Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங்

Featured Replies

‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங்

 

 
kaala%20movie%20stills%209JPGjpg

‘காலா’ படம் குறித்த சின்னச் சின்ன சுவாரஸ்யத் தகவல்களை ‘தி இந்து’ வாசகர்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம்.

kaala%20movie%20stills%2017JPGjpg
                           
 
 

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, உடனேயே ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்த படம் ‘காலா’. “கபாலி படத்தை உங்களுக்காக இயக்கினீர்கள். ‘காலா’ படத்தை என் ரசிகர்களுக்காக இயக்குங்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால், ரஜினிக்கான பில்டப்ஸ் படத்தில் நிறைய இருக்கிறது. அதேசமயம், தன்னுடைய வழக்கமான கருத்துகளைப் படம் முழுக்கச் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித்.

kaala%20movie%20stills%201JPGjpg
 

ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் பெயர் ஷெரீனா. அதைப் பேச்சுவழக்கில் சரீனா என்று அழைப்பதுபோல், தன்னுடைய வலது கையில் ‘சரீனா’ என்று பச்சை குத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

kaala%20movie%20stills%204JPGjpg
 

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ‘காலா’வுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மும்பை, தாராவியில் உள்ள டோபடெலிக்ஸ் இசைக்குழு இதில் சில பாடல்களுக்கு வரிகள் எழுதியிருப்பதோடு, பாடவும் செய்திருக்கின்றனர்.

kaala%20movie%20stills%202JPGjpg
 

‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘மாயநதி’ பாடல் பயங்கர ஹிட். முதிர்ந்த வயது காதலை அழகாகச் சொன்ன இந்தப் பாடலை உமாதேவி எழுதியிருந்தார். அவரே ‘காலா’ படத்தில் ‘கண்ணம்மா’ பாடலைப் பாடியிருக்கிறார். இதுவும் முதிர்வயது காதலைச் சொல்லும் பாடல் தான். ‘மாயநதி’ பாடிய பிரதீப் குமாருடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

kaala%20movie%20stills%206JPGjpg
 

நம்முடைய குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட, நமக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த மாதிரி நம்முடைய குடும்பங்களைப் பிரதிபலிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்கின்றன.

kaala%20movie%20stills%2010JPGjpg
 

இது ரஜினியின் படம். ஆனால், படமும், ‘காலா’ என்ற கதாபாத்திரமும் மக்களுடைய நிலத்தைப் பற்றியும் அவர்களுடைய வாழ்வியல் பற்றியும் நிறையப் பேசும். நிச்சயமாக, ரஜினி படமாகவும் மக்களுடைய படமாகவும் ‘காலா’ இருக்கும்.

kaala%20movie%20stills%2015jpgjpg
 

பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும், யாருமே சினிமா ஆட்களாகத் தனித்துத் தெரிய மாட்டார்கள். எல்லாருமே கதையில் வரும் கதாபாத்திரங்களாகவே தெரிவார்கள். அந்தவகையில் கலர்ஃபுல்லான ‘காலா’வாக நிச்சயம் இருக்கும்.

kaala%20movie%20stills%2012jpgjpg
 

‘காலா’ படத்தில் ரஜினியின் சின்ன வயது கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார் என்று தகவல் பரவியது. ஆனால், அவர் நடிக்கவில்லை என்கிற பா.இரஞ்சித், இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை என்கிறார். தயாரிப்பாளராக தங்களை சுதந்திரமாக வேலைசெய்ய விட்டதாகவும் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

kaala%20movie%20stills%208JPGjpg
 

‘காலா’ படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், 14 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். அப்படி வெட்டாவிட்டால் ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கும் எனச்சொல்ல, 14 இடங்களிலும் வெட்டுவதற்கு ஒப்புக்கொண்டது படக்குழு. அதன்பிறகு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை வாரிய உறுப்பினர்கள்.

kaala%20movie%20stills%2011jpgjpg
 

‘காலா’வின் மொத்த ரன்னிங் டைம், 2 மணி நேரம் 47 நிமிடங்கள். அதாவது, 167 நிமிடங்கள். ஆனால், தெலுங்கில் 3 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 164 நிமிடங்கள் மட்டுமே ஓடும். தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளது.

