற்கான அப்டேட் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது லேங்குவேஜ் செட்டிங்ஸ்-க்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் சில சாதனங்களில் சில குரல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.
 

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/16144110/1163509/How-to-get-Google-Assistant-new-voices-on-Android.vpf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கூகுள் ஹோம் அசிஸ்டெண்ட் கூறும் 7000 கோடி தக­வல்கள்

 

சொல்லும் வேலை­களை எல்லாம் தட்­டாமல் செய்யும் கூகுள் ஹோம் இப்­போது இந்­தி­யா­வுக்கும் வந்­து­விட்­டது. அது என்ன கூகுள் ஹோம்? அது எப்­படி செயல்­படும்?

அமேசான் நிறு­வ­னத்தின்– அமேசான் எக்கோ ஸ்பீக்­க­ருக்குப் போட்­டி­யாக, கூகுள் கள­மி­றக்­கி­யி­ருப்­ப­துதான் இந்த கூகுள் ஹோம் (ஸ்பீக்கர்). இதில் கூகுள் அசிஸ்­டெண்­டையும் இணைத்­தி­ருப்­ப­துதான் இதன் ஹைலைட்!

இந்த கூகுள் ஹோம் கணினி சமாச்­ச­ாரங்­க­ளுடன் கூடிய ஓர் ஒலிபெ­ருக்கி. இத­னுடன் இணைக்­கப்­பட்­டுள்ள கூகுள் அசிஸ்டெண்ட் என்­பது கூகுள் நிறு­வ­னத்தால் உரு­வாக்­கப்­பட்ட செயற்கை நுண்­ண­றி­வுடன் நம்­முடன் உரை­யா­டக்­கூ­டிய நவீன ஆப் வசதி. இணை­யத்தில் உள்ள தக­வல்­களை நம் கட்­ட­ளைக்­கேற்பப் பயன்­ப­டுத்தி நம் பணி­களை இட்ட நேரத்தில் செய்து முடிக்கும் வல்­ல­மை­பெற்­றது இது.

ஓர் உதா­ரணம்……. மும்­பையில் நடை­பெறும் ஒரு முக்­கிய நிகழ்ச்­சியில் கலந்­து­கொள்ள முடி­வெ­டுத்­தி­ருக்­கிறீர்கள் என்று வைத்­துக்­கொள்­ளுவோம். இதற்­காக நீங்கள் நேரிலோ அல்­லது இணை­யத்­திற்கோ சென்று விமான டிக்­கெட்டை பதி­வு­செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்­சியில் கலந்­து­கொள்­ளவும் டிக்கெட் வாங்க வேண்டும் அல்­லது அங்­கி­ருக்கும் நண்­பர்கள் யாரேனும் உத­விக்கு கூப்­பிட வேண்டும்.

இதை நீங்கள் உட்­கார்ந்­தி­ருக்கும் இடத்தில் இருந்­து­கொண்டு, யார் அங்கே….. நாளை நான் மும்­பையில் நடக்கும் நிகழ்ச்­சிக்கு செல்ல வேண்டும். விமான டிக்கெட், நிகழ்ச்­சி­க்கான டிக்கெட் எடுத்­துவை? என்று கட்­ட­ளை­யிட்டால் அதை அடுத்து சில நிமி­டங்­களில் செய்து முடித்­து­வி­டு­வது மட்­டு­மன்றி மும்­பையில் நாளை வெயில் கொஞ்சம் அதி­க­மாக இருக்கும். உங்கள் உட­லுக்கு அது ஒத்­துக்­கொள்­ளாது. எனவே இளநீர், மோர் அதிகம் எடுத்­துக்­கொள்­வது நல்­லது. பிளைட் நம்பர் 747, புறப்­படும் நேரம் காலை 10 மணி, இண்­டர்­நே­ஷனல் ஏர்போர்ட், மூன்­றா­வது கேட் என்று நாம் இட்ட கட்­ட­ளையை செய்து முடித்­து­விட்டு நாம் கேட்­காத ஆனாலும் நமக்கு உப­யோ­க­மான தக­வல்­களைத் தந்து அசத்­து­வ­துதான் இந்த கூகுள் அசிஸ்டென்ட்!

