Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் அன்று சொன்னது நியாயமானதே - ஞானசார தேரர்

Featured Replies

பிரபாகரன் அன்று சொன்னது நியாயமானதே - ஞானசார தேரர்

 

 
 

(இராஜதுரை ஹஷான்)

 விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை "தந்திர நரி " என்று குறிப்பிட்டமை முற்றிலும் உண்மையாகவே காணப்படுகின்றது . நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வு  பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்மையினை இவரே தோற்றுவிக்கின்றார் என  பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர்  ஞானசார  தேரர் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது . நாட்டு மக்கள் மஹிந்தவையும் நம்ப வேண்டாம்  மைத்திரியையும் நம்ப வேண்டாம். சிறந்த அரசியல் தலைவரை  சிங்கள பௌத்த மக்கள் ஒன்றினைந்து தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் பௌத்த மதத்தினர் ஒற்றுமையாக செயற்பட்டால் பிற மதங்களும் பாதுகாக்கப்படும்  என ஞானசார  தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

இன்று நாட்டு மக்கள்  அரசியலில் ஏமாற்றப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். பொய்யான வாக்குறுதிகளின் காரணமாக தமது ஜனநாயக உரிமையினை இழந்து  விரக்தியுற்றவர்களாக காணப்படுகின்றனர். கடந்த கால அரசாங்கத்தின் குறைகளை  சுட்டிக்காட்டி பல வாக்குறுதிகளை முன் னிலைப்படுத்தி தேசிய அரசாங்கம் மக்கள் மத்தியில் வாக்குகளை பெறும் நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டது. ஆனால் இன்றுவரை நாட்டில் தேசிய நல்லிணக்கமும்  இனவொற்றுமையும் எவ்விதத்திலும் முன்னேற்றமடையவில்லை.

தற்போது தேசிய அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி கடந்த கால அரசாங்கம்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நோக்கி பயணித்து வருகின்றது.. இரண்டு தரப்பினரும் ஒருவரை பார்த்து பிறிதொருவர் குறை கூற அரசியலை கேலிக் கூத்தாக்கிவிடுகின்றனர்..இரண்டு அரசாங்கமும் தங்களன் குறைகளையும் சுய தேவைகளை மாத்திரம் கருத்திற் கொண்டு அரசியலை களமாக பயன்படுத்திக் கொண்டு செயற்படுகின்றது.

கடந்த கால அதாவது  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு பொதுபல சேனா அமைப்பின் ஆதரவே பிரதான காரணம் என்று  அவரது ஆதரவாளர்கள் தற்போது குறை கூறுகின்றனர். மக்களின் அரசியல் உரிமையினையும் செல்வாக்கினையும் விலை கொடுத்து வாங்க முடியாது.  மஹிந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மக்களின் அபிமானத்தினையும் வென்றவராக காணப்பட்டிருந்தால் அவர் வெற்றிப் பெற்றிருப்பார். ஆனால் அவரும் அரசியல் தொடர்பில் பல தவறுகளை  விட்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தந்திர நரி என்று குறிப்பிட்டமையின் அர்த்தம் தற்போது உண்மையாக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கு புரிந்த விடயம் தற்போதே எமக்கு புரிந்துள்ளது.  அரசியலில் இடம் பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் மிக தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார்  .  

நாட்டின் தலைவர் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக காணப்படுகின்றது. ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும்  கடந்த அரசாங்கமும் சரி தேசிய அரசாங்கமும்  நிறைவேற்றவில்லை. ஆகவே தமிழ்  மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களது வாககுகளை கடந்த  அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டாம் தேசிய  அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டாம் . மக்களுக்காக செயற்படும்  இரண்டு தரப்பிணருக்கும் தொடர்பற்ற  தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கடந்த  காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இன்முறையும் தொடர வேண்டாம்.  என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/35597

  • தொடங்கியவர்

‘நம்பமாட்டேன்”

