Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா?

Featured Replies

வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா?

 

இந்­தியா, சீனா என்னும் இரண்டு பழம்­பெ­ருமை வாய்ந்த இரு நாக­ரி­கங்­களும் இன்று உலகில் அதி­வே­க­மாக பொரு­ளா­தார விருத்­தியில் முன்­னேறும் நாடு­க­ளாகும். உலக சனத்­தொ­கையில் நாற்­பது வீதத்­துக்கு மேற்­பட்டோர் இவ்­விரு தேசங்­க­ளிலும் வாழ்­கின்­றனர். இந்து பள்­ளத்­தாக்கு நாக­ரி­கத்­துக்கு பெயர் போன இந்­தியா பல மொழி­க­ளுக்கு, மதங்­க­ளுக்கு, பல வேறு­பட்ட கலா­சா­ரங்­க­ளுக்கு தாய­க­மாக விளங்­கு­கின்­றது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக உலகின் பெரும் ஜன­நா­யக நாடு என வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. சனத்­தொகை 120 கோடியைத் தாண்­டி­விட்­டது. தரை­யாலும் கட­லாலும் சூழப்­பட்ட நாடாகும். இந்­தி­யாவின் தெற்கு இந்து சமுத்­தி­ரத்தால் சூழப்­பட்டும், தென்­மேற்கு எல்­லை­யாக அரா­பிய கடலும், தென்­கி­ழக்கு எல்­லை­யாக வங்­கா­ள­வி­ரி­கு­டாவும், மேற்கில் தரை எல்­லை­யாக பாகிஸ்­தானும், வட­கி­ழக்கு எல்­லை­க­ளாக சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடு­களும், கிழக்கு எல்­லை­யாக மியான்மார் (முன்­னைய பர்மா), வங்­கா­ள­தேசம் ஆகிய நாடு­களும் அமைந்­துள்­ளன. சீனா அர­சி­ய­ல­மைப்பு முறை­மையில் பாரா­ளு­மன்ற ஆட்­சி­மு­றையும், சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பு முறையும் கொண்ட நாடாகும். 29 மாநி­லங்­களும் 07 யூனியன் பிர­தே­சங்­களும் அமைந்­துள்­ளன.

முதலில் கிழக்­கிந்­திய வர்த்­தக கம்­ப­னி­யாலும் பின்னர் பிரித்­தா­னி­யா­வி­னதும் ஆதிக்­கத்­துக்­குட்­பட்ட கால­னித்­துவ நாடா­கவும் விளங்­கிய பின்னர் உலகம் பூரா­கவும் பிர­ப­லமும் மதிப்பும் பெற்ற மகாத்­மா­காந்­தி­ஜியின் அகிம்சைப் போராட்டம் மூலம் 15 ஆவணி 1947ம் திக­தியில் டொமி­னியன் அந்­தஸ்து பெற்று பின்னர் 26 தை 1950 இல் குடி­ய­ரசு நாடாக பூரண சுதந்­திர நாடாக மிளிர்ந்­தது. இதே­போன்று எமது தாய­க­மான இலங்கை 04 மாசி 1948 இல் டொமி­னியன் அந்­தஸ்து நாடா­கவும், 22 வைகாசி 1972 இல் குடி­ய­ரசு நாடா­கவும் மிளிர்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

சீனா 140 கோடி சனத்­தொ­கையைத் தாண்­டி­விட்­டது. 1949 இல் தலைவர் மாஓ­சே­துங்கின் வழி­காட்­டலில் ஆயு­தப்­பு­ரட்சி மூலம் சீன கம்­யூனிஸ்ட் கட்சி ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது. இன்று உலகின் பல நாடு­களில் மாவோ­யிசம் எனும் அர­சியல் கொள்கை பர­வி­வ­ரு­கி­றது என்­பது யதார்த்­த­மா­னது. சீனா உல­கி­லேயே அதி­கூ­டிய நாடு­களை எல்­லை­க­ளாக கொண்­ட­தாகும். அதன் எல்லை நாடு­க­ளாக வட­கொ­ரியா, ரஷ்யா, மங்­கோ­லியா, கச­கஸ்தான், கிரி­கஸ்தான், தாஜி­கிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா, நேபாளம், பூட்டான், மியன்மார், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் அமைந்­துள்­ளன.

