Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்­தலை நடத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுங்கள்

Featured Replies

தேர்­தலை நடத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுங்கள்

012-1b052143ed267e82d8b2b42e928fc47cac9cdc03.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், இரோஷா வேலு)

அர­சியல் கட்­சி­க­ளிடம் வலி­யு­றுத்­தினார் தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர்  

 

மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு உரிய கால அவ­காசம் வழங்­கி­யி­ருந்தோம். எனினும் அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு ஏற்­பாட்டையும் இன்னும் செய்­ய­வில்லை. ஆகவே இனி­மேலும் கால அவ­காசம் வழங்க முடி­யாது. தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அதி­காரம் தற்­போது பாரா­ளு­மன்­றத்தின் கைக­ளி­லேயே உள்­ளது.

ஆகவே அனைத்து அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து உடன் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மாகாண சபை தேர்தல் தாமதம், வாக்­காளர் இடாப்பு திருத்தம் உள்­ளிட்ட பல விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் நோக்கில் அர­சியல் கட்சி பிர­தி­நி­தி­க­ளுக்கும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கும் இடையில் முக்­கிய சந்­திப்­பொன்று நேற்று இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள தேர்­தல்கள் செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தின் போதே தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய அர­சியல் கட்­சி­க­ளிடம் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்து ஜய­வர்­தன, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்­பாக அதன் பொதுச்­செ­ய­லாளர் ரோஹன ல­க்ஷமன் பிய­தாஸ, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன குழுவின் சார்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநு­ராத ஜய­ரத்ன, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, பொது­ஜன ஐக்­கிய முன்­னணி சார்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிசிற ஜய­கொடி, தமிழர் விடு­தலை கூட்­டணி சார்­பாக ஆனந்த சங்­கரி, மக்கள் விடு­தலை முன்­னணி சார்­பாக மாகாண சபை உறுப்­பினர் சுனில் வட்­ட­வல, ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு சார்­பாக ஹசன் அலி மற்றும் லங்கா சம­ச­மாஜ கட்சி சார்­பாக திஸ்ஸ விதா­ரண ஆகியோர் கலந்து கொண்­டனர்.

இந்த கூட்­டத்தின் போது அனைத்து அர­சியல் கட்­சி­களும் மாகாண சபை தேர்­தலை டிசம்பர் மாதத்­திற்குள் நடத்­தியே ஆக வேண்டும். தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு இட­ம­ளிக்க கூடாது என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவை வலி­யுத்­தின

இத­னை­ய­டுத்து கருத்து வெ ளியிட்­டுள்ள தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் எனக்கு தேர்­தலை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு அதி­கா­ரமும் தற்­போ­தைக்கு இல்லை. பாரா­ளு­மன்­றத்தின் கைக­ளி­லேயே அதற்­கான அதி­காரம் தங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் தேர்­த­லுக்­கான சட்­டத்தை நிறை­வேற்றும் பட்­சத்தில் என்னால் தேர்­தலை நடத்த முடியும். இதற்­காக அர­சாங்­கத்­திற்கு உரிய கால அவ­காசம் கொடுத்­தி­ருந்தோம். எனினும் அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு ஏற்­பா­டு­க­ளையும் இன்னும் செய்­ய­வில்லை. அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­வதில் இழுத்­த­டிப்பு செய்து வரு­கின்­றது. ஆகவே இனி­மேலும் கால அவ­காசம் வழங்க முடி­யாது. தேர்தல் நடத்­து­வ­தற்­கான அதி­காரம் தற்­போது பாரா­ளு­மன்­றத்தின் கைக­ளி­லேயே உள்­ளது. ஆகவே அர­சியல் கட்­சிகள் அனைத்தும் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோகம் செய்ய வேண்டும். அத்­துடன் அர­சாங்கம் உடன் தேர்­தலை நடத்­தியே ஆக வேண்டும். இனி­மேலும் பிற்­போ­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது எனக் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். சந்­திப்­பை­ய­டுத்து அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெ ளியிட்­டனர்.

ஆனந்த சங்­கரி

 தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆனந்த சங்­கரி குறிப்­பி­டு­கையில்,

இந்த சந்­திப்பின் போதும் வழ­மை­யாக பேச்­சு­களே இடம்­பெற்­றன. பழைய முறை­மையை நீக்கி விட்டு தற்­போது புதிய முறைமை கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மீண்டும் எப்­படி பழைய முறை­மைக்கு செல்­வது? ஒரு சிலர் ஒன்றும் புரி­யாமல் கருத்­து­களை முன்­வைக்­கின்­றனர். தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் தற்­போ­தைக்கு ஒன்றும் செய்ய முடி­யாது. மக்கள் பிர­தி­நி­திகள் தான் தலை­யீடு செய்ய வேண்டும். நான் அன்­றி­லி­ருந்து இந்த நாட்டில் ஜன­நா­யகம் இ்ல்லை என்று கூறு­பவன். இந்த நாட்டில் ஜன­நா­யகம் உள்­ளதா? காசு இருந்தால் நாட்டை ஆளலாம். இந்­திய அர­சி­யலில் தேர்­த­லுக்­காக 40 மில்­லியன் செல­வ­ழிப்­ப­வர்­களும் உள்­ளனர். அதே­போன்றே எமது நாட்டின் நிலை­மையும் உள்­ளது. நாங்கள் அப்­படி செல­வி­டு­வர்கள் அல்ல. ஆகவே இந்த நாட்டின் ஜன­நா­யகம் கேள்­வி­கு­றி­யா­கி­யுள்­ளது என்றார்.