kaala%20movie%20stills%207JPGjpg
 

படத்தில் நெல்லைத் தமிழ்ப் பேசி பெரும்பாலானவர்கள் நடித்துள்ளனர். காரணம், தாராவியில் வசிக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் நெல்லையில் இருந்து புலம்பெயர்ந்து தாராவிக்குச் சென்றவர்கள். அதேசமயம், வசனங்கள் எல்லோருக்கும் எளிமையாகப் புரியவேண்டும் என்பதற்காக அதிகமாக வட்டார வழக்கில் சிக்கிக் கொள்ளவில்லை.

kaala%20movie%20stills%205JPGjpg
 

‘கபாலி’ படத்தில் பணியாற்றும்போது, ரஜினியிடம் எப்படி வேலை வாங்குவது என்ற தயக்கம் பா.இரஞ்சித்திடம் இருந்திருக்கிறது. ஆனால், ‘காலா’வில் அப்படி இல்லை. ‘எனக்கு இதுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும்’ என்பதை ரஜினியிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டாராம் பா.இரஞ்சித்.

kaala%20movie%20stills%2016JPGjpg
 

தாராவி தான் கதைக்களம் என்பதால், அங்கு வசிக்கும் மக்களின் முகச்சாயல் கொண்ட நடிகர்களாகத் தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் இந்தப் படத்தில் வில்லனாக நானா படேகரை ஒப்பந்தம் செய்தனர்.

kaala%20movie%20stills%2014JPGjpg
 

‘காலா’ படம் ஃபேமிலி டிராமாவாக இருந்தாலும், கடைசி 40 நிமிடங்களில் அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். திலீப் சுப்பராயன் இந்த சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘கபாலி’ படத்தில் அன்பறிவ் என்ற இரட்டையர்கள் சண்டை இயக்குநர்களாகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24094866.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

சென்னையின் சில திரையரங்குகளில் காலா வெளியாகாதது ஏன்?

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நாளை வெளியாகவிருக்கும் காலா திரைப்படம் சென்னையின் பிரதானமான பகுதிகளில் அமைந்திருக்கும் உதயம், கமலா ஆகிய திரையரங்குகளில் வெளியாகாதது ஏன்?

kalaபடத்தின் காப்புரிமைLYCA

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் நடித்திருக்கும் காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், சென்னையின் பிரதானமான பகுதிகளில் அமைந்திருக்கும் கமலா சினிமாஸ், உதயம் காம்ப்ளக்ஸ் ஆகிய திரையரங்குகளில் காலா நாளை வெளியாகவில்லை.

காலா திரைப்படத்திற்கென அதிகமான தொகையை தயாரிப்பாளர் தரப்பில் கேட்டதால் தாங்கள் அந்தப் படத்தைத் திரையிடவில்லையென கமலா திரையரங்கின் சார்பில் கூறப்பட்டதாக புதன்கிழமை காலையில் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் உண்டர்பார் நிறுவனம் புதன்கிழமையன்று பிற்பகலில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்தது. "பிற திரையரங்குகள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை உதயமும் கமலாவும் ஒப்புக்கொள்ளவில்லை.

பெரிய அளவில் பணம் கேட்டதாகச் செய்திகள் வெளியாவது, முற்றிலும் அடிப்படை இல்லாதது, தவறானது" என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

பா. ரஞ்சித்

உண்மையில் நடந்தது என்ன என கமலா திரையரங்கின் உரிமையாளர்களில் ஒருவரான வள்ளியப்பனிடம் பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது, "அவர்கள் சொன்ன வர்த்தகரீதியான கோரிக்கைகள் ஒத்துவரவில்லை. அதனால் படத்தைத் திரையிடவில்லை. சமூகவலைதளங்களில் நாங்கள் கூறியதாக வெளியான செய்தி குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. நாங்கள் ஜுராசிக் பார்க் திரைப்படத்தை வெளியிடுகிறோம். அதற்கான முன்பதிவு சிறப்பாகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

வுண்டர்பார் நிறுவனம் முன்வைத்த வர்த்தகரீதியான கோரிக்கை என்னவெனக் கேட்டபோது, படத்தை தாங்கள் திரையிடாத நிலையில், அதைப் பற்றித் தான் பேசவிரும்பவில்லையென வள்ளியப்பன் கூறினார்.