 

 

சட்டமா அதிபர் திணைக்களத்தில், அரசியல் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்குத் தீர்ப்பை மாற்றமுடியுமெனத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், “கடந்த அரசாங்கத்திலும், இந்த ஆட்சியிலும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

அந்தப் பாடங்களின் அடிப்படையில், எந்தவோர் அரசியல்வாதியையும் நான் நம்பமாட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தவோர் அரசியல்வாதியையும் நான் நம்பமாட்டேன். 1959ஆம் ஆண்டு புத்தசாசன ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக, தலதா மாளிகை மீது சத்தியம் செய்பவர்களுக்கே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஆதரவளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார். நாவல வீதி, இராஜகிரியவில் உள்ள, பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று (26) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“என்னைச் சிறைக்கு அனுப்பி, எனக்கு ‘ஜம்பர்’ அணிவித்துப் பார்ப்பதற்கான முயற்சி, இன்று, நேரற்றல்ல, 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் முன்னெடுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழே, நான் சிறைக்குள் அனுப்பப்பட்டேன்” என்று தெரிவித்த ஞானசார தேரர், “சிறையிலிருந்த ஐந்து நாட்களும் ஜம்பர் அணியவில்லை” என்றார்.

“வௌ்ளையர்கள் கொண்டுவந்த சட்டத்தின் கீழே, சிறைக் கைதிகளுக்கு ஜம்பர் அணிவிக்கப்படுகின்றது என்றபோதிலும் அந்த ஜம்பரை நான் அணியவில்லை. சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, காவியுடையைக் கழற்றிவிட்டு, சிறைக்கூண்டுக்குள்ளே, சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தேன்” என்றார்.

“இரத்தினபுரியில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, நான் ஒரு தகவலை தெரிவித்திருந்தேன். அதாவது, என்னைச் சிறைக்கு அனுப்புவதில் இரு அமைச்சர்களும், அவருக்கு மேலாக இருக்கும் ஒருவரும் முயற்சி செய்வதாகவும் தெரிவித்திருந்தேன். ஆகக் குறைந்தது 6 மாதங்களுக்காவது எனக்கு ‘ஜம்பர்’ அணிவிக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன என்றேன்.

“அதேபோல், சிறைக்குள் என்னை அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் எனக்குத் தகவல் கிடைத்தது. எனினும், நம்பிக்கையுடன் நீதிமன்ற வளாகம் வரை சென்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

“என்னை சிறையிலடைத்த பொறுப்பை, கட்டாயமாக இந்த அரசாங்கமே ஏற்கவேண்டும். சுயாதீனமாக செயற்படுவதற்கு நீதிமன்றங்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை” என்று தெரிவித்த அவர், “விசேடமாக அரச சார்பற்ற நிறுவனங்களான தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும், சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தூதுவராலயங்களுடன் இணைந்தே, இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

“அதுமட்டுமன்றி, சர்வதேசத்துக்குத் துணை போகும் அரச சார்பற்ற அமைப்புகளின் கையாட்களாக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் செயற்படும், அடியாட்களின் அபிப்பிராயங்களுக்கு அமையவே, அநீதியான தீர்ப்புகள் வழங்கப்படுவதாக நான் நம்புகின்றேன்” என்றார்.

அத்துடன், தன்னைச் சிறையிலடைக்க உதவிய பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் நீதிமன்றின் செயற்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளதென தெரிவித்த அவர், “ஞானசாரருக்கு இவர்கள் ஒரு நாளாவது ஜம்பர் அணிவிக்க ஆசைப்பட்டனர். ஆனால், நிறைவேறவில்லை” என்றார்.

