Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு வில்லங்கமான நடிகை விஜயகலா .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும்.

நாங்கள் உயிரோட வாழ வேண்டுமானால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடமாட வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை க்குச் சென்று (பாதுகாப்பாக) வீடு திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்குக் கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்.

அதற்கு அப்பால் எதையுமே இந்த அரசாங்கம் செய்யவில்லை” என்று பெரியதொரு “குண்டை” எறிந்திருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன்.

இந்தக் “குண்டு” மறுநாள் (03.07.2018) பாராளுமன்றத்தில் பெரிதாக வெடித்திருக்கிறது. சபையைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்குப் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதங்களும் எதிர்ப்புக் கூச்சல்களும் இடம்பெற்றுள்ளன.

“அரசாங்கத்தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் எவ்வாறு புலிகள் மீளுருவாக்கம் பெற வேண்டும் எனக் கூற முடியும்?” என்ற கேள்வியைப் பலரும் எழுப்பியிருக்கிறார்கள். “உடனடியாகவே இது பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேணும்” என்று பெரும்பாலான கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. “அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா விலக்கப்பட வேணும். அவர் கைது செய்யப்பட வேணும்” என்ற கூட்டுக் கோரிக்கையை சிங்களக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. இது தொடர்பாக எழுந்த குழப்பங்களை அடுத்துப்  பாராளுமன்ற அமர்வுகள் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

“விஜயகலாவின் உரை தொடர்பாக விளக்கம் தரவேண்டும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியிருக்கிறார். சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் விஜயகலாவின் உரையை முன்பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இந்த விவகாரம் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

ஆனால், இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது விஜயகலா யாழ்ப்பாணத்தில் நிற்கிறார். கொழும்புக்கு (பாராளுமன்றத்துக்கு) செல்லவில்லை. பதிலாக தெற்கே நடக்கின்ற குழப்பங்களை அடுத்து தனக்கு உடல் நலக்குறைவு என தனியார் மருத்துவனையில் சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு வீட்டில் தங்கியிருக்கிறார்.

“இது விஜயகலாவின் அரசியல் அஸ்தமனமா?”  விஜயகலாவுக்கு எதிராக நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள். பொலிஸ் முறைப்பாடுகள், வழக்குகள், கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கை, பிரதி அமைச்சு பதவி பறிப்பு. ஊடகங்களுக்கு பெரும் தீனி. மகிந்த அணி இதைப் பயன்படுத்தி பெரும் எடுப்புடன் அரசாங்கத்துக்கு எதிரான பன்முக எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதை அறிய முடிகிறது. விஜயகலா தனது அரசியல் லாபத்துக்காக பேசிய பேச்சு இப்போது அரசியல் அரங்கில் பலரும் அரசியல் லாபமடைய வழிசமைத்திருக்கிறது. தமிழர்களின் அரசியல் நலன்களிலும் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் தனது பதிவொன்றில் அரசியல் பகுப்பாளர் ந.சரவணன்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விஜயகலா இந்தச் சர்ச்கைக்குரிய விடயத்தைக் கூறினார். சுழிபுரம் காட்டுப்புலம் கிராமத்தில் பாடசாலை மாணவியான ஆறு வயதுடைய றெஜினா கொல்லப்பட்டதையொட்டியதாக விஜயகலாவின் இப்படிக் கூற்று அமைந்திருந்தது. அதாவது 2009 க்கு (புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு) முன்பு இந்த மாதிரிப் பாலியற்கொலைகள் இடம்பெறவில்லை. சமூகச் சீர்கேடுகள் நடக்கவில்லை என்பதாக விஜகலாவின் உரை தொடங்கியது.Vijayakala-Maheswaran_0

Vijayakala-Maheswaran_0

இப்பொழுதுதான் இவையெல்லாம் நடக்கின்றன. சமூகம் இப்போது பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வன்முறைகளும் சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன. ஆகவே இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முடியவில்லை. ஆகவே மீண்டும் புலிகள் தேவை என்றார் விஜயகலா. கூடவே, தான் அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தையும் பெருந்தொனியில் கண்டித்தார். எதையுமே இந்த அரசாங்கம் செய்யவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் பகிரங்கமாக முன்வைத்தார்.

விஜயகலாவின் இந்தப் பேச்சுக்கு மண்டபத்தில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. பலரும் கைதட்டி விசிலடித்து ஆதரித்தனர். இது விஜயகலாவுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுக்க, உஷாராகி எல்லை மீறிச் சென்று எதையோ எல்லாம் உளறிக் கொட்டினார். இதையொட்டிய வீடியோப் பதிவுகள் சமூக இணையத்தளங்களில் புயலாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இதேவேளை சிங்களத்தரப்பில் மட்டுமல்ல தமிழ்ப்பரப்பிலும் இதைப்பற்றிய விமர்சனங்கள் பரவலாக வைக்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியவில்லை.