இதற்­காக கூகுள் ஹோமை வாங்­கி­யதும் நம் ஆண்ட்­ராய்டு மொபைலில் இதற்­கென உள்ள பிரத்­தி­யேக ஆப்ஸை டவுன்லோட் செய்து இணைப்­பதன் மூலம் மொபைல் மூலமும் இதற்கு கட்­ட­ளை­களைத் தர­மு­டியும்.

2016 இல் அமெ­ரிக்­காவில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இந்த கூகுள் ஹோம், அங்கு கிடைத்த மாபெரும் வர­வேற்பைத் தொடர்ந்து இந்­தி­யாவில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யது கூகுள் நிறு­வனம். தற்­போது இந்­தி­யாவில் ஒரு கூகுள் ஹோமில் விலை ரூபா 9999. கூகுள் மினி ஹோமின் விலை ரூபா 4499.

கூகுள் ஹோம் என்­பது கூகுள் நவ் என்ற செய­லியின் மேம்­ப­டுத்­தப்­பட்ட உருவம். கூகுள் நவ் செய­லியில் நமது குர­லை­கேட்டு கேட்ட தக­வல்­களைத் திரையில் கொடுக்கும். பதில் ஏதும் தராது. ஆனால் கூகுள் ஹோம், ஓகே கூகுள்……. இன்­னைக்கு எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் திரைப்­படம் போகலாம் என்று இருக்கேன். என் மனைவி, மகன் என மூன்று பேரும் போகலாம் என்று இருக்கோம். சென்­னையில் எந்­தெந்த தியேட்­டரில் ஓடுது? எத்­தனை மணிக்­காட்சி? டிக்கெட் எந்­தெந்த திரை­ய­ரங்கில் இருக்கு. சொல்லு? என்று கேட்டால் அடுத்த சில வினா­டி­களில் அண்­ணா­சா­லையில் உள்ள தேவி­பா­ரடைஸ், கோயம்­பேட்டில் உள்ள ரோகிணி, புர­சை­வாக்­கத்தில் உள்ள அபி­ராமி தியேட்­டர்­களில் நாடோடி மன்னன் திரை­யி­டப்­ப­டு­கி­றது. ரோகிணி, அபி­ரா­மியில் டிக்கெட் இல்லை. தேவி பார­டைஸில் முப்­பது டிக்­கெட்­டுக்கள் இருக்­கின்­றன. உங்­க­ளுக்குப் பிடித்த பின்­வ­ரி­சை­யிலும் மூன்று இடங்கள் இருக்­கின்­றன என்று இணை­யத்தில் உள்ள தக­வல்­களை ஆராய்ந்து பதில் சொல்­லி­விடும். ஓகே கூகுள் உடனே அதன் மூன்று டிக்­கெட்­டுக்­க­ளையும் புக் பண்­ணிடு என்று கட்­ட­ளை­யிட்டால் போதும் டிக்கெட் புக் பண்­ணி­யாச்சு. மதியம் 3 மணிக்குப் படம் தொடங்கும். நீங்க இன்னும் 30 நிமி­டங்­களில் கிளம்­பினால் அண்­ணா­சா­லையில் உள்ள டிராப்­பிக்கை கடந்து நேரத்­திற்கு செல்ல முடியும் என்று பதில் அளிக்கும்.

கூகுள் ஹோமை நம் ஆண்ட்ராய்ட் போனுடன் இணைத்து வீட்டில் உள்ள LED டிவியை குரோம்காஸ்ட் எனும் இணை­ய­வ­சதி கருவி கொண்டு இணைத்­துக்­கொள்ள வேண்டும். வீட்­டி­லுள்ள ஃபேன், டியூப்லைட், வாஷிங்­மெஷின் போன்­ற­வற்­றையும் கூகுள் ஹோமுடன் இணைத்­து­விட வேண்டும்.