“பாதாள குழுக்களைப் பாதுகாத்து, திருடர்களைப் பாதுகாக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்களும், இவர்களுக்குத் தலைவராக இருப்பவரும், சட்டமா திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்து நீதிமன்றத்துக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு, நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்காமல், நீதிமன்றம் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகித்தே இவ்வாறான துரோகத்தைக் காவி உடைக்குச் செய்துள்ளனரென நாம் எண்ணுகின்றோம்” என்றார்.

“நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மாற்றும் பலம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களுக்கே இருக்கிறது. எனவே, எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க சீனிகம தேவாலயமும், காளி கோவிலுமே உள்ளது. அங்கு சென்று சிதறுதேங்காய் அடித்துதான், எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும்” என்றார்.  தான் இனியொரு போதும் எந்தவோர் அரசியல்வாதியையும் நம்பப் போவதில்லையென்று தெரிவித்த அவர், “தலதா மாளிகையின் மீது சத்தியம் செய்பவருக்கே, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பேன்” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நம்பமாட்டேன்/150-218186

 

 

 

நீண்­ட­கா­ல­மாக திட்­ட­மிட்டே என்னை பழி­வாங்­கினர்

city-01-newGMGPage1Image0004-17b71fa218bf879abe86edbd7bd333a091651084.jpg

 

(ஆர்.யசி)

அர­சி­ய­லுக்கு வரு­மாறு மக்கள் அழுத்தம் கொடுக்­கின்­றனர் என்­கிறார் ஞான­சார தேரர்

 

என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்ற நீண்­ட­கால திட்டம் இருந்­ததை நான் அறிந்­தி­ருந்தேன். செய்­யாத குற்­றத்­துக்­காக என்னை சிறையில் அடைத்­ததன் முழுப்பொறுப்­பையும் அர­சாங்­கமே ஏற்­று­க்கொள்ள வேண்டும் என பொது­பலசேனா பெளத்த அமைப் பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குறிப்­பிட்டார்.  

 

எம்­மையும் அர­சியல் தலைமை ஏற்­கக்­கூறி மக்கள் அழுத்தம் கொடுக்­கின்­றனர். தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்கள் அனை­வரும் எம்­முடன் இணை­ய­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்

எனது கைதின் பின்னர் எனக்­காக குரல் கொடுத்த, எனக்­காக பூசைகள் செய்த, என்னை பார்க்க முயற்­சித்த மக்­க­ளுக்கும், சிறையில் என்னை பார்த்­துக்­கொண்ட நபர்­க­ளுக்கும் எனது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். நீதி­மன்ற தீர்ப்பு குறித்து நான் எத­னையும் கூற விரும்­ப­வில்லை. எனினும் என்னை சிறையில் அடைத்த பொறுப்­பினை முழு­மை­யாக இந்த அர­சாங்­கமே ஏற்­று­கொள்ள வேண்டும்.

குறிப்­பாக அமைப்­புகள், சர்­வ­தேச அமைப்­புகள், சர்­வ­தே­சத்­திற்கு தேவை­யா­ன­வற்றை இங்கு நடை­மு­றைப்­ப­டுத்தி பெளத்த சிங்­கள கொள்­கையை அழிக்கும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தேவைக்­கா­கவே என்னை கைது செய்­தனர். இதனால் இந்த நாட்டின் நீதி பொறி­முறை அவ­ம­திக்­கப்­பட்­டுள்­ளது, சட்­டத்தை தமக்கு ஏற்றால் போல மாற்­றிக்­கொள்ளும் சட்­டத்தை துஸ்­பி­ர­யோகம் செய்யும் நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது.

மிக நீண்­ட­கா­ல­மாக என்னை சிறையில் அடைக்க பல்­வேறு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முன்­னைய ஆட்­சி­யிலும் இந்த ஆட்­சி­யிலும் அதற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. ஒரு­புறம் கிருஸ்­தவ அடிப்­ப­டை­வாத சக்­திகள், மறு­புறம் சிங்­கள முஸ்லிம் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்கும் சக்­திகள், இன்­னொரு பக்கம் சாவ­தேசம் புலம்­பெயர் பிரி­வி­னை­வாத சக்­தி­க­ளுக்கும் இந்த தேவை இருந்­தது. அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சில­ருக்கும் இந்த தேவை இருந்­தது.