"அவர்களுடைய தயாரிப்பு அந்தப் படம். அதற்கு அவர்கள் என்னவிதமான விதிகளையும் விதிக்கலாம். ஏற்றுக்கொண்டு வெளியிடுபவர்கள் வெளியிடலாம். அல்லது வெளியிடாமல் இருக்கலாம். நாங்கள் ஏற்கவில்லை, அவ்வளவுதான்" என்கிறார் வள்ளியப்பன்.

சென்னையின் கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்திருக்கும் உதயம் காம்ப்ளக்ஸில் நான்கு திரையரங்குகள் உள்ளன. வழக்கமாக ரஜினியின் படங்களை வெளியிடும் இந்தத் திரையரங்கிலும் காலா வெளியாகவில்லை.

kala

அந்தத் திரையரங்கின் நிர்வாகியான ஹரிஹரனிடம் கேட்டபோது, தயாரிப்பாளர்கள் விதித்த சில விதிமுறைகளை எங்களால் ஏற்கமுடியவில்லை, அதனால் படத்தை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறியதோடு முடித்துக்கொண்டார். அந்தத் திரையரங்கிலும் ஜுராசிக் பார்க் திரைப்படமே வெளியாகவிருக்கிறது.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி திரையரங்கிலும் புதன்கிழமை மாலைவரை முன்பதிவு துவங்கவில்லை. இதனால், அந்தத் திரையரங்கிலும் படம் வெளியாகுமா என்ற கேள்வியிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு திரையரங்கில் காலா படத்தின் பேனர் கட்டப்பட்டு அங்கு படம் வெளியாவது உறுதியானது.

காசி திரையரங்கில் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன் என அந்தத் திரையரங்கின் உரிமையாளர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, "நேற்று இரவுதான் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல் நாளுக்கான டிக்கெட்களை ரசிகர்கள் மொத்தமாக வாங்கிக்கொண்டனர். ஆகவே, முன்பதிவை இன்னும் துவக்கவில்லை. இரண்டாவது நாளுக்கு நேரடி முன்பதிவை துவக்கியுள்ளோம். விரைவில் ஆன்லைனிலும் முன்பதிவு துவங்கும்" என்றார்.

ரஜினிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

காலா திரைப்படத்தை வெளியிட "மினிமம் கேரண்டி" பணம் எதையும் தயாரிப்பாளர் கேட்கவில்லையென கூறிய காசி திரைப்படத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன், திரையரங்கில் வசூலாகும் பணத்தை தயாரிப்பாளரும் திரையரங்கங்களும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்வது என்பதில் சிலருக்கு முரண்பாடு இருந்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஏற்புடைய விதிமுறைகளை ஏற்று நாங்கள் இந்தப் படத்தைத் திரையிடுகிறோம் என்றார்.

வழக்கமாக திரையரங்கங்களும் படத்தின் விநியோகிஸ்தரும் வருவாயை 50-50 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்வது வழக்கம். விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது விநியோகிஸ்தர்களுக்கு கூடுதல் சதவீதம் அளிக்கும்வகையில், அதாவது 65-35 என்ற வீதத்தில் ஒப்பந்தம் செய்யப்படும்.

இந்த வருவாய் பகிர்வில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே சில திரையரங்குகள் காலாவைத் திரையிட முன்வரவில்லையெனத் தெரிகிறது.

வழக்கமாக ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களின் முதல் நாட்கள் காட்சிகளுக்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே முழுவதும் முடிந்துவிடும். ஆனால், காலா திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவுவரை முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை நடந்துவருகிறது. சென்னையில் உள்ள சுமார் 75 சதவீத திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகிறது.

https://www.bbc.com/tamil/india-44389954

  • தொடங்கியவர்

ரஜினியின் 'காலா' திரைப்படம் வெளியானது; ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகம்!

