Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'திடீரென கதறல் சத்தம் எழுந்து பார்த்தால்...' முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு

Featured Replies

'திடீரென கதறல் சத்தம் எழுந்து பார்த்தால்...' முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1)

 

 
Image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1)

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 10-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்..

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் 03 கிலோ மீற்றர் சுற்றளவுப் பகுதி, கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

பல தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக எரிந்த நிலையில் இறந்தும், துடி துடித்த நிலையிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், சுடுகாடாகா கிடக்கின்றது இந்தக் கிராமம்.

யாராலும் எழுந்து சென்று உதவ முடியாத நிலை. தலை தூக்கினால் மரணம் என்கின்ற சூழல்.

நாளை இந்த நிலை மாறுமா? சர்வதேசம் இந்த இனப்படுகொலையை இப்போதாவது நிறுத்துமா- என்ற கேள்விகளோடு ஈழத் தமிழ் மக்களின் இன்றைய பொழுது முடிகின்றது பதுங்கு குழிகளுக்குள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

மன்னார் மாவட்டத்தின், மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உலகப் புகழ் பெற்ற மடு மாதா தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட அழகிய வளமான கிராமம்தான் பெரிய பண்டி விரிச்சான்.

2007-ம் ஆண்டு பங்குனி மாதம் அப்போது எனக்கு 15-வயது ஸ்ரீலங்காவில் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ள நிலையில் பல அரசியல் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் யுத்தம் நடைபெறவுள்ளதாகவும் வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எதையும் காதில் வாங்காமல் வழக்கம் போல் பாடசாலைக்குள் புதிய வகுப்பில் நுழைந்து சில மாதங்களான நிலையில் சந்தோசமாக, சுதந்திரமாக சிட்டுக் குருவிகள் போல் பல கனவுகளுடன் பயணித்துக்கொண்டிருந்தேன்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

எனக்குப் பிடித்த தமிழ் பாடத்தை எனக்குப் பிடித்த ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போதுதான் அயல் பகுதியில் ஏதோ பெரிய வெடிப்புச் சத்தம்!

தொடர்ந்து சில நிமிடங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தது. செய்வதறியாது நானும் சக மாணவர்களும் ஓலமிட்டு கதறுகிறோம். ஆசிரியரோ "அனைவரும் கீழே விழுந்து படுங்கள்.." என சத்த மிடுகிறார்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இந்த சத்தத்தை இப்போதுதான் முதன் முதலாக கேட்கின்றேன்.

கொஞ்ச நேரத்தில் எனது அம்மா உட்பட சக மாணவர்களின் பெற்றோரும் அலறியடித்துக் கொண்டு பாடசாலைக்கு ஓடி வருகின்றனர்.

அம்மா என்னை கட்டியணைத்த படி என்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

அப்போது வீதி எங்குமோ விடுதலைப் புலிகளின் வாகனங்கள் அதிவேகத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நடப்பதை பார்த்த படி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் பாடசாலை 10.00 மணிக்கே விட்டு விட்டது வீட்டுக்கு போய் நண்பர்களுடன் விளையாடலாம் என நினைத்துக் கொண்டு ஒருவித மகிழ்ச்சி பொங்க வீட்டிற்கு செல்கின்றேன்.

வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் அப்பாவும் வேலைக்குச் சென்ற அண்ணாக்களை கூட்டிக் கொன்று வீட்டிற்கு வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக கையில் கிடைத்த பொருட்களை தூக்கிக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் நாங்கள் உட்பட எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் மடுவிற்குச் சென்று சின்ன குடிசை ஒன்றை போட்டு அங்கேயே அந்த நாளின் இரவுப் பொழுதில் எந்த வெடிச் சத்தமும் இல்லாமல் உறங்கி விட்டோம்.

திடீரென கதறல் சத்தம் எழுந்து பார்த்தால்...

இனப்படுகொலை தொடரும்....

-ந.ஜெயகாந்தன்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Photos: K.Suren

http://ibctamil.com/history/80/100340?ref=rightsidebar

  • தொடங்கியவர்

'சரமாரியாக குண்டுகள் எங்களை அண்மித்து விழுகின்றன..' -முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-02)

 

 
Image

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 11-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்..

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உண்டியல் சந்தி, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் உட்பட்ட 03 கிலோ மீற்றர் சுற்றளவுப் பகுதி, கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

பல்லாயிரம் தமிழ் மக்கள் நாளுக்குநாள் கொத்துக் கொத்தாக எரிந்த நிலையில் இறந்தும், துடி துடித்த நிலையிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

யாராலும் எழுந்து சென்று உதவ முடியாத நிலை. பதுங்கு குழிகளுக்குள் இருந்து மேலே ஏறினால் மரணம் என்கின்ற சூழல். மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் இன்றைய தினமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கேணல் சூசை அவர்கள் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான புலிகளின் குரல் வானொலியூடாக மக்களின் அவலநிலையை குறிப்பிட்டு உலக நாடுகள் போரை நிறுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்சி..

எழுந்து பார்த்தால் - எனது அயல் வீட்டு நண்பனின் தந்தை நேற்று பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் நடத்திய செல் தாக்குதலில் பலியாகி விட்டார், என எனது நண்பன் உட்பட குடும்பம், உறவுக்காரர் அனைவரும் கதறியழுகின்றனர்.

