Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்தவர்கள் நடுக்கடலில் வளைத்து பிடிக்கப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்தவர்கள் நடுக்கடலில் வளைத்து பிடிக்கப்பட்டனர்!

June 21, 2018
Capture-359-750x415-696x385.jpg

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 9 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் கட்டைக்காடு மீனவர்கள் கடலில் வைத்தே மடக்கிப்பிடித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கியிருந்து கடல்ட்டை பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை பெற்று, சட்டவிரோதமாக வாடி அமைத்து இந்த தொழில் ஈடுபடுகின்றனர்.

 

கடலிலிருந்து 5 கடல் மைல்களிற்கு அப்பாலேயே கடலட்டை பிடிக்கலாம். பகல் பொழுதில் மட்டுமே அதை செய்யலாம். இதை வெளிமாவட்ட மீனவர்கள் பின்பற்றுவதில்லை. இதையடுத்து உள்ளூர் மீனவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து கடலட்டை பிடிப்பவர்களை கைது செய்வதாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் அறிவித்திருந்தது.

ஆனால் அவர்கள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. நேற்று இரவு இரகசியமாக கடலட்டை பிடிக்க செல்வதை இரகசியமாக அறிந்த கட்டைக்காடு இளைஞர்கள்,கடலில் வைத்து கடலட்டை பிடிப்பவர்களை கையும் மெய்யுமாக வளைத்து பிடித்தனர். தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவர்கள் நீரியல் வளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

http://www.pagetamil.com/9041/

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட மூன்று படகுகள் பிடிக்கப்பட்டன

 

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி மீனவர்களின் மூன்று படகுகள் பிடிக்கப்பட்டு மீன்பிடி நீரியல் வள திணைக்களத்தினுடாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமாட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கன படகுகள் ஈடுபட்டன. அவற்றில் 3 படகுகள் முன் எச்சரிக்கையாக கட்டைக்காட்டு மக்களுடன் இனைந்து நள்ளிரவு 11 மணியளவில் பிடிக்கப்பட்டு நேற்று காலை 10மணியளவில் மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளூடாக நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் கட்டைக்காடு மக்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன்,சயந்தன் , மற்றும் பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை தலைவர் உட்பட்டோரும் பங்குபற்றினர்.

35824636_1812349042178848_6475839208010235971491_1812349098845509_65185849859878

 
Share the Post

http://www.newsuthanthiran.com/2018/06/22/வடமராட்சி-கிழக்கில்-சட்ட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.