Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளுக்கு துணைபோன காவல்துறையினரை இடம் மாற்றவில்லை

Featured Replies

இனவாதிகளுக்கு துணைபோன காவல்துறையினரை இடம் மாற்றவில்லை

 

02-1.jpg?resize=800%2C443
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை,கண்டி இனக்கலவரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இனவாத வன்செயல்களுக்கு துணைபோனதாக கூறப்பட்ட காவல்துறை உயரதிகாரிகளை சுட்டிக்காட்டி அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்பொழுது இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வதிவிட பிரதிநிதி ரெரன்ஸ் டி.ஜோன்ஸை சந்தித்த போதே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரெரன்ஸ் டி.ஜோன்ஸ், கீதா சப்ஹர்வால் ஆகியோர் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பிலும் நிலைமாறுகால நீதிதொடர்பிலும் கேள்விகளை எழுப்பிய போது அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்.

இலங்கையில் முன்னர் நீண்டகாலமாக அவசரகால சட்டம் நடைமுறையில் இருந்ததனால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொறுப்பானவர்கள் பொதுவான சட்டங்களின் கீழ் செயற்படாமல் குறுக்கு வழிகளை கையாள்வதற்கு தொடர்ச்சியாக எத்தனித்து வருகின்றனர்.
இதனால் நீதியை நிலைநாட்டுவதில் தாமதமும் முறைகேடுகளும் ஏற்பட்டு வருகின்றன. துரதிஷ்டவசமாக தேசிய அரசினுள் நிலவுகின்ற முறுகல் நிலையின் காரணமாக ஸ்திரமற்ற தன்மை காணப்படுவதான ஒரு தோற்றப்பாடு உள்ளது.ஆயினும் முன்னைய அரசாங்கத்தைவிட இந்த ஆட்சியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அவதானிக்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் கூட வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினரின் பிரசன்னம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

மன்னார் சிலாவத்துறையின் நகர் பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். திகனை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்ற குறை நீடித்து வருகின்றது.

இனரீதியான வன்முறைகளின் போது கடமையில் ஈடுபடுத்தப்படும் கலகம் அடக்கும் காவல்துறைப் படையில் மூவினத்தினரும் இடம்பெற செய்யப்படவேண்டும். என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்துள்ளோம்.

குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும் இனவாத வன்செயல்கள் ஏற்படுவதற்கும் சமூக வலைத்தளங்களும் பெருமளவு காரணமாகும்.அவற்றினூடாக பதிவேற்றம் செய்யப்படும் உணர்வுகளை தூண்டக்கூடிய தவறான செய்திகளை கண்டறிந்து அவற்றை வடிகட்டி முறையான விதத்தில் கையாளுவதற்கான வழிவகைகள் ஓரளவு மேற்கொள்ளபப்டுவதாக தெரியவருகிறது என்றார்.

03.jpg?resize=800%2C479

http://globaltamilnews.net/2018/86239/

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறையினரின் வேலையே அதுதானே.அப்போ யாரை எங்கே மாற்றுவது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.