உலகில் பெரிய நிலப்­ப­ரப்பை கொண்ட நாடு­க­ளா­கவும், உலக சனத் ­தொ­கையில் 40% ஐக் கொண்ட நாடு­க­ளா­கவும், அணு­ஆ­யு­தங்­களைக் கொண்ட நாடு­க­ளா­கவும், பெரிய இரா­ணு­வங்­களை கொண்ட நாடு­க­ளா­கவும் விளங்கும் இந்­தியா, சீனா ஆகிய இரு நாடு­களும் உலக அர­சியல் மேடையில் மிக முக்­கிய நாடு­க­ளா­கவும் மதிக்­கப்­ப­டு­கின்­றன. இரு­நா­டு­களும் ஏறக்­கு­றைய ஒரே காலத்தில் விடு­தலை பெற்ற நாடு­க­ளாகும். ஐம்­ப­து­களில் மிக நெருங்­கிய அர­சியல் பொரு­ளா­தார உற­வு­களைக் கொண்­டி­ருந்த நாடுகள் 1962 இல் மிகப் பெரிய யுத்தம் ஒன்றில் ஈடு­பட்­டன.

அதன் பின்னர் இந்­திய சீன உற­வுகள் தாழ்­நி­லையை அடைந்­தன. படிப்­ப­டி­யாக உற­வுகள் மேம்­பட்­டாலும் இன்­னமும் உறவு நிலை­களில் சிறப்­பான நிலைமை தோன்­றி­யுள்­ளது என கூற­மு­டி­யாது. 1962க்கு பின்னர் இடை­யி­டையே முறுகல் நிலை தோன்­றி­னாலும் 2017 ஜூன் மாதத்தில் இம­ய­மலை உச்­சியில் டொல்காம் பகு­தியில் முறுகல் நிலை ஆரம்­ப­மாகி மீண்டும் 1962ம் ஆண்டைப் போல போர் மூளுமோ என்ற அச்சம் உரு­வா­கி­யது. சீனா, பூட்டான், இந்­தியா சந்­திக்கும் முச்­சந்­தியே டொல்காம் எனப்­படும் சிறிய பகு­தி­யாகும். பின்னர் இரு­நா­டு­களும் அப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து படை­களை வாபஸ் பெற்­ற­தனால் போர­பாயம் தணிந்­தது. ஆனால் அந்த முறுகல் நில­விய 72 நாட்­களும் 1962 போரை நினை­வு­ப­டுத்­தின. இந்­திய, சீன உற­வுகள் மீண்டும் உன்­னத நிலைக்கு திரும்ப பிர­கா­ச­மான வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­ற­தென இரா­ஜ­தந்­தி­ரிகள் கருத்து தெரி­விக்­கின்­றார்கள். இரு நாடு­களும் உற­வுகள் மேம்­பட முள்­ளாக குத்தும் விவ­கா­ரங்­களை ஆராய வேண்டும். இரு தரப்பு உற­வு­களை ஆராயும் போது உற­வுகள் தேக்க நிலையை அடை­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தது 1962ஆம் ஆண்டு இடம்­பெற்ற சீன - இந்­திய யுத்தம் என்­பது சக­ல­ருக்கும் தெரிந்த விட­ய­மாகும். டொக்லாம் விவ­காரம், பாகிஸ்தான் ஐஸ் ஈ மொகமட் பயங்­க­ர­வாத இயக்கத் தலைவன் மசூர் அசார் ஐ.நா சபையில் பயங்­க­ர­வா­தி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதை சீனா தொடர்ந்து எதிர்த்தல், இந்­தியா NSG எனப்­படும் Nuclear Supplier Group அணு­சக்தி விநி­யோ­கஸ்­தர்கள் அணி எனப்­படும் அமைப்பில் இந்­தியா இணை­வதை சீனா ஆத­ர­வ­ளிக்­காமை, சீனாவின் மிகப்­பெரும் அர­சியல் பொரு­ளா­தார திட்­ட­மான ஒரு பட்டை ஒரு பாதை திட்டம் 50 மில்­லியன் டொலரில் சீன - பாகிஸ்தான் பொரு­ளா­தார வாசல் சர்ச்­சைக்­குள்­ளான பாகிஸ்­தானின் கட்­டுப்­பாட்­டுக்குள் அமைந்­தி­ருக்கும் காஷ்மீர் பகு­தி­யூ­டாக ஊட­றுத்துச் செல்­லுதல், 3500 கிலோ­மீற்றர் நீள­மான இரு நாட்­டையும் பிரிக்கும் எல்லை, அரு­ணாச்­சலப் பிர­தே­சத்தில் சில பிர­தே­சங்­களை சீனா உரிமை பாராட்­டு­வதும், திபெத்தின் ஆன்­மீகத் தலைவர் தலாய் லாமா இந்­தி­யாவின் அரு­ணா­சலப் பிர­தே­சத்தில் வர­வேற்­கப்­ப­டுதல் போன்ற கார­ணிகள் இரு­நா­டு­களின் உற­வு­களில் நெரு­ட­லான விட­யங்கள் ஆகும். அத்­துடன் இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான், அவுஸ்­ரே­லியா ஆகிய நாடுகள் இணைந்து திறந்த சுதந்­தி­ர­மான இந்து - பசுபிக் சமுத்­திரத் திட்­டத்தில் இணைந்து செய­லாற்­று­கின்­றன. மிகவும் வேக­மாக அதி­க­ரித்­து­வரும் குறிப்­பாக தென்­னா­சி­யாவில் சீன செல்­வாக்கை தடுத்து நிறுத்­தவே இந்த நான்கு நாடு­களும் இணைந்து செயற்­ப­டு­வ­தாக சீனா­விற்கு அதி­ருப்தி நில­வு­கி­றது. இவையே இந்­திய சீன இரு­த­ரப்பு உற­வு­களில் ஊறு­வி­ளை­விக்கும் கார­ணி­க­ளாக அமைந்­துள்­ளன.