சமூ­கத்தில் இடம்­பெறும் உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வதை விரும்­பாத அரச அதி­கா­ரிகள் பலர் உள்­ளனர். அர­சி­யல்­வா­தி­களின் சலு­கை­களில் அவர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க செயற்­படும் நபர்கள் பலர் உள்­ளனர். மிகப் பயங்­க­ர­மான அதி­கா­ரிகள் பலர் உள்­ளனர். இவர்கள் அனைத்து துறை­க­ளிலும் உள்­ளனர். இவர்கள் திட்­ட­மிட்டு என்னை சிறையில் அடைக்க முயற்­சிகள் எடுக்­கின்­றனர் என எனக்கு ஒரு வாரத்­திற்கு முன்­னரே தெரியும். எனினும் நான் சட்­டத்தை நம்பி என்னை கைது செய்ய மாட்­டார்கள் என்ற நம்­பிக்­கையில் இருந்தேன்.

எனினும் ஒரு சிலர் தமது தேவை­க­ளுக்­காக என்னை சிறையில் அடைத்­து­விட்­டனர். சட்­டத்­திற்கு நாங்கள் கட்­டுப்­ப­டு­கின்றோம், அதை நாம் மீறப் போவ­தில்லை. எனினும் சட்­டத்­து­றை­யிலும் சூழ்­சிகள் இடம்­பெ­று­கின்­றன, சட்­டத்தை விபச்­சா­ர­மாக்கி செயற்­படும் நபர்கள் உள்­ளனர் என்­பதே உண்­மை­யாகும். அதனை எம்மால் மறுக்க முடி­யாது. காளிக்­கோவில் சென்று தேங்காய் உடைத்து கட­வு­ளிடம் கூறு­வதை விடவும் எமது நியா­யங்­களை கூற ஒரு இடம் இல்­லாது போய்­விட்­டது. இன்று நாடு மிகவும் மோச­மான நிலையில் உள்­ளது. எனினும் நாம் யாரையும் விமர்­சிக்­க­வில்லை.

ஆணா­கவும் பெண்­ணா­கவும் கருத முடி­யாத ஒரு சிலர் இன்று அதி­கா­ரத்­திற்கு வந்து அமைக்­சுக்­களை வைத்­துக்­கொண்டு இந்த நாட்­டினை அழிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். கடந்த காலத்தில் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை வெற்­றி­கொள்ள நாம் சூழ்ச்சி செய்­த­தாக கூறியே இன்று எம்மை தண்­டிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். சிங்கள் பெளத்த மக்­களை கேலிக்­கூத்­தாக்கி தமது பொழு­து­போக்கு அர­சி­யலை செய்ய இந்த ஆட்­சியில் ஒரு­சிலர் உள்­ளனர். அவர்கள் அரச ஊட­கங்­களை கைக்குள் வைத்­து­கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றனர். மங்­க­ல­மான பெயர்­களை வைத்­து­கொண்டு இந்த நாட்­டினை அழிக்கும் நட­வ­டிக்­கை­களை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவர்கள் குறித்து நாம் கவ­னத்தில் கொள்­ளாது செயற்­பட முடி­யாது. இதற்­காக நாம் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்­டிய நிலை­மையும் ஏற்­ப­டலாம். ஆனால் அதற்­காக நாம் வாய்­மூடி இருக்க முடி­யாது.