 
 

ரஜினி-யின் காலா வெளியீடு

ரஜினிகாந்த் நடித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'காலா' இன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கிய பா.இரஞ்சித், காலா படத்தையும் இயக்கியுள்ளதால், ரஜினி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

c28454d6-5f96-4b97-91e4-eb7e808f48c9_052

சென்னையின் முக்கியப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 'காலா' படத்தின் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. ஆயிரக்கணக்கான ரஜினிமன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் திரையரங்கின் முன் திரண்டு, காட்சி தொடங்குவதற்கு முன்பாக நடனமாடிக் கொண்டாடினார்கள். திருவிழா போன்று திரையரங்குகளின் முன் திரண்ட ரசிகர்கள், ரஜினி கட்-அவுட்டுக்கு பூஜைகள் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல திரையரங்குகளின் முன் நள்ளிரவிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டுவந்து, காலா படத்தைக் காணும் முன் மேள, தாளம் முழங்க கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ea2f814e-f853-4ed0-a67a-e3792b70d31a_054

'அரசியலுக்கு வருவது உறுதி' என்று ரஜினிகாந்த் அறிவித்தபின்னர் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பையில் குடிபெயர்ந்த 'தாதா'-வை குறித்த கதையம்சத்துடன் வெளிவந்துள்ள படம் என்பதாலும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3f1ca42f-befa-4bfb-accb-fcce8dd7da9d_051

தவிர, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான பல்வேறு சாட்டையடி வசனங்களும் இடம்பெற்றிருக்கும் என்பதால், 'காலா' திரைப்படம் அவரின் ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. 

(வீடியோவைக் காண....)

 

 

https://www.vikatan.com/news/cinema/127003-superstar-rajinis-kaala-released-in-tamilnadu-fans-enjoyed-and-celebration-of-the-movie-release.html

  • தொடங்கியவர்

'காலா' படத்தை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது

கைது

ஃபேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள காலா திரைப்படம், நேற்று இரவு ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட படம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தகவலை கேட்டறிந்த படத்தின் தயாரிப்புக்குழு அதிர்ச்சியடைந்தது.

அது தொடர்பான தகவல்களும், பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த சூழலில், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் விளக்கம் அளித்தார்.

அதில், காலா திரைப்படம் சிங்கப்பூரிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அதை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கைதுபடத்தின் காப்புரிமைTWITTER

தொடர்ந்து ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவான நடவடிக்கைக்காக தனது நன்றியை தெரிவித்தார்.

இதற்கிடையே இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னையில் சில திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானது.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் இது என்பதால், அவரது தீவிர ரசிகர்கள் இந்த வெளியீட்டை வழக்கத்தைவிட கூடுதலாக கொண்டாடினர்.

பிரம்மாண்ட கேக்குகளை வெட்டியும், ரஜினியின் கட்டவுட்டுக்கு பூஜை போட்டும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

ஜப்பான் நாட்டு ரசிகர்கள்

காலா படத்தில் ரஜினியின் கெட்டப்பான கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

ரஜினிகாந்தின் ஜப்பான் நாட்டு ரசிகர்களும் சென்னையில் முதல் காட்சியை காண திரையரங்குகளுக்கு வந்திருந்தனர்.

கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் காலா திரைப்படம் உறுதியாக திரையிடப்படும் என தயாரிப்புக்குழு கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44393275

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான சாதனை செய்த காலா;முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஸன் எவ்வளவு தெரியுமா?

மாஸ் ஹீரோவான ரஜினிகாந்த் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஸன் செய்துள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில்   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகின்றது. இதனிடையே, இந்தத் திரைப்படம் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினியின் தூத்துக்குடி சம்பவம் குறித்தும், காவிரி விவகாரம் தொடர்பான பேச்சால் தமிழகம், கர்நாடகாவில் பிரச்னை கிளம்பியது. இதனால் அவரின் காலா பட வசூல் வெகுவாக பாதித்துள்ளது. காலா திரைப்படம் தமிழகத்தில் 500 திரையரங்குகளிலும், உலகளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியானது. இருப்பினும் மற்ற ரஜினி படங்களை விட காலா மிக குறைவான பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது.

திரைப்பட வர்த்தக நிபுணர்கள் கூற்றுப்படி காலா திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 13-15 கோடி இருக்கும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக ரஜினியின் கபாலி ரூ.21.50 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்திருந்தது.

கபாலியின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை விஜய்யின் மெர்சல் ரூ. 24.80 கோடி வசூல் செய்து முறியடித்திருந்தது. அஜித்தின் விவேகம் முதல் நாள் வசூல் ரூ. 16.50 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/11832

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.