இப்­பின்­ன­ணியில் வூகான் உச்­சி­மா­நாட்­டிற்கு முன்னர் 2017 இல் நடை­பெற்ற ஜி-20 மாநாட்டில் மோடியும் ஜி.ஜி.பின்கும் சந்­தித்துப் பேசி­னார்கள். சென்ற ஆண்டு (2017) புரட்­டாதி முற்­ப­கு­தியில் சீனாவின் ஜியாமென் நகரில் இடம்­பெற்ற பிறிக்ஸ் அமைப்பு மகா­நாட்டில் பங்­கு­பற்­று­வ­தற்­காக பிர­தமர் மோடி விஜயம் செய்­த­போது சீனத்­த­லைவர் ஜீ ஜின் பிங்­குடன் இரு­த­ரப்பு உற­வு­களை மேம்­ப­டுத்தல் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தினர். சித்­திரை (2018) 27, 28 களில் பிர­தமர் மோடி சீனா­வுக்கு விஜயம் செய்தார். மத்­திய சீனாவின் பிர­ப­ல­மான வுகான் நகரில் இரு தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. வூகான் நக­ரத்­திற்கு இன்­னொரு சிறப்­பி­யல்பு உண்டு. மக்கள் சீனத்தின் சிற்பி மறைந்த தலைவர் மாவோவின் கோடை கால வாசஸ்­த­ல­மாக வூகான் விளங்­கி­யது. அமெ­ரிக்க சீன உற­வுகள் ஆரம்­பிப்­ப­தற்கு முன்­னோ­டி­யாக முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி நிக்சன், வெளிநாட்­ட­மைச்சர் கீசிங்கர் ஆகி­யோரை மாவோ இக்­கோ­டை­கால வாசஸ்­த­லத்­தி­லேயே சந்­தித்தார். இரு­த­ரப்பு ராஜ­தந்­தி­ரி­களும் முன்னர் நடாத்­திய திரை­ம­றைவு பேச்சு வார்த்­தை­களே மோடியின் விஜயம் இடம்­பெ­று­வ­தற்கு வழி­ச­மைத்­தன. பிர­தமர் மோடி - தலைவர் ஜீ ஜின் பிங்கின் உச்­சி­ம­கா­நாடு உத்­தி­யோகப் பற்­றற்­ற­தா­யினும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தைகள் பரஸ்­பர நம்­பிக்­கையைக் கட்டி எழுப்­பு­வ­தாக அமைந்­தன. இரு­த­ரப்பு உற­வு­களில் சிக்­க­லான விட­யங்­களை தொடாமல் சர்­வ­தேச விவ­கா­ரங்கள், பூகோள செல்­ம­திகை, இந்­திய சீன வர்த்­தக விரி­வாக்கம் பற்­றிய பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. வுகான் மகா­நாடு சீன - இந்­திய இரு­த­ரப்பு உற­வு­களில் ஒரு மைல் கல்­லாக அமை­யா­விட்­டாலும் எதிர்­கா­லத்தில் ஆரோக்­கி­ய­மான மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு சாத­க­மாக அமையும் என சர்­வ­தேச அர­ச­றி­ஞர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இரு­த­லை­வர்­க­ளி­னதும் பேச்­சு­வார்த்தை எந்த வித­மான முன்­னரே தயா­ரிக்­கப்­பட்ட நிகழ்ச்­சி­நி­ரலின் அடிப்­ப­டையில் நடை­பெ­ற­வில்லை. அது­மட்­டு­மல்ல மாநாட்டின் முடிவில் இரு­த­ரப்பும் இணைந்து இறு­திக்­கூட்டு அறிக்கை வெளியி­டப்­ப­ட­வில்லை. இருப்­பினும் இரு­த­லை­வர்­களும் உத­வி­யா­ளர்­க­ளின்றி நேர­டி­யாக பல விட­யங்­களை அலசி ஆராய்ந்­தனர். டோக்லாம் நிகழ்வு போன்று எதிர்­கா­லத்தில் பிரச்­சி­னைகள் எழா­ம­லி­ருப்­ப­தற்­காக இரு­த­லை­வர்­கட்­கு­மி­டையில் நேர­டி­யான தொடர்­புகள் மேற்­கொள்­வ­தென்றும் இரா­ணுவ தலை­வர்­களோ வேறு உயர்­மட்டத் தலை­வர்­களோ பிரச்­சி­னை­களை கையாள்­வ­தில்­லை­யெ­னவும் ஏற்றுக் கொண்­டனர். அத்­துடன் ஆப்­கா­னிஸ்­தானில் இரு நாடு­களும் இணைந்து உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தென்றும் தீர்­மா­னித்­தன. இதனால் ஆப்­கா­னிஸ்தான் நெருக்­க­டியில் தளர்வு ஏற்­ப­டு­வ­துடன் பிராந்­திய அபி­வி­ருத்­திக்கும் வாய்ப்­புகள் உரு­வாகும். சீனாவின் பட்­டுப்­பாதை திட்டம் இந்­தி­யா­வு­ட­னான உற­வு­களில் பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தப் போவ­தில்லை. பட்­டுப்­பாதை திட்டம் பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­புக்கும் உத­வு­வ­திலும், இரு­நா­டு­க­ளிலும் வறுமை ஒழிப்­புக்கும் நிலைத்து நிற்கும் அபி­வி­ருத்­திக்கும் பெரும் பங்­காற்றும் என நம்­பலாம்.

