Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்த யோசனையும் அரசியல் எதிர்காலமும்

Featured Replies

20 ஆவது திருத்த யோசனையும் அரசியல் எதிர்காலமும்

 

இதில் உறு­தி­யான வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தார்கள். இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ­மு­றைமையை இல்­லாதொழிக்க மக்­க­ளிடம் ஆணை­யைக்­கேட்டு அதை சாது­ரி­ய­மாக பெற்றும் கொண்டார்.அதை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான அர­சியல் நிர்­ணய சபை­யாக பாரா­ளு­மன்றை மாற்றி­ய­துடன் உப­கு­ழுக்கள் வழிப்­ப­டுத்­தல்­ குழு என குழுக்­களை அமைத்த விவ­கா­ரங்­களும் நடந்­தே­றி­யுள்­ளன.ஆனால் எல்­லாமே குறைப்­பி­ர­சவம் கொண்­ட­வை­யா­கவே ஆகி­யி­ருக்­கின்­றன.

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை­மையா­னது இலங்­கைத்­தீவில் பல நெருக்­கடி நிலைகளை உரு­வாக்­கி­ய­துடன் ஜன­நா­யக நிறு­வ­னங்­க­ளு­டைய அதி­கா­ரங்­களை பறித்­தெ­டுத்­துள்­ளது. பாராளுமன்றை அதி­கா­ர­மற்ற கட்­டி­டத்­தொ­கு­தி­யாக மாற்­றி­யுள்­ளது. அமைச்­ச­ரவை அதி­கா­ரங்­களை வறி­தாக்­கி­யதுடன் நீதி­மன்ற சுயா­தீ­னங்­க­ளையும் இல்­லாமல் ஆக்­கி­யுள்­ளது என்­பது பொது­வான குற்­றச்­சாட்­டுக்கள்.

  இலங்­கையின் ஆட்­சி­முறை பாரா­ள­ ுமன்றத்தி­லி­ருந்து எப்­பொ­ழுது ஜனா­தி­ப­தியின் கைகளில் குவிக்­கப்­பட்­டதோ அன்­றி­லி­ருந்து ஜன­நாயகம் குழி­தோண்டி புதைக்­கப்­பட்­டு­விட்­டது என்­பது ஜன­நா­யக காப்­பா­ளர்களின் குற்­றச்­சாட்­டுக்­க­ளாகும். அந்­த­வ­கையில் தான் ஜே.வி.பி. யால் தற்­பொ­ழுது சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் 20 ஆவது சட்ட திருத்­த­மா­னது சில பெறு­மதிமிக்க முன்­மொ­ழி­வு­களை கொண்­டுள்­ள­தாக ஜே.வி.பி. யினர் தெரி­விக்­கி­ன்­றனர்.

  பாரா­ளு­மன்றில் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் சாதா­ரண பெரும்பான்­மை­யுடன் ஜனா­தி­ப­தி­யொ­ருவர் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும். அர­சாங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி என்ற அர­சியல் சாசன வரி­க­ளுக்கு விடை கொடுக்­கப்­பட்டு அவர் அர­சியல் அமைப்பின் பிரகா­ரமே செயற்­ப­ட­மு­டி­யு­மென 20 ஆவது திருத்தம் வரை­ய­றுக்­கி­றது.

  மக்­களின் வாக்­கின்­ பி­ர­காரம் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற முறை நீக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றினால் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும் என்ற விடயம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­ப­வரின் பத­விக்­காலம் ஐந்­து­ வருடங்­க­ளாக இருக்­க­வேண்டும்.

  ஜனா­தி­பதி ப­தவி வறி­தா­கு­மி­டத்து புதி­யவர் விதிக்­கப்­பட்ட விதி முறை­க­ளுக்கு அமைய தெரிவு செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்றும் எஞ்­சிய காலத்­துக்கு மட்­டுமே பதவி வகிக்க முடியும். ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டு­மொ­ருவர் அவ­ரது பத­விக்­கா­லத்தில் எந்­த­வொரு கட்­சியின் பத­வி­யிலோ அல்­லது கட்­சியின் அங்­கத்­து­வத்­திலோ பதவி வகிக்க முடி­யாது

  இராஜ­தந்­தி­ரிகள், தூது­வர்கள், உத்­தி­யோ­க­பூர்வ பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட நிய­ம­னங்­களை மேற்­கொள்­ளும்­போது ஜனா­தி­ப­தியின் பரிந்­து­ரைக்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரம்­ அ­வ­சியம் மற்றும் ஜனா­தி­ப­தியின் செய­லா­ளர்கள், அதி­கா­ரி­களின் எண்­ணிக்­கைகள் அமைச்­ச­ர­வையால் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் எனக்­கூ­றப்­பட்­டுள்­ளது.