தற்போதைய அரசாங்கத்தில் விஜயகலா மகேஸ்வரன், சிறுவர் விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சராகப் பதவி வகிக்கிறார். அப்படிப் பதவியில் இருந்து கொண்டே இந்தப் “புலிக் குண்டை” பகிரங்கமாக வீதியிருக்கிறார் விஜயகலா. இதுதான் பிரச்சினையானது. இதைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரோ மாகாணசபை உறுப்பினரோ சொல்லியிருந்தால் இந்தளவுக்குக் கொந்தளிப்புகள் ஏற்பட்டிருக்காது. அது காற்றோடு மெல்லக் கடந்து போயிருக்கும்.

பேசியவர் – பிரச்சினைக்குரியவர் அரசாங்கத்தின் ஆள் என்றபடியால் எல்லாப் பக்கத்திலிருந்தும் கத்திகள் முளைத்துள்ளன. உண்மையில் இதை விஜயகலா இதய சுத்தியுடன் பேசவில்லை என்பது வெளிப்படையானது. பதிலாக தன்னுடைய வாக்கு அரசியலுக்காகவே பேசியிருக்கிறார். புலிகள் என்ற பெயர் அதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏனென்றால், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான கவர்ச்சியும் மதிப்பும் தமிழ் மக்களிடம் வற்றி விட்டன. முழு நாட்டிலும் இந்த அபிப்பிராயமே உண்டு. ஆகவே, மக்கள் ஆட்சியைக் குறித்தும் அரசாங்கத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பத்தொடங்கியுள்ளனர். .இதைச் சமாளிப்பதற்காகவே அரசாங்கத்தையே விஜயகலா விமர்சிக்க முன்வந்தார். கூடவே புலிகளைப் பாராட்டி, அவர்களுடைய திறன்களை ஆதரிக்க முனைந்தார்.

ஆனால், அது பதவியையே கொண்டு போகும் அளவுக்கு மாறும் என அந்தக் கணத்தில் விஜயகலா யோசித்திருக்க மாட்டார். என்ன செய்வது, நுணலும் தன் வாயால் கெடும் என்று சொன்னதற்கு ஏற்றமாதிரி விஜயகலாவின் நிலைமை ஆகியுள்ளது.

ஏறக்குறைய இதே மாதிரித்தான் அதிரடியாகக் குண்டுகளை வீசுவார் விஜயகலாவின் கணவர் தியாகராஜா மகேஸ்வரனும். கணவருடைய வழியில் இப்பொழுது விஜயகலாவும் களமாடத் தொடங்கியிருக்கிறார். தனது அதிரடியான நடவடிக்கைகள் மூலமாக பரபரப்பையும் தன் மீதான கவனக்குவிப்பையும் உண்டாக்கியவர் மகேஸ்வரன். ஆனாலும் அவரால் இதே உத்தியில் தொடர்ந்திருக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் உருவாக்கிய அரசியல் முறைமைக்கு மகேஸ்வரன் தனனுடைய உயிரையே பலியாக்க வேண்டியிருந்தது.

இதை ஒருபடிப்பினையாக விஜயகலா கொள்ளவேயில்லை. பதிலாக அவரும் மனம் போன போக்கில் கதைப்பார். கால்போன போக்கில் நடப்பார். வாயில் வந்ததையெல்லாம் சொல்வார். இந்த வாய்ச்சொல்லால் வந்த வினையில்தான் தற்போது சிக்கியிருக்கிறார் விஜயகலாவும்.

இப்பொழுதுள்ள நிலையில் விஜயகலா மீது ஐ.தே.க ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அமைச்சுப் பதவியைப் பறிக்கலாம். சிலவேளை ஏதோ ஒரு கட்சியின் பலமான வழக்குப் பதிவின் மூலமாக கைது செய்யப்படவும் கூடும். நிதிமன்றம், சிறைச்சாலை என்ற விதிப்பயனும் கிட்டக் கூடும்.

ஆனாலும் விஜயகலாவை நாம் பாராட்டவேணும். இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை. நாம் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் இதுதான் உண்மை என்று உண்மையைத் துணிச்சலாக எடுத்துரைத்திருக்கிறார்.

இந்தநிலையில் விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் இடை நிறுத்தினாலும் அவர் தனித்தோ வேறு கட்சிகளிலோ இணைந்து போட்டியிடவே செய்வார். அதற்கான களச்சூழலையே அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். விஜயகலா பேசும்போது மண்டபத்திலிருந்தோர் காட்டிய ஆதரவு இதற்கான அடையாளமாகும். அப்பொழுது அனந்தியையும் விட அதிகமான வாக்குகளைப் பெறுவார் விஜயகலா.

