Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ அதிகாரி அபிவிருத்திக்கு செலவிட்ட நிதி எங்கிருந்து வந்தது?

Featured Replies

இராணுவ அதிகாரி அபிவிருத்திக்கு செலவிட்ட நிதி எங்கிருந்து வந்தது?

04MAIN20062018Page1Image0003-092517e6f074d2e795950c363f2d5351fd19b2e0.jpg

 

வட­மா­கா­ணத்­திற்­கான நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்­தின் ­மத்­திய அலு­வ­ல­கத்தின் திறப்­பு­ விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர்  சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை

 

 வடக்கு மாகாண நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்தின் மத்­திய அலு­வ­ல­கத்­தின்­ பு­தி­தாக அமைக்­கப்­பட்ட இக் கட்­டிடத் தொகு­தியை திறந்து வைத்து உங்கள் முன் உரை­யாற்­று­வதில் மகிழ்­வ­டை­கின்றேன்.

இது­வரை காலமும் கிளி­நொச்சி நக­ருக்கு அண்­டிய பகு­தியில் செயற்­பட்­டு­வந்த இந்த மத்­திய அலு­வ­லகம் இன்­றி­லி­ருந்து மாங்­குளம் பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் இந்தப் புதிய கட்­டடத் தொகு­தியில் இயங்க இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.இன்று திறந்து வைக்­கப்­பட்ட இந்த புதிய கட்­டடத் தொகுதி தொடர்­பான விப­ரங்­களை தந்­து­த­வு­மா­று­கோ­ரப்­பட்ட போதும் அதனை சமர்ப்­பித்­த­வர்கள் தமது திணைக்­க­ளத்தின் திட்­ட­முன்­மொ­ழிவு ஒன்றை அனுப்­பி­விட்டு தமது கட­மைகள் முடிந்­து­விட்­ட­தாக அமர்ந்­து­விட்­டார்கள். பொறுப்பு வாய்ந்த திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களும் அதி­கா­ரி­களும் முனைப்­புடன் செயற்­ப­டு­கின்ற போது அத் திணைக்­களம் வினைத்­திறன் மிக்க திணைக்­க­ள­மாக மிளிரும் என்­பதில் ஐயம் இல்லை.

நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தைப் பொறுத்­த­வ­ரையில் அது வட­மா­கா­ணத்தின் மத்­திய பகு­தி­யாக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள மாங்­குளம் பகு­தியில் அமைந்­தி­ருப்­பதே சாலச்­சி­றந்­தது என்ற தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இத் திணைக்­களம் மாங்­குளம் பகு­திக்கு இடம் மாற்­றப்­பட்­டது. யாழில் பிறந்து வளர்ந்த அலு­வ­லர்கள் சிலர் வன்­னிக்குள் காரி­யா­ல­யங்கள் அமை­வது ஒரு வதை என்றே நினைக்­கின்­றார்கள். வாழ்க்கை பூரா­கவும் கூண்­டொன்­றுக்குள் முடங்கிக் கிடக்­கவே ஆசைப்­ப­டு­கின்­றார்கள். அந் நிலை மாற வேண்டும்.

சுமார் 42.55 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­பட்ட இந்தக் கட்­ட­டத்­திற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்­வுகள் எமது முன்­னைநாள் விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் விவ­சாய அமைச்­ச­ராக இருந்த காலத்தில் நடை­பெற்­ற­தாக ஞாபகம். நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தைப் பொறுத்த வரையில் அதன் அமை­விடம் மாங்­கு­ளத்தில் இருப்­ப­தே­சா­லப்­பொ­ருத்­த­மா­னது.ஏனெனில் இப் பகு­தி­யில் ­நீர்ப்­பாசனக் குளங்கள் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன.

கிளி­நொச்­சியில் இர­ணை­மடு குளம் நீர்ப்­பா­ச­னத்­திற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போதும் மாங்­குளம் பகு­தி­யில்­பல குளங்கள் நீர்ப்­பா­சனக் குளங்­க­ளாக காணப்­ப­டு­வதால் அவற்றை நேரில் சென்று பார்­வை­யி­டு­வ­தற்கும் நீர்ப்­பா­சன செயற்­பா­டுகள் முறை­யாக நடை­பெ­று­கின்­றதா என்­ப­தனை பார்­வை­யி­டு­வ­தற்கும் இவ்­வி­டம்­ இ­ல­கு­வான­தாக அமையும் என எண்­ணு­கின்றேன்.