எனக்கு இடம்­பெற்ற அநீ­தியை ஒரு நப­ருக்கு இடம்­பெற்ற அநீ­தீ­யாக எவரும் பார்க்­க­வில்லை. ஒட்­டு­மொத்த தேரர்­க­ளுக்கும் ஏற்­பட்ட அநீ­தி­யா­கவே அனைத்து பெளத்த தேரர்­களும் கரு­து­கின்­றனர். ஆகவே நானும் எனது பொறுப்­பினை சரி­யாக செய்ய வேண்டும். கோத்­த­பாய ராஜபக் ஷவை பலப்­ப­டுத்த நாம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­ட­மாக கூட சிலர் விமர்­சிக்­கின்­றனர். இந்­த­நாட்டில் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­காக பெற்­றுக்­கொள்ள வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன. ஆனால் இவை அர­சி­யல்­வா­திகள் மூல­மாக கிடைக்­கப்­போ­வ­தில்லை. இதற்கு பின்னர் எந்த அர­சியல் வாதி­யையும் நாம் நம்பத் தயா­ரா­கவும் இல்லை. எவ­ரையும் நாடிச் செல்­வதும் இல்லை. அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இருந்து அர­சி­யலை பாது­காக்க வேண்­டிய தேவை உள்­ளது. நாடு மிகவும் மோச­மான நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டு­விட்­டது. சட்டம் நீதி அழிக்­கப்­பட்டு விட்­டது. நாட்­டினை நினைத்து சந்­தோ­ச­ம­டைய ஒன்­றுமே இல்லை. இதற்கு அர­சியல் வாதி­களே முழு­மை­யான கார­ணி­யாகும். எனினும் எமக்கு இவற்றை சரி­யாக மாற்­றி­ய­மைக்க முடியும். எம்மால் நாட்­டினை பாது­காக்க முடியும். சில சந்­தர்ப்­பங்­களில் நாம் தவ­ற­விட்­டு­விட்டோம். அமைப்­பு­களை விடவும் நாடு முக்­கியம் என நாம் அன்று தீர்­மானம் எடுத்தோம். அப்­போதே அர­சி­ய­லுக்கு எம்மை அழைத்தும் நாம் அதனை செய்­ய­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவை வெற்­றி­பெறச் செய்யக் கூறி அன்று நாம் தீர்­மானம் எடுத்தோம். ஆனால் அவர் தோற்றார். அதற்கும் இன்று நாமே காரணம் எனக் குறிப்­பி­டு­கின்­றனர். இது எமக்கு நல்­ல­தொரு பாட­மாகும்.

சம்­பிக்­கவை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வ­ரு­வ­தாக இன்று கூறு­கின்­றனர், அவர் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி பொது அணிக்கு ஆத­ரவு வழங்­கு­கின்றார் என அறிய கிடைத்­த­வுடன் நான் அவரை சந்­தித்து இதனை செய்ய வேண்டாம் நீங்கள் பெளத்த தலை­மைத்­து­வத்தை ஏற்க வேண்­டிய நபர் நீங்கள் மாற்று அணியில் இருக்க வேண்டாம் என கூறினேன். தேசிய வாத தலை­வர்கள் இவர்கள். இவர்­களை அழிக்க பாரிய சூழ்ச்சி இடம்­பெற்­றது. இதனால் இன்று நாடு பின்­னோக்கி சென்­றுள்­ளது. ஆகவே அன்றே நாம் அதனை தெரி­வித்தோம். அவரும் இறுதி நேரத்தில் ஏற்றுக் கொண்டார். பின்னர் 32 கார­ணி­களை உள்­ள­டக்­கிய கோரிக்கை ஒன்­றினை அவர் முன்­வைத்தார். அனைத்து தரப்­பி­னையும் சந்­தித்து அவர் இந்த கோரிக்­கையை முன்­வைத்தார். அப்­போ­தைய அர­சாங்­கத்தின் முக்­கிய நபர்­களால் அவ­ரது கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. கோரிக்­கையை எவரும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதனால் தான் அவர் வில­கினார்.

