Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபைத் தேர்தல் – இழுபறியால் முடிவின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைத் தேர்தல் – இழுபறியால் முடிவின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

by in செய்திகள்

sri-lanka-parliament-300x198.jpg

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம், மாகாணr1பைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்காமல் முடிவுக்கு வந்தது.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

இதனால், எதிர்வரும் ஜூலை 6ஆம் நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தி,  புதிய தேர்தல் முறையின் கீழா அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழா தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்து என்று இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

எனினும், அதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு வெளியிட்டார்.சிறுபான்மைக் கட்சிகளால் இதற்கு இணங்க முடியாது என்று அவர் கூறினார். அத்துடன், பழைய தேர்தல்முறைப்படியே மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

http://www.puthinappalakai.net/2018/06/22/news/31516

மாகா­ண­சபை தேர்தல் முறைமை தொடர்பில் இணக்கம் இல்லை

City-Page-03-BlackGMGPage1Image0008-5355dce406aa69f32d2da61a39add7c83aa9e75a.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி)

6ஆம் திகதி சபையில் விவாதம் நடத்த கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மானம்

மாகாண சபைத் தேர்­தலை எந்த முறைமையின் கீழ் நடத்­து­வது என்­பது தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­மை­யினால் இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் 6ஆம் திகதி விவாதம் நடத்­து­வ­தற்கு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

சபா­நா­யகர் கரு­ ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்  தலை­வர்­க­ளது கூட்டம் நேற்றுக் காலை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் இடம்­பெற்­றது. மாகா­ண­சபை தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் ஆராய்­வ­தற்­கா­கவே இந்த முக்­கிய கூட்டம் நடத்­தப்­பட்­டது.  

மாகாண சபை தேர்­தலை புதிய முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யாக இருப்­ப­தாக கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா எடுத்துக் கூறினார். எனினும் புதிய முறை­மைக்கு சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­துடன் பழைய முறை­மையின் பிர­காரம் உடன்­தேர்­தலை நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தினர். இதனால் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­த­தை­ய­டுத்து மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக எதிர்­வரும் 6ஆம் திகதி விசேட விவா­த­மொன்றை நடத்­து­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

 சபா­நா­யகர் தலை­மையில் நேற்று நடை­பெற்ற கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்­பாக அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சார்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ சுமந்­திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்­பாக அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக்க மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் கலந்து கொண்­டனர். மேலும் இந்த கட்சி தலை­வர்கள் கூட்­டத்­திற்கு மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கு விடுக்­கப்­பட்ட விசேட அழைப்பின் பிர­காரம் அவரும் வருகை தந்­தி­ருந்தார்.

இந்த கூட்­டத்தின் போது மாகாண சபை தேர்தல் தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது மாகாண சபை தேர்தல் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட புதிய முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யாக இருப்­ப­தாக அமைச்சர் பைசர் முஸ்­தபா அறி­வித்தார். இதன்­பி­ர­காரம் விரைவில் எல்லை நிர்­ணய அறிக்கை விவா­தத்­திற்கு எடுக்­கப்­படும் என்றும் அவர் கூறினார்.

என்­றாலும் இந்த புதிய முறை­மையின் பிர­காரம் தேர்தல் நடத்­து­வ­தற்கு அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் எம்.ஏ சுமந்­திரன் ஆகியோர் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். புதிய முறைமை சிறுப்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு பெரும் அநீ­தி­யாகும். சிறுப்­பான்மை இன மக்­க­ளுக்கு சாத­க­மான தேர்தல் முறை­மைக்கு ஆத­ர­வ­ளிப்போம். ஆகவே இந்த விவ­கா­ரத்தை இழுத்து தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் பழைய முறை­மையின் பிர­காரம் உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என சிறுப்­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த முடி­யா­விடின் பழைய முறை­மையின் படி­யா­வது உடன் தேர்­தலை நடத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வர்­களும் கூட்­டத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்கம் எட்­டப்­ப­டா­ததை அடுத்து எதிர்­வரும் 6 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு வேளையில் விவாதம் நடத்த கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இந்த விவா­தத்தின் போது அனைத்து கட்­சி­களும் தமது நிலைப்­பாட்டை அறி­விக்க சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக அடுத்த வார­ம­ளவில் மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சிலும் கட்சி பிர­தி­நி­தி­க­ளுடன் விசேட கூட்­ட­மொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தாக அமைச்சர் பைசர் முஸ்­தபா இங்கு அறி­வித்­துள்­ளமை குறிப்­பி­ட­தக்­கது

கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் அமைச்­சர்­க­ளான ல­க்ஷமன் கிரி­யெல்ல, ரவூப் ஹக்கீம் மற்றும் பாரா­ளு­மன்ற சுமந்­திரன் ஆகியோர் கேச­ரிக்கு கருத்து தெரி­வித்­தனர்.

ல­க்ஷமன் கிரி­யெல்ல

இது தொடர்பில் அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல குறிப்­பி­டு­கையில்,

புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தற்கு சிறுப்­பான்மை கட்­சிகள் பெரும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டன. தற்­போ­தைக்கு புதிய முறைமை சாத்­தி­ய­மில்லை. ஆகவே புதிய முறைமை கீழ் தேர்­தலை நடத்த முடி­யா­விட்டால் பழைய முறை­மையின் பிர­கா­ர­மா­வது உடன் தேர்­தலை நடத்த வேண்டும். எவ்­வா­றா­யினும் இது தொடர்­பாக எதிர்­வரும் 6 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­படும் என்றார்.

ரவூப் ஹக்கீம்

இது தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

புதிய முறை­மையின் பிர­கா­ரமே மாகாண சபை தேர்­தலை நடத்த வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்­தபா கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் அறி­வித்தார். அந்த தீர்­மா­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அமைச்­சரும் விடாப்­பி­டி­யாக நிற்­கின்­றனர். ஆகவே இது தேர்­தலை இழுத்­த­டிப்பு செய்­வ­தற்­கான திட்­ட­மாகும்.ஜனா­தி­பதி கூறி­ய­மைக்­காக எம்மால் புதிய முறை­மையை ஆத­ரிக்க முடி­யாது. இந்த முறைமை சிறுப்­பான்­மை­யி­ன­ருக்கு பெரும் சாத­க­மற்ற தன்மை உடை­ய­தாகும்.

 எல்லை நிர்­ணயம் செய்­த­மையின் பிர­காரம் மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். என்­றாலும் இந்த விவ­கா­ரத்தில் பெரும் சிக்கலான நிலைமை உள்ளது. புதிய முறைமை தற்போதைக்கு சாத்தியமில்லை. அது மேலும் தாமத போக்கை ஏற்படுத்தும். அதனால் பழைய முறைமையின் பிரகாரம் உடன் தேர்தலை நடத்த வேண்டும் என நாம் வலியுறுத்தினோம் என்றார்.

எம்.ஏ சுமந்திரன்

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேசரிக்கு குறிப்பிடுகையில்,

புதிய முறைமை காரணமாக தேர்தல் பிற்போடப்படுமானால் அதற்கு நாம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம். ஆகவே பழைய முறைமையின் பிரகாரமாவது உடன் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.