மிக பிரதான விதந்­து­ரைப்­பாக பாரா­ளு­மன்றில் 50 வீதத்­துக்கு அதி­க­மான ஆச­னங்­களைப் பெற்ற அர­சியல் கட­்சி­யைச் ­சேர்ந்த ஒருவர் பிரதமர் வேட்­பா­ள­ராக வேட்புமனுவில் குறிப்­பி­டப்­பட்டு வெற்­றி­யீட்­டிய உறுப்­பினர் ஒரு­வ­ரையே பிர­த­ம­ராக ஜனா­தி­பதி நிய­மிக்­க­மு­டியும்.

நீதி­மன்­றினால் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட ஒரு­வ­ருக்கு ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தாயின் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் பொது மன்­னிப்பு வழங்­க­மு­டியும். ஜனா­தி­ப­தியே சபாநாய­கரை நிய­மிப்­ப­வ­ராக இருப்பார். தற்­பொ­ழுது பத­வி­யி­லி­ருக்கும் நபர் 2020 ஆம் ஆண்­டு­வரை பதவி வகிக்க உரித்­து­டை­யவர் என்­ப­து­போ­லவே தற்போ­தைய பிர­தமர் நடை­மு­றையில் உள்ள சட்­டத்­துக்கு அமை­யவே பிர­த­ம­ராக பத­வி­வ­கிப்பார். 2020 ஆம் ஆண்டு ஜன­வரி 9 ஆம் திக­தி­யி­லி­ருந்தே இந்த சட்டம் நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் 20 ஆவது திருத்த தனி­நபர் பிரே­ர­ணையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இப்­பி­ரே­ர­ணை­யின்­ மூலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­ற­ வி­டயம் யாதென்­பதும் ஓர­ள­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டாலும் இச்­சட்­டத்தின் மூலம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ போன்­ற­வர்கள் பாராளுமன்­றுக்குள் ஒரு உயர்ந்த அதி­கா­ர­முள்ள பத­வியை பெறு­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்கு தடை­வி­திக்­கப்­ப­டு­கி­றது. எந்­த­வொரு ஜனா­தி­ப­தியும் இரு­த­ட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­பதி தேர்தலில் போட்­டி­யி­ட­மு­டி­யாது என்ற தடைகள் கொண்­ட­தா­கவே 20 ஆவது திருத்தம் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

   மேற்­படி திருத்தம் தொடர்­பாக பல கார­சா­ர­மான விமர்­ச­னங்­களும் எதிர்ப்­புக்­களும் அதே­வேளை ஆத­ர­வான கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த திருத்தம் தொடர்பில் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டென்ன? அவர்கள் என்ன கருத்தை கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென்­ப­தெல்லாம் அறி­யப்­ப­ட­வில்லை.

  பாரா­ளு­மன்ற ஜன­நாயகம் நில­விய காலத்தில் தமிழ் மக்கள் பார­ாளு­மன்­றத்தை தமது வலு­வுள்ள மேடை­யாக பாவித்து வந்­தார்­க­ளென்­பது சாதா­ரண விட­ய­மாகும். ஆனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­ முறைமை இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட காலத்­தி­லி­ருந்து அத்த­கைய ஜன­நா­யக பண்­பு­க­ளுக்கு உலை வைக்­கப்­பட்டு அனைத்தும் ஜனா­தி­ப­தியே என்ற நிலை­மைக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­கான விரோத நட­வ­டிக்­கைகள் பல வடி­வங்­களில் விஸ்­வ­ரூபம் எடுத்­த­தன் ­கா­ர­ண­மா­கவே ஆயு­தப்­போ­ராட்டம் , சிறைப்­பி­டிப்­புக்கள் , சித்­தி­ர­வதை முகாம்கள், தடுப்பு முகாம்கள் என தமிழ் இளை­ஞர்­க­ளையும் அப்­பாவி தமிழ் மக்­க­ளையும் பயம் கொள்­ள­வைத்­தது.