இன்­றைய எமது சீதோஷ்ண நிலை­க­ளுக்கு அமை­வாக வட­ப­கு­தியில் பெறப்­படு­கின்ற ஒவ்­வொரு துளி நீரும் முறை­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாய சூழ்­நி­லையில் நாம் இருக்­கின்றோம். வட­ப­கு­திக்கு வரு­டாந்தம் கிடைக்கப் பெறு­கின்ற சுமார் 1250 மில்­லி­மீற்றர் மழை வீழ்ச்சி கூட தற்­போது கிடைக்கப் பெறு­வ­தில்லை என தர­வுகள் தெரி­விக்­கின்­றன. இந்த நிலையில் கிடைக்­கின்ற நீரை முறை­யாகத் தேக்கி வைக்­காது வீணாக கடலில் சேர அனு­ம­திப்­பது மிகக் குறு­கிய காலத்தில் எமது பகு­திகள் வரண்ட பிர­தே­சங்­க­ளா­க­மா­று­வ­தற்கு நாமே வழி­ச­மைத்­த­தாக அமையும். முன்­னரே மன்னன் பராக்­கி­ர­ம­பாகு ஒரு சொட்டு நீரைக் கூட கடலில் கலக்க விடா­தீர்கள் என்று சொல்லிச் சென்று விட்டான். ஆனால் இன்­றைய கால­கட்­டத்தில் நாங்கள் பழ­மை­யையும் மதிப்­ப­தில்லை நவீன ஆலோ­ச­னை­க­ளையும் பின்­பற்­று­வ­தில்லை. பின்­ன­ணியில் சிலரின் சுய­நலம் காணப்­ப­டு­கின்­றது என்று புலப்­ப­டு­கி­றது.

இப் பகு­தி­களில் கூடு­த­லான நிலங்கள் விவ­சாயத் தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக காணப்­ப­டு­கின்ற போதும் மத்­திய அரசின் கட்­டுப்­பாட்டின் கீழ் இயங்கும் வன­இ­லாகா, வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்புத் திணைக்­களம், கனிய வளத் திணைக்­களம்,கட­லோரப் பாது­காப்­புச்­சபை போன்ற திணைக்­க­ளங்கள் கூட்­டாக இணைந்து பல செயற்­திட்­டங்­க­ளுக்கு முட்­டுக்­கட்­டைகள் கொடுத்து வரு­கின்­றன. அரச கொள்­கை­க­ளுக்கு அமை­வாக பல காணி­கள்­ கா­டு­க­ளாக பரா­ம­ரிப்­ப­தற்­கான திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கின்­றது. காடுகள் பல வகைப்­படும். அவற்றுள் சர­ணா­ல­யங்கள் இருக்­கலாம். தேசியப் பூங்­காக்கள் இருக்­கலாம். வெறும் அடர் காடு­களும் இருக்­கலாம். சர­ணா­ல­யங்­க­ளுக்கு ஊடாக மக்கள் செல்­லலாம். ஆனால் தேசிய பூங்­காக்­களுள் நுழை­வ­தென்றால் அனு­மதி பெற வேண்டும். வன இலாகா தேசிய பூங்­காக்­களை எமது பிர­தே­சங்­களில் ஏற்­ப­டுத்தி எமது மக்­களை அவற்றுள் உள் நுழைய விடாமல் தடுக்­கப்­பார்ப்­ப­தாகத் தெரி­கின்­றது. இத் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களின் நிமித்தம் எமது காடு­களும் சர­ணா­ல­யங்­களும் தேசியப் பூங்­காக்­களும் அவற்றின் அதி­கா­ரமும் கட்­டுப்­பாடும் மத்­திய அரசின் கட்­டுப்­பாட்­டுக்குள் தொடர்ந்து இருந்து வரு­கின்­றன. எமது காடு­களில் என்ன நடக்­கின்­றது என்­பது எமக்குத் தெரி­வ­தில்லை. அண்­மையில் வெலி ஓயா எனப்­படும் மண­லாறு பிர­தே­சத்தின் காட்­டுக்குள் அணை­யொன்று கட்டி இருப்­பது கட்டி பல மாதங்­க­ளுக்குப் பிறகே எமக்குத் தெரிய வந்­துள்­ளது. யார் கட்­டி­னார்கள் என்­பது புதி­ராக இருக்­கின்­றது என்று அறி­கின்றேன்.