ஹசன் அலி

 ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஹசன் அலி குறிப்­பி­டு­கையில்,  

இந்த கூட்­டத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்­பாக பேசினோம். இதன்­போது அர­சாங்­கத்­திற்கு உரிய கால அவ­காசம் வழங்­கியும் இன்னும் தேர்­தலை அர­சாங்கம் இழுத்­த­டித்து வரு­கின்­றது. ஆகவே தேர்­தலை உடன் நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சிகள் தலை­யீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் எம்மை வலி­யு­றுத்­தினார். ஆகவே பழைய முறை­மை­யிலோ அல்­லது புதிய முறை­மை­யிலோ தேர்­தலை உடன் நடத்த வேண்டும். இனி­மேலும் இழுத்­த­டிக்க கூடாது என்றார்.

பஷில் ராஜ­பக்ஷ

 ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன சார்­பாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ கருத்து தெரி­விக்­கையில்,

ஒரு கட்சி பிர­தி­நிதி தவிர அனை­வரும் தேர்­தலை உடன் நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தினர். தேர்தல் ஆணைக்­குழு தற்­போதும் தயா­ராக உள்­ளது. ஆணைக்­கு­ழுவின் தலைவர் தேர்­தலை நடத்த வேண்டும் என அதி­ரடி கருத்­து­களை அர­சியல் கட்­சிகள் முன் எடுத்­து­ரைத்தார். தேர்தல் ஆணைக்­கு­ழுவை குறை­கூற முடி­யாது. அர­சாங்­கத்தின் தவறின் கார­ண­மாக தேர்தல் இழுத்­த­டிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. ஒரு காலத்தில் தேர்தல் அட்­ட­வ­னையை ஜே.ஆர். ஜய­வர்­தன புறம் தள்­ளி­யி­ருந்தார். ஆகவே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எப்­போதும் அந்த கறுப்பு புள்ளி இருக்­கதான் செய்­கின்­றது. எனினும் இதில் சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கொண்­டுள்­ளமை தான் எமக்­குள்ள பெரும் கவ­லை­யாகும் என்றார்.

காவிந்து ஜய­வர்­தன

ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக பாரா­ளு­முன்ற உறுப்­பினர் காவிந்து ஜய­வர்­தன குறிப்­பி­டு­கையில்,

இந்த கூட்­டத்தில் மாகாண சபை தேர்­தலை உடன் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் வலி­யு­றுத்­தினார். இந்­நி­லையில் புதிய முறை­மையின் குள­று­ப­டி­களை கருத்­திற்­கொள்­ளாது பழைய முறை­மை­யி­லா­வது உடன் தேர்­தலை நடத்த வேண்டும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தில் தேர்­த­லுக்­கான சட்­டத்தை நிறை­வேற்றி உடன் தேர்­தலை நடத்த வேண்­டு்ம என்றார்.

அநு­ராத ஜய­ரத்ன

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன குழுவின் சார்­பாக கலந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநு­ராத ஜய­ரத்ன குறிப்­பி­டு­கையில்,

மாகாண சபை தேர்­தலை துரி­த­மாக நடத்­து­வது குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டது. இந்த பேச்­சு­வார்த்­தையின் போது டிசம்பர் மாதத்­திற்குள் உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என அர­சியல் கட்சி பிர­தி­நி­திகள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

சுனில் வட்­ட­வல

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மாகாண சபை உறுப்­பினர் சுனில் வட்­ட­வல குறிப்­பி­டு­கையில்,

இந்த கூட்­டத்தில் வாக்­காளர் இடாப்பு திருத்தம் தொடர்­பிலும் வாடகை வீட்டில் பதிவு செய்­யப்­பட்ட வாக்­க­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க சந்­தர்ப்பம் வழங்­கு­வது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. ஒரு அர­சியல் கட்­சியை தவிர ஏனைய கட்­சிகள் தேர்தல் உடன் நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தின. இந்த பிரச்­சினை தொடர்­பாக தலைமை பீடத்­திற்கு கொண்டு செல்­வ­தாக கட்­சிகள் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர். ஆகவே நாம் கோரு­வது எந்த முறை­மை­யி­லா­வது உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என்றார்.

சிசிற ஜயகொடி

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிற ஜயகொடி குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் தாமதமாகுவதற்கு புதிய முறைமைக்கு வாக்களித்த அனைத்து கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும். இந்த புதிய முறைமைக்கான வாக்கெடுப்பினை இரவு 10 மணிக்கே நடத்தப்பட்டது. அவ்வளவு நேரம் தாழ்த்தி இந்த முறைமை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டது என்றார்.

ரோஹன லக்ஷமன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலை உடன் நடத்த வேண்டும். அதில் சுதந்திரக் கட்சி எந்த மாற்று நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே உடன் தேர்தலை நடத்த வேண்டும் என நாம் யோசனை முன்வைத்தோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.