தூக்கத்தில் எழுந்த எனக்கு பெரும் அதிர்ச்சி! செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன்.

இதுதான் எமது கடந்த கால யுத்த வரலாற்றில் நான் பார்த்த முதல் இனப்படுகொலை.

இவரின் இறுதிக் கடமைகள் மடுவில் இடம்பெற்று அவரது உடல் மடுவிலேயே புதைக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாட்கள் அப்பகுதியில் எந்த செல் தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா அரசு நடத்தவில்லை இதனால் நாளை வீட்டுக்குச் சென்று விடலாம் என பெரியவர்கள் கதைத்துக் கொண்டு உறங்க தயாராகிறார்கள்.

அப்போது சரமாரியாக குண்டுகள் எங்களை அண்மித்து சுமார் 200M தூரத்தில் விழுகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அந்த நாள் இரவு முழுவதும் இந்த செல் தாக்குதல் தொடர்கிறது, நித்திரை இன்றி மடு அன்னையை வேண்டிய படி அம்மாவின் மடியில் நானும் எனது சகோதரர்களும் படுத்திருக்கின்றோம்.

அன்றைய நாள் இப்படியே செல் சத்தத்துடனே தொடர்கிறது அடுத்த நாள் அதிகாலை 5.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டவுடன் எழுந்து தங்கள் தங்கள் வேலைகளை மக்கள் செய்து வருகின்றனர்.

நேற்றைய தாக்குதலுடன் திரும்பி வீடு செல்வோம் என்ற எண்ணம் பகல் கனவு ஆனது தொடர்ந்து யுத்தம் உக்கிரமடைந்தது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர் எனது பாடசாலையான மன். பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் மடுவில் தாற்காலிகமாக மரங்களுக்கு கீழ் இயங்கியது.

நாங்கள் காலையில் படிக்க செல்வது இராணுவம் தாக்குதல் நடத்த பாதியில் வீட்டுக்கு ஓடுவது என மூன்று மாதங்கள் இப்படியே உருண்டோதியது. இவ்வளவு காலமாக எமக்கு அண்மையில் விழுந்த செல்கள் தற்போது எமது பகுதியிலேயே விழத்தொடங்கியது.

நாங்கள் உட்பட அனைவரும் மடுக்கோயிலுக்குள் சரணடைந்தோம்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மடு தேவாலயம் முழுவதும் கண்ணீருடன் மக்கள் கதறுகின்றனர். போர் உக்கிர நிலையில் நடந்து வருகிறது விடுதலைப் புலிகள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததுடன் வாகன வசதிகளையும் வழங்கி இடப்பெயர்வுக்கு உதவி புரிகின்றனர்.

இராணுவம் தமிழர் மீது ஏவும் எறிகணைகள் எமது பகுதியில் சரமாரியாக விழுந்து கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக அயல் கிரமமான தட்சனாமருதமடு பகுதியில் குடியமர்கின்றோம். எம்முடன் சின்னப்பண்டிவிரிச்சான் மக்களும் தட்சனாமருதமடுவில் குடியமர்ந்தனர். சிலர் மட்டும் மடு தேவாலயத்தை பராமரிக்கும் பொருட்டு எறிகணைகளுக்கு மத்தியிலும் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விடுதியில் வசித்து வருகின்றனர்.

பெரியபண்டிவிரிச்சான் மாகா வித்தியாலயம், சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைகள் தற்காலிகமாக தடசனாமருதமடுவில் இயங்கி வருகின்றது. அப்போது மடுவிலிருந்து பள்ளமடுவுக்கு மக்களின், மாணவர்களின் போக்குவரத்துக்காக தனியார் பேருந்து ஒன்றும் இயங்கி வந்து கொண்டிருந்தது. நான் பாடசாலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு அயலில் வசிக்கும் புதிய நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை சிறிது தூரத்தில் பெரிய சத்தம்!

வழக்கமாக கேட்பதுதானே எங்கோ இராணுவம் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்கிறது என்று எனக்குள் புலம்பிக் கொண்டு விளையாட்டு தொடர்கிறது..

சிறிது நேரம் கழித்து நோயாளர் காவு வண்டி அதி வேகத்தில் மடுவை நோக்கி செல்கின்றது. என்ன நடந்தது? என வீதிக்கு வந்து விசாரித்தன் பின்தான் அறிந்தேன் சிறிது நேரத்தின் முன்தான் உலகையே உலுக்கிய அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை...

இனப்படுகொலை தொடரும்...

http://www.ibctamil.com/articles/80/100392

  • தொடங்கியவர்

தலைவர் பிரபாகரனையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-03)

 

 
 
Image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-3)

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 12-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்..

உண்டியல் சந்திப் பகுதியை இராணுவம் அண்மித்துள்ளது, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் உட்பட்ட பகுதிகளே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாளுக்குநாள் இறந்தும், துடி துடித்த நிலையிலும், மருத்துவ வசதிகள் ஏதும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், தொடர்ந்து சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

யாரும் யாருக்கும் சென்று உதவ முடியாத நிலை. பதுங்கு குழிகளுக்குள் இருந்து மேலே ஏறினால் மரணம் என்கின்ற சூழல். செய்வதறியாது நிற்கின்றனர் தமிழ் மக்கள்.