எல்லாம் இணைத்து விட்ட பிறகு, ஓகே கூகுள் எனக்கு ரொம்ப போர­டிக்­குது இளை­ய­ராஜா பாட்டு, “என்ன சத்தம் இந்த நேரம்….” வேணும். பிளே பண்ணேன் என்று கேட்டால் உடனே அந்தப் பாட்டு கூகுள் ஹோமில் ஒலிக்கும். டிவியில் பார்க்க வேண்­டு­மென்றால் யுடி­யூப்பில் அது­வா­கவே எடுத்­துத்­தரும்.

உங்கள் மன­நி­லையைப் புரிந்­து­கொண்டு உங்­க­ளுக்குப் பதில் அளிக்கும். குழந்­தை­க­ளுக்குக் கதை சொல் என்றால் கதை சொல்லும். கேம்­பிரிட்ஜ் யுனி­வர்­சிட்­டியின் அக­ரா­தி­யி­லி­ருந்து சொல்லைத் தேடிக்­கொடு என்றால் தேடிக்­கொ­டுக்கும்.

கீரையை கிள்ளி வைங்க. 50 கிராம் தனியா எடுத்­துக்­கோங்க. காய்ந்த மிளகாய் 15 எடுத்­துக்­கோங்க என்று படிப்­ப­டி­யாக சமையல் செய்ய உதவி செய்யும்.

கூகுள் அசிஸ்டெண்ட் இது­போல 7000 ஆயிரம் கோடி தக­வல்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது. எது குறித்தும் கேள்வி கேட்­கலாம். உடனே பதில் தரும் என்­கி­றது கூகுள்.

கூகுள் ஹோம் ஸ்பீக்­க­ருக்குத் தேவை. அதற்கு உயி­ரூட்ட கொஞ்சம் மின்­சா­ரமும் அதற்கு உணர்­வூட்ட வைஃபை அடங்­கிய இணைய இணைப்­பும்தான். மின்­சாரம் இல்­லை­யெனில் குறிப்­பிட்ட நேரம் மின்­சாரம் இருக்கும் வரை­யி­லான வச­தியும் இதில் உண்டு.

ஃபோனை நிறுத்து. லைட்டை ஆப் பண்­ணிடு. காலையில் 5 மணிக்கு என்னை எம்.எஸ்.சுப்­பு­லட்­சுமி சுப்­ர­பா­தத்­தோடு எழுப்பு என்று சொல்­லி­விட்டுப் படுத்தால் போதும், அனைத்­தையும் கூகுள் ஹோம் செய்து முடித்­து­விடும். சரி எல்­லோ­ரு­டைய கட்­ட­ளை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ளுமா? ஏற்­றுக்­கொள்­ளாது. யாரு­டைய குரல்­க­ளுக்கு எல்லாம் அது பதில் சொல்ல வேண்­டுமோ? அவர்­க­ளது குரலை பதி­வு­செய்ய வேண்டும். அவ­ரவர் குரல்­களை அடை­யாளம் கண்டு பதில் சொல்லும் கட்­ட­ளை­களை நிறை­வேற்றும்.

ஃபேன், லைட் எல்லாம் எப்­படி ஆஃப் ஆகும்? இதற்­காக பிலிப்ஸ் போன்ற நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் இட்­டி­ருக்­கி­றார்கள். வரும் காலத்தில் வைஃபை மூலம் அனைத்து ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களும் இயங்கும் வகையில் வந்துவிடும். அப்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் கட்டுப்படுத்தலாம். இன்னும் பல்வேறு வசதிகள் வருங்காலத்தில் அப்டேட் செய்யப்படும் என்றும் சொல்லியுள்ளது கூகுள்.

தற்போது ஆங்கிலமொழியில் மட்டும் இயங்கும் இந்த கூகுள் ஹோம் விரைவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இயங்கும்படி செய்ய இருக்கிறது கூகுள் ஹோம்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-26#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.