விஜயகலா இப்படிக் கூறியதை தனியே இந்த ஒரு சம்பவமாகப் பார்க்கக் கூடாது. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இப்படி அவர் அதிரடியாகப் பல தடவைகள் குண்டுகvijayakala-praba

vijayakala-prabaளை எறிந்திருக்கிறார். ஏனையோரைத் தாக்கியும் அவமதிப்பும் செய்திருக்கிறார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள், தேர்தல் மேடைகள், போன்றவற்றின் போதெல்லாம் புலிகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிருக்கிறார். கூடவே விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறார். அவற்றில் எல்லாம் தப்பியவர் இப்பொழுது வசமாகச் சிக்கியிருக்கிறார்.

எல்லாமே தமிழ் வாக்குகளைக் குறியாக வைத்தது என்பதுதான் உண்மை. அதற்கேற்றவாறு அவர் அப்பாவியாக நடந்து கொள்கிறார். இது அநுதாப அலைகளை உண்டாக்கும் என்பது அவருடைய எண்ணம். அது கணிசமான அளவுக்கு உண்மையே.

விஜயகலாவை இழப்பதன் மூலம் ஐ.தே.கவுக்கு யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் செல்வாக்குச் சரிவு உடனடியாக ஏற்படும். ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி போன்றவற்றுக்கு அவர் ஒரு சிக்கலை உண்டாக்குவார். மட்டுமல்ல, விஜயகலாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வாய் திறக்காமல் பாராளுமன்றிலும் வெளியிலும் இருக்க முடியாது. புலிகளைப் பாராட்டிப் பேசும் இந்தக் கட்சிகள் அதே புலிகளைப் பாராட்டிப்பேசிய ஒருவருக்கு நெருக்கடி வரும்போது அதைப்பற்றி நேரிலே சொல்வதற்கும் ஆதரவளிக்கவும் ஏன் தயங்க வேணும்?

ஆகவே இப்பொழுது முக்கோண நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒன்று விஜயகலாவுக்கான நெருக்கடி. மற்றது அரசாங்கத்துக்கான நெருக்கடி. மூன்றாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வந்திருக்கும் நெருக்கடி.

இந்த மூன்று நெருக்கடிகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. மூன்றும் அடிப்படையில் ஒன்றானவையே. ஆகவே இவை தற்காலிகமாக ஒரு சுழிப்பை மட்டும் செய்யக் கூடும். அதாவது நெருக்கடியைத் தணிப்பதற்காக தற்காலிகமாக விஜயகலாவை பதவி இறக்கும். பின்னர் பொருத்தமான வேளையில் மீண்டும் அரங்கிற்குக் கொண்டு வரும். இதை ஓரளவுக்கு விஜயகலாவும் அறிவார்.

இந்த அரசியல் விளையாட்டுகள் எல்லாம் சனங்களுக்கு வித்தையும் வேடிக்கையுமாக இருக்குமே தவிர, பயன் தருவதாக இருக்கப்போவதில்லை.

சமூதாயக் கேடுகளைச் சீரமைக்க முடியாத, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தில் அமைச்சராக ஏன் ஒருவர் இருக்க வேணும்? புலிகளைப் பாராட்டிக் கொண்டு அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பது நேர் முரணானது போன்ற அடிப்படையான விசயங்களைப் பற்றி மக்கள் சிந்திக்காமல் விடமாட்டார்கள்.

மட்டுமல்ல, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையாளிகளைக் காப்பாற்றுவதில் விஜயகலாவும் சம்மந்தப்பட்டிருந்தார் என்ற குறறச்சாட்டையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

தானும் பாதிக்கப்பட்ட பெண் என்று சொல்லிக் கொண்டே அரசியல் ஆதாயங்களோடு வாழ்கின்றவரை வரலாறு எங்கே வைக்கப்போகிறது?

http://thalamnews.com

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

அரசாங்கத்தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் எவ்வாறு புலிகள் மீளுருவாக்கம் பெற வேண்டும் எனக் கூற முடியும்?” என்ற கேள்வியைப் பலரும் எழுப்பியிருக்கிறார்கள். “உடனடியாகவே இது பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேணும்” என்று பெரும்பாலான கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. “அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா விலக்கப்பட வேணும். அவர் கைது செய்யப்பட வேணும்” என்ற கூட்டுக் கோரிக்கையை சிங்களக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. இது தொடர்பாக எழுந்த குழப்பங்களை அடுத்துப்  பாராளுமன்ற அமர்வுகள் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தனது இனத்துக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் கட்சி பேதமில்லாமல் சிங்களவர்கள் எப்படி ஒருமித்து குரல் கொடுக்கிறார்கள் என்பதை தமிழர்கள் இந்த தருணங்களிலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.