இந்நிலையில் இன்றைய தினமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கேணல் சூசை அவர்கள் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான புலிகளின் குரல் வானொலியூடாக மக்களின் அவலநிலையை குறிப்பிட்டு உலக நாடுகள் போரை நிறுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருக்கிறார்.

மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

நேற்றைய தொடர்சி..

 

உலுக்கிய அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை - பள்ளமடுவிலிருந்து மடு நோக்கி பொது மக்களுடனும், மாணவர்களுடனும் பயணித்த தனியார் பேருந்து கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது என்ற அதிர்சி செய்தியை அறிந்தேன். ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நின்றேன் அந்த பேருந்தில் பயணித்த என்னுடன் படித்த சக மாணவர்கள், எனக்கு படிப்பித்த ஆசிரியர், எனது ஊர்மக்கள், பச்சிளங் குழந்தைகள் என மொத்தம் 18 பேர் அகால மரணமடைந்ததுடன் 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் கிளிநொச்சியில் செஞ்சோலையில் நடந்த மாணவர்கள் மீதான வான் தாக்குதலை அடுத்து உலகத்தை உலுக்கிய பாரிய இனப்படுகொலை இதுதான். ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் ஆறுதலுக்கு கூட யாருமில்லை ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம், இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மடு தேவாலயத்தில் வைத்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பெரும்திரளான மக்களின் கண்ணீருடன் ஸ்ரீலங்கா இராணுவத்தின் சரமாரியான எறிகணைத் தாக்குதலன் மத்தியில் மடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச் சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் இன்றளவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்துக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாலம்பிட்டி - நெட்டாங்கட்டைப் பகுதியில் துக்க வீட்டிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பனையைச் சேர்ந்த தம்பதிகள் கிளைமோர் தாக்குதலில் பலியானதுடன், தட்சனாமருதமடு அந்தோனியார் தேவாலயத்தின் மீது எறிகணை விழுந்ததில் பல மக்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து தட்சனாமருதமடுவில் அப்போது இடம்பெயர்ந்து வசித்து வந்திருந்த மக்களுடன் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களால் அப்போதைய யுத்த நிலவரங்கள் தொடர்பில் தெளிவு படுத்தியதுடன், இப்பிரதேசத்தை விட்டு பின்வாங்குமாறு அறிவுறுத்தப் பட்டதுடன் பொருட்களை ஏற்றி செல்வதற்காக வாகனங்களையும் ஏற்பாடு செய்துதந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நாங்கள் பெரியமடுபகுதிக்குச் சென்று அங்கு வீடு அமைத்து அத்துடன் வீட்டிற்குள்ளே பதுங்குகுழி அமைத்து மீண்டும் புதிய மக்கள், புதிய பாடசாலையென காட்டு யானைகளுக்கு மத்தியிலும் வாழ்க்கை தொடர்கிறது. அங்கு சில காலம் எறிகணைச் சத்தங்கள் இல்லாமல் இருந்தோம் ஆனால் மடுப்பகுதியில் கடுமையான யுத்தம் தொடர்ந்து மாதக்கணக்கில் நடை பெற்று வருகிறது.

அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் இடம்பெற்றது..

 

 

இனப்படுகொலை தொடரும்..

http://www.ibctamil.com/articles/80/100435?ref=imp-news

  • தொடங்கியவர்

கேணல் சால்ஸ் கிளைமோர் தாக்குதலில் பலி - ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-04)

 

Image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-4)

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 13-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

உண்டியல் சந்திப் பகுதியை இராணுவம் அண்மித்துள்ளது, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் உட்பட்ட பகுதிகளே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.

 

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாளுக்குநாள் இறந்தும், துடி துடித்த நிலையிலும், உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், உலக வல்லாதிக்கத்தின் முன் சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டனர்.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி..

விடுதலைப் புலிகளின் படையக புலனாய்வு தளபதியாக இருந்த கேணல் சால்ஸ் அவர்கள் மூன்றாம்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பலியானர், இந்த சம்பவம் அன்றைய போராட்டகாலத்தில் படையக புலனாய்வுத்துறையில் ஒரு பின்னடைவாகவே காணப்பட்டது.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்த சம்பவம் இடம்பெற்ற சில காலங்களின்பின்தான் தலைவர் பிரபாகரனையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் இடம்பெற்றது. ஆம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வன் 2008 ஆண்டு கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பலியானர் என்ற செய்தி ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

தமிழர் போராட்டத்தில் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மிகப்பெரும் பலமாக இருந்தவர் இவர். இச்சம்பவம் அன்றைய காலகட்டிடத்தில் ஈழத்தில் வசித்து வந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஸ்ரீலங்கா அரச தரப்பு இவரின் இழப்பை கொண்டாடியது, இவரது மரணம் விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல் ரீதியாக பாரிய வீழ்ச்சி, அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் விடுதலைப் புலிகள் என்ற கேள்வியுடன் நாட்கள் கடந்து செல்கின்றன.