எவ்­வாறு இருப்­பினும் இதற்கு பின்னர் பௌத்­தத்தை பலப்­ப­டுத்தும் கொள்­கை­யி­லேயே நாம் பய­ணிக்­க­வுள்ளோம். நீண்ட கால­மாக இந்த நாட்டில் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்கு இடம்­பெற்ற அநீ­தி­களை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தை நாம் முன்­னெ­டுப்போம். இந்த நாட்டில் சிறு­பான்மை மக்கள் அழிக்­கப்­ப­டு­வ­தாக கூறி­னாலும் அது உண்மை இல்லை. தமிழ் மக்­களின், முஸ்லிம் மக்­களின் ,கிறிஸ்­தவ மக்­களின் உரி­மைகள் எத­னையும் நாம் பறிக்­க­வில்லை. ஆனால் இன்று சிங்­கள மக்­களே அனைத்­தையும் இழந்­துள்­ளனர். மஹிந்த ராஜபக் ஷவிற்கு இது விளங்­க­வில்லை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் இது விளங்­க­வில்லை. நாட்டில் உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை இருந்தால் இப்­போதும் மஹிந்த ராஜபக் ஷவினால் அதனை செய்ய முடியும். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னாலும் அதனை செய்ய முடியும். ஆனால் அவர்கள் அதை செய்­ய­வில்லை.

தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் , சிங்­கள மக்கள் எவரும் உங்கள் தலை­மை­களை நம்ப வேண்டாம். 70 ஆண்­டு­களில் இவர்­களை நம்பி எந்த நன்­மை­யையும் அமை­ய­வில்லை. நாம் ஒரு அணி­யாக உரு­வா­குவோம், தமிழ் முஸ்லிம் மக்கள் எம்­முடன் வாருங்கள். நாங்கள் பல­மான சக்­தியை உரு­வாக்­குவோம். எந்த தலை­மைக்கும் நாம் ஆத­ர­வில்லை. எனினும் பெளத்த சிங்­கள கொள்­கையை பலப்­ப­டுத்தும் தலைவர் இருந்தால் அவ­ருக்கு மக்கள் வாக்­க­ளிப்­பார்கள். ஆனால் தலை­மைகள் பல­வீ­ன­ம­டையும் நேரத்தில் தேரர்­க­ளா­வது தலைமை ஏற்க வேண்டும் என்ற மக்­களின் குரல் எழு­கின்­றது. கட்­சியை உரு­வாக்கக் கோரி மக்கள் கூறு­கின்­றனர். ஆனால் நாம் அர­சியல் சாக்­க­டையில் விழத் தயார் இல்லை. ஆனால் மாற்றம் ஒன்­றினை உரு­வாக்க எம்மால் முடியும்.

சிங்­கள பெளத்த பெரும்­பான்­மையில் இந்த ஆட்டின் ஆட்சி அமைய வேண்டும். அப்­போது தான் தமிழ் முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழ முடியும். சிங்கள பலம் இல்லாது ஏனையவர்கள் வாழ முடியாது. சிங்கள பெளத்த மக்கள் பலமடைய வேண்டியது கட்டாயமாகும். இனவாத தூண்டுதல் இல்லாத அதனால் அரசியல் சூழ்சிகள் இடம்பெறாத தன்மைகளை உருவாக்க வேண்டும். தெல்தெனிய சம்பவத்தின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். நிலைமைகளை கட்டுப்படுத்த முடிந்தும், அதிகாரம் இருந்தும் அவர் வேடிக்கை பார்த்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். இவ்வாறான நிலைமைகளை தடுக்க வேண்டும். எனவே 2020 இல் யார் ஆட்சிக்கு வருவது என்பது எமக்கு தெரியாது, யார் வந்தாலும் பெளத்த சிங்கள கொள்கையை பாதுகாக்க வேண்டும். நாம் முக்கியமான கொள்கையை உருவாக்குகின்றோம். அதனை ஏற்றுகொள்ளும் நபர்கள் மக்கள் ஆதரவை பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-27#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.