 ஜனா­தி­பதி அதி­கா­ரங்கள் மூலம் ஏதா­வது அர­சியல் உரி­மை­களை பெற்­று­வி­டலாம் என்ற நம்­பிக்­கைகள் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா காலத்தில் முழு­மை­யாக நம்­பப்­பட்­டது. அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் வெளிநாட்டு,உள்­நாட்டு பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.

  2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­ய­வேளை வட­,கி­ழக்­கி­லுள்ள தமிழ் மக்கள் முழு­மை­யாக நம்­பி­னார்கள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான தேசிய அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்­கான நீண்­டகால அர­சியல் பிரச்­சி­னைக்கு அர­சியல் ரீதி­யான தீர்வை நல்கும் என்று. அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்­கு­வதன் மூலம் அர­சியல் தீர்வு எட்­டப்­படும் . அதுவும் 2016 ஆம் ஆண்­டுக்கு முன்பே அது நடந்­தே­றி­வி­டு­மென தமிழ் மக்கள் முழு­மை­யாக நம­்பி­னார்கள். அந்த நம்­பிக்­கையின் நட்­சத்­தி­ர­மாக தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் அவ­ரு­டைய நிறை­வேற்று அதி­கா­ரமும் துணை­நிற்­கு­மென உறு­தி­யாக தமிழ் மக்கள் நம்­பி­னார்­க­ளென்­ப­தற்கு மறுப்பு அபிப்­பி­ராயம் இருக்­க­மு­டி­யாது. ஆனால் நடந்­த­தென்ன எல்­லாமே பூஜ்­ஜிய புள்­ளியை எட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது என்ற ஏமாற்றம் கொண்­ட­வர்­க­ளா­கவே தமிழ் மக்கள் இன்று காணப்­ப­டு­கி­றார்கள்.

  அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் தற்­பொ­ழுது இழு­பறி நிலை காணப்­ப­டு­வ­துடன் மறக்­கப்­பட்ட விட­ய­மா­கவே ஆகிக்­கொண்­டி­ருக்­கி­றது. இதுபற்றி அண்­மையில் கருத்து தெரி­வித்­தி­ருந்த அமைச்சர் மனோ­ க­ணேசன்,

 புதிய அர­சியல் அமைப்பு வரு­மென்ற போலி நம்­பிக்­கையை ஊட்ட தான் தயா­ரில்­லை­யென்­பதை வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருந்­தார்.

      இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யில்தான் 20 ஆவது திருத்தம் கொண்­டு­வர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. இதன் ­கா­ர­ண­மாக ஜனா­தி­ப­திக்­கு­ரிய அதி­கா­ரங்கள் இல்­லாதொழிக்­கப்­படும் என்ற நிலையில் பாரா­ளு­மன்றம் அதி­கா­ர­வலு கொண்­ட­தாக மாறி­விடும் என்­பது இந்த திருத்­தத்தின் மூலம் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வாறு மாறும் பட்­சத்தில் பாரா­ளு­மன்றம் அதி­கா­ரங்­களை குவித்­துக்­கொள்ளும் நிலையில் அதன் அங்­கீ­கா­ரத்­து­ட­னேயே அர­சியல் தீர்வையோ ;அதி­கா­ரப்­ப­கிர்வையோ மேற்­கொள்­ள­மு­டியும். மிக நீண்ட பார்­வை­கொண்ட பாரா­ளு­மன்ற முறைமையில் தமிழ் மக்கள் தோற்­ற­வர்­க­ளா­க­வே­யி­ருந்­துள்­ளனர்.

  தமிழ் மக்­களின் ஆத­ர­வின்­றியே ஸ்ரீமாவோ பண்­டாரநாயக்க குடி­ய­ரசு யாப்பை அமுல்­ப­டுத்­தினார்.தெளிவாக கூறு­வ­தானால் தமிழ் மக்­களை உதாசீனம் செய்தே அந்த அர­சியல் சாசனம் நிறை­வேற்­றப்­பட்­டது. அடுத்து 1978 ஆம் ஆண்டின் சாச­னத்­துக்கு சிறு­பான்மை சமூ­கத்தின் அபிப்­பி­ரா­யம் ­பெ­றப்­ப­ட­வே­யில்லை. இது ஒரு­பு­ற­மி­ருக்க பண்டா–செல்­வா ஒ ப்பந்தம்,டட்லி–செல்­வா ஒப்பந்தம் மற்றும் சந்­தி­ரிகா அம்­மை­யாரின் அர­சியல் பொதி என எல்­லாமே புஸ்­வா­ண­மா­ன­தைத் ­த­விர வேறொன்றும் நடந்­து­வி­ட­வில்லை.