இந்நிலையில் மடுவுக்குள் ஊடுருவியது ஸ்ரீலங்கா அரச படை, நாங்கள் உட்பட பெரிய பெரியமடுவில் வசித்து வந்த பல கிராம மக்கள் அடுத்தடுத்து வெள்ளாங்கள், முழங்காவில் பகுதியில் குடியேறுகின்றனர், நாங்கள் முழங்காவிலில் உள்ள பிள்ளையார் கோயிலின் அண்மித்த பகுதியில் கொட்டகை போட்டு குடியேறினோம் எங்கள் மாவட்டமான மன்னாரை விட்டே வெளியேறி விட்டொம் மனதில் பெரிய கணம், இது எங்களுக்கு நான்காவது இடம் இந்த நிலையிலே எங்களுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது, இந்தப் பயணம் முள்ளிவாய்க்காலில்தான் முடியும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை, தெய்வத்தைக் கூட கடந்த போர் விட்டுவைக்கவில்லை, இங்கு நாங்கள் குடியேறிய நிலையில் மடு மாதாவின் உருவ சிலையும் தேவன்பிட்டி தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில்தான் மாங்குளம் - மல்லாவி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நோயாளார் காவு வண்டிக்கு கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. பெரியபண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சானைச் சேர்ந்த இரண்டு அரச ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அடுத்தடுத்து சோகம், அழ அப்போதே கண்ணீர் முடிந்து விட்டது, கல்வியோ தொட்டது பாதி விட்டது பாதி, அனைவரும் ஒருவகை மனநோயாளிகளாக ஆகிவிடடார்கள். மறுபுறம் மடுவை அரணாக காத்துவந்த கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் மரணமாகிறார், இந்நிலையில் ஒருவருட காலமாக கடும் சமர் நடைபெற்று வந்த மடுவை முழுமையாக கைப்பற்றி விட்டதாக இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றது. விடுதலைப் புலிகளின் பெரும் தளபதிகள் தொடர் மரணதின் எதிரொலி பின்னடைவில் முடிகின்றது என அப்போதைய காலகட்டத்தில் பேசப்படட்து,

 

இந்த தொடர் தளபதிகளின் மரணம் விடுதலைப் புலிகளுக்கும் அடுத்தடுத்து சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழர்களுக்கோ விடுதலைப் புலிகளின் மேல் இருந்த நம்பிக்கை குறையவில்லை. அதே நேரம் இந்தியா உட்பட்ட சர்வதேசம் மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர் அதற்கேற்றாற்ப்போல் தமிழகம் மற்றும் புலம்பெயர் உறவுகள் நடத்திவந்த தொடர் போராட்டங்களும் அமைந்திருந்தது. என்னதான் தொடர் துன்பத்தைத் அனுபவித்தாலும் இந்த நிலைமாறும் என்ற எண்ணத்தோடு தினம் தினம் வேதனைகளுடன் நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம் அப்போதுதான் மீண்டும் ஒரு அதிர்ச்சி!

இனப்படுகொலை தொடரும்..

http://www.ibctamil.com/articles/80/100471?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா இராணுவத்தை இவ்வளவு வேகமாக கைப்பற்ற விடுதலைப்புலிகள் விடுவார்கள் என்று நினைக்கவில்லை- ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-05)

 

 
 
Image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-5)

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 14-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..

முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியது, கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் திரளாக இறந்துள்ளனர், பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, போதுமான மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார்.

எங்கும் மரண ஓலம், உலக வல்லாதிக்கத்தினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், சோனியாகாந்தி, கருணாநிதி உட்பட்ட காங்கிரஸ் காரர்கள் கொண்டாடி வருகின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை, ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிக்கித் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

எஞ்சிய மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கூட இல்லை.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி..

முழங்காவில் கடற்பரப்பால் இராணுவக் கடற்படை மோட்டார் தாக்குதல் மேற்கொண்டது இந்த எதிர்பாராத தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர், எங்களுக்கு பெரும் அதிர்ச்சி முழங்காவிலுக்கு வந்து சில மாதங்களில் மீண்டும் வேறு இடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இதற்கு மேல் செல்ல எங்களின் உடம்பிலோ, மனதிலோ பலம் இல்லையே, இருந்தாலும் உயிரைக்காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஒன்றும் செய்ய முடியாத நிலை மீண்டும் முழங்காவிலில் அமைத்திருந்த கொட்டகையை பிரித்துக் கொண்டு வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அக்கராயன் பகுதிக்குச் செல்கின்றோம்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அங்கு சென்றால் பலபகுதி மக்கள் குறுகிய பகுதிக்குள் அடங்குவதால் அக்கராயனில் சிறிய கொட்டகை அமைப்பதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலை.

பல இடங்களில் தேடியும் இடங்கள் இல்லாததால் நீர், மலசலகூட வசதியில்லாத ஒரு காட்டுப்பகுதியை துப்பரவு செய்து அங்கே கொட்டைகை அமைத்து இருந்தோம்.

நான் பாடசாலை சென்று பலமாதங்கள், படிக்கக்கூடிய சூழ்நிலையும் இல்லை. மறுபுறம் சிலவுகளுக்கு பணம் இல்லை, வேலை இல்லாத சூழ்நிலை என்ன செய்வதென்று தெரியவில்லை குடும்பத்தில் வறுமை வாட்டுகிறது, எங்கு வேலைக்குச் செல்லலாம்? பணத்துக்கு என்ன செய்யலாம் என்ற பல யோசனைகளுடன் எனது குடும்பம் இருந்தது, நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது.