அமெ­ரிக்­காவும் மேற்கு நாடு­களும் காப்புக் கொள்­கையை கடைப்­பி­டிப்­பதால் இந்­தி­யா­வுக்கு சீனா­வு­ட­னான திறந்த வர்த்­தகம் பெரும் பயனை பரஸ்­பரம் ஈட்­டித்­தரும். வெளிவி­வ­கார கொள்கை சொந்த நலன்­களை அடிப்­ப­டை­யாக கொண்­டவை எனும் உண்மைப் பொருளை உணர்ந்­ததால் உலகின் இரு­பெரும் அயல்­நா­டுகள் மட்­டு­மல்ல உலகின் 40வீத சனத்­தொ­கையை கொண்ட நாடுகள் தத்தம் நாட்டு மக்­களின் பொரு­ளா­தார, சமூக அபி­வி­ருத்­திக்கு ஏற்­பு­டை­ய­தான வெளிநாட்டு கொள்­கையை கடைப்­பி­டிக்க தூண்­டப்­ப­டு­கின்­றன. ஜப்பான் சீனா­வுடன் தென்­சீ­னக்­கடல் விவ­கா­ரத்தில் கருத்து வேற்­றுமை இருப்­பினும் சீனாவின் பட்­டுப்­பாதை திட்­டத்தில் இணைந்து கொள்ளும் என தெரி­கின்­றது. இந்­தியா ஜப்­பானைப் போன்று பட்­டுப்­பாதை திட்­டத்தை ஏற்கும் என்ற நிலை பிர­கா­ச­மாக தெரி­கின்­றது.