  20 ஆவது சீர்­தி­ருத்தம் தமிழ் மக்­க­ளுக்­கான எந்­த­வொரு நன­்மை­யையும் தரப்­போ­வ­தில்லை . அது மட்­டு­மின்றி இந்த திருத்­த­மா­னது தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை தூரத்­தள்­ளிப்­போடும் ஒன்­றாக இருக்­கப்­போ­வது மாத்­தி­ர­மல்ல அர­சியல் சாச­ன­மொன்று வரு­வ­தைத்­ த­டுக்கும் அதி உச்­ச­மான தடுப்பு யுக்­தி­யா­கவே இருக்­க­மு­டியம் .

 மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யைப் ­பொ­றுத்­த­வரை தமிழ் மக்­க­ளுக்­கான நீண்ட காலப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென்று கூறு­கி­றார்­களே தவிர அந்த தீர்வுக்­கான முறை­யென்ன? அதி­காரம் எவ்­வாறு பகி­ரப்­ப­ட­வேண்­டு­மென்­பதை அவர்கள் வெளிப்­ப­டை­யாக கூறி­யது கிடை­யாது. இதன் நடு­வில்தான் 20 ஆவது திருத்­த­மா­னது நாட்டை துண்­டா­டப்­போ­கி­றது என்று பல்­வேறு தரப்­பி­னரால் பல­வி­த­மாக அர்த்­தப்­ப­டுத்­தப்­பட்டு நாட்டின் இறை­யாண்­மைக்கு எதி­ரான ஒரு செயற்­பா­டா­கவே கரு­த­ப்படு­கி­றது. நீண்ட காலப்­போ­ரின்­பின்னர் பல சவால்­க­ளுக்கு மத்­தியில் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­கிற இன­வொற்­று­மைக்கு இது மிக சவா­லான விட­ய­மாகும். ஆகவே நாட்டை துண்­டாடும் இந்த 20 ஆவது திருத்­தத்தை அனு­ம­திக்க முடி­யா­தென தேசிய பிக்­குகள் மா­நாட்டில் தீர்­மானம் மேற்­கொ­ள்­ளப்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதியின் அதி­கா­ரத்தை ஒழிக்க முயற்­சிக்கும் 20 ஆவது திருத்­த­மா­னது நாட்டின் மர­ணப்­பொ­றியென்றே அந்த முன்­னணி கூறி­யுள்­ளது. இந்த திருத்­தத்தை எக்­கா­ரணம் கொண்டும் பாரா­ளு­ம­ன்றில் நிறை­வேற்­ற­வி­ட­மாட்­டோ­மென கூட்டு எதிர்க்­க­ட­்சி­யி­னர்­ தி­னந்­தோறும் சூளு­ரைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்தலில் யாரை வேட்பா­ள­ராக நிறுத்­து­வது? நிறுத்­தப்­படும் வேட­்­பா ளரை எவ்­வாறு வெற்­றி­கொள்ள வைப்­பது என்ற திட்­டங்­கள்­மீது சகல கட்சி­களும் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றன.