மடுவை கைப்பற்றியிருந்த இராணுவம் படு வேகமாக முழங்காவில் வரை ஊடுருவியது, இதன்போதும் சில எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டனர், விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகள் இராணுவத்தை உள்வாங்கி எதிர் தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் உலாவந்தன.

மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழ மக்கள் அவர்கள் வாழ்கின்ற நாடுகளில் ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

தமிழ் நாட்டிலும் போரை நிறுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது இந்தப்போர் இன்னும் சிலமாதங்களில் நிறுத்தப்பட்டு விடும் மீண்டும் நாங்கள் வீட்டுக்குச் சென்று விடலாம் என்ற எண்ணம் அப்போதைய காலகட்டிடத்தில் எங்கள் மனங்களில் இருந்தது..

ஆனால் மீண்டும் கிடைத்தது ஏமாற்றமே.

யுத்தம் நிறுத்தப்படாது என்றும் போர் தொடரும் என்றும் அப்போதைய ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்ததுடன் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டு விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து சென்ற கருணா அம்மானின் ஆலோசனையுடன் தமிழர் தாயகத்தை சுற்றிவளைத்து ஒரே நேரத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேலான முப்படைகளுடன் தரை மார்க்கமாகவும், வான்வழியாகவும், கடல் மார்க்கமாகவும் அடுத்த கட்டத்தை நோக்கிய தீவிர யுத்தத்தை தொடர்ந்தது இராணுவம்.

அந்த சமயத்தில் மன்னார் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது.

மடுவை ஒருவருடமாக தக்கவைத்த விடுதலைப்புலிகள் முழங்காவில் வரை இராணுவத்தை இவ்வளவு வேகமாக கைப்பற்ற விடுதலைப்புலிகள் விடுவார்கள் என்று மக்களும் நினைக்கவில்லை, ஸ்ரீலங்கா இராணுவமும் நினைத்திருக்காது.

இருந்தாலும் மடு, பெரியமடுப் பகுதிகளை கடந்தால் முழங்காவில் பகுதிவரை காடுகள் அற்ற பகுதிகள் என்ற காரணத்தால் யுத்தம் நடத்த முடியாத சூழல் இருந்ததையும் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இருந்தும் மீண்டும் இராணுவத்தின் எறிகணைகள் எம்மை அண்மித்து விழத்தொடங்கியதால் நாங்கள் அக்கராயனில் இருந்து வட்டக்கச்சி மாயவனுர் பகுதிக்குச் சென்று குடியேறினோம், இந்நிலையில் அடுத்து முழங்காவில் பகுதியில் இருந்து விடுதலைப்புலிகளின் கோட்டையாக இருக்கும் கிளிநொச்சியை இராணுவத்தரப்பு நெருங்க முடியாது என நினைத்த எமக்கு கிடைத்தது பெரும் அதிர்ச்சி..

இனப்படுகொலை தொடரும்..

http://www.ibctamil.com/articles/80/100507?ref=imp-news

  • தொடங்கியவர்

கிளிநொச்சியை கைப்பற்ற விடுதலைப்புலிகள் விடமாட்டார்கள் என நம்பியிருந்தனர்; முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; அனுபவப் பகிர்வு (பாகம்-6)

 

 
Image

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 15-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..

முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியதுடன், இரட்டை வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தரப்புக்கும் கடும் சமர், தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது இராணுவம்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர் , பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே துடிதுடித்துக் கொண்டு கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மக்களுக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில், இந்த சிகிச்சையும் சூழ் நிலை கருதி நிறுத்தப்பட்டது. உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் மண்ணுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர் தமிழ் மக்கள்..

எங்கும் மரண ஓலம், தங்களை நியாயவாதிகளாக காட்டிக்கொள்ளும் உலக வல்லரசுகள் வெட்கம் கெட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமால் இராணுவத்தின் அடக்கு முறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

மக்களின் அவலங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலி இன்றுடன் நிறுத்தப்படுகின்றது.

எஞ்சிய மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கூட இல்லை.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி..

முழங்காவில் பகுதியை கைப்பற்றிய நிலையில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகின்றது ஸ்ரீலங்கா அரசபடை, நாங்கள் வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில் கொட்டகை அமைத்து வசித்துக் கொண்டிருக்கிறோம், மடுவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் எங்களுக்கு இது ஆறாவது இடம்.

இந்நிலையில் முழங்காவில் பகுதியிலிருந்து முன்னேறி வந்த இராணுவம் கடுமையான யுத்தத்தின் பின்னர் முருகண்டிப் பகுதிக்குள் ஊடுருவியது , அப்போது விடுதலைப்புலிகளால் கிளிநொச்சியில் உள்ள நீர்த்தாங்கி வெடி வைத்து தகர்த்தப்பட்டது, இந்த சம்பவத்தின் சில நாட்களின் பின்தான் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் முறிகண்டி ஊடாக கிளிநொச்சிக்குள் ஊடுருவினர்.