ஒரு நாட்டில் காணப்­ப­ட­வேண்­டிய காடு­களின் அள­வுகள் அதன் நிய­மங்கள் என்­பன முறை­யாக கடைப்­பி­டிக்­கப்­படல் வேண்டும். எனினும் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்­கு­மான காடு­களை வட­ப­கு­தியில் பாது­காத்து வைத்­தி­ருக்க அர­சாங்கம் முனை­கின்­றது.மற்­றைய மாகா­ணங்­களில் பல காடுகள் வெட்­டப்­ப­டு­கின்­றன. வடக்கில் அவ்­வாறு இல்­லாது இழந்த காடு­களை ஈடு செய்ய எமது காணிகள் மற்றும் வனங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது இப் பகு­தியில் வாழு­கின்ற மக்­களின் சுய உரி­மை­களை மீறு­வ­தா­கவும் அமை­கின்­றது. எமது காடுகள், காணிகள் ஆகி­யன எமக்கே உரி­யவை. அவை முழு­மை­யாக எமது மக்­க­ளுக்கே கைய­ளிக்­கப்­பட வேண்டும். எமது காடு­க­ளையும் வன ஜீவ­ரா­சி­க­ளையும் பாது­காக்­கவும் பரி­பா­லனம் செய்­யவும் மாகா­ணத்­திற்கு வெளியில் இருந்து அலு­வ­லர்­களைக் கொண்­டு­வ­ரு­வதை அர­சாங்கம் நிறுத்த வேண்டும்.

அன்­பார்ந்த உத்­தி­யோ­கத்­தர்­களே,அதி­கா­ரி­களே! இன்­றைய நிலையில் தமிழ் மக்­களைப் பொறுத்த வரையில் அவர்­களின் தேவைகள் அனைத்தும் போராடிப் பெற­வேண்­டிய ஒரு கட்­டா­யத்­தி­லேயே அவர்­கள் ­வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய முறை­யான உரித்­துக்­களைக் கூட கைய­ளிப்­ப­தற்கு பின்­நிற்­கின்­றார்­கள்­ அ­ர­சாங்­கத்­தினர்.ஒவ் ­வொரு சாதா­ரண விட­யங்­க­ளுக்குக் கூட போரா­டியே எமது உரி­மை­களை பெற­வேண்­டிய நிலையில் நாம் இருந்து வரு­கின்றோம். இந் நிலையில் எமது மக்­க­ளுக்கு எம்மால் வழங்­கப்­ப­டக்­கூ­டிய சேவை­க­ளை­யா­வது அவர்கள் திருப்­திப்­ப­டக்­கூ­டிய வகையில் அவர்­களின் எதிர்­பார்ப்பை விஞ்­சி­ய­தாக நீங்கள் வழங்க உங்­களை தயார்ப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என இச் சந்­தர்ப்­பத்தில் வின­ய­மாக வேண்டிக் கொள்­கின்றேன்.

-அண்­மையில் பத்­தி­ரி­கை­யிலும் ஊட­கங்­க­ளிலும் வெளிவந்த ஒரு செய்­தியில் இரா­ணுவத் தள­பதி ஒரு­வரின் செயலை பாராட்டிக் கௌர­வித்து அவ­ருக்கு மலர் மாலைகள் அணி­வித்து பல்­லக்கில் ஏற்­றி­ வந்­து­விடை கொடுத்து அனுப்­பி­ய­தாக செய்­திகள் வெளிவந்­தன.

அவர்கள் அவ்­வாறு நடந்­து­கொள்­வ­தற்கு இயல்­பா­கவே அந்த அலு­வ­லர்­அவ்­வா­றான நல்ல குண­ந­லன்­க­ளைக்­கொண்­டி­ருந்­தா­ரா­அல்­லது அவ்­வாறு இயங்­கு­மாறு பணிக்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமைய அவர்கள் செயற்­பட்­டார்­களா என்­பது பற்றி எனக்கு எதுவும் தெரி­யாது. ஆனால் அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­விருத்திப் பணி­க­ளுக்கு செல­வி­டப்­பட்ட நிதிகள் எங்­கி­ருந்து வந்­தன என்­பன பற்றி எது­வுமே கூறப்­ப­ட­வில்லை. முன்­பள்ளி ஆசி­ரி­யர்களுக்கு எம்மால் ரூபா 6,000 வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. CSD ரூபா 30,000 க்கு மேலாக வழங்கி வந்­துள்­ளது. இந் நிதி­ இ­தற்­கென இரா­ணு­வத்­திற்கு ஒதுக்கி வைத்த பண­மாக இருக்க முடி­யாது. இவ்­வா­றான செல­வு­களில் வெளிப்­படைத் தன்மை இல்­லா­ததால் இரா­ணுவம் திட்­ட­மிட்டே ஐந்து மடங்கு சம்­பளம் கொடுத்து எமது மக்­களை விலைக்கு வாங்­கு­கின்­றதோ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது. அவர்­க­ளுக்­கான மேல­திக பணம் எங்­கி­ருந்து கிடைக்­கப்­பெற்­றுள்­ளது என்­பதை இரா­ணுவம் விப­ரிக்க வேண்டும். இந்த நிதிகள் வட­மா­காண சபைக்கு வழங்­கப்­பட்­டி­ருப்பின் அல்­லது வட­மா­காண சபையின் ஒத்­தி­சை­வோடு மத்­திய அர­சினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்பின் எம் மக்­களை விலைக்கு வாங்கும் ஒரு கைங்­க­ரி­ய­மாக அது அமைந்­தி­ருக்­காது.

