Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தமிழர்களுக்கு அரசியல் தீர்வுமில்லை அபிவிருத்தியும் இல்லை - மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அந்த அழைப்பை விமர்சனம் செய்தார்கள். ஒரு சிலர், நான் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டார்கள். இன்று நிலைமை என்ன? தமிழர்களுக்கு  அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லையென என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

 

த, மனோகரனின் “உள்ளதைச் சொல்கின்றேன்  நல்லதைச் சொல்கின்றேன்” நூல் வெளியீடு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், 

 

இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை அமைச்சர்கள், 2 இராஜாங்க அமைச்சர்கள், சுமார் 5 பிரதி அமைச்சர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன. அவை மூலம் கிடைக்கும் அந்த சேவைகளும் போதாது, என்று முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை. உண்மையில் நான் முஸ்லிம் மக்களை பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும்.

இந்நாட்டின், மொத்த சுமார் 200 இலட்சம் சனத்தொகையில், சுமார் 150 இலட்சம் சிங்களவர்கள், சுமார் 30 இலட்சம் தமிழர்கள், சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள். ஆனால், தமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை அமைச்சர்கள், ஒரு ராஜாங்க அமைச்சர், 3 பிரதி அமைச்சர்கள் தான் இருக்கிறோம்.

தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திகொள்ளும் அரசாங்கங்கள், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்தை தருவதில்லை. இதற்கு முன் இருந்த அரசாங்கங்களும் தரவில்லை. இந்த அரசாங்கமும் தரவில்லை. இதனால், தமிழர்களுக்கு, “எக்சகியூடிவ் பவர்” என்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் போதுமானளவு கிடைப்பதில்லை .

இதனால்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அந்த அழைப்பை விமர்சனம் செய்தார்கள். ஒரு சிலர், நான் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டார்கள். இன்று நிலைமை என்ன? தமிழர்களுக்கு  அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா? என்று நான் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இந்த எனது கேள்வி வடக்கு, கிழக்கு, மலைநாடு, மேற்கு, தெற்கு என்று நாடு முழுக்க வாழும் தமிழர் மனங்களில் எதிரொலிக்கின்றது. உண்மையில் தமிழர் மனசாட்சியின் குரல்தான் என் குரல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் இணையாவிட்டால், உள்ளே இருக்கும் தமிழ் எம்.பி.களை தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை இந்த அரசு கொடுக்க வேண்டும். தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளுக்கு மேலதிக நிதி வளம் ஒதுக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளும் மென்மேலும் பலவீனப்படுத்தப்படுகின்ற போக்கையே நாம் பார்க்கிறோம்.   

இன்று இவை பற்றி யாராவது பேச வேண்டும். அதனால்தான், நான் இன்று பகிரங்கமாக பேசுகிறேன். இதன் மூலம் இது பற்றிய நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். இது தமிழர் மத்தியில் பேசு பொருளாக மாற வேண்டும்.

இதனால், எமது அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க நான் தயார் இல்லை. ஆனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும் தயார் இல்லை. அரசுக்கு உள்ளே இருந்தபடியே இயன்ற உள்போராட்டங்களை செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/35233

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது சிங்களவர்கள்.. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தர உண்மையாக சித்தம் கொண்டிருந்தார்கள்.

மனோ கணேசன்.. பதவிக்கு ஆசைப்பட்டார்.. அனுபவிக்கிறார் என்று சொல்ல வேண்டுமே தவிர.. பதவியால் தான் தமிழர்களுக்கு அரசியல் தீர்வென்றால்.. கதிர்காமர்.. தொண்டமான்.. சம்பந்தன்.. டக்கிளஸ்.. கருணா.. பிள்ளையான்..  போன்றவர்கள்.. எவ்வளவோ தீர்வுகளை வாரிக் குவிச்சிருப்பினமே. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.