நாங்கள் அடுத்த இடத்தை நோக்கி அவசரவசரமாக கையில் கிடைத்த உடமைகளுடன் தருமபுரத்திற்கு செல்கின்றோம் அங்கு எந்த வசதியும் இல்லாமல் வீதியில் உணவு சமைத்து, அங்கேயே உறங்கியபடி எங்களின் அவலநிலை தொடர்கின்றது, அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான நகரமான கிளிநொச்சியை முழுமையாக கைப்பற்றியது ஸ்ரீலங்கா அரசபடை கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் கைப்பற்ற விடமாட்டார்கள் என அனைவரும் நம்பியிருந்தனர், இதே நேரத்தில் மகிந்த தரப்பு இந்த வெற்றியை கொண்டாடியதுடன், இன்னும் தீவிரமாக யுத்தத்தை மேற்கொண்டது, இந்தியா உட்பட்ட பல உலகநாடுகளை அந்த சமயத்தில் கூட விடுதலைப்புலிகள் நம்பிக்கொண்டிருந்தனர்.

மறுபுறம் மக்கள் வீடுகளின்றி, உணவின்றி வீதிகளிலே வாழ்ந்து வருகின்றனர், அவ்வப்போது எறிகணைகளில் சிக்கி நாளாந்தம் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர், மருத்துவ வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போர் இன்னும் உக்கிரமடைகிறது இராணுவம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் தருமபுரத்திலும் வசிக்க முடியாத நிலை எறிகணைகள் இந்தப் பகுதிகளிலும் விழுந்து கொண்டிருக்கின்றன அடுத்த இடமான சுதந்திரபுரத்தை நோக்கி கையில் கிடைத்த பொருட்களைக் கொன்டு மிருகங்களைப் போல் தெருத்தெருவாக திரிந்துகொண்டிருக்கிறோம், நாங்கள் மாபெரும் அழிவை சந்திக்க போகின்றோம் என எங்களுக்கு அப்போது தெரியாது,

இந்த சமயத்தில் சுதந்திரபுரத்தையும் இராணுவம் அண்மித்தது, எறிகணைத் தாக்குதல்கள், கடுமையான மழையின் மத்தியிலும் உணவின்றி, தூக்கமின்றி நாங்கள் தேவி புரத்துக்குச் சென்றோம், அதன் பின் இரணைப்பாலை பகுதிக்குச் சென்று விட்டோம், இந்த தருணத்தில் இருட்டுமடு, சுதந்திரபுரப் பகுதியை இராணுவம் தீடிரென கைப்பற்றியது, அப்போது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும் பல மக்கள் உயிரிழந்ததுடன், உயிருடன் இருந்த மக்களையும் இராணுவம் தன்வசப்படுத்தியது..

இனப்படுகொலை தொடரும்..

http://www.ibctamil.com/articles/80/100565

 

  • தொடங்கியவர்

கதறல் சத்தம் எழுந்து பார்த்தல் ஆறுபேர் பலி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-7)

 

 
Image

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 16-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..

முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியதுடன், இரட்டை வாய்க்காலில் பெரும் பகுதியையும் கைப்பற்றியது ஸ்ரீலங்கா அரச படை விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தரப்புக்கும் கடும் சமர், தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது இராணுவம்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி இறந்துகொண்டிருக்கின்றனர் , பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே துடிதுடித்துக் கொண்டு கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் மண்ணுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர் தமிழ் மக்கள்..

தங்களை நியாயவாதிகளாக காட்டிக்கொள்ளும் உலக வல்லரசுகள் ஜ.நா முற்றத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமால் இராணுவத்தின் அடக்கு முறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களைப்போல் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். எங்கும் வெடிச்சத்தம், புகை மண்டலம், சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.

மக்களின் அவலங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலி முற்றாக முடங்கியது.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி..

இருட்டுமடு, சுதந்திரபுரத்தை ஸ்ரீலங்கா இராணுவம் இலகுவாக கைப்பற்றிய நிலையில் தேவிபுரத்தை நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது, நாங்கள் அங்கும் வசிக்க முடியாத நிலை பலர் கண்முன்னே எறிகணை விழுந்து இறந்தும், துடிதுடித்த நிலையிலும் கிடக்கிறார்கள், எங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை, தாக்குதல்கள் அதிகரித்துள்ளது, நின்றால் நாங்களும் இறக்க வேண்டிய நிலை சோகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மாத்தளன் பகுதிக்குச் சென்றோம்.

அங்கு கடற்கரைப் பகுதியில் சிறிய கொட்டகை அமைத்து இருக்கின்றோம், அங்கு எந்தவொரு அடிப்படை சுகாதார வசதியும் இல்லை, குடிநீர் வசதியில்லை, கடலில்தான் குளியல், உணவின்றி தவித்தோம் அப்போது மதிய நேரத்தில் மட்டும் விடுதலைப்புலிகளால் கஞ்சி வழங்கப்படும் அதுதான் அன்றைய உணவு.

இப்படியாக சில நாட்கள் கடந்துகொண்டிருக்கின்ற நிலையில் கடுமையான யுத்தத்தின் பின் தேவிபுரத்தை கைப்பற்றி நந்திக்கடலில் அரணை அமைத்தது ஸ்ரீலங்கா அரச படை, நாங்கள் இனி எங்கேயும் செல்லமுயாது, குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டோம், எங்கு சென்றாலும் எறிகணைகள் விழும் நடப்பது நடக்கட்டுமென மாத்தளன் பகுதிக்குள்ளே மணல் தரையிலும் கஸ்ரப்பட்டு பதுங்கு குழிகளை அமைத்து இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றோம்.