கூட்டு எதிர்க்­க­ட்­சி­யைப் ­பொ­றுத்­த­வரை யாரை வேட­்பா­ள­ராக நிறுத்­து­வ­தென்­பதை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­ததான் தீர்­மா­னிப்பார் என்று ஆரு­டங்கள் கூறப்­ப­டு­கிற நிலையில் சகோ­த­ரர்­க­ளான கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ,ப­ஷில் ராஜ­ப­க் ஷ ஆகிய இரு­வரும் அண்­ண­னு­டைய ஆசீர்­வா­தத்­துக்­காக காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக ஊடக செய்­திகள் தினந்­தோறும் வெளிவந்து கொண்­டி­ருக்­கின்­றன. நாளாந்த செய்­தி­களில் கோத்­த­பா­ய­ ராஜ­ப­க் ஷவின் தரி­ச­னங்கள் பிர­பல்யம் அடைந்து வரு­வ­தையும் காணு­கின்­றோம், அது­மட்­டு­மி­ன்றி ஜனா­தி­பதி தேர்தலை மையப்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ பல காய் நகர்­த்தல்­களை மேற்­கொண்­டு­வரும் யுக்­தியில் அவர் ஆச்­ச­ரி­ய­மான விதத்தில் ஐ.தே.கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ­ஹா­ஸீமை சந்­தித்து உரை­யா­டி­யுள்ளார் .அது­மட்­டு­மின்றி சிறு­பான்மை சமூ­கத்தின் தலை­வர்க­ளையும் அவர் சந்­தித்து உரை­யா­டிய நிகழ்­வுகள் அண்­மையில் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

  இதற்­கி­டையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் மஹிந்த ராஜ­ப­க் ஷவுக்கும் உடன்­பாடு காணப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் கசிந்து வரு­கி­றன.அந்த உட­ன்­பாடு யாதெனில் ஏற்­க­னவே மஹிந்த ராஜ­ப­க் ஷ ­மீண்­டு­மொரு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத வகையில் அர­சியல் அமைப்பு இருக்­கின்ற நிலையில் 20 ஆவது திருத்­தத்தை தனி­நபர் பிரே­ர­ணை­யாக கொண்­டு­வ­ரும்­பொ­ழுது முன்னாள் ஜனா­தி­பதி முழு ஆத­ர­வையும் கொடுப்­ப­தற்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு வாக்­கு­றுதி அளித்­துள்ளார் என­ தெ­ரி­ய­வ­ரு­கி­றது. இந்த செய்­தியில் எந்­த­ள­வுக்கு உண்­மை­யுள்­ளது என அறி­ய­மு­டி­யா­விட்­டாலும் சில ஊகிப்புக்கள் இச்செய்திக்கு துணை நிற்கின்றன. ஏலவே 2005ஆம் ஆண்டு தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜ­ப­க் ஷவுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டதையும் மறந்துவிடமுடியாது.

இப்பொழுது பேசப்படுகிற விடயம் இதுதான். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய நிறுத்தப்படுவாராக இருந்தால் 20 ஆவது திருத்தத்துக்கு கூட்டு எதிர்க்கட்சியினர் ஆதரவு தருவார்களா என்பது ஒரு கேள்வி.மற்றையது சிறுபான்மைச் சமூகத்தவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப்போகிறதென்பதாகும்.அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் தீர்மானங்கள் எவ்வாறு இருக்கப்போகிறதென்பதை தீர்மானிப்பதில் தர்ம சங்கடமான நிலையே காணப்படலாம்.

  2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் என கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.இப்பொழுது கூறப்போனால் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரங்கள் வேகமாகவே பரவிக்கொண்டு வருகின்றன. இவ்வாறானதொரு கொதிநிலையில் அரசியல் தீர்வுக்கு என்ன நடக்கப்போகிறது? மறுபுறம் கோத்தபாய ராஜ­ப­க் ஷ விரும்பியோ விரும்பாமலோ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாராக இருந்தால் தமிழ் மக்களின் எதிர்கால நிலைகள் எவ்வாறு இருக்கப்போகிறதென்பதெல்லாம் சங்கடமான சாச்சைக்குரிய கேள்விகளாக மாறும்

  எப்படியிருந்தபோதிலும் 20 ஆவது திருத்தமென்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு ஆப்பு வைக்கும் திருத்தமாக இருக்கப்போகிறதென எதிர்பார்க்கப்பட்டாலும் ஒழிப்பேன் என வாக்குறுதி அளித்து வந்த மைத்திரிபால சிறிசேன உட்பட நாட்டில் உள்ள எந்தவொரு கட்சியும் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. இவ்வாறானதொரு நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள தனி நபர் பிரேரணையானது வெற்றியளிக்குமா? அவ்வாறு வெற்றியளித்தால் அது தமிழ் மக்களுக்கான தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு எவ்வாறு உதவப்போகிறது என்பது தொடர்பில் தமிழ் தலைவர்களே மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-02#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.