யுத்த காலப் பகுதியில் எமது உறவுகளை முதியவர், குழந்தைகள், பெண்கள், இளைஞர், யுவதிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் என்ற எதுவித வேறுபாடுகளோ தயவுதாட்சண்யமோ இன்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விட ஞாயமில்லை. அவ்வளவு உயிர்களையும் காவு கொள்வதற்கு தாம் சார்ந்த ஒரு அமைப்பு காரணமாக இருந்ததே என்ற கவலை குறித்த இராணுவ அலுவலருக்கு இருந்ததோ நான் அறியேன். இருந்திருந்தால் அந் நினைவு வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அதனடிப்படையில் தமது தவறுகளை சீர் செய்வதற்கும் அல்லது இறைமன்றாட்டம் மேற்கொள்வதற்குமாக இவ்வாறான தார்மீக சிந்தனைகள் அந்த அலுவலரிடம் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் உணர வேண்டும்.

இன்று திறந்து வைக்கப்படுகின்ற இந்த மத்திய அலுவலகத்தை நடத்தப் போகும் நீர்ப்பாசனத் திணைக்களம் எமது மக்களுக்காக அர்ப்பணிப்­புடனான சேவையை ஆற்றுவதற்கு எச்சந்தர்ப்­பத்திலும் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்து உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-21#page-4

20 hours ago, நவீனன் said:

-அண்­மையில் பத்­தி­ரி­கை­யிலும் ஊட­கங்­க­ளிலும் வெளிவந்த ஒரு செய்­தியில் இரா­ணுவத் தள­பதி ஒரு­வரின் செயலை பாராட்டிக் கௌர­வித்து அவ­ருக்கு மலர் மாலைகள் அணி­வித்து பல்­லக்கில் ஏற்­றி­ வந்­து­விடை கொடுத்து அனுப்­பி­ய­தாக செய்­திகள் வெளிவந்­தன.

அவர்கள் அவ்­வாறு நடந்­து­கொள்­வ­தற்கு இயல்­பா­கவே அந்த அலு­வ­லர்­அவ்­வா­றான நல்ல குண­ந­லன்­க­ளைக்­கொண்­டி­ருந்­தா­ரா­அல்­லது அவ்­வாறு இயங்­கு­மாறு பணிக்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமைய அவர்கள் செயற்­பட்­டார்­களா என்­பது பற்றி எனக்கு எதுவும் தெரி­யாது. ஆனால் அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­விருத்திப் பணி­க­ளுக்கு செல­வி­டப்­பட்ட நிதிகள் எங்­கி­ருந்து வந்­தன என்­பன பற்றி எது­வுமே கூறப்­ப­ட­வில்லை. முன்­பள்ளி ஆசி­ரி­யர்களுக்கு எம்மால் ரூபா 6,000 வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. CSD ரூபா 30,000 க்கு மேலாக வழங்கி வந்­துள்­ளது. இந் நிதி­ இ­தற்­கென இரா­ணு­வத்­திற்கு ஒதுக்கி வைத்த பண­மாக இருக்க முடி­யாது. இவ்­வா­றான செல­வு­களில் வெளிப்­படைத் தன்மை இல்­லா­ததால் இரா­ணுவம் திட்­ட­மிட்டே ஐந்து மடங்கு சம்­பளம் கொடுத்து எமது மக்­களை விலைக்கு வாங்­கு­கின்­றதோ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது.

 

 

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.