இராணுவம் நந்திக்கடலை கடந்து முன்னேற முடியாத சூழ்நிலையால், சரமாரியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது, விடுதலைப்புலிகளும் பதில் தாக்குதல்கள் நடத்துகின்றார்கள், அப்போது இராணுவத்தின் எறிகணைகள் எமது பகுதிக்குள் விழுகின்றது பலர் எங்கள் கண்முன்னே இறந்தார்கள், இதில் எனக்கு மறக்க முடியாத துயரம் என்றால், ஒருநாள் நாங்கள் பதுங்கு குழிக்குள் குரண்டிய படி உறங்கிக் கொண்டிருந்தோம், அதிகாலை ஜந்து மணியளவில் எறிகணை ஒன்று எமக்கு பக்கத்தில் (இருபது மீற்றர் தூரம்) விழுந்தது, உடனே கதறல் சத்தம் எழுந்து பார்த்தல் குழந்தைகள் உட்பட ஆறுபேர் கொண்ட ஒரு குடும்பம் பதுங்குகுழிக்குள் இருந்த நிலையில், பதுங்குகுழிக்குள்ளே எறிகணை விழுந்ததில் உடல் சிதறி அனைவரும் பலியாகியிருந்தனர், இப்படியான பல சம்பவங்கள் அப்பகுதியில் நடந்தன பலர் முள்ளிவாய்க்காலுக்கு முன் மாத்தளன் பகுதியிலேயே இறந்தனர்.

நடக்கும் துயரங்களை பார்த்துகொண்டு, நாங்கள் எப்போது இறக்கப்போகிறோம் என்ற கேள்விகளுடன் சில நாட்கள் கடந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் அதிகாலை மாத்தளன் பகுதிக்குள் ஊடுருவியது இராணுவம், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உட்பட்ட சில பெறுமதியான உடமைகளையும் விட்டுட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி ஓடுகின்றோம், நாங்கள் முள்ளிவாய்க்கால் சென்ற சில மணித்தியாலயங்களிலே மாத்தளன் பகுதியை கைப்பற்றியது இராணுவம்..

இனப்படுகொலை தொடரும்..

http://www.ibctamil.com/articles/80/100611?ref=imp-news

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை; ஒளிந்து கொண்ட தமிழ் தலைமைகள்: முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு: பாகம்- 8 (இறுதி பதிவு).

 

 
 
Image

இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.

இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் இறுதிக்கட்ட போரான 2009-ஆம் ஆண்டு 05-ம் மாதம் 17-ம் திகதியும், அதற்குப் பிற்பட்ட திகதிகளிலும் நடந்தது இதுதான்..

17-ம் திகதி கடும் சமர் நடைபெற்றது, ஏராளமான மக்களும் கொன்று குவிக்கப்பட்டனர், உலகமே முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், புலம்பெயர் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கதறுகின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப்போய்ப் இருந்தனர், மாறாக தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் நம்பியிருந்த தமிழ்மக்களின் அழிவிற்கு துணை போனார்கள், ஈழ மக்கள் ஓட்டுப்போட்டு அனுப்பிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஓடி ஒளிந்ததாக கூறப்பட்டது, இலங்கையில் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருந்த மக்கள் வெளியில் வரமுடியாத நிலையில் தவித்தார்கள்.

இப்படியான சூழ் நிலையில் பல மக்களையும் கொன்று குவித்து 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியை கைப்பற்றியதாகவும், விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டதாகவும் உலகிற்கே அறிவித்தார்கள் ஸ்ரீலங்கா அரச படை, ஸ்ரீலங்கா அரச தலைவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு படையெடுத்தார்கள்,தென்னிலங்கையில் இருந்த சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவரும் வெடிவெடித்தும், இனிப்புக்கள் பரிமாறியும், பால்ச்சோறு கொடுத்தும் கொண்டாடினார்கள்.

உலக தமிழ்மக்கள் அனைவரும் கத்தினார்கள், கதறினார்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்ததோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் எங்கே என்ற கேள்வி எழுந்த நிலையில் ஸ்ரீலங்கா அரச படை அறிவித்தது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அவரின் உடலைக் கைப்பற்றி விட்டதாகவும், கருணா அம்மான் தலைவர் பிரபாகரனின் உடல்தான் என உறுதிப்படுத்தியதாகவும் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்கள்.

உலகமே அதிர்ந்தது, தமிழர்கள் இந்த தகவலை ஏற்க மறுத்தார்கள், இந்த தருணத்தில் தமிழகத்தில் இருந்து வெளியான நக்கீரன் இதழ் தலைவர் பிரபாகரன் இறந்ததை தலைவர் பிரபாகரனே தொலைக்காட்சி வழியாக பார்ப்பது போல் உள்ள புகைப்படத்தை இதழின் அட்டைப்படமாக பிரசுரித்து தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என செய்தி வெளியிட்டது, இதனால் தமிழகத்திலும், உலக முழுவதிலும் நடக்கவிருந்த பாரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது அல்லது அன்றையதினம் உலகமே ஸ்தம்பிக்கும் சூழ் நிலையிருந்தது, இன்றுவரை தலைவர் பிரபாகரனின் நிலை தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்றது.

தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் கடந்த நிலையில். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் எனவும், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், பாலச்சந்திரன் உடலின் ஒளிப்படமும் வெளியானது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

அத்துடன் உலக நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா அரச படையிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீவரத்னம் புலத்தேவன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பின்னாளில் தகவல்கள் வெளியானது, அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவும் மற்றும் பல போராளிகளும் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீவரத்னம் புலத்தேவன் ஆகியோர் வட்டுவாகல் பாலத்தில் வைத்து மே மாதம் 18 ஆம் திகதி 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைலாகு கொடுத்ததை கண்ணால் கண்ட சாட்சிகளும் இருப்பதாகவும், அவர்கள் இந்த சாட்சிகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் நேரடியாக தெரிவித்திருப்பதாகவும், இவ்வாறு சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் 58 ஆவது படையணியினரால் பின்னர் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஸ்ரீலங்கா அரசபடைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் உறுப்பினர்களின் நிலை, கடந்த யுத்த காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிற்குலிருந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள், உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் நிலை தொடர்பில் இதுவரைக்கும் எந்த நீதியும், எந்த தீர்வும் இன்றி தமிழ் தலைமைகளில் நம்பிக்கையிழந்த நிலையில் தமிழ் மக்கள் இன்றுவரை வீதியில் நிற்கின்றமை அனைத்துலகமும் அறிந்ததே.

இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..

நேற்றைய தொடர்ச்சி.,

மாத்தளனை கைப்பற்றியதுடன் அடுத்து 3 கிலோ மீற்றர் சுற்றளவு பகுதிக்குள்த்தான் வட்டுவாள், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் இருக்கின்றது, இந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குள்தான் நாங்களும் இருக்கின்றோம். ஒருமாத காலமாக நாங்கள் இங்கு உணவின்றி, தூக்கமின்றி, குடிநீர் இன்றி எறிகணைக்கு மத்தியிலும், துப்பாக்கி ரவைகளுக்கு மத்தியிலும் பலதுன்பங்களின் மத்தியில் காலத்தை கடந்து வருகின்றன நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 16-ம் திகதி இரவு இரட்டை வாய்க்கால் பகுதியை இராணுவம் கைப்பற்றிய நிலையில், 17-ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியையும் இராணுவம் நெருங்கியது.

நாங்களும் இனி எங்கேயும் போகமுடியாத நிலையில் வெள்ளைக்கொடியுடன், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் கொத்துக்கொத்தாக இறந்து கிடக்கும் எம் உறவுகளைக் கடந்து மனக்கனத்துடன் இராணுவத்திற்குள் சென்றோம், எங்களை கண்ட இராணுவம் அழைத்து நாங்கள் வைத்திருந்த கை பைகளை திறக்கும் படி சொன்னார்கள், நாங்களும் துறந்து காட்டினோம் பின்னர் கவசவாகனத்தில் எங்களை ஏற்றிச் சென்று இரட்டை வாய்க்கால் பகுதியில் இறக்கினார்கள் பின்னர் எங்களை பெண்கள் ஒருபக்கம், ஆண்கள் ஒருபக்கம் என வரிசைப்படுத்தி அவர்கள் மண் மூடைகளின் பின் நின்றுகொண்டு ஆண்களை ஆண் இராணுவமும், பெண்களை பெண் இராணுவமும் உடல் ரீதியாக சோதனையிட்டார்கள்.

தொடர்ந்து நூடில்ஸ், பிஸ்கட் போன்ற உணவுகளை தந்துவிட்டு இரவு முழுவதும் அங்கேயே இருக்க வைத்தனர், பின்னர் இரவு 10 மணியளவில் பேருந்தில் ஏறிச்சென்று ஓமந்தை சோதனைச்சாவடி பகுதியில் இரவு முழுவதும் வீதியில் தங்க வைத்து, காலையில் இராணுவத்தின் ஆளுகைக்குள்ளே காலைக் கடனை முடித்த நிலையில் மீண்டும் காலை 1.00 மணியளவில் செட்டிகுளப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சுற்றிவரை முள்வேலி அமைத்திருந்த இராமநாதன் முகாமுக்கு ஏறிச்சென்று தங்கவைத்தார்கள், அங்கும் அடிக்கடி எமது தனிப்பட்ட தகவலை விசாரணை செய்து சேகரிப்பார்கள், இதற்கு மத்தியில் மிருகங்கள் போல் பல மாதங்கள் முள் கம்பிகளுக்குள் வாழ்ந்தோம்.

அதற்குப்பிறகு எமது சொந்த ஊரான பெரியபண்டிவிரிச்சான் மீள் குடியேற்றப்பட்ட நிலையில், கடந்த கால துயர சம்பவங்களின் பாதிப்பில் இன்னும் பல துன்பங்களின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என அவர் தனது அனுபவத்தை எம்முடன் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் N.Jeyakanthan அவர்களால் வழங்கப்பட்டு 17 May 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை N.Jeyakanthan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

http://www.ibctamil.com/articles/80/100656

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.