Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்த குழந்தை மீண்டும் உயிர் பிழைப்பதால் யாழில் பரபரப்பு!

Featured Replies

இறந்த குழந்தை மீண்டும் உயிர் பிழைப்பதால் யாழில் பரபரப்பு!

 

யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் மருத்துவர்களினால் உயிரிழந்து விட்டதாக உறுதிசெய்யப்பட்ட சிறுமி மீண்டும் உயிர் பெற்றுவருவதாக, குழந்தையின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 15 ஆம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அறிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர், இறுதிக் கிரியைகளை நடத்தவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்தநிலையில் சிறுமியின் உடலில் இருந்து சிறுநீர், வியர்வை மற்றும் மலம் வெளியாகியதையடுத்து பிரதேச மக்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் குழந்தையை அருகிலுள்ள ஆலயத்திற்கு எடுத்துச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் குறித்த சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்து மீண்டும் இன்று இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கு குடும்பத்தினர் தீர்மானித்தனர். இதன்போது சிறுமியின் நாடித்துடிப்பு இருப்பதாக தெரிவித்து இரண்டாவது முறையாக இறுதிக் கிரியைகளையும் நிறுத்தியுள்ளனர்.

சிறுமியின் நாடித்துடிப்பு உணர்ப்பட்டதுடன் மீண்டும் சிறுமியின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறியுள்ளதுடன் சளி மற்றும் வியர்வையும் வெளியேறியுள்ளதை அவதானித்தோம் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துவருகின்றனர்.

ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து 3 நாட்களில் சிறுமியின் உடலில் எதுவித அசைவுகளும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறுமி மீண்டும் உயிர்பெற்று விடுவார் என்ற நம்பிக்கையில் உள்ள குடும்பத்தினர் அவர் மீண்டும் நலம் பெற வேண்டும் என வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://athavannews.com/?p=685218/இறந்த-குழந்தை-மீண்டும்-உயிர்-பிழைப்பதால்-யாழில்-பரபரப்பு!/

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE: இறுதியில் சோக முடிவு; பெண் குழந்தை உயிரிழந்தது உறுதியானது: நாளை இறுதிச்சடங்கு!

June 9, 2018
FB_IMG_1528394918331-e1528420706952.jpg

உடுவில் பெண் குழந்தையின் உயிரிழந்தாரா, உயிருடன் இருக்கிறாரா என்பதில் நீடித்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது. குழந்தை உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த
இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.

 

எனினும் காய்ச்சல் நீடித்தமையால் குழந்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. குழந்தையை சடலமாக புதன்கிழமை
நள்ளிரவு உறவினர்களிடம் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

குழந்தையின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் (7) வீட்டில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து குழந்தையின் சடலம் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் இந்து முறைப்படி வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள், பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இறுதிச் சடங்கு நேற்று நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் நேற்று இறுதிச் சடங்கு இடம்பெறவிருந்த நிலையில் குழந்தை மலம் சலம் கழித்துள்ளார்.

அதனால் அவர் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இன்று (9) காலை கடவுளிடம் மன்றாடி பெற்றோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர். எனினும் குழந்தை உயிரிழந்ததை தனியார் வைத்தியசாலையும் உறுதி செய்தது.

இந்த நிலையில் குழந்தையின் இறுதிச் சடங்கு நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pagetamil.com/7764/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.