இரு­நாட்டு உற­வு­களில் விரி­ச­லுக்குக் காரண­­மான 3500 கிலோ­மீற்றர் நீள­மான எல்­லைப்­பி­ரச்­ச­ினையைத் தொடாமல் வேறு பல விட­யங்­களில் முன்­னேற்­றத்தைக் காணலாம் என்று இரு­நாட்டுத் தலை­வர்­களும் நம்­பிக்கை தெரி­வித்­தனர். பூகோ­ளத்தை அச்­சு­றுத்தும் பிரச்­சி­னை­க­ளான பயங்­க­ர­வாதம், பயங்­க­ர­வா­தத்தைக் கூட்­டாக எதிர்­கொள்ளல், புவி வெப்­ப­ம­டை­தலும், கால­நிலை மாற்­றமும், சர்­வ­தேச வர்த்­த­கத்தில் அபி­வி­ருத்தி அடைந்­து­வரும் நாடுகள் எதிர்­நோக்கும் சவால்கள், பூகோள மய­மாக்­கலை பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்தல் போன்ற பொது­வான பிரச்­ச­ினை­களில் இரு­நா­டு­களும் இணைந்து செயல்­ப­டு­வதில் எந்தச் சிக்­கல்­களும் எழப்­போ­வ­தில்லை. உதா­ர­ண­மாக உலக வர்த்­தக அமைப்பில் (World Trade Organization) மேற்கு நாடுகள் காப்புக் கொள்­கை­களை வலி­யு­றுத்தும் போது சீன, இந்­திய நாடுகள் ஏனைய அபி­வி­ருத்தி நாடு­க­ளுடன் இணைந்து காப்புக் கொள்­கை­களை எதிர்த்­தனர்.

1962 இற்குப் பின்னர் இரா­ஜ­தந்­திர உற­வுகள் முறி­வ­டைந்­தன. முன்னாள் வெளிநாட்­ட­மைச்சர் வாஜ்பாய் 1978 இல் வர­லாற்றுச் சிறப்பு மிக்க விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சீனா சென்றார். அவ­ரது விஜ­யத்தைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டில் சீனாவும் இந்­தி­யாவும் மீண்டும் இரா­ஜ­தந்­திர உற­வு­களை ஆரம்­பித்­தன. 1988 இல் முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்தி சீனா­விற்கு விஜயம் மேற்­கொண்டு சீனத்­த­லை­வர்­க­ளுடன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தினார். அதன்பின் முன்னாள் பிர­தமர் வாஜ்பாய் சீனா­விற்கு விஜயம் செய்தார். இதன் கார­ண­மாக தேக்க நிலை­யி­லி­ருந்த உற­வுகள் முன்­னே­றின. இரு­த­ரப்பு வர்த்­தகம் அதி­க­ரித்­தது. 1988 இல் இந்­திய சீன இரு­த­ரப்பு வர்த்­த­கத்தின் பெறு­மதி 106 மில்­லியன் டொல­ராக இருந்­தது. 2017 இல் 84 பில்­லியன் டொல­ராக அதி­க­ரித்­தது. இந்­தி­யாவில் சீனாவின் முத­லீடு பெரு­ம­ளவில் காணப்­ப­டு­கின்­றது. முன்­னரும் இரு இந்­தியப் பிர­த­மர்கள் சீனா சென்று சீனத் தலை­வர்­க­ளுடன் உச்சி மகா­நா­டுகள் நடத்­தியும் இந்­திய சீன உற­வுகள் உச்ச நிலைக்குச் செல்­ல­வில்லை என்றும் இப்­பின்­ன­ணியில் வூகான் உச்­சி­ம­கா­நாடு பெரும் உற­வு­நிலை மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என்றும் சில அறி­ஞர்கள் விவா­திக்­கின்­றனர்.

சீனா இந்­தியா பல பல்­த­ரப்பு அமைப்­புக்­களில் கூட்­டாக இயங்­கு­கின்­றது. பிரிக்ஸ் நல்ல உதா­ர­ண­மாகும். கால­நிலை, பூகோள வெப்­ப­ம­டைதல் தொடர்­பான செயற்­பா­டு­களில் BASIC என அழைக்­கப்­படும் பிரேசில், தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, சீனா ஆகிய நாடுகள் உள்­ள­டங்­கிய அமைப்பில் அங்கம் வகிக்­கின்­றன. அண்­மைய போக்­குகள் சீன - இந்­திய உற­வு­களில் நல்ல முன்­னேற்றம் ஏற்­படும் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றன. முன்னாள் இந்­திய பாது­காப்­புத்­துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன் தாம் எழுதிய நூலான இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுத்தலின் உள்ளடக்கம் “Inside the Foreign Policy Making of India” என்ற நூலில் சுவாரசியமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான அயல் நாட்டு எல்லைகளில் சீனாவுடனான 3500 கிலோமீற்றர் நீளமான எல்லை மிக வும் அமைதியானதும் சச்சரவுகள் அற்றதும் எனக் கூறியுள்ளார்.

ஐ.நா. சபைச் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதம் 1990 களிலிருந்து நடைபெற்று வருகின்றது. விசேடமாக உலக பிராந்திய அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளை உள்வாங்க வேண்டும் என்கின்ற அபிலா ஷைகளை சில நாடுகள் தெரிவித்துள்ளன. ஜி4 எனப்படும் நான்கு நாடுகளில் (இந்தியா, ஜேர்மனி, யப்பான், பிரேசில்) இந்தியா - சீனாவின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டு ஐ.நா. சபையில் நிரந்தர அங்கத் துவம் பெற முடியாது. ஏனெனில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சீனாவால் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை செய்ய முடியும். அதேநேரம் சீனா, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பாதுகாப் புச்சபையில் இடம்பெற வேண்டும் என் பதில் முனைப்பாக உள்ளது. இந்திய சீன உறவுகள் மேம்படுவதன் மூலம் இந்தியா பாதுகாப்புச் சபையில் இடம்பெற முடியும் என்பதுடன் உலகின் இருபெரும் ஆசிய நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்பட்டால் தென்னாசியாவிற்கு மட்டு மல்ல முழுப் பூகோளமே நன்மையடைய முடியுமென்பதில் இருகருத்துகளிற்கு